Wednesday, April 19, 2017

கொத்தனும் பாவலரும்-- சிராஜ் மஹ்ஷூர்

கொத்தனும் பாவலரும்








நேற்று மருதூர்க் கொத்தன் மறைந்த நாள் என்பதால், அவரின் நினைவாக தீரன். ஆர்.எம் நௌஷாத் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். அதைப் பார்த்தவுடன் இந்த போட்டோவைப் பகிர வேண்டும் என்று தோன்றியது. 

இது சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் எடுத்தது. தென்கிழக்குப் பிரதேசத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களான மருதூர்க் கொத்தனும் பாவலர் பஸீல் காரியப்பரும் வெள்ளை ஆடையில் மினுங்குகின்றனர். அப்போது பல்கலைக்கழக தமிழ்ச் சங்க நிகழ்வொன்றிற்காக வருகை தந்திருந்தனர்.

இடமிருந்து வலமாக விரிவுரையாளர் பாறூக், மருதூர்க் கொத்தன் வீ.ஏ. இஸ்மாயில், கொத்தனின் மகள் ஹபீனா, பாவலரின் மகள் காமிலா காரியப்பர் (அப்போது இவர்கள் இருவரும் எமது பல்கலைக்கழக மாணவிகள்), பாவலர் பஸீல் காரியப்பர், பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோருடன் இடதுகோடியில் நான்.

இது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பழைய நூலகத்திற்கு முன்பாக உள்ள நீர்த்தாங்கிக்கு முன்னே எடுத்த படம்.

இந்தப் படத்தை அனுப்பி வைத்த பாவலரின் மருமகனும் எனது ஒன்றுவிட்ட சகோதரருமான Uvais Bawa விற்கு நன்றிகள்.
— with மருதூர்க்கொத்தன் (requested tag).