வாழும் பாவலரே....
கவியரங்கக் கவிதை
தீரன். ஆர்.எம். நௌஷாத்
00
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்
*************************************
ஊனாகி யூனிலுயி ராகியெவ்வு லகுமாயொன்றா யிரண்டுமாகி
உள்ளாகி வெளியாகி் யொளியாகி யிருளாகி ஊருடன் பேருமாகி
கானாகி மலையாகி வளைகடலு மாகிமலை
கானக விலங்குமாகி
கங்குல் பகலாகி மதியாகி ரவியாகி வெளி
கண்ட பொருளெவையு மாகி
நானாகி நீயாகி யவனாகி யவளாகி
நாதமொடு பூதமாகி
நாடுமொளி புரியவடி யேனுமுமை
நம்பினேன் நன்மை தந்தா ளுதற்கே
வானோரு மடிபணித லுள்ளநீர் பின்றொடர
வள்ள லிறஸூல் வருகவே
வளருமருள் நிறைகுடி வாழுமென் னிரு
கண்மணியே முஹ்யித்தீனே!
-------------------,இது குணங்குடி மஸ்தான் ஸாஹிப்
வலிய்யுல்லாஹ் பாடல்... அன்னவர்களின் பாடலை இறை துதியாகக் கொண்டு .......
கவுரமிக்க தலைவர்- கண்ணியமிக்க பிரதம அதிதிகள்- உரையாளர்கள்- கவிஞர்கள்- கற்றறிந்த சபையினர்
-- அறிவிப்பாளர்- மைக்கு செட்டுக் காரர் அனைவருக்கும்
எனது இனிய சலாமும் சொபனங்களும் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்களும் உரித்த்தாகுக.
அஸ்ஸலாமு அலைக்கும் –வணக்கம்
வாழும் பாவலரே ...இதைக்
கேளும் பாவலரே .....
௦௦
என்னை கவிதை பாடச் சொல்கிறார்
தலைவர்
ஒரு ஊமையனை பாட்டுப் பாடச்
சொல்கிறார் தலைவர்
ஒரு ஈ மெயிலை கொம்போஸ்
செய்து
ஒரு ஆமையிலே கொண்டு போகச் சொல்கிறார் .....
ஒத்தைக் கால் முடவனை
ஒலிம்பிக்கில் ஓடு என்கிறார்
இதெல்லாம் நடக்கிற காரியமா ...?
இதெல்லாம் நடக்கிற காரியமா ...?
வாழும் பாவலரே ...இதைக்
கேளும் பாவலரே .....
௦௦
இது
என் கவிதை நேரம்
கதைத்திருந்தது
போதுமினிக்
காதுக்குள்
கொஞ்சம் கவிதை ஊற்று
நீ
ஒரு கவி ஊற்று என்கிறார் தலைவர்
நீ
தீரன்.. கவிகளில் சூரன்..
கதைகளில்
வீரன்...சொந்த ஊரன்..
ஒரு கவிதை கூறேன் ..
என்கிறார்
தலைவர்;,,,,ஐயஹோ...
௦௦
என்
இலக்கிய வேர் பாய
நீர் விட்ட
சேர் இந்தப்
பீர் முகம்மது
சேர்.தான்...
எனவேதான்
கூப்பிட்ட
குரலுக்கு ஓடி வந்தேன்
ஆனால் கவிதை கொண்டு வரவில்லை
௦௦
இந்த
நிகழ்ச்சிக்கு பின்னால்
புகழ்ச்சியும் உண்டு..இகழ்ச்சியும் உண்டு...
வாழும் பாவலரே ...இதைக்
கேளும் பாவலரே .....
௦௦
அழைப்பிதழ்
அடிக்க
அச்சுக்
கந்தோருக்குப் போனேன் – இடையில்
பெச்சுப் போனது
பைக்கு
அச்சுப்
பெருநாள் காலம்
பெச்சுக்
கடை பூட்டு –
ரோட்டோரம்
வெச்சுப்
பூட்டி விட்டு
ஓட்டோவில்
போவோம் என்று
பைக்குள் கையை
விட்டால்
அஞ்சு
சதமும் இல்லை
அச்சுப்
பெருநாளைக்கு
அச்சுப்
பலகாரம் செய்ய
மிச்சம்
மீதி இல்லாம –பொஞ்சாதி
பக்கட்டைக்
குடைஞ்சிருந்தாள்
பக்கட்டுக்குள்
பொன்னாங்கண்ணி
கடைஞ்சிருந்தாள்
.....
