Tuesday, October 31, 2023

அழகான ஒரு சோடிக் கண்கள்....

 

அழகான ஒரு சோடிக் கண்கள்....

 

(பாவலர் பஸீல் காரியப்பரின் வாழ்வியல் சித்திரம்.)

 

ஆர்.எம். நௌஸாத்

௦௦

 

 

 

 

01 சீற்றமுள்ளவனாக வாழ விரும்புகின்றேன்.

 

 

~வானம் என் கூரை.. அதன் கீழ்

வாழும் மாந்தரெல்லாம்ää  என் இரத்தக் கலப்புகள்.|

-பாவலர் பஸீல் காரியப்பர்-

 

 

   பாவலர் பஸீல்காரியப்பர்.  இதுää கடந்த 2006.02.16 ல் தனதுää ~அழகான ஒருசோடிக் கண்களை|  நிந்தரமாக மூடிக்கொண்டää அந்த மகத்தான மக்கள் கவிஞனின் கவிதா வரிகள் மட்டும் அல்ல. அவனது வாழ்க்கைப் பதிவும்  கூட

 

  ~~....... நான் எப்படி வர வேண்டும் என்று எனக்குள்ளே ஒரு படத்தை வரைந்துகொண்டுää அந்த மனிதனை ஆக்குவதிலே நான் ஈடுபட்டிருக்கிறேன். மனித உணர்வை மலர்வித்தல்ää மனித உறவைச் செப்பனிடல்ää மனித உறவுக்கு நம்பிக்கையூட்டுதல்ää நலிந்த மனிதனுக்கு இரங்குதல்ää அதற்காகப் போராடுதல் ஒரு போர்க்குணங் கொண்டவனாகää சீற்றமுள்ளவனாக வாழ விரும்புகின்றேன்.....|| 

 

உலகத்திற்குää இவ்வாறு தன்னை அறிவித்துக் கொண்ட பாவலர்ää குறிப்பாகää நம் நாட்டில்ää  தமிழ்ää முஸ்லிம் இன நல்லுறவை நடைமுறை வாழ்வில்; இறுக்கமாகப் பேணியும்ää பேசியும்ää தன் படைப்புகளில் அவ்வுறவையே அடித்தள நாதமாகவும்ääää கொண்டது மட்டுமன்றிää  தனது வாழ்வியல் சுவையாகவும்ää கொண்டு வாழ்ந்தவர். அதனால்தான்ää ~அண்ணர் சில்லையூர் செல்வராசன் அவர்களுக்கு.!| தனது ஒரேயொரு கவிதை நூலானää  ~ஆத்மாவின் அலைகளை|  சமர்ப்பணம் செய்திருக்கிறார். 

 

பாவலரது மானுடநேய அணுகுமுறைமை பற்றிய சில குறிப்புகளைää அவருடனானää சில அபிமானிகளது அநுபவங்கள் வாயிலாகவும்ää அவரது படைப்புகளுக்கூடாகவும்ää ஆண்டுக்கணக்கு வாரியாகää இங்கு பதிவு செய்ய உத்தேசமுண்டு.

 

~இலக்கண அறிவோää தகவல் அறிவோ நிறைந்த மனிதனாக நான் இல்லை.  என் மனதில் அந்தந்த வேளையில்ää எழுந்த சிந்தனைகளை நான் எழுத்தில் வடிக்கிறேன்.. எனக்கு சுயமாக ஏற்பட்ட சொல்லொழுக்கில். அதைச் செதுக்குகின்றேன். கவிதை என்பது பெருகிய உணர்வின் இறுகிய இசையோட்டமான சிந்தனைச் சிறைப்பிடிப்பு. என்பது என் கருத்து|

 

இவ்வாறு தன்; கவிதைகளின் அத்திவார இரகசியத்தை வெளிப்படுத்திய ஒரு வெகுளித்தனமான பாவலர்ää;ää இனப் பிரச்சினையைக் காசாக்கவும்ää அதன் மூலம்  பிரமுகர்த்தனமாகப் பிரபலம் பெறவும் முயல்கிறவர்களுக்கு முகத்திலடித்தாற் போன்று உடனடியாகப் பதிலடி கொடுக்கும் மூர்க்கம் மிகுந்தவர்.

 

பாவலருக்குப் பல முகங்கள் இருக்கின்றன. அவரது மானுட மன ஆளுமை வியக்கத்தக்;க அளவுக்கு சக்திமிக்கது. அவருடன் நெருங்கிப் பழகிய பல்வேறுபட்ட மனிதர்களுக்கு இது நன்கு புரியும். பஸீல் காரியப்பர் அவர்களின் இயங்கு தளங்கள்; பல் வகையின. அவர்  ஒரு திறமையான ஆசிரியர்ää மானுடமன ஆய்வாளர்ää மொழி பெயர்ப்பாளர்ää சிறுகதைää உருவகக்கதை எழுத்தாளர்ää வானொலிக் கலைஞர்ää புகைப்படக்கலை நிபுனர்ää அரசியல் ஈடுபாட்டுச் செயலர்ää ஆங்கில மொழிப் போதனாசிரியர்ää  மதுரமான குரல்வளமிக்க பாடகர்ää பாவலர்ää ஆத்மீக வழியில் ஸ_பித்துவ முனைப்புடையவர்ää தற்காப்புச் சண்டைப் பயிற்றுநர்ää ஒரு  ஓவியர்ää விளையாட்டு வீரர்;ää ஒரு சேவைச் சாரணர்ää நகைச்சுவை வைத்தியர்ää திடீர் கோபக்காரர்ää ஒரு வெகுளித்தனமான இரசிகர்ää காதலன்பு மீக்குற்ற கணவர்ää தன் பிள்ளைகளுக்கு ஒரு தோழமையான அன்பர்.. பற்பல நலன்புரிச் சங்கங்களின் ஆலோசகர்ää  என்றெல்லாம் பல் குணாதிசயங்களின் கலவையானவர். இவை பிறரது அவதானிப்புக்கள்.

 

எனினும்ää தன் ~உள்ளே| தனது மனிதனைத் தேடிய பாவலர்ää அம்மனி(தனது) குணாதிசயங்களாகää தனக்குள்ää அமைதல் வேண்டுமென பிரியப்பட்ட ~உள் மனிதனின்| வெளிப்படைத் தன்மையை பின்வருமாறு செதுக்கினார்.

 

 

~பெரும் துயர் பிறர்க்குச் செய்யும்ää பேய்களை எதிர்க்கும் ஒரு போராளியாக.. வருந்துவோர்க்கு இரங்கும்  அரும் குணம் படைத்த சிறு வள்ளலாக.. மனிதன் மற்றும் படைப்புக்களை விளங்கிக் கொண்டு உறவாய் அவர்களுக்கு உடன் கிடைக்கும் ஊழியனுமாக..சிறு நோவுதல்தானும்ää என்னால் யார்க்குமிராத..சீர்மையான உறவு கலந்த இன்பங்கள் துய்த்து அதில் உச்சம் கண்ட நிறைவால்ää என்னுள் வாழும் மனிதன் சமநிலையில் மனம் பழுத்துää அறிவு தெளிந்த ஞானத்தால்..அன்பு கனிந்த அனுபவத்தால்..விரைவாய் வீரம் செறிந்து என்னுள் பாய்ந்துவரும் கவிதை வீச்சை வரிகளாகவும்ää இசை வடிவங்களாகவும் சிறைப்பிடித்துத் தரும் ஒரு மனிதனாக....வெளிப்பாட்டின் ஊடகம் தான் ஒருவன் என்ற உண்மையின் உள்ளார்த்தம் உணர்ந்தவனாக..மற்ற மனிதர் என்னை நோவிக்க முடியாத அளவிலாகிலும் தேவைகள் அற்றவனாக..நிறைவான மனமும்ää பரிசுத்த உடலும் பெற்ற ஒரு பாலகனாய் சிறு காலமாயினும் வாழவும்ää ஓ..! இனிய நினைவுகளால் ஒரு சிறிய பிரியா விடை பெறவும் மிக எளிமையாகப் பெறவும் பிரியப்படுகின்றேன்||

 

 சிறுபள்ளிப் பருவத்திலேயேää ~கவிஞன்| என்றும்ää வளரிளம்ää மாணவப்பருவத்தில்ää ~உமர்கையாம்.| எனவும்ää வாலிப வயதில் ~அரும்பு மீசை தத்துவஞானி| எனவும்ää பிறரால்ää வர்ணிக்கப்பட்டää பாவலர்ää நூற்றுக் கணக்கான இசைப்பாடல்கள்ää கவிதைகள்ää ஆங்கில இலக்கியங்களை தமிழ்ப்படுத்தல்ää இசைச் சித்திரங்கள்ää சிறுகதைகள்ää உருவகக் கதைகள்ää நாடகங்கள்.. புனைந்துள்ளார். அதேபோல்ää கடந்த சுனாமி ஆழிப்பேரலைகளில் அவற்றை இழந்துமுள்ளார்.

 

பாவலருக்குää அவரது ~தங்கம்மா| என்ற கவிதை கொழும்பு வளாகத் தமிழ்சங்கத்தின்ää  தங்கப்பதக்கம் கிடைத்தது. அதையொட்டி சம்மாந்துறை மண்ணில் பொதுமக்களால் எடுக்கப்பட்ட விழாவில்ää புலவர்மணி. உயர்திரு. ஏ. பெரியதம்பிப்பிள்ளை ஐயாää அவர்களால்ää ~கவிஞன் தோன்றிவிட்டான்..ஓ!.. பஸீல்; காரியப்பர் கண்டீர்..!| என்று வாழ்த்துரைக்கப்பட்டுää ~பாவலர்| என்ற பட்டமும்ää அளித்து கௌரவிக்கப்பட்டார். 

    பிற்காலங்களில்ää அவரது  பல கவிதைகள் தொகுக்கப்பட்டு ~ஆத்மாவின் அலைகள்| என்ற நூலாகää தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டது. இறுதியாகää சாய்ந்தமருது அபாபீல்கள் கவிதா வட்டத்தினால்ää ~தென்கிழக்கின் தேசகவி| என பட்டமளிக்கப்பட்டார்.

   பல்குணாதிசயங்களின்ää கலவையாக பாவலர்ää இருந்த போதிலும்ää தனது வாழும் முறைமையில் மிகவும் கொள்கைப் பிடிவாதமுடையவர்.  அவருடன் மிக நெருக்கமாகப் பழகிய  அக்காலத்தைய மேல்மட்டத்து பெரிய அரசியற் புள்ளிகள்ää பாவலரை பணமும்ää பதவியும் கொடுத்து தம்முடையவராக்க முயன்ற போதுää  “ஆல டிடழழன அiஒநன றiவா புழடன” (எனது இரத்தம் தங்கத்தில் கலந்தது) என்றுää அவர்களது ஆங்கிலேயப் பாணியிலேயேää  கர்ச்சனை செய்தவர்.

