Sunday, December 18, 2016

திண்மையோடு நில் எங்கள்..............(பாவலரின் கையெழுத்து)

திண்மையோடு நில் எங்கள்
தீரமுள்ள வாலிபனே......


என்னை ஆசீர்வதித்து எழுதித் தந்த வரிகள்....



சில பிரசுரங்கள் -அழைப்பிதழ்கள்

சில பிரசுரங்கள் -அழைப்பிதழ்கள்









 

பாவலர் நூல்கள் -படங்கள்

பாவலர் நூல்கள் -படங்கள் 











ஒரு சிற்றெறும்பு க்கும் நிழல் இருக்கிறது - விடிவெள்ளி- பத்திரிகை நறுக்குகள்.

ஒரு சிற்றெறும்பு க்கும் நிழல் இருக்கிறது -
விடிவெள்ளி- பத்திரிகை நறுக்குகள்.

தீரன் ஆர்.எம். நௌஷாத்














Thursday, October 6, 2016

பாவலர் தன பேர்த்தியுடன்










பாவலர் தன பேர்த்தியுடன் 


(நன்றி- பட உதவி- நிந்தவூர் சபாத் அஹ்மத் )

Wednesday, September 28, 2016

சமவெளி- செய்தி

அஸ்லம் எஸ்.மௌலானா
கிழக்கிலங்கையின் பிரபல இலக்கியவாதியாகத் திகழ்ந்து மறைந்த பாவலர் பஸீல் காரியப்பர் நினைவேந்தல் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச கலாசார அதிகார சபையின் அனுசரணையில் 'கல்முனை பாவலர் பண்ணை' அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் எச்.ஏ.அஸீஸ் முன்னிலை அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இதில் பிரபல அரசியல், இலக்கிய விமர்சகர்களான சிராஜ் மஷ்ஹூர், தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தியதுடன் கவிஞர் ஏ.பீர்முஹம்மத் தலைமையில் நட்சத்திர கவியரங்கு ஒன்றும் இடம்பெற்றது. இக்கவியரங்கில் கவிஞர்களான எஸ்.றபீக், பாலமுனை பாறூக், தீரன் ஆர்.எம்.நௌசாத், விஜிலி மூஸா, மருதநிலா நியாஸ், செ.துஷ்யந்தன், ஜூல்பிகா ஷெரீப் ஆகியோர் பாவலர் சிறப்பு கவிதைகளை பாடினர். இவர்களுக்கு வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் எச்.ஏ.அஸீஸ் எழுதிய “ஐந்து கண்டங்களின் மண்” எனும் நூலின் பிரதிகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பாவலர் ரசிகர்கள், உறவினர்கள் மற்றும் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.









Thursday, September 22, 2016

metro mirror

பாவலர் பஸீல் காரியப்பர் நினைவுரைகளும் நட்சத்திர கவியரங்கும்!

14355728_1078964292224266_3113175574010072524_n
(அஸ்லம் எஸ்.மௌலானா)
கிழக்கிலங்கையின் பிரபல இலக்கியவாதியாகத் திகழ்ந்து மறைந்த பாவலர் பஸீல் காரியப்பர் நினைவேந்தல் நிகழ்வு நேற்று சாய்ந்தமருது பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச கலாசார அதிகார சபையின் அனுசரணையில் ‘கல்முனை பாவலர் பண்ணை’ அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் எச்.ஏ.அஸீஸ் முன்னிலை அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இதில் பிரபல அரசியல், இலக்கிய விமர்சகர்களான சிராஜ் மஷ்ஹூர், தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தியதுடன் கவிஞர் ஏ.பீர்முஹம்மத் தலைமையில் நட்சத்திர கவியரங்கு ஒன்றும் இடம்பெற்றது. இக்கவியரங்கில் கவிஞர்களான எஸ்.றபீக், பாலமுனை பாறூக், தீரன் ஆர்.எம்.நௌசாத், விஜிலி மூஸா, மருதநிலா நியாஸ், செ.துஷ்யந்தன், ஜூல்பிகா ஷெரீப் ஆகியோர் பாவலர் சிறப்பு கவிதைகளை பாடினர்.
இவர்களுக்கு வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் எச்.ஏ.அஸீஸ் எழுதிய “ஐந்து கண்டங்களின் மண்” எனும் நூலின் பிரதிகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பாவலர் ரசிகர்கள், உறவினர்கள் மற்றும் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

Sunday, September 18, 2016

"அழகான ஒரு சோடிக் கண்கள்"- இலக்கியன் முர்சீத்



"அழகான ஒரு சோடிக் கண்கள்"