வாழும் பாவலரே ...இதைக்
கேளும் பாவலரே .....
௦௦
அந்த நேரம் தொடக்கம்
இந்த
நேரம் வரையும்
ஒரே
டென்ஷன்தான் ...என்ன செய்ய
நான்
பென்சன் ..ஆள்..
௦௦
எனவே
கவிதை ஒண்டும்
எழுதவில்லை..
ஆயினும்
ஒரு கவிதை கொண்டு
வந்துள்ளேன்
௦௦
தென்
கிழக்கின் உமர்கையாம்
அரும்பு
மீசை தத்துவஞானி
காணாமற்
போன ஒரு தங்கக் காசு
என்றும்
எம் மனதில்
வாழும்
பாவலர் எழுதிய
ஒரு
கவிதை கொண்டு வந்துள்ளேன் ...
கேளுங்கள்
௦௦
இரணக்
கோல்
இரணக்
கோல்
காக்கா அக்கம்புதன்னைக்
காலால் மிதிக்காதே
ஏக்கம்
மிகுந்த எங்கள்
இரணக்
கோல்..கதிரடிக்கும்
கம்புதான் எண்களினைக்
காக்கும்
படை –அதுவே
நம்பிக்கை
தரும் ஒரு கோல்
நாளை சில பேருக்கு
சூட்டுக்
கோல் ஆகிடலாம்
சுரணை
வருமட்டும்எங்கள்
பாட்டைச்
சுரண்டுபவர்
பழிவாங்கப்
படுவர்
இந்
நீட்டுக் கோல் அவர்களது
நெஞ்சைத்
திருத்திடலாம்
கட்டாதே
பல்லைச் ச்சே
காக்கா
உன் காலை
எடு.
௦௦
மிக்க நன்றிகள்...
அஸ்ஸலாமு
அலைக்கும் வணக்கம்
௦
வாழும் பாவலர் பஸில் காரியப்பர்
சாய்ந்தமருது
பிரதேச கலாசார அதிகார சபை கல்முனை பாவலர் பன்னையுடன் இணைந்து நடத்தும் வாழும் பாவலர்
நிகழ்வு இன்று ( 17.09.2016) நிகழ்கிறது --
~வானம் என் கூரை.. அதன் கீழ்
வாழும்
மாந்தரெல்லாம்ää என் இரத்தக் கலப்புகள்.|
-பாவலர் பஸீல் காரியப்பர்-
பாவலர் பஸீல்காரியப்பர். இதுää கடந்த 2006.02.16 ல் தனதுää ~அழகான ஒருசோடிக் கண்களை| நிந்தரமாக மூடிக்கொண்டää அந்த மகத்தான மக்கள் கவிஞனின் கவிதா வரிகள் மட்டும் அல்ல. அவனது
வாழ்க்கைப் பதிவும் கூட
~~....... நான் எப்படி வர வேண்டும் என்று எனக்குள்ளே ஒரு படத்தை
வரைந்துகொண்டுää அந்த மனிதனை ஆக்குவதிலே நான்
ஈடுபட்டிருக்கிறேன். மனித உணர்வை மலர்வித்தல்ää
மனித உறவைச் செப்பனிடல்ää மனித உறவுக்கு நம்பிக்கையூட்டுதல்ää
நலிந்த மனிதனுக்கு இரங்குதல்ää அதற்காகப் போராடுதல் ஒரு போர்க்குணங் கொண்டவனாகää சீற்றமுள்ளவனாக வாழ
விரும்புகின்றேன்.....||
உலகத்திற்குää இவ்வாறு தன்னை அறிவித்துக் கொண்ட
பாவலர்ää குறிப்பாகää நம் நாட்டில்ää தமிழ்ää
முஸ்லிம் இன நல்லுறவை நடைமுறை வாழ்வில்; இறுக்கமாகப் பேணியும்ää பேசியும்ää தன் படைப்புகளில் அவ்வுறவையே அடித்தள
நாதமாகவும்ääää கொண்டது மட்டுமன்றிää தனது வாழ்வியல் சுவையாகவும்ää கொண்டு வாழ்ந்தவர். அதனால்தான்ää ~அண்ணர் சில்லையூர் செல்வராசன்
அவர்களுக்கு.!| தனது ஒரேயொரு கவிதை நூலானää ~ஆத்மாவின் அலைகளை| சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
பாவலரது மானுடநேய அணுகுமுறைமை பற்றிய
சில குறிப்புகளைää அவருடனானää சில அபிமானிகளது அநுபவங்கள்
வாயிலாகவும்ää அவரது படைப்புகளுக்கூடாகவும்ää ஆண்டுக்கணக்கு வாரியாகää இங்கு பதிவு செய்ய உத்தேசமுண்டு.