   அதே சமயம் இப்பெரிய பிரமுகர்களால்ää எண்ணியும் பார்க்க முடியாதää ஒரு பதவியில்ää அதாவதுää  ~நகர சுத்தித் தொழிலாளர்| சங்கத்தின் செயலாளராக இருந்துää அவர்களது வாழ்வியல் முன்னேற்றத்தையிட்டு ஆராய்ந்தள்ளதானது அவரது மானுட அணுகுமுறையை தெளிவாக்குகிறது. ர்யிpலநௌள in நுஅpவலநௌள  (வெறுமையில் மகிழ்ந்திருத்தல்) என்பதை பிறருக்குää உபதேசித்து அதன்படியே தானும்ää வாழ்ந்த ஒரு பிடிவாதமானää சீற்றமுள்ள  கவிஞனின்ää வாழ்வு முழுவதுமேää கலையழகும்ää கவிதாமணமும் உடையவை. 

   ~~ஒரு சிற்றெறும்புக்குக் கூட  ஒரு நிழல் இருக்குமாப் போன்று ஒரு மனிதனின் வாழ்வின் தேடல்களின்ää எச்சங்களே அவனது பதிவாகும்|| என்றுரைத்த பாலவரது படைப்புலகில் சஞ்சரித்தல்ää நம்மீது ஒரு இலக்கியக்கடமையாகிறது.  அந்தச் சஞ்சாரம்ää அவரது நிஜத்தையும் நிழலையும் நமக்குக் காண்பிக்கப் போதுமானதாகும்.. அந்த இராட்சதச் சிற்றெறும்பின் ராட்டினத்தமிழில் தெறித்த சாகா வரிகள் இவை:

 

ஆஹா..ää கவிதை பண்ணும் இனிய

ஆற்றல்தனை அளித்தாய்

சாகாக் கலை படையாது- நான்

சாக விரும்புவனோ.?.

 

என் சிறு ஆற்றலினால் இங்கு

இனியவை பண்ணிடுமுன்ää

என்னை அழைக்காதே.. நான்

உயிரைத் தரமாட்டேன்..

 

உலகப் படைப்புகளில் நான்

உயர்கல்வி கற்க வேண்டும்

கலையைப் படைத்தவனை நான்

கண்டு தெளிய வேண்டும்.

 

என்னை அணுகாதே..- நான்

உயிரைத் தரமாட்டேன்.

 

பாவலர் பஸீல் காரியப்பர்.

(உயிரைத் தரமாட்டேன். 1962)

 

00

 

 

02 தென்கிழக்கின் உமர்கையாம்..

 

 

 

~சம்மாந்துறை அரிசைச் சாத்தி வைத்த பல்லொளிர

உம்மாவெனக் கூவும் உயிர் பிறப்பதெக்காலம்..?|

-பாவலர் பஸீல் காரியப்பர்.

 

 

   பாவலர் பஸீல்காரியப்பர்.! 1940.05.09 ல் சம்மாந்துறையில் பிறந்தார்.  பதுளை கார்மல் கொன்வென்ட்டில் ஆரம்பமான இவரது வித்தியாரம்ää சம்மாந்துறை அரசினர் ஆண்கள் பாடசாலைää மற்றும் கல்முனை பாத்திமா கல்லூரிகளில் தொடர்ந்தது.. 1951.ல் புலமைப் பரிசில்  பரீட்சையில் திறமையாகச் சித்தியடைந்தார். 1954. ல் தனது பதிநான்காவது வயதில்ää தான் எழுதிய தமிழ் வாழ்த்துக் கவிதையைத் துணிவுடன் மேடைமீதேறி அவர் முழங்கிய அவரது அசாத்தியத் துணிவை வியந்தää  தமிழறிஞர் திரு. கே.ஆர். அழகையா பீ.ஏ. அவர்களால்ää ~ஓ..! கவிஞரே..!| என வாழ்த்துரைக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார். தவிரவும்ää இந்த இளவயதில் பஸீல்காரியப்பர்  எழுதிய கவிதைகளின் சாரத்தை உணர்ந்த திரு. அழகையா ஆசிரியர் இவருக்கு இட்ட பட்டப் பெயர் ~உமர்கையாம்|. தொடர்ந்துää சகநண்பர்களாலும்ää அவரது இலக்கிய நட்புள்ளங்களாலும்ää உமர்கையாம் என்றே விழிக்கப்பட்டார்.

 

 1955.ல்ää  ஜே.எஸ்.ஸி. செலக்டிவ். பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மைச் சித்தியடைந்தார். சித்தியடைந்த பெறுபேற்றுப் பிரதியை அவரது ஆசிரியர் பார்வையிட்டுப் பாராட்டுத் தெரிவித்துää  தற்செயலாக அதன் பின்புறம் பார்த்த போதுää அதிலும் தன் இளமைக் கவிதையை வீரியத்தமிழில் வரித்திருந்தார் பின்வருமாறு:-

 

 

 வருகிறேன்.. வருகிறாய்..

வந்ததும் நாம்  வழமை போல்

அஞ்சித் தவிக்கிறோம்.. நான்

இரவிது மறைவிது என்கிறேன்.. நீää

  இல்லை பிறர் கண்டால்.. என்கிறாய்! - வானில்

 இருள் கிழித்து மின்னல் அடித்ததே.

  ஓ..! இந்த இறைவன் என்ன புகைப்படக் காரனோ..?

 

இதனையும் வாசித்த ஆசிரியர்ää ~பரீட்சைப் பேப்பர்களிலும் கவிதைதான் எழுதியிருப்பாய் நீ.. எப்படித்தான் சித்தியடைந்தாயோ..?| என்று வியந்தார். (இக்கவிதை பின்னர்ää பாவலரால்ää நன்கு செதுக்கப்பட்டுää ~படப்பிடிப்பு| என்ற தலைப்பில் பிரசுரம் பெற்றது.) 

 

        பாவலரின் பாடசாலைப் பருவத்தை மிக நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும்ää அருட்சகோதரர். கலாநிதி. எஸ்.ஏ.ஐ. மத்தியு எஸ்எஸ்ஜே .அவர்கள் கூறுகிறார்:-

 

  ~~.......... பஸில் காரியப்பர் 1952ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு மழை நாளில்ää பாத்திமாக் கல்லூரிக்குள் வலது கால் வைத்தார். வாப்பா கூட்டி வந்தார். அருட்சகோதரர் எம். இமானுவல் அந்த இளம் வயதில்ää அவருக்கு அதிபராகக் காட்சியளித்தார். ஆனால்ää அந்தக் காலத்தில்ää உண்மை அதிபர்.எஸ்.எம். பெஞ்சமின் ஆகும். ஆனால்ää பஸீல்காரியப்பரின் இளமனதைத் தொட்டுவிட்டää பிரதிஅதிபர் எம். இமானுவல் அடிகளைää அதிபர் என்றே அழைக்கிறார்.  அவரது முதல் சந்திப்பை பிற்காலத்தில்ää பாவலர் இவ்வாறு கூறினார்ää எங்கள் அதிபர் அருட்சகோதரர் இமனுவல் அவர்கள்  அரும்பிய ஒரு குறுஞ் சிரிப்புடன்ää கருணையும்ää நகைச்சுவையும் கலந்து என்னைப் பார்த்தார். அந்தப் பார்வை இன்னும் என்னுள்ää புதுமையாக நிலைத்திருக்கிறது. இனிய நினைவுகள்..என்றும் இளையன..||

 

    பஸீல்காரியப்பரின் வகுப்பாசிரியர்ää  அருட்சகோதரர் ரொபேர்ட் அவர்ர்களுக்குää திருகோணமலைக்கு ஒர் இடம் மாற்றம் வந்தது. அதன் நிமித்தம்ää கிளனி ஹோலில்ää கல்லூரி மட்டத்தில்ää  ஒரு பிரியாவிடைக் கூட்டம் நடைபெற்றது.  அதில்ää மாணவர்கள் சார்பாகää பஸில் காரியப்பரைப் பேசச் nhன்னார்கள். அந்தப் பேச்சு கவிதை வடிவில் அமைந்திருந்தது.  கூட்டம் முடிந்த பின்ää அவரது ஆசிரியர்களில் ஒருவரானää  கே.ஆர். அருளையா அவர்கள்ää ஓடிவந்தார். பஸீல் காரியப்பரின் பிரதியை வாங்கிப் படித்தார். ~ஓ.. கவிஞரே..!|  என்று அவரது தோளில் தட்டி வாழ்ததுக் கூறினார். ~எழுக புலவன்..!| என்று பாரதிää பாரதிதாசனை வாழ்த்தியது போன்று அருளையா என்ற பேரறிஞர் வாக்குப் பலித்தது..||

 

~~..பாவலர் பஸீல் காரியப்பர் அவர்களின் கவிதைகளை ஏன் ஆய்தல் வேண்டும்.. அவருக்குத் தமிழ் மேல் ஏன் பற்றுதல் ஏற்பட்டது.. அதற்கு அவர் என்ன தியாகங்கள் செய்தார்.. அவரது வீட்டுச் சூழல்கள்ää அவர்தம் ஆசிரியப் பெருந்தகைகளின் தாக்கம்.. இளமையில் அவரைக் கவர்ந்த நூலாசிரியர்கள்.. பரந்துபட்ட எழுத்துலகம்.. ஆகிய இன்னோரன்ன அம்சங்கள் அவரையும் பாதித்து. அவரது எழுத்துகளையும் பாதித்திருக்கும். பஸீல்காரியப்பர் எதை எழுதினார்.. அதை ஏன் எழுதினார்.. அதை எவ்வாறு எழுதினார். என்பவையெல்லாம்  உளப்பகுப்பாய்வில் அடங்கும்..........||

 

    தமிழ்ப்பணியைப் பொறுத்த மட்டில்ää பாவலருக்குää இப்படியான ஒரு உறுதியானää அத்திவாரம்ää கிடைத்தது போல்ää அரசியலிலும்ää கிடைத்தது. தனது பள்ளிப் பருவத்தில்ää 1956.ல்ää மட்டக்களப்பில் நிகழ்ந்தää தமிழரசுக் கட்சியின்ää மாபெரும் சத்தியாக்கிரக நிகழ்வில்ää பங்கேற்கத்ää தனது பதினாறாவது வயதில்ää சம்மாந்துறையிலிருந்துää துவிச்சக்கர வண்டியில் தன்னந் தனியனாகப் பயணம் செய்தார். அப்பயணத்தின் போதுää எதிர்ப்பாளரின் கல் வீச்சுக்கிலக்காகிக் காயமடைந்தார்.