Mursith Mohamed shared Siraj Mashoor's post.
51 mins
"அழகான ஒரு சோடிக் கண்கள்" பாடலை வானொலியூடாக பல தடவைகள் கேட்டுள்ளேன். அதன் பின்னராக என் கண்களில் அழகா கண்கள் படும்போதெல்லாம் "அழகன ஒரு சோடிக் கண்கள் " பாடலே இசையோடு மண்டைக்குள் கிறுகிறுக்க வைக்கும்.
ஆனால் நான் பாடல் பற்றியும் அதன் வரிகளின் பின்னணி பற்றியும் அறிந்திருக்கவில்லை. தீரன். ஆர்.எம் நௌஷாத்காரியப்பரின் தொடர்பு கிடைத்த பின்னர்தான் குறித்த பாடல் பற்றியும் அதன் சொந்தக்காரரான பாவலர் பசில் காரியப்பர் பற்றியும் அறியக்கிடைத்தது.
அதன் பின்னர்தான் புரிந்தது யாருடைய கவிதைகள் என்று தெரியாமலே பாவலரின் கவிதைகள் உள்ளிட்ட எழுத்துக்கள் அனேகமானதை வாசித்திருந்தமை. அவற்றை மீள்வாசிப்புச் செய்து பாவலர் தொடர்பிலும், அவரின் இலக்கியம் மற்றும் அதுசார் செயற்பாடுகள் தொடர்பிலும் உரையாடல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்
நன்றிகள் ஆய்வாளர், சகோதர் Siraj Mashoor மற்றும் எழுத்துத் தீரன். ஆர்.எம் நெளஷாத் அவர்களுக்கும்
Siraj Mashoor added 2 new photos.
3 hrs
அழகான ஒரு சோடிக் கண்கள், நட்டுமை போகவில்லை:
பஸீல் காரியப்பரின் இரு கவிதைகளில் பெண்ணின் கண்கள் கொள்ளும் இரு வேறு கோலங்கள்!
'அழகான ஒரு சோடிக் கண்களில்' பெண்ணின் கண்களில் ததும்பும் காதலும், 'நட்டுமை போகவில்லையில்' பெண்ணின் கண்களில் பொங்கும் கோபமும் அற்புதமாக மொழி வழியே கடத்தப்பட்டிருக்கிறது.
பஸீல் காரியப்பரை இலங்கை வானொலியில் B.H. அப்துல் ஹமீட் பேட்டி காணுகிறார். அந்த அனுபவத்தை, பாவலர் பாராட்டு மலரில் இப்படி அவர் பதிவு செய்திருக்கிறார்:
"சுவாரஸ்யமான ஒரு பேட்டி அது. அதில் கடைசியாக ஒரு கேள்வி,
"இவ்வளவு ஆற்றலுள்ள நீங்கள், ஏன் எங்கள் நிலையத்திற்கு மெல்லிசைப் பாடல் ஒன்றாவது எழுதவில்லை?" நான் கேட்டேன்.
புன்சிரிப்புப் பூக்க பாவலர் சொன்னார்,
"எழுதியிருக்கிறேன் - பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகிறதே எஸ்.கே. பரராஜசிங்கம் பாடிய 'அழகான ஒரு சோடிக் கண்கள்."
அவர் சொல்லக் கேட்டதும் நான், என்னை அறியாமலேயே இருக்கையை விட்டு எழுந்து விட்டேன். இன்ப அதிர்ச்சி எனக்கு.
பாடல் பதிவாகி ஒளிபரப்பானது 1966 இல்; பேட்டி நடந்தது 1978இல். பன்னிரண்டு ஆண்டுகள் பாடலாசிரியர் யார் என்று அறியப்படாமலேயே இலங்கையிலும் இந்தியாவிலும் இப்பாடல் பிரபல்யமானது.
எழுதிய பாவலரே இதை அறியத் தந்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? என்று கேட்டபோது, அவர் சொன்னார்:
"நேயர்கள் ரசிக்கிறார்கள், நிலையம் ஒளிபரப்புகிறது, சந்தோசம். கவிஞன் காணாமல் போய், கவிதை தனியாக ரசிக்கப்படுவதை அனுபவித்தவாறு அடங்கிப் போய் இருப்பது ஒரு சுவையான அனுபவம்.
"தனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான புகழைக் கூட லட்சியம் செய்யாத இந்த மனிதரை என்னவென்பது?"
பஸீல் காரியப்பர் இயற்றி, ஈழத்து மெல்லிசை முன்னோடிகளில் ஒருவரான எம்.கே. றொக்சாமியின் இசையில் எஸ். கே. பரராஜாசிங்கம் பாடிய, பலரையும் கவர்ந்த அந்த மெல்லிசைப் பாடல் இதோ!
அழகான ஒரு சோடிக் கண்கள்
அழகான ஒரு சோடிக் கண்கள் - அவை
அம்புகள் பாய்ச்சி உளமெல்லாம் புண்கள்!
புவியியல் கற்றிடும் வேளை - அவை
புகையுள்ளே மின்னிச் சிரித்திடுங் காலை
தவித்துத் துடிப்பதென் வேலை - கல்வி
தங்குவதெங்கே மனமொரு பாலை!