~இலக்கண அறிவோää தகவல் அறிவோ நிறைந்த மனிதனாக நான்
இல்லை. என் மனதில் அந்தந்த வேளையில்ää எழுந்த சிந்தனைகளை நான் எழுத்தில்
வடிக்கிறேன்.. எனக்கு சுயமாக ஏற்பட்ட சொல்லொழுக்கில். அதைச் செதுக்குகின்றேன்.
கவிதை என்பது பெருகிய உணர்வின் இறுகிய இசையோட்டமான சிந்தனைச் சிறைப்பிடிப்பு.
என்பது என் கருத்து|
இவ்வாறு தன்; கவிதைகளின் அத்திவார இரகசியத்தை
வெளிப்படுத்திய ஒரு வெகுளித்தனமான பாவலர்ää;ää இனப் பிரச்சினையைக் காசாக்கவும்ää
அதன் மூலம் பிரமுகர்த்தனமாகப் பிரபலம் பெறவும் முயல்கிறவர்களுக்கு முகத்திலடித்தாற் போன்று உடனடியாகப் பதிலடி கொடுக்கும் மூர்க்கம் மிகுந்தவர்.
பாவலருக்குப் பல முகங்கள்
இருக்கின்றன. அவரது மானுட மன ஆளுமை வியக்கத்தக்;க அளவுக்கு சக்திமிக்கது. அவருடன் நெருங்கிப் பழகிய பல்வேறுபட்ட
மனிதர்களுக்கு இது நன்கு புரியும். பஸீல் காரியப்பர் அவர்களின் இயங்கு தளங்கள்; பல் வகையின. அவர் ஒரு திறமையான ஆசிரியர்ää மானுடமன ஆய்வாளர்ää மொழி பெயர்ப்பாளர்ää சிறுகதைää உருவகக்கதை எழுத்தாளர்ää வானொலிக் கலைஞர்ää புகைப்படக்கலை நிபுனர்ää அரசியல் ஈடுபாட்டுச் செயலர்ää ஆங்கில மொழிப் போதனாசிரியர்ää மதுரமான குரல்வளமிக்க பாடகர்ää பாவலர்ää
ஆத்மீக வழியில் ஸ_பித்துவ
முனைப்புடையவர்ää தற்காப்புச் சண்டைப் பயிற்றுநர்ää ஒரு ஓவியர்ää
விளையாட்டு வீரர்;ää ஒரு சேவைச் சாரணர்ää நகைச்சுவை வைத்தியர்ää திடீர் கோபக்காரர்ää ஒரு வெகுளித்தனமான இரசிகர்ää காதலன்பு மீக்குற்ற கணவர்ää தன் பிள்ளைகளுக்கு ஒரு தோழமையான அன்பர்.. பற்பல நலன்புரிச்
சங்கங்களின் ஆலோசகர்ää என்றெல்லாம் பல் குணாதிசயங்களின் கலவையானவர். இவை பிறரது
அவதானிப்புக்கள்.
எனினும்ää தன் ~உள்ளே| தனது மனிதனைத் தேடிய பாவலர்ää அம்மனி(தனது) குணாதிசயங்களாகää தனக்குள்ää அமைதல் வேண்டுமென பிரியப்பட்ட ~உள் மனிதனின்| வெளிப்படைத் தன்மையை பின்வருமாறு செதுக்கினார்.