 

1957.ல்ää மூதறிஞர்ää தந்தை செல்வநாயகம் ஐயாää அவர்களின் தலைமையில்ää  பாத்திமாக் கல்லூரியில்ää நடைபெற்றää மேதினப் பேச்சுப் போட்டியில்ää பாவலர் பேசிய கருத்துகளில்ää அவரது வயதுக்கு மிகவும் அதிகமான காhரமும்ää சாரமும்ää இருப்பதைக் கவனித்த தந்தை செல்வநாயகம் ஐயாää அவர்கள் வியப்புடன் அவரைத் தட்டிக் கொடுத்தார். இக் கூட்டத்தில்ää தந்தை செல்வநாயகத்துடன்ää ~சொல்லின் செல்வர்| திரு. செ. இராசதுரை அவர்களும் கலந்து கொண்டிருந்தார். அவர் பாவலரை கட்;டியணைத்து தன் வியப்பையும்ää மகிழ்வையும் தெரிவித்துக் கொண்டார். இவர்களுடன்ää தலைவர் திரு. அ.அமிர்தலிங்கம்ää மட்டுநகா லோரன்ஸ்ää கவிஞர் காசி ஆனந்தன்ää மற்றும்ää மாஸ்டர் சிவலிங்கம்ää ஆகியோரும் இச் சிற்றெறும்புப் பாவலனை அடையாளம் கண்டு பாராட்டி உரையாற்றினர்.

 

பாவலருக்குக்குள் தமிழறிவும்ääää அரசியலறிவும்ää உறுதிமிக்க அத்திவாரங்களிலிருந்து ஆரம்பமாயிற்று. ஒரு சாhதாரண மரத்தின் கிளைகளை  எவ்வாறு வடிவம் அமைப்பது என்பது பற்றிய அவரது பிற்காலத் தத்துவார்த்தச் சிந்தனைகளை அவர் தன்  படைப்புக்கள் உடாக வியக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தியதற்குää மேற்குறிப்பிட்ட அறிஞர் பெருமக்களே காரணமாதலால்ää அவர்களினையே அப்பெருமை சாரும்..

 

பிற்காலங்களில்ää தனது பள்ளிப்பருவத்தை நினைவுகூர்ந்துää ~கடற்கரையில் உரையாடலின்பம்| நிகழ்வுகளில் பாவலர் குறிப்பிடுகையில்ää ~~12 வயது முதல்ää 18 வயதுவரையான பருவ காலத்தில்ää பாத்திமாக் கல்லூரி என்ற தாய்ää என்னைச் சீராக வளர்த்தாள்.. உருவாக்கினாள்.. என்ற நினைவும்ää நன்றியுணர்வும்ää என்னுள் நிலைத்திருக்கிறது. பாத்திமாக் கல்லூரி என்ற நாற்று மேடையில் முளைவிட்ட பயிர்தான் இன்றைய எனது கவிதை வளம்..||

 

பாவலர் பஸீல்காரியப்பர் ஒரு தனித்துவமான கவிஞராக அன்றிலிருந்து இதுவரையும்ää பேசப்படுவது அவரது படைப்புகளால் மட்டுமன்றி அவரது வெளிப்படைத் தன்மையானää பழகுமுறைமையினாலும்தான். தமிழறிஞர் அமரர்ää அருளையா ஐயாவின்ää ~தமிழ்க்கவிதை வாள்| என அறிவிக்கப்பட்டää அந்தää தென்கிழக்கு உமர்கையாமின்  இன்னும் சிலää இளமைக்கவிதா வீச்சுக்கள் இவை.:-

 

....என்னை உணர்ந்திடும் ஓர்

உயிர் வேண்டும்.. அவ்வுயிரே

பெண்ணாய் இருந்து விட்டால்

பெரும்பாரம் நீங்கி விடும்

குறைநிறைகள் எல்லாமே

கூடி என்னைக் காப்பவளின்ää

அறையுள்ளே வாழ்ந்து விடும்

அவள் அறிந்து பேணிடுவாள்

 

என்னை என் உணர்வுகளை

என் இதய வேட்கைகளைக்

கண்ணாடி போல் அவளில்

கண்டு மகிழ்ந்திருப்பேன்.

 

இன்பக் கிறுகிறுப்பில்

என் மடியில் சாய்ந்திடுவாள்..

அண்ணார்ந்து விண்ணோக்கி

அயர்ந்து பெரு மூச்சிடுவாள்.

பெண்ணாள் தன் நெஞ்சில் ஒரு

~றைஹாலை|ச் செய்திடுவாள்.

என்ன இனி காவியத்தை

எடுத்து வைத்துப் பாட்டிசைப்பேன்.

 

-பாவலர் பஸீல் காரியப்பர்.

(எனக்கு ஒரு தேவை. 1963)

 

00

 

 

    @-03-   கிளைகளை எப்படி வடிவம் அமைப்பது..?

 

 

 

எடுத்துரைக்கும் அதில் இதம் இருக்கும்- அதைத்

தடுத்தடித்தால்ää வெடி வெடித்தழிக்கும்..

-பாவலர் பஸீல் காரியப்பர்.

 

 

 

   பாவலர் பஸீல்காரியப்பர்.  1956.ல்ää சம்மாந்துறையில் உருவானää கலா வெற்றிக் கழகம்.வெளியிட்ட ~அன்னம்.| என்ற கையெழுத்துச் சஞ்சிகையின் பத்திராதிபராக இருந்தார். 1958ல்ää பாணந்துறைää தொட்டவத்த பாடசாலையில் உதவி ஆசிரியராக நியமனம் பெற்றார். 1960.ல்ää அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி இளவலாகச் சேர்ந்தார். கலாசாலையின்ää கரப்பந்தாட்டக் குழுவிலும் பங்குபற்றி குழுவின் வெற்றிக்கு பங்களித்தார். கலாசாலையின்ää சாரண ஆசிரியராகவும் இருந்தார்.  பாவலர் ஒரு திறமைமிக்க சாரணர். எழுபதுக்கும் மேற்பட்ட சாரணர் பாசறைகளில் கலந்து கொண்டுள்ளார்.

 

பிற்காலத்தில்ää ~கடற்கரையில் உரையாடலின்பம்| நிகழ்வுகளில் இதுபற்றிக் குறிப்பிடும் போதுää ~அது காட்டு வாழ்வு. இது வேட்டு வாழ்வு.| என்பார். தான் மட்டுமல்லாதுää தனதுää மகனானää தாரிக் காரியப்பரை மிக இளம் வயதிலேயே சாரணராகப் பயிற்சிக்குச் சேர்த்து விட்டதுடன்ää மகனுடனும்ää பாசறையில் கழித்திருக்கிறார். ~~சாரணீயம்ää விளையாட்டு இரண்டிலும் நான் பெற்ற பதக்கங்கள்ää சான்றிதழ்களில்ää நான் மிகவும் உயர்வாகப் போற்றுகின்றää ஒரேஒரு தங்கப் பதக்கம் நண்பர் முஸ்தபா அவர்கள்தான்.!|| என்று தனது நண்பரான ஜனாப். எம்.ஐ.எம். முஸ்தபா (விளையாட்டு ஆசிரிய ஆலோசகர்) அவர்களைப் பற்றிää சிலாகித்துக் கூறுவார் பாவலர். அத்தகைய அபிமானியானää .முஸ்தபா சேர் அவர்கள் பாவலரை இவ்வாறு நினைவு கூருகிறார்;:-

 

~~............... ஓருமுறை சம்மாந்துறை அல்மர்ஜான் கல்லூரியில்ää விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போதுää நானும் பாவலரும்ää அங்கிருந்த புன்னை மரத்தின் கீழ் அமர்ந்துää போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த போதுää அந்த விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால்ää ஒரு கவிதையை அவர் எழுதிää என்னிடம் காட்டினார். அந்த மைதானத்தின் அவல நிலை பற்றியும்ää மாணவர்கள் அதனால் படும்ää அசௌகரியங்கள் பற்றியும்ää இதனை அரசியல்வாதிகள் கண்டும் காணாமல் இருப்பதைக் கண்டித்தும்ää மனம் நொந்து பாடிய கவிதை அதுவாகும். பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் அதனைப் படித்துக் காட்டியNபுhதுää அங்கிருந்த அனைவரும்ää கைதட்டி ஆரவாரம் செய்த நிகழ்வை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. பாவலர் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடுள்ளவர்........||

 

    1961ல்ää அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில்ää இடம்பெற்ற நாடக விழாவில்ää ~இசபெல்லா| என்ற நாடகத்தில் நடித்தää பாவலர் இந்நாடகத்தின் வடிவமைப்பிலும்ää கதையமைப்பிலும்ää பாரிய பங்கேற்றார். மேலும்ää அகில இலங்கை ரீதியிலான கவிதைப் போட்டியில்ää பாவலரின் ~ஐக்கிய இலங்கை வேண்டும்| என்ற கவிதை முதலாமிடம் பெற்றது. இது பின்னர் இலங்கை வானொலியில்ää பாவலரால்ää நேரடியாக இனிமை சொட்டும் குரலால்ää வாசிக்கப்பட்டபோதுää அப்போதைய முஸ்லிம் நிகழ்ச்சிப் பணிப்பாளர் அல்ஹாஜ். காமில் மரைக்கார் அவர்களின் பெரும் பாராட்டுகளைப் பெற்றார்.  அவர் பாவலரைக்கட்டித் தழுவி வாழ்த்துரைத்தார்.

 

பாவலரின்ää 1960களின் காலப்பகுதியன் போதுää அவருடன்ää நெருக்கம் பெற்ற இன்னொரு முக்கியமான மனிதர்ää ~மானுடசேவைத்திலகம்|. டொக்டர் முருகேசபிள்ளை எம்பிபிஎஸ். (சிலோன்.) அவர்களாவர். தமிழறிவு நிரம்பப்பெற்றää வைத்திய கலாநிதியவர்கள் சொல்கிறார்:-

 

~~............... நான் 1960 களில்ää கல்முனை வந்ததிலிருந்துää இப்பிரதேச எழுத்தாளர்களுடன்ää நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தேன். அப்போதுää பஸீல்காரியப்பரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  எழுத்தாளனல்லாத என்னிடமும்ää பஸீல் அடிக்கடி வருவார். தனது கவிதைகளைப் பகிர்ந்து கொள்வார். அவரது கவிதைகளில் ஈடுபட்ட நான் மிகவும் மகிழ்ந்து போவேன். அதற்கு இரண்டு காரணம்.: ஒன்று  அவரது கவிதையின் அழகு. மற்றது அவர் வாசிப்பின் அழகு.  இவ்விரண்டு பண்புகளினாலும்ää மற்றைய கவிஞர்களிலிருந்தும் அவர் பெரிதும்ää வேறுபடுகிறார்.