ஆட்சியியல் மறு பாடம் - நான்
அங்கிருப்பேன் மனம் எங்கோ ஓடும் !
ஆட்சி செய்யுமுனைச் சாடும் - நான்
ஆழிச் சுழியில் மிதந்திடும் ஓடம்!
தாய்மொழிப் பாடம் நடக்கும் - நறை
தாங்கிய கண்களோ பின்னலடிக்கும்!
'ஏய்' என்று என்னைப் பிடிக்கும் - மனம்
எப்படிக் கண்ணே பாடம் படிக்கும்...?
தத்துவப் பாடம் நடக்கும் - அவை
தத்தித் திமிக்கி இமைகள் மடிக்கும்!
வித்தையில் பித்துப் பிடிக்கும் - நம்
வீட்டாரறிந்தால் கண்ணந் தடிக்கும்!
1966
குறிப்பு: புத்தகத்தில் வந்துள்ள எழுத்து வடிவத்திற்கும் மூலப் பாடலின் வரிகளிற்கும் இடையே, ஒரு சில வரி வேறுபாடுகள் உள்ளன. கவிஞர் பின்னர் திருத்தியிருக்கக் கூடும்.
***
அவரது இன்னொரு கவிதைதான் 'நட்டுமை போகவில்லை.' நட்டுமை என்றால், நெல் வயலில் தண்ணீர் பாய்ச்சி வரவைகளில் வரம்புகள் கட்டியிருக்கும்போது, நண்டு துளைத்தோ அல்லது எப்படியோ நீர் களவாகச் செல்லும் வழி .
போடியாரின் கள்ள எண்ணத்திற்கு எதிரான ஒரு பெண்ணின் எதிர்க்குரலை -கோபக் கனலை - கிராமிய மொழியில் கவிதையாகியிருக்கும் அழகுதான் 'நட்டுமை போகவில்லை.'
போடிமாரின் அடக்குமுறைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் எதிரான கலகக் குரலின் அற்புதமான வெளிப்பாடு. அதிலும் பெண்ணின் எதிர்ப்புக் குரல் என்பதுதான் இதன் சிறப்பம்சம்.
நட்டுமை போகவில்லை
புள்ளட வாப்பா! நமக்கிந்தப்
போட்டியார்கிட்ட வெள்ளாமை வேணா
வெள்ளன சுபஹுல வந்தான்
உங்கள விசாரிச்சான் இல்ல எண்டன்
வள்ளென்று நம்மட நாயும் குலச்சிச்சி
வாசல்ல நிண்டவன் உஞ்சில்ல குந்திட்டான்
வெள்ளாமைக்கு ஒரு ஆள் வைக்கப் போறானாம்
விருப்பமாம் உங்கள்ள இஞ்சப் பாருங்க
பிச்சைக்குப் போனாலும் நமக்கிந்தப்
போக்கிரிக் கிட்ட. வெள்ளாமை வேணா
கொச்சையாக அவன் என்னைப் பாத்தான்
குடலை எடுத்து மாலையாய்ப் போடணும்
இச்சைப் படுறான் போல என்னில இந்த
இளிச்சவாயன்; ஊர் ஊராய் சிரட்டை நீட்டி
பிச்சைக்குப் போனாலும் அவனுக்கிட்ட இனி
பொழப்பு ஒண்டும் நமக்கு வேணா.
கொள்ளையாக் கதைச்சங்கா அந்த ஆள்
கோபம் எண்டால் பத்திக்கு வந்திச்சு
பிள்ளை ஒண்டுக்கும் சுகமில்லையாம் - அவன்ர
பொண்டாட்டியும் அவட உம்மாட்ட போறாவாம்
வெள்ளிக்கிழமை அதுதான் நாளைக்கு மத்தியானம்
வீட்ட வரட்டாம் ஒரு வேல இருக்காம்
கள்ளச் சிரிப்பும் அவன்ர கால்ல ஒரு சப்பாத்தும்
வெள்ளாமைக்காரன் பொண்டாட்டி எண்டா
வேசி எண்டா இந்த நாய் நினைச்சான் ?
1976
இதன் இலக்கிய நயத்தையும் சமூக பொருளாதார பரிமாணத்தையும், இதற்கு மேலும் இங்கு விரிவாக எழுத முடியாது.
LikeShow more reactions
Comment
Comments
தீரன். ஆர்.எம் நௌஷாத் உண்மையில் பாவலரின் மேற்படி அழகான ஒரு சோடிக் கண்கள் பாடலின் உண்மையான தலைப்பு "கண்ணூறு" என்பதாகும், தினகரனில் அவ்வாறுதான் வந்திருக்கிறது. பாவலர் எப்போதும் தன படைப்புகளை எப்போதும் செய்து கொண்டிருப்பது வழக்கம்.. நன்றி இலக்கியன் முர்சீத்
LikeReplyJust now

பாவலர் பண்ணை - அங்குரார்ப்பணம்





கல்முனை  பாவலர் பண்ணை 
அங்குரார்ப்பணம் 

2016.09.05

கல்முனை பாவலர் பண்ணை  என்னும்  அமைப்பு  
எச். ஏ. அஸீஸ் -
 ஏ. பீர் முகம்மது- 
தீரன் ஆர்.எம். நௌஷாத்  

ஆகியோரால்  சாய்ந்தமருது  பழைய சந்தை வீதியில்  உள்ள  எனது  இல்லத்தில்    உருவாக்கப்பட்டு அங்குரார்ப்பணம்  செய்து  வைக்கப்பட்டது.









வாழும் பாவலர் -அழைப்பிதழ்