~பெரும் துயர்
பிறர்க்குச் செய்யும்ää பேய்களை எதிர்க்கும் ஒரு போராளியாக.. வருந்துவோர்க்கு இரங்கும் அரும் குணம் படைத்த சிறு வள்ளலாக.. மனிதன் மற்றும் படைப்புக்களை விளங்கிக் கொண்டு உறவாய் அவர்களுக்கு உடன் கிடைக்கும் ஊழியனுமாக..சிறு நோவுதல்தானும்ää என்னால் யார்க்குமிராத..சீர்மையான உறவு கலந்த இன்பங்கள் துய்த்து
அதில் உச்சம் கண்ட நிறைவால்ää என்னுள் வாழும் மனிதன் சமநிலையில் மனம் பழுத்துää அறிவு தெளிந்த ஞானத்தால்..அன்பு
கனிந்த அனுபவத்தால்..விரைவாய் வீரம் செறிந்து என்னுள் பாய்ந்துவரும் கவிதை வீச்சை
வரிகளாகவும்ää இசை வடிவங்களாகவும் சிறைப்பிடித்துத்
தரும் ஒரு மனிதனாக....வெளிப்பாட்டின் ஊடகம் தான் ஒருவன் என்ற உண்மையின்
உள்ளார்த்தம் உணர்ந்தவனாக..மற்ற மனிதர் என்னை நோவிக்க முடியாத அளவிலாகிலும்
தேவைகள் அற்றவனாக..நிறைவான மனமும்ää பரிசுத்த உடலும் பெற்ற ஒரு பாலகனாய் சிறு காலமாயினும் வாழவும்ää ஓ..! இனிய நினைவுகளால் ஒரு சிறிய
பிரியா விடை பெறவும் மிக எளிமையாகப் பெறவும் பிரியப்படுகின்றேன்||
சிறுபள்ளிப் பருவத்திலேயேää ~கவிஞன்| என்றும்ää வளரிளம்ää மாணவப்பருவத்தில்ää ~உமர்கையாம்.| எனவும்ää வாலிப வயதில் ~அரும்பு மீசை
தத்துவஞானி| எனவும்ää
பிறரால்ää வர்ணிக்கப்பட்டää பாவலர்ää நூற்றுக் கணக்கான இசைப்பாடல்கள்ää
கவிதைகள்ää ஆங்கில இலக்கியங்களை தமிழ்ப்படுத்தல்ää இசைச் சித்திரங்கள்ää சிறுகதைகள்ää உருவகக் கதைகள்ää நாடகங்கள்.. புனைந்துள்ளார். அதேபோல்ää கடந்த சுனாமி ஆழிப்பேரலைகளில் அவற்றை
இழந்துமுள்ளார்.
பாவலருக்குää அவரது ~தங்கம்மா| என்ற கவிதை கொழும்பு வளாகத் தமிழ்சங்கத்தின்ää தங்கப்பதக்கம் கிடைத்தது. அதையொட்டி
சம்மாந்துறை மண்ணில் பொதுமக்களால் எடுக்கப்பட்ட விழாவில்ää புலவர்மணி. உயர்திரு. ஏ.
பெரியதம்பிப்பிள்ளை ஐயாää அவர்களால்ää ~கவிஞன் தோன்றிவிட்டான்..ஓ!.. பஸீல்;
காரியப்பர் கண்டீர்..!| என்று வாழ்த்துரைக்கப்பட்டுää ~பாவலர்| என்ற பட்டமும்ää அளித்து கௌரவிக்கப்பட்டார்.
பிற்காலங்களில்ää அவரது பல கவிதைகள் தொகுக்கப்பட்டு ~ஆத்மாவின் அலைகள்| என்ற நூலாகää தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால்
வெளியிடப்பட்டது. இறுதியாகää சாய்ந்தமருது அபாபீல்கள் கவிதா வட்டத்தினால்ää ~தென்கிழக்கின் தேசகவி| என பட்டமளிக்கப்பட்டார்.
பல்குணாதிசயங்களின்ää கலவையாக பாவலர்ää இருந்த போதிலும்ää தனது வாழும் முறைமையில் மிகவும் கொள்கைப் பிடிவாதமுடையவர். அவருடன் மிக நெருக்கமாகப் பழகிய அக்காலத்தைய மேல்மட்டத்து
பெரிய அரசியற் புள்ளிகள்ää பாவலரை பணமும்ää பதவியும் கொடுத்து தம்முடையவராக்க முயன்ற போது எனது இரத்தம்
தங்கத்தில் கலந்தது) என்றுää அவர்களது ஆங்கிலேயப் பாணியிலேயேää
கர்ச்சனை செய்தவர்.