 

ஆன்மீகää தத்துவார்த்தக் கருத்துக்கள் நிறைந்த அவரதுää பல கவிதைகள் வெளிவந்துள்ளன. இப்பிரதேச மக்களின் வாழ்வியலையும்ää அவர் தனது கவிதைகளில்ää அழகாகப் பதிவு செய்திருக்கிறார்..||-

 

அவர் பதிவு செய்த  ~ஊனக்கலை| என்ற கவிதை ஊனத்தில் அழகைக் காண்பதுவும்ää அழகில் ஊனத்தைக் காண்பதுவும் ஆனää ~நேர்மாறுபாட்டுத் தத்துவத்தை| அடிப்படையாகக் கொண்டது. இதனைக் கவிதைப் பொருளாக்குவதும்ää அதனை உயிர்த்தமிழில் தருவதும்ää பாவலருக்கே உரிய ஒரு தனித்தன்மையாகும். இக்கவிதைää  ஒரு பெண்ணிடம் தண்ணீர் கேட்ட போதுää அப்பெண்ää ~இவருக்குத் தண்ணீர் கொடும்மா..| எனத்ää தன் தாயிடம் கட்டளையிடää சினந்து போன பாவலர்ää பின் அவள் ஒரு கால் விளங்காத சப்பாணியாக இருந்தமையைக் கண்டு அவள் மீது இரங்கிää வேதனைப்பட்டுப் பிரசவித்த இக்கவிதையில் மனம் உருகாதார் ஆர்..? அந்த மந்திரக் கவிஞரின எழுதுகோல் உற்பவித்த ~ஊனக்கலை| எனும் ; மின்சாரக் கவிதை வரிகள் இவை:-

 

 

...... முன்னே முகிழ்ந்த இரு

மொட்டுக்கள் சட்டையினை

இன்னா கிழித்தெறிவேன்..

என்றே கிளர்ந்து எழää

 முன்னழகை மறைப்புக்குள்

மூடாதும் விட்டிருந்தாள்

என்ன பொடிச்சி இவள்

இப்படியா இவ்வயதில்..

 

எண்ணங்கள் ஓடுகையில்

ஏனத்தில் தண்ணீரைக்

கொண்டு வந்து தந்தாள்

இக்கொடி அவளைப் பெற்றவளும்

 

குனிந்து மிடறு இரண்டு

குடித்து முடியுமுன்னே

குனிந்து மகளாரைக்

குழந்தை எனத் தூக்கினளே

 

ஏன்..ஏன்.. இது.. என்றேன்

ஏறெடுத்துப் பார்த்த அவள்

நான் என்ன செய்ய? இவள்

நடை வாதம் கொண்டது என்றாள்.

 

கால் வழக்கமில்லாத

கன்னி என்ன செய்திடுவாள்

ஐயோ நான் பாவி

அவளில் எரிந்து விட்டேன்

 

அழகாய்க் கலைவடித்து

அதில் ஊனம் வைத்துவிட்ட

இளகா மனச் செயலும் ஏனோ..?

 

பாவலர் பஸீல் காரியப்பர்.

(ஊனக் கலை.1962)

00

 

 

 

04-   அரும்புமீசைத் தத்துவஞானி..

 

 

தாய்ää ஒரு சேயினோடுää தவிப்பதில் பேதம் காணும்

நாயுனை என்ன என்பேன்...நாமெல்லாம் மனிதரன்றோ..?

-பாவலர் பஸீல் காரியப்பர்-

  

 

பாவலர் பஸீல்காரியப்பர். 1961ல்ää பயி;ற்சிக் கல்லூரியிலிருக்கும் காலத்தில்ää அவரதுää  சம்மாந்துறை இல்லத்தில்ää இடம்பெற்ற ஒரு இலக்கிய நிகழ்வில்ää நாவலாசிரியர் சுபைர் இளங்கீரன்ää பிரபல எழுத்தாளர்ää எஸ். பொன்னுத்துரைää ஆகியோரும்ää இன்னும் பல இலக்கியவாதிகளும்ää கலந்து கொண்டு சிறப்பித்தனர். இக்காலகட்டத்தில்ää பாவலரின்ää சம்மாந்துறை. மாவடிப் பள்ளி இல்லங்கள் இலக்கியவாதிகளின்ää மனம் கவர்ந்த பட்டறையாக விளங்கின. இவ்வேளையில்ää பாவலருடன்ää மிக நெருக்கமான தோழராகவிருந்தää பன்னூலாசிரியர் மருதூர்.ஏ. மஜீது அவர்கள்ää தன் அநுபவங்களில் ஒன்றைப் பின்வருமாறு சொல்லியிருக்கிறார்.:-

 

~~.............. 1961ம் ஆண்டுää நானும் பஸீல் காரியப்பரும்ää சம்மாந்துறை வித்தியாலயத்தில் ஒன்றாகப் படிப்பிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.  அதனால்ää உறவு மேலும் இறுக்கமானது. அதனால்ää மாலை வேளைகளில்ää அவரது வீட்டு முற்றத்தில்ää கதிரைகளைப் போட்டு இருந்து கதைத்துக் கொண்டிருப்போம்.  அவரது வீட்டின் சூழல் இயற்கையானது. அழகானது. வீட்டின் எதிரே கண்ணுக்கெட்டாத தூரம் வரை பச்சைப் பசேல் என்ற வயல்வெளி.அதன் அருகே சலசலவென்றோடும்ää ஆறு. ஆற்றின் ஒரு மருங்கில்ää மருதமரம். மறு அருங்கில்ää தென்னந்தோப்பு. ஆற்றுக்கும்ää வீட்டுக்கும் இடையே பிரதான பாதை. பிரதான பாதை அழகைக் கூட்டியே தவிர குறைக்கவில்லை.  பாவலரின் வீட்டு முற்றத்தில்ää  மாலை ஐந்து மணியளவில்ää பெரியதொரு கூட்டம் கூடிவிடும்.  அக்கூட்டத்தில்ää மாறன்.யூ. செயின்ää நாவலர். ஈழமேகம் பக்கீர்தம்பிää  அப்துல்லாää மிருதங்க வித்துவான் வேல்முருகுää விமர்சகர். வீ. ஆனந்தன்ääää கலைத்தொண்டன் அமானுல்லா போன்றோர்களும் இருப்பார்கள். 

 

இடையிடையே நான்ää பாரதியின்ää ~காணிநிலம் வேண்டும்| பாடலை ஞாபகமூட்டுவேன். பாவலரும் அதனைப் பாடுவார். பாரதி கற்பனையில் பார்த்த காணி நிலமும்ää  தென்னை மரங்களும்ää  கத்தும் குயிலோசையும் இந்த இடம்தான் என்று எண்ணிக் கொள்வேன்..

 

அவரது கவிதைகள் ஆழமானவை. அற்புதமான தத்துவங்கள் நிறைந்தவை.  நல்ல பண்பாளன் அவர். அதனால்தான்ää நட்பைப் பேணும் தன்மை அவரிடம் ஆளுமையாகி ஆட்சி செய்தது. இரண்டொரு வார்த்தைகளில் கூறுவதாயின்ää  பாவலர் பஸீல்காரியப்பர் ஒரு ஆளுமைமிக்க கவிஞர். அன்புக்கும்ää நட்புக்கம் இலக்கணமானவர்.  நல்லதொரு குடும்பஸ்தர். ஆங்கிலக் கவிஞர்களானää ஷெல்லிää மில்ட்டன்ää  போன்றவர்களின் ரசிகர். எல்லாவற்றுக்கும் மேலாகää அவர் நல்லதொரு மனிதர்..........||

 

1962.ல்ää மன்னார் பெரியமடு வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையிற் சேர்ந்தார். இது அவரது இளம் வாலிபக் காலம் ஆகும். இங்கு வைத்து ஏராளமான தத்துவார்த்தக் கவிதைகளை எழுதியிருக்கிறார். அவைகளில்ää ~உயிர்|ää ~ஊனக்கலை|ää  ~உயிரைத் தரமாட்டேன்.|  போன்ற கவிதைகள் அவரது தனிமைச் சிந்தனைகளையும்ää வாழ்வின் அகமியங்களையம் பேசுபவையாகும். வாலிப வயதில்ää சாதாரணமாக எழுதக் கூடிய இன்பியல் கவிதைகளை விடுத்துää அவர்ää இயற்கையாகவேää தன் மனதின் உள்ளார்ந்த தேடல்களைப் பாடல்களாகவும்ää கவிதைகளாகவும் உருப்பெறச் செய்தமையினால்தான்ää பாவலரின் கவிதைகள் படித்தää பாமர ஆகிய இரு மட்டங்களிலும்ää ஒரேயளவான செல்வாக்கைப் பெறக் காரணமாகவிருந்தது. 

 

இவ்வாண்டில்ää இலங்கை சமசமாஜக் கட்சி அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த பாதை அமைக்கும் சிரமதான வேலையின் போது. அப்போதைய நிதியமைச்சர் கலாநிதி என்.எம். பெரேரா அவர்களுடன் கலந்து கொண்டார். இதுபற்றிப் பாவலர்ää  ~~...நாத்திகரான என்.எம். பெரேராவுடன் ஆத்திகரான காரியப்பரைக்; கண்டால்ää சனங்கள் என்னன்பரோ.?||  என நகைச்சுவைபடக் கூறுவதுண்டு.

 

1963.ல்ää மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில்ää பிரபல எழுத்தாளர். திரு. எஸ்.பொ. அவர்களின் தலைமையில்ää ~முத்தமிழ்| விழா நடைபெற்றது. இதில்ää ~விவேகி| ஆசிரியர் திரு. செம்பியன் செல்வன்ääஅவர்களும்ää திரு. கனகசெந்திநாதன் அவர்களும்ää திரு. வ.அ. இராசரத்தினம் அவர்களும்ää ~மரகதம்.| ரஹ{மான் அவர்களும் பாவலருடன் கலந்து கொண்டனர்.     

 

1964.ல்ää யாழ். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினால்ää நடத்தப்பட்ட ~தங்;கத்தாத்தா கவிதைப்போட்டி| யில்ää பாவலரின்ää ~உயிர்| கவிதைக்கு மூன்றாமிட விருதும்ää பொற்கிழியும் பரிசளிக்கப்பட்டன. இக்கவிதை போட்டிக்கான விதிமுறைகளை மீறியிருந்த போதிலும்ää இதனைப் பரிசுக்குரியதாக தெரிவு செய்தனர். வேடிக்கை என்னவென்றால்ää  இக்கவிதை தினகரனுக்கு அவரால்ää அனுப்பப்பட்ட போதிலும் பிரசுரிக்கப்படவில்லை. பாவலருக்கே மிகவும் திருப்தியாக அமைந்த இக்கவிதை சுய விலாசமிட்ட முத்திரை உறை அனுப்பியும் அவருக்கு அது திருப்பியனுப்பப்படவுமில்லை. இது அவருக்கு மிகவும் மனச் சங்கடத்தை ஏற்படுத்தியதாக பிற்காலங்களில் அவர் கூறியதுண்டு.

 

இந்த ஆண்டில்ää ‘டுவைவடந வுhiபெஎன்ற ஆங்கிலக் கவிதையை அற்புதமான தனது தமிழ்நடையில் கூட்டுறவு என்ற தலைப்பில் கவிதைப்படுத்தினார். இவ்வாறுää ‘வுhந ஊழற’ (பசு.ää)  ‘ஐ யனெ ஆல ளஉசநற’ (நானும் எனது சின்னத் திருகாணியும்ää)  ‘யுளா வுசயல’ (பிடி சாம்பர்)  ஆகியவற்றையும் தமிழ்பெயர்த்தார். (அவர் மொழிமாற்றிய ஆங்கிலச் சிறுகதைகள் பலவும் சுனாமிப் பேரலைகளில் தொலைந்து போய் விட்டன.)

 

வைத்திய கலாநிதி திரு. எம். முருகேசபிள்ளை அவர்கள்.

 

~~......அவர் என்னோடு பகிர்ந்து கொண்ட கவிதைகளில்ää ~உயிர்| இன்னுமெனக்குள் நிழலாடுகின்றது. மிகச் சாதாரணமாகää எந்தச் சிந்தனையுமில்லாது நாம்ää பற்ற வைத்த பின் வீசி விடுகிற ஒரு தீக்குச்சியை அவர் தத்துவக் கவிதையாக்கியது அவரது கவித்துவத்தை அற்புதமாக வெளிக்காட்டி நிற்கிறது. ஒரு சாதாரண மிகச் சிறிய அனுபவத்தை  நுட்பமான வாழ்க்;;கைக் கலையாக அவர் பாத்திருக்கின்றார்...........||

 

அறுபத்தி நான்கு வயதில் தோன்றக் கூடிய சிந்தனை பாவலருக்கு இருபத்திநான்கு வயதில் தோன்றியதை எண்ணி வியக்காமலிருக்க முடியுமா என்ன..? டொக்டர் முருகேசபிள்ளையை மிகவும் பாதித்த இந்த உயிர் கவிதையைப் பற்றிää அபிப்பிராயம் சொல்ல வந்த கலாநிதி எம்.ஏ. நுஃமான்ää அவர்கள். பாவலரை ~இவர் ஒரு அரும்பு மீசைத் தத்துவஞானி.!| என சிலாகித்துக் கூறியிருக்கிறார்.

 

பல்வேறு பத்திரிகைகளிலும்ää மறு பிரசுரம் கண்டது அக்கவிதை. நவமான யாப்புகளை இசையோட்டத்துடன் உருவாக்கி  நவீன பாக்களை நெய்த அந்த நெசவுப் படைப்பாளியின் பரிசுக் கவிதை:...

 

 

எங்கு ஒழித்திருந்து

எப்படியாய்ச் சென்றதுவோ..

 

குச்சி அதன் பெட்டியுடன்

கூடி உரசியதால்

விச்செனவே சுடரொன்று

வீறிட்டெழுந்து இங்கு

நின்று.. சுழன்று.

சில நொடியுள் மறைந்தது காண்.!

சென்றதுவும் எத்திசையோ..

சேர்ந்ததுவும் எங்கேயோ..?

 

எங்கு ஒழித்திருந்து

எப்படியாய்ச் சென்றதுவோ..

 

வீணை நரம்புகளில்

விரல்கள் விளையாடத்

தேனாம் இசையுண்டோம்.

சேர்ந்ததுவும் எங்கேயோ..?

 

எங்கு ஒழித்திருந்து

எப்படியாய்ச் சென்றதுவோ..

 

சுழன்ற சுடராமோ..

சுவைத்த இசையாமோ..

தளர்ந்த உடல் உயிரைத்

தவிர்த்த நிலை இதுவோ..

 

எங்கு ஒழித்திருந்து

எப்படியாய்ச் சென்றதுவோ..?

 

-பாவலர் பஸீல் காரியப்பர்.

(உயிர் 1962)

00

 

 

05-   மனிதருக்காய் தேய்தல் மகிழ்ச்சியே...

 

 

 

என் சிறு ஆற்றலினால்ää இங்கு இனியவை பண்ணிடுமுன்

என்னை அழைக்காதே நான் உயிரைத் தரமாட்டேன்..

-பாவலர் பஸீல் காரியப்பர்.

 

 

 

    பாவலர் பஸீல்காரியப்பர். 1963ல்.  நீலாவணன் இலக்கியப் பேரவையினால்ää வழங்கப்பட்டு வந்த கவிதைத்துறைக்கான பரிசை தனது ~பாதுகை| என்ற கவிதைக்குப் பெற்றார். 1964ல்ää பேருவளை மாளிகாஹேன பாடசாலையில் கற்பித்துக் கொண்டிருந்தார். டுவைவடந வுhiமெ (கூட்டுறவு) விவேகியில் பிரசுரமானது. இக்காலகட்டத்தில் ~இல்லா இடம் நோக்கி|ää   ~எனக்குஒருதேவை.|  ~அரியபிறப்பு|  ஆகிய அரிய கவிதைகளைப் படைத்தார்.

 

மருதூர்க் கொத்தன். வீ.எம். இஸ்மாயில்.

 

~~..பஸீல்காரியப்பர் அன்றும் இன்றும் எந்த யாப்புக்கும் சேவகம் செய்யாமல்ää சுயமான பாணியில்ää எழுதுகிறார். அவர் கவிதையில் நவமான யாப்புக்களை உருவாக்குகிறார். நறுக்குத் தெறித்தது போன்ற சிக்கனமான சொற் சேர்க்கைக்குள் அழகையும்ää இனிமையையும்ää உயிர்ப்பையும்ää சிறைப்பிடிப்பது இவரது தத்துவம்.  ஆரம்பத்தில்ää ஆன்மீக உணர்வோடு எழுதிக் கொண்டிருந்த இ;ந்த மனிதாபிமானப் படைப்பாளி  இன்று வர்க்க உணர்வுடன் எழுதிக் கொண்டிருக்கிறார்..||

 

பாவலரின்ää ~இல்லா இடம் நோக்கி..| எனும் கவிதையானதுää ஓரிடத்தில் காற்று அல்லதுää தண்ணீர் குறைந்தால்ää அந்த இடத்திற்கு எங்கிருந்தும்ää வேகமாய் விரையும் காற்று அல்லது தண்ணீர் போலää இல்லாத மனிதரிடத்தே விரைதல் வேண்டும் என்று ஆதங்கப்படும்  பாவலரின் மனநிலையைப் பேசுவதாகும்.

 

தொட்டில் தேங்கிய நீரினைப் போக்கியே

துப்புரவாக்கிடச் செல்கிறேன் செய்கிறேன்

மட்டம் குறையினும் பாத்திரம் கொண்டு நான்

வெட்டி எடுத்த வெறுமையைக் காண்கிலேன்

 

இல்லா இடத்திற்கு ஏகிடும் நீரென

நல்மனம் கொண்டவர் நம்மில் பெருகவே..!

 

-பாவலர் பஸீல் காரியப்பர்;.

(இல்லா இடம் நோக்கி..: -1963)

 

 

~கலாபூஷணம்.|  கவிஞர். ஏ. இக்பால். 

 

   ~~......அவருடன்ää அன்பும்ää அமைதியும்ää இன்புறும் வகையில்ää அமைந்து நின்றன.. சிந்தனை எங்களை இறுக்கி வைத்தது. இலக்கியம் சார்ந்தவைää தேடுதல் செய்வதில்ää இருவரும் ஒருமித்துää ஒருவழி நின்றோம். பாவலருக்கும்ää என் பாவினங்களுக்கும்ää காவியே நிற்கும் கற்பனைகளுக்கும்ää மேவிடும்ää இலக்கிய மேன்மைகளுக்கும் வரலாறுண்டு. என் வரலாற்றிலேயது திறனாய் அமையும்..||

 

பாவலரின்ää ~எனக்கு ஒரு தேவை| கவிதைää அன்பு முகிலினால்ää நெஞ்சம் கனத்துப் போன மனிதனுக்குää அதனை எங்காவது உளமாரப் பெய்து விடல் வேண்டும் என்ற இதய வேட்கையைக் கூறிää அன்பு மழையை  ஒரு பெண்ணுயிர் மீது பொழிந்து விடுவதில் உருவான உணர்வுகளைப் பாடுவதாகும்..  

 

     ~மனிதருக்காய்த் தேய்தல் மகிழ்ச்சியே..| என்ற பாவலரின் சிந்தாந்தத்தின் கருவை வைத்துää அவர் படைத்த ~அரிய பிறப்பு| எனும் கவிதைää உருத்தெரியாது தேய்ந்து போகும்ää ஒரு எளிய செருப்பின்ää சுயபாடலாக எழுதப்பட்டுள்ளது:-

 

.........................................

என் எஜமான் என்னை

இழுத்தரைத்துத் தேய்க்கின்றார்

என்றாலும் நான் எள்ளளவும்

ஹிம்சை எனக் கொண்டதில்லை

 

 

புனிதர்கள் வழியில் தூய

பணிகளைச் செய்யம் இந்த

மனிதருக்காய் தேய்தல்

மகிழ்ச்சி நான் பெற்ற வரம்.

 

என்றே தொழும்பள்ளி

ஏறுவாயில் தனிலே

அன்று செருப்பொன்று

அடியேன்தனைப் பார்த்து

மெல்ல நகைத்ததடா

மின்னியதோர் ஒளிக்கீற்று.

 

உள்ளே இருக்கும் அந்த

ஒரு மனிதருக்காகவேனும் அந்தப்

பள்ளி மகிழ்ந்திருக்கும்

பணிசெய்யக் காத்திருக்கும்

செருப்பு அரிய ஒரு பிறப்பு..

 

-பாவலர் பஸில் காரியப்பர்

(அரிய பிறப்பு. 1963)

 

     1965.ல்ää ~தூரத்து நாதம்| பாடல் அவரால்ää யாக்கப்பட்டது.  1966.ல்ää ~கண்ணூறு| எனும் தலைப்பிலான தலைப்பிலான ஒரு கவிதையை எழுதினார். இக்கவிதை தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது.  இதுவே பிற்காலத்தில்ää ~அழகான ஒருசோடிக் கண்கள்|  என்ற  ஜனரஞ்சகப் பாடலானது. (இதுபற்றிய விரிவான தகவல்களை இத்தொடரில் பின்னர் கூறப்படும்.)

 

இறைநாதத்தை வேட்கையுற்றுää அதனைக் கேட்க எத்தனிக்கும் ஒரு ஆத்மீகச் சாதகனுக்குää இவவுலகத்தின்ää சத்தங்கள் ஊடுருவி அலைக்களித்துச் செய்யும் துன்பங்களையும்ää ~~..அமுத இசையுள் நான் ஆழ்ந்துவிட ஒண்ணாதோ..?||  என்ற ஏக்கத்தையும்  ~தூரத்து நாதம்| என்ற கவிதையில் அழகுறச் சொன்ன அந்த வண்ணத் தமிழ்ப் பாவலனின்.ää வனப்புவரிகள் இவை:-

.........................................

தூரத்து இசைத் துளி என்

செவியில் கலக்கையில்.. ஏன்

யாரிவரோ கூடி அதை

அலைக்கழியச் செய்கின்றார்

செவியினையே நீட்டுகின்றேன்

சே;சசே.. எங்கே அது

இவர் கூச்சல் ஓயாதோ

இனிமையிலே ஒன்றி விட..?

 

கூவும் குயில் இசைத்தேன் குழைத்துத் தருகையில் ஏன்

பாவக்குரல் எழுப்பிப் பாதகத்தைச் செய்கின்றார்..

 

சித்தம் ஒரு முகமாய்ச்

சேர்ந்து லயிக்கையில் ஏன்

கத்திக் கருச்சிதைக்கக்

காதருகே வந்தனரோ..?

 

அண்ட சராசரத்தை ஆளும் ஒலி என்றாலும்

அண்மை இரைச்சலினால் அதில் ஒண்றாதிருப்பதுவோ..?

 

பக்கத்து நச்சரிப்பின்

பழிசிறிதே என்றாலும்

சொக்கும் இசையலையின்

தொடர்பை அறுக்கிறதே..

 

அமுத இசையுள் நான் ஆழ்ந்துவிட ஒண்ணாதோ..?

 

-பாவலர் பஸில் காரியப்பர்.

(தூரத்து நாதம்.- 1965)

00

 

 

 

@-06-   பி;ள்ளை முகம் நீ தருவாய் .

 

 

 

கண்ணாடியில் முகத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும்.

காட்சிää  மனதில் ஒரு நிறைவைத் தர வேண்டும்.

-பாவலர் பஸீல் காரியப்பர்.

 

 

    பாவலர் பஸீல்காரியப்பர்.! அவர்கள்ää   ஒரு மலடியின் ஏக்க உணர்வை நாட்டார்பாடல் பாணியில் பாடுவது ~தாய்மையின் தாகம்| பாடலாகும். இப்பாடலில்ää கிழக்கின் பல ஊர்களின்ää சிறப்பியல்புகளும்ää ஒப்பீடுகளும்;ää உவமைகளும்  செப்பமுறச் செதுக்கப்பட்டுள்ளன.  ~கரைவாகுவட்டை -நெற் கதிர்போல -என்மடியை நிறைவூட்டும் -பி;ள்ளை முகம்- நீ தருவாய் ஆண்டவனே..!| எனத் தொடங்கும்ää ஏக்க வரிகள்ää ஒவ்வோர் ஊருக்கும் செல்கிறது..

 

அறுகம்பைத் தேன்ää காத்தாங்குடிப் பிடவைää பள்ளவெளிப் பால்ää கல்லோயாக் கரும்புää மட்டுநகர் வாவி மீன்கள்ää மருதமுனைச் சாரன்ää அக்கரைப்பற்றுக் கவிää சவளக்கடை அரிசிஆலைப் புகைää வாழைச்சேனை வைக்N;கால்ää சம்மாந்துறை அரிசி போன்ற சிறப்பியல்களும்ää இரும்புப் பால்ää கூறைப்பிடவைää அரைமூடிää அரைஞாண்ää காதுகுத்துää குரவைää தமிழ்புகட்டல்ää கண்ணூறுநாவூறுää பெட்டியிழைத்தல்ää குஞ்சுபிடி மாங்காய் சதங்கைää வெள்ளிஞாண்ää கற்கன்பாய்ää புற்பன்தட்டுää வார் அணிதல்ää  வாதுக்குரவையிடல்ää போன்ற கிராமியப் பண்பாட்டுக் கூறுச் சொற்களும் மிக இயல்பாகப் பொருந்தி வரும்வண்ணம் அமைத்து அதன் உடாகää  தாய்மைக்காக ஏங்கும்  ஒரு பெண்ணின் மனதைää ~சவளக்கடை அரிசி ஆலைப்- புகைப்போக்கி- கவலை மிகுந்த மனக்- கருகலினைக் கக்குவதோ..?| எனப் பாவலர் அமைத்துள்ள முடிவு வரிகள் தாம் எத்துணை உணர்வுடையன..!

 

தாய்மையின் சிறப்பைப் பாடுவதுää ~அன்னை| கவிpதையாகும். இது எக்காலத்திற்கும் உரிய கவிதையாகும்.. அன்பைத் தேடுவோரின் கடைசியும்ää முதலுமான இருப்பிடம்ää அன்னையின் காலடி நிழலே.. என்பதை அழகுற இசைப் பாடலாக இதில் பாவலர் பாடியிருக்கிறார்.

 

1974 களில் ஆண்ட சுதந்திரக்கட்சி ஆட்சிக் காலத்தில்ää நெல் விளைச்சல்களை அந்தந்த மாவட்டத்தினுள்ளே களஞ்சியப்படுத்தும் திட்டத்தின் கீழ்ää சாலைகளில்ää அரசினால்ää வீதித்தடைகள் போடப்பட்டு. விளைச்சல்கள் வெளிச்சென்று தனியாருக்கு விற்கப்படுதல் தடுக்கப்பட்டது. ஊழல் எங்குதான் இல்லை..?  கூலிக்கு நெல் குற்றிப் பிழைக்கும் ஒரு கைம்பெண்ää அரை மூடை நெல்லை தடை கடந்து கொண்டு செல்வதை தடுக்கின்ற வீதித்தடைக் காவலருக்குää  கையூட்டுக் கொடுத்து இலகுவாகää லொறி நிறைந்த மூட்டைகளுடன்ää தடைதாண்டும்; பெரிய மனிதர்கள்(?) பற்றி நையாண்டித் தனமாகச் சீறும் கவிதை ~தன்பலப்பு|

 

~..வியர்வை மணி அணிந்தவனின்ää - விழி பனித்தால்ää - இங்கு வெகுண்டெழுந்தே சமர்க்களத்தில்ää - பொருதி வெல்லும்ää - உயர் மனிதன் உடல் தனிலேää - பெருக்கெடுக்கும்ää சிறு இரத்தமணியாக..| யாக  தான்ää ஆதல் வேண்டும்ää என  அவாக் கொள்ளும் பாவலர்ää வாள்வீச்சுத் தமிழில் வீசியää வரிகள்தான்ää  ~இரத்தமணி| என்ற கவிதை. 

 

வயற்காட்டில்ää நடை பயிலும்ää ஒருகிராமியப் பெண்ணின் நடையழகை வயோதிப மனதுடன்ää தன் மருமகளாக எண்ணி இரசிக்கும் மனப்பாங்கைää ~~முக்காட்டுத் தொங்கலோடு - முன் உசப்பில் கை இருத்தி - சொக்குகளில் மேயும் - சுடர் விழியைப் பாதி செய்து - வக்கா வரம்பில் - வடிவெடுத்து நடப்பது போல் - சேலை சிக்கி நடை பயிலும் சிறுக்கி - என் மூத்த மகன் - உன்னை விரும்புவதாய் - ஒரு வார்த்தை சொன்னால் நான் - இன்றே உன் வீடு வந்து - இணக்கத்தைக் கேட்டிடுவேன்..|| என்றுää வித்தியாசமாக விபரித்த கவிதை ~சிறுக்கி|.

 

காதணிக்குப் பதிலாகää காது ஓட்டைகளில்ää ஒரு குச்சியைää நுழைத்து வைத்துக் கொணடிருக்கும் ஒரு சிறுமியின் வறுமை நிலையைக் கூறுகிற ~நிச்சயம்| கவிதையில்ää ~நிச்சயம் ஒருநாள் காதணி வரும்- அப்போதும் உன் காதுகளைக் காண ஆசைப்படுகிறேன்..| என்று பாவலர் இரங்கியிருப்பதும். அக்கவிதை சொல்லப்பட்டிருக்கும்  கட்டிறுக்கமான பாணியும் எந்தக் கல்மனதையும் இரங்க வைக்கக்  கூடியது.

 

வெற்றிலைக் கொடி ஒன்றைத் தேடிப் பெற்று அதைப் பாக்கு மரத்தடியில் பதித்துப் படர விட்ட பாவலர்ää பின்னர்ää அவ்வெற்றிலைக் கொடி தந்த வீட்டுக்குப் போன சமயம்ää அன்பளித்த பெண்ணாள்ää அக்கொடியை நலம் விசாரித்ததும்ää இவர்ää ~கொடி வாடவில்லை| என்றதும்ää அப்பெண்ää ~மண்ணுக்கும் கொடிக்கும் உறவு. இனி இனிக்கும்..- என்று சொல்லிச் சிவந்தபடி- என்னை விட்டு ஓடுகிறாள் ஏன்..?| என்று குறும்புடன் நம்மைக்கேட்டு வசீகரிக்கும் கவிதைதான்   ~உறவு!|

 

முது தம்பதிகளின் தாம்பத்தியம்ää பற்றிய  ~சரிசிரி| எனும் கவிதையில்ää  முது தம்பதிகளின் உடலுறவு சில ~நிலைமை|களால்ää முடிவுறுத்தப்படும் போதுää ஆரம்பிக்கும்ää  அந்த விரும்பம்பத்தகாத பிரிவைக் களிவிரக்கத்துடன் பாடியிருக்கிறார் பாவலர். ~~உன்னுடைய அணைப்பிற்குள்- நான் உறைந்திருக்கும் போதும்- என் கண்கள் கசிந்து சுரப்பதற்குக்- காரணம் கேட்காதே-  என் உயிரில் உரம் பாய்ச்சும் - உன்னை ஒரு பாதியாய்க் கொண்ட- நிறைவு பிழிந்த அமுதத் துளிகள் அவை- வார்த்தைகளுக்குள் அடங்க மாட்டாது- வா! சரி! சிரி!||

 

~பிரியம்| கவிதை பாவலர்ää தான் உருவாக்கிக் கொண்டிருக்கும் உள்மனிதனின் குணாதிசயங்களின்ää தொகுப்புக் கவியுரையாகும். ~மன்னிக்க வேண்டும்.| என்ற கவிதையில்ää  தனது உயிரை எடுக்க வரும்ää கால தூதனிடம் தனது ஆட்சேபனையையை வன்மைத் தமிழில்ää தெரிவிக்கிறார் பாவலர். ~~.இப்போது உடனேää! புறப்பட்டு வர முடியாது-  மன்னிக்க வேண்டும்-  துப்புரவாக வேண்டும்! முழுகி உடைகள்-  துவைத்து உலர்த்தி அணிதல் வேண்டும்...|| என்று தொடங்கிää உயிரைத் தற்சமயம் இழக்க முடியாமைக்கான காரணங்களையும்ää மரணத்தின் முன்  செய்ய வேண்டிய ஆத்ம ஆயத்தங்களையும்ää ஞானத்தமிழ்நடையில் இசை கலந்து பாடியிருக்கிறார். ~~என் இனிய ஆத்மக் கலப்புகளோடு-  மனம் புணர வேண்டும் - மகிழ்ந்திருந்த சம நிலையின் பின்னர் -  அவர்கள் என் முன் நடந்து -  முறையாக வழியனுப்பும் -  அப்போதுதான் எனக்கு ஆசை வர! - அதனால் இப்போது உடனே புறப்பட்டு வர முடியாது - மன்னிக்க வேண்டும்.||

 

இப்படிää எளிமையைத் தன் ஆடையாகவே அணிந்து கொண்டிருந்த பாவலரின்ääää அந்த ஆடைக்குள் எப்போதும்ää ஒரு சிறுகத்தி தயார் நிலையில் மறைந்திருக்கும் என்பது அவரது நெருங்கிய அபிமானிகளுக்கு நன்கு தெரியும். தற்காப்புச் சண்டை பயிற்றுநரான பாவலர்ää கத்தி வைத்திருப்பதைää ஒரு நபிவழிமுறையாகக் கருதி கண்டிப்பாக பின்பற்றி வந்தார். ஆளடையாள அட்டையைக் காட்டச் சொல்லி வற்புறுத்தியää ஒரு பிரதேசச் செயலாளரிடம்ää  ~தொப்பி எனது ஆடை.! கத்தி எனது ஆயுதம்!!  வேறு ஆளடையாளம் எனக்கில்லை..||  எனப்  பாவலர்ää  தனதுää அடையாளத்தைக் காட்டியது பற்றிய சம்பவங்களைப் பாவலர்ää கடற்கரை உரையாடல்களில் கூறியிருக்கிறார். 

 

இப்படி ஒரு சமயம்ää பாவலர்ää வயல்வெளியிலுலாவுதலின் போதுää அனுபவித்த சம்பவம் இதுää  கிராமியப் பெண்கள் நெற்கதிர்களை அடிக்கும்ää ~கதிரடிக்கும் கம்பை| ஒருத்தன் தன் காலால் மிதித்திருந்ததைக் கண்ட ஒரு பெண்ää அவனது இந்த ஈனச் செயலையிட்டுக் கோபித்துää எழுந்துää ஏசினாள். இப் பெண்ணின் ~தொழில்பக்தி|யையும்ää ~தொழிற்தூய்மையை|யும்ää பார்த்துப் பாவலர்ää வியந்து போய்ää அந்தப் பெண்ணின் வித்தியாசமான துணிகரத்தைää அவளது கிராமியத் தமிழ்உளியால்ää செதுக்கி எடுத்தää   ~இரணக்கோல்|  கவி வரிகள்p இவை:

 

 

காக்கா.! அக்கம்புதன்னைக்

காலால் மிதிக்காதேää

ஏக்கம் மிகுந்த எங்கள்

இரணக்கோல்! கதிரடிக்கும்ää

கம்புதான் எங்களினைக்

காக்கும் படைää அதுவேää

நம்பிக்கை தரும் ஒரு கோல்

நாளை சில பேர்க்குச்

சூட்டுக் கோல் ஆகிடலாம்.

சுரணை வரு மட்டும் எங்கள்

பாட்டைச் சுரண்டுபவர்

பழிவாங்கப்படுவர். இந்

நீட்டுக்கோல் அவர்களது

நெஞ்சைத் திருத்திடலாம்.

காட்டாதே பல்லைச் சேää!

காக்கா உன் காலை எடு.!

 

-பாவலர் பஸில் காரியப்பர்.

(இரணக்கோல்.  1974)

 

(சஞ்சாரம் தொடரும்)

00

 

07-   கண்ணின்மணியைப் பிடுங்கி எறி..

 

 

 

தக்கதில்லை பலர் துக்க நிலை- சிலர்

சக்கை எனில் இதோர் பக்கநிலை

-பாவலர் பஸீல் காரியப்பர்.

 

 

 

    பாவலர் பஸீல்காரியப்பர். 1966ல்ää தனது தாயகத்திற்கு மீண்டு வந்து  சம்மாந்துறை மகாவித்தியாலத்தில் ஆசிரியப்பணியேற்றார். மீண்டும்ää 1967.ல்ää கொம்பனித்தெரு ஸாஹிறாக்கல்லூரியில் ஆங்கிலமொழிமூலப் போதனாசிரியராகப் பதவியேற்றுக் கொண்ட பாவலர்ää இச்சமயத்தில்ää ~ஆக்கினை|ää ~படப்பிடிப்பு|  ஆகிய கவிதைகளை உருவாக்கினார். இக்காலகட்டத்தில்தான்ää அவருக்கு இலங்கை வானொலியின் பிரபல்யமிக்க முன்னோடியானää எம்.எம். இர்பான் அவர்களின் நட்பு கிடைத்தது. தொடர்ந்துää 1968ல்ää பாவலரின் வானொலிப் பிரவேசம் நிகழ்ந்தது 1969.ல்ää ~நிர்மலா| என்ற இலங்கைத் திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்தின் பின்னணியில் பாவலரின் ~கருத்துருக்கள்| பல இருந்;தன. அவற்றைக் ~கடற்கரையில் உரையாடலின்பம்| நிகழ்வில்  நகைச்சுவையுடன் விபரிப்பதுண்டு.

 

1970.ல்ää ~நம் காதல்.|ää ~பிரியதர்ஷினி|ää ~சட்டை|ää ~சேவல் ஒன்று கூவுகிறது| போன்ற பல பாடல்களை எழுதினார்.. ~நம் காதல் இனியது.. புனிதமானது.. ஃ அது அந்தரங்கமானது..| என்று இளமைக் காதலை தூய்மையுடன்ää விபரிக்கிறது ~நம்காதல்| கவிதை. தன் மனம் கவர்ந்தவள் மீதான விரகதாபத்தை வெளிப்படுத்தும் பாணியிலான ~பிரியதர்ஷினி| என்ற கவிதை மறைமுகமாகää இறைகாட்சியை அவாவும்ää ஒரு ஆத்மீக மனதின் வெளிப்பாடாகும். தூரத்துக் காட்சியாக இறைவனையும் அதனை அண்மிக்க விரையும் பக்தனின் பேரின்ப வேட்கையையும் மறைகருவாக வைத்து இக்கவிதையை பாவலர் அற்புதமாக உருவாக்கியிருக்கிறார். ~~..... பண்ணும் போது மட்டும் இனிப்பது - சிற்றின்பமென்றால் - எண்ணும் போதெல்லாம் - இனிப்பது பேரின்பமா..?..|| என உள் விசாரணையில் இறங்கியிருக்கிறார் பாவலர்.  ~சேவல் ஒன்று கூவுகிறது..!| என்ற கவிதைää ஆண்மையின் அவசரம்ää கம்பீரம்ää வீரம்ää  வேட்கைää முதலான சிற்றின்பியல் உணர்வுகளைக் கூறுவது. பாவலரின் வாலிப முறுக்கில் வடித்த வாத்ஸாயல்யன வரிகள் அவை.

 

1971.ல்ää மீண்டும் சம்மாந்துறை தாயகத்திற்கு இடமாற்றம் கேட்டுப் பெற்று வந்தார். அவருக்குத் திருமணம் செய்விக்கப் பெரியோர்கள் இனிதே நிச்சயித்திருந்தனர். பெண்ணை திருமணத்தின் முன் ஒரு தடவையாவது நேரில் பார்த்துவிட வேண்டுமென்ற ஆவலுடன்ää தன் பால்ய நண்பர் கவிஞர். மருதூர் மஜீதுடன்ää சைக்கிளில் சென்றுää பெண்வீட்டருகில் வைத்து ஒரு விநாடிக்கும் குறைந்த நேரத்த்pல்ää பெண்ணைக் கண்டதையும்ää ~~நெற்றிப் பிறை மட்டும் கண்டேன்.. கூர் முக்காட்டினுள் மற்றப்படிää வேறு எதனைத்தான் காண்பேன்..?|| என்று நகை ததும்பக் கூறியதையும் அடிக்கடி நினைவிலிருந்துää சொல்லிச் சிரிக்கிற அந்த வெகுளிப் பாவலர்ää 1972ல்ää  கல்முனைக்குடியில்ää உயர்குடும்பத்தைச்; சேர்ந்தää கதீஜாநச்சியார் (ஆசிரியை) அவர்களைக் கைத்தலம் பற்றினார். இப்புதுமணக் காலத்தில்ää ~பழைய புதுமை|ää ~அழகிய மனம்|ää ~எதுவாகிலும் வரட்டும்.|  ஆகிய கவிதைகளை எழுதியிருந்தார்.

 

கலாபூஷணம். எம்.எச்.எம். ஷம்ஸ். பீ.ஏ.

~~..பஸீல்..!  கருத்து திறந்து விட்ட கதவு. பகட்டின்றிப் பழகுவதில்ää பச்சிளம் குழந்தை. பண்பிலே உச்சம். கவித்துவப் போதை எப்போதும் கண்களில்..  கவிதை அவனது ஆத்மாவின் உணவு. அதனால்ää பட்டமும் பதவியும் அவனது மதியை மயக்கி விடவில்லை. செல்வமும்ää அதிகாரமும்ää அவனுக்குச் செல்லாக் காசு..|| 

 

கவிஞர். பாலமுனை பாறுக்.

    ~~உள்மனதை உணர்வுகளைää உணர்வுகளின் அலைகளினைச் சொல்லிää கவிதை தரும் சுந்தரக் கவி வல்லோன்ää சித்திரமாய்ää நூதனமாய்ää மிகச் சிறப்பாய்ää உணர்வுகளைää ஒத்திசைப்போடெழுதி வரும்ää ஒரு புதிய பா வல்லோன்.. காட்சிப்படுத்தலினைக் கடைப்பிடித்துää படப்பிடிப்பாய்ää பாப்புனைந்து தரவல்லää பக்குவப் பா வாணண்ää வாழ்ந்த அநுபவங்கள்ää வரைந்த குறிப்புகளைத்ää தேர்ந்து கவியாக்கும்ää கை தேர்ந்த படைப்பாளி..||

 

 

பாவலரின்ää ~பழைய புதுமை!| என்ற கவிதையில் முதலிரவுச்சுவையைää ~நண்டுநடைத்| தமிழில்ää அழகுற அமைத்துள்ளார்.. ~~புதுமனை - முதலிர - வெனுசுவை - மிகுதினம் - புதுமையாய் - அவள்எனில் - படரவே - வருகிறாள் - புதுவித - அலையென - துளமெனும் - பரவையிற் - கொதிகொள - அவளுரு - பருகின - இருவிழி..|| என்றுää தொடர்ந்து வர்ணித்துச் செல்கிறது. ~அழகிய மனம்| கவிதை துயரப்பட்ட மக்களின் வர்க்க உணர்வைக் கூறுவது. ~..படித்திருக்கும் - வெற்றி படைத்திருக்கும் - மக்கள் - வடித்திருக்கும் - வழி இனித்திறக்கும்..|| என நம்பிக்கை அறையும் கவிதை அது. மானுட மனது சவால்களை எதிர்கொண்டு வாழ்தல் பற்றிச் சொல்லும் பாடல்தான்ää ~எதுவாகிலும் வரட்டும்..| என்ற இசைப் பாடல் ஆகும்.  (இப்பாடலை பாவலர் தானே இசையமைத்து  பற்பலநிகழ்வுகளில் உச்சஸ்தாயியில் பாடி அங்கிருப்போரின் மனதைத் திடப்படுத்தி நம்பிக்கை தருவது வழக்கம்.) 