அதே சமயம் இப்பெரிய பிரமுகர்களால்ää
எண்ணியும் பார்க்க முடியாதää ஒரு பதவியில்ää அதாவதுää ~நகர சுத்தித் தொழிலாளர்| சங்கத்தின் செயலாளராக இருந்துää
அவர்களது வாழ்வியல் முன்னேற்றத்தையிட்டு ஆராய்ந்தள்ளதானது அவரது
மானுட அணுகுமுறையை தெளிவாக்குகிறது. வெறுமையில் மகிழ்ந்திருத்தல் என்பதை பிறருக்குää உபதேசித்து அதன்படியே தானும்ää வாழ்ந்த ஒரு பிடிவாதமானää சீற்றமுள்ள கவிஞனின்ää வாழ்வு முழுவதுமேää கலையழகும்ää கவிதாமணமும் உடையவை.
~~ஒரு சிற்றெறும்புக்குக் கூட ஒரு நிழல் இருக்குமாப் போன்று ஒரு மனிதனின் வாழ்வின் தேடல்களின்ää
எச்சங்களே அவனது பதிவாகும்|| என்றுரைத்த பாலவரது படைப்புலகில் சஞ்சரித்தல்ää நம்மீது ஒரு இலக்கியக்கடமையாகிறது. அந்தச் சஞ்சாரம்ää அவரது நிஜத்தையும் நிழலையும் நமக்குக் காண்பிக்கப் போதுமானதாகும்..00
காலைப் பொழுதினில்
ஒரு கவியரங்கு
காதுகள் இனிக்க கவி
கேட்கும் பாவரங்கு
சந்தக் கவி இசைக்கும்
பீர் முகம்மது
தலைமையில் நிகழும் அகமது குளிர்ந்து
அஸீஸ்
1961இல் பிறந்தார். ஆரம்பக் கல்வி கல்முனைக்குடி
அல் பஹ்ரியா
இடை நிலைக் கல்வி கல்முனை சாஹிரா.
பலாலி
ஆசிரியர் கலாசாலையில் ஆங்கில
ஆசிரியராகப் பயிற்சி
கல்முனை பாளிகாவில் கற்பித்தல் இலங்கை
நிருவாக சேவையில் இணைந்து சிறிது காலம்
உதவி அரசாங்க அதிபர்
அதன் பின்
வெளி நாட்டு ராஜ தந்திர சேவையில் இனணந்தார். பல பதவிகள் வகித்தார்
ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரத் தூதுவராலயத்தில் இரண்டாவது செயலாளர்
காத்மாண்டு வில் இயங்கும் சார்க்
செயலகத்தில் பணிப்பாளர்
கன்பரா இலங்கைத் தூதரகத்தில் அமைச்சு ஆலோசகர்
நியுயோர்க்
ஐ.நா. சபைக்கான
இலங்கையின் பதில் நிரந்தரப்
பிரதிநிதி
தற்போது
வியன்னாவில்
உள்ள ஐ.நா. சபை
மற்றும் இதர சர்வதேச நிறுவனங்களுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி
ஒரு கவிஞர். புகழ் பெற்ற ஐந்து கண்டங்களின் மண்
என்ற கவிதை நூலின் ஆசிரியர்
சிராஜ் மஷ்ஹூர்
அக்கரைப்பற்றின் கலை இலக்கிய சமூக முன்னேற்ற செயற்பாட்டாளர்... முதுகலைமாணி
பட்டம் பெற்றவர்-
புகழ் பெற்ற “”எதிர்ப்பிலக்கியம்”” என்ற நூலின்
ஆசிரியர்
மீள்பார்வை பத்திரிகையின் ஆசிரியர்
பாவலர் பஸில் கார்யப்பரின் ஆத்மாவின்
அலைகள் நூலுக்கு வெளிஈட்டுரை
எழுதியவர்
தென்கிழக்குப் பல்கலையின் வரலாற்றுச் சிறப்பு
மிக்க “ஒலுவில் பிரகடனம் “ என்ற எழுச்சியின்
பிரதான செயற்பாட்டாளர்
தற்போது
உரையாடலுக்கும்
ஆய்வுக்குமான மையத்தின் சிரேஷ்ட
நிறைவேற்றுப் பணிப்பாளர்
No comments:
Post a Comment