 

இந்த ஆண்டில்ää அப்போதைய மாண்புமிகு கல்வியமைச்சராகவிருந்தää கலாநிதி. பதியுதீன் மஹ்மூத் அவர்களினால்ää அகில இலங்கை முஸ்லிம்கள் சார்பாகää மான்புமிகு பிரதமர்ää திருமதிää ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களுக்குää கொழும்பு ஸாஹிறா முற்ற வெளியில்ää அளிக்கப்பட்ட மாபெரும்ää பாராட்டுக் கூட்டத்தில்ää வரவேற்புக் கீதம் பாடும் முகமாகää கல்முனை மஹ்மூத்  மகளிர் கல்லூரியின்ää இசைக்குழுவுக்கு பாவலர் தலைமையேற்றுää நெறிப்படுத்தி கொழும்புக்கு அழைத்துச் சென்றார்.

 

1973.ல்ää மாவடிப்பள்ளி அரசினர் பாடசாலையில் கடமையேற்றார். இது அவரது இலக்கியப் பணியின் அறுவடைக் காலமாகும். ஏராளமான வானொலி நிகழ்ச்சிகள்ää நாடகங்கள்ää சிறுகதைகள்ää கவிதைகளை எழுதிக் குவித்தார். எல்லா இலக்கியவாதிகளினதும்ää கூடாரமாக அவரதுää மாவடிப்பள்ளி பாடசாலை வாசஸ்தலம் புனிதம் பெற்றது. ~ஓ.. ஒரு பெண்ணாள்.|ää ~சிட்டுக்குருவியே..| ~சுடுநீர் விழிமணிகள்|ää ~வருத்துவது|ää ~தாய்மையின் தாகம்| ~அன்னை| ஆகிய படைப்புக்கள் இங்குதான உருவாயின. 1974.ல்ää பாத்திமா ரொஷானா காரியப்பர் என்ற அழகிய மூத்த பெண் குழந்தையும்ää ~தன்பலப்பு|ää  ~காட்டுங்கள் என் சிரிப்பை|ää  ~இரணக்கோல்|ää  ~இரத்தமணிகள்| போன்ற தத்துவக்கவிதைகளும்ää மேலும்ää மீலாத் தினக் கவியரங்குக் கவிதைகளும் பிறந்தன. மேலும்ää ~கலைச்செல்வி|ää ~தேனருவி.|ää ~வீரகேசரி.| ஆகியவற்றில் உருவகக் கதைகளை ஏராளமாக எழுதியும் வந்தார்.

 

இக்காலத்தில். கல்முனை ஸாஹிறாக்கல்லூரியில்ää மருதுர்ர்க்கனிää இளங்கீரன்ää டொமினிக் ஜீவாää கைலாசபதி போன்ற முற்போக்காளர்களினால்ää நடத்தப்பட்ட சாஹித்திய விழாவில்ää எஸ்.பொ.ää நாவலர் ஈழமேகம்ää புலவர்மணி ஷரிபுதீன் ஐயாää சமாதானம் மருதூர்வாணர் ஆகியோருடன்ää  அழைப்பேதுமின்றி அதிரடியாகப் புகுந்த பாவலர்ää ~கல்முனைப் பிரதேச எழுத்தாளர்களைப் புறம் தள்ளிக் கல்முனையில் இலக்;கிய விழாவா..?| என்று அஞ்சாநெஞ்சினராக ~இலக்கியநியாயம்| கேட்டபோதுää ஏற்பாட்டாளர்கள் அக்கோரிக்கையை மறுக்கவியலாது போயிற்று. அனைவருக்கும் மேடையில் பேச இடம் தரவேண்டியதாயிற்று. 

 

1975.ல்ää கொழும்பு பீஎம்.ஐஸீ.எச். இல்ää இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும்ää இலங்கைச் சிங்கள எழுத்தாளர் சங்கமும்ää  இணைந்து நடத்தியää  ஒருமைப்பாட்டு இலக்கிய மாநாட்டில்ää பாவலர்ää கவிதை பாடியபோதுää சிங்களக் கவிஞர்கள் சிலர்ää தமிழ்க்கவிஞர்களுக்கு தாளில் எழுதித்தான் வாசிக்க முடியமா.. என்று பரிகசித்ததைப் பொறுக்க மாட்டாத பாவலர்ää தாளை மடித்துச் சட்டைப் பைக்குள் திணித்து விட்டுää தன் இனிய கம்பீரமான இசைக்குரலால்ää நாட்டுக் கவிதைப் பாணியில்ää ~சிங்களம் தெரியாத சிரமத்தால் வாடுகிறேன்.. தங்கத் தமிழின் பாட்டுக் கிரமத்தால் பாடுகிறேன்..| என்று மதுரக் குரலில்ää பாடச் சபையே திகைத்துப் போய்ää மெய்சிலிர்த்துக் கைதட்டிய சம்பவம் நிகழ்ந்தது. இதனைää காதிநீதவான் எஸ். ஆதம்பாவா அதிபர் அவர்கள் மலரில் எழுதியிருக்கிறார். எழுத்தாளர் யோனகபுர ஹம்ஸா அவர்கள் அடிக்கடி நினைவு கூர்ந்து சொல்லி வியக்கும் சம்பவம் இது.  இதன்போதுää ரயில் பயணத்தில் வைத்துää ~சிறுக்கி| என்ற அழகியற்பாவை இயற்றிப் பாடினார்.

 

இக்காலப்பகுதியை பாவலர் தமது கவிதைகளுக்கான ~பொங்கு காலம்.| என வர்ணிப்பதுண்டு. தொடர்ந்தும்.ää ~இல்லாஇடம்நோக்கி|ää ~எனக்குஒருதேவை.| ~அரியபிறப்பு| ஆகிய வித்தியாசமான பொருட் செறிவு கொண்ட கவிதைகளை தனக்கு இயல்பாகவேää வரக்கூடிய சரளமான இனிய நடையில்ää எழுதினார்.

 

கவிதைகளின் பின்னணிக் கருவுக்கான காரணங்களை அவர் தனதுää நாற்பது வயதுக்குப் பின்னரான காலங்களில்ää அடிக்கடிää கலந்து கொள்ளும்ää ~அந்தியில் சந்திப்போம்..|ää மற்றும்ää ~கடற்கரையில் உரையாடலின்பம்| போன்ற மாலை இலக்கிய  நிகழ்வுகளில்ää வெகு அலாதியாக விபரிப்பதைக் கேட்பவர்கள் உண்மையில் பாக்கியம் பெற்றவர்களே.;. ஆத்மாவின் உணவாக கவிதையை உட்கொண்ட அந்தப் பாவலர்ää ஒருநாள் ஓரிடத்தில்ää குப்பைத்  தொட்டிக்குள் இறந்து கிடந்த பச்சிளம் சிசுவைக் காண நேர்ந்த சம்பவத்தைச் சொன்னää. அந்த உணர்;ச்சிக்  கவிஞனின் நரம்புத் தமிழ் வரிகள் இவை:-

 

 

..அந்த மலர் சந்தியில் அனாதையாய்க் கிடக்கிறது

அந்தச் சிறு மலருக்கு உறவு சொல ஆளிலையா..?

பொக்குள் கொடியில் பொசிந்த இரத்தத்தில்

கொசுக்கள் பறந்தும் குந்தியும் இருந்தன

 

இந்தச் சிறுமலருக்கு உறவு சொல ஆளிலையா..?

இந்த இளம் மனிதன் என்ன செய்தான்..?

அன்று மினாவில்ää அந்தக் கத்தியைத் தன்

சொந்த மகனின் கழுத்தில வைத்து

உந்தி இழுத்து அறுக்கத் துணிந்த

அந்த மனம் எங்கே..அதன் ஆத்ம நிலை என்ன..?

 

இன்றுஇந்த மகனைக் கந்தல் பாயினுள்

தந்திர மாகத் தனிமைப்படுத்திய

இந்த மனம் எங்கே..? இதன் ஆத்ம நிலை என்னே..!

 

-பாவலர் பஸீல் காரியப்பர்.

(ஹஜ்: - 1980)

00

 

 

 

 

 

@-08-   நெல்லுப் பாய்கள் தங்கம் அணிகின்றன..

 

 

 

இருள் அற மின்னல் அடித்ததே.. இந்த

இறைவன் என்ன புகைப்படக்காரனோ..?

- பாவலர் பஸீல் காரியப்பர்.

 

 

 

பாவலர் பஸீல்காரியப்பர்.  அவர்களின்ää பாடல்களும்ää கவிதைகளும்  அவரதுää மன விசாரங்களை நன்கு எடுத்துக் காட்டும்;  வகையில் அமைந்துள்ளன. தான் வாழும் சமூகச் சூழலில் நிகழ்கின்ற தனது மனமொப்பாதனவற்றைக் கண்டு சீறிப் பாட்டுரைத்த பாவலர்ää தன் மனமொப்பியவற்றுக்கும் பாப்புனைந்தேயிருக்கிறார். அவரது கூர்மை மிகுந்த பார்வையிலிருந்து ஒரு சின்னப் பொருளும் தப்புவதில்லை என்பதற்கு அவரின் ~ஆக்கினை| கவிதை சிறந்த எடுத்துக் காட்டாகும்.

 

தினமும் பல் துலக்கும் தனது பற்தூரிகைää இன்று தேய்ந்து போய் விட்டது. அதை எறிந்து விட்டுப் புதிதாய் வாங்க வேண்டும். அதை எடுத்து எறிவதற்குத் தொடுகிறார். அப்போது பிறக்கிறது இக்கவிதை.

 

 

~~......மேலை முறுக்கி விட்டு மெதுவாய் எழுந்திருக்கும்

வேளை உனை நினைப்பேன் வெட்டென்று எழுந்து கரம்ää

பற்றிப் பசை சேர்த்து பட்டென்று இதழ் பிரித்துச்

சுற்றிக் குடைந்ததனால் தும்பகன்று போன உன்னைத்

தூக்கி எறிந்து விடவே

 தொடுகின்றேன்.. தொடும் பொழுதோர்

ஆக்கினை என் உள்ளத்துள்.. ஆ..! அதனைச் செய்வேனா..?

 

தொல்லை என நினையாது

 தொழில் புரிந்து

 நித்த நித்தம் என் பல்லைத்

 துலக்கிப் பளிச்சென்று வைத்த உன்னைத்

 தூக்கி எறிந்து விடவே

 தொடுகின்றேன்.. தொடும் பொழுதோர்

ஆக்கினை என் உள்ளத்துள்.. ஆ..! அதனைச் செய்வேனா..?

 

வேக்காடு  தந்தேன்  நான் விளக்கம்தான்  நீ தருவாய்

நோக்காடு  என்று என்ன்pல்  நொந்தாயா..?  இன்றோ நீ

பாடுபட்டுத் தேய்ந்த  ஒரு  பாட்டாளியாகி  விட்டாய்

பாட்டுக்குப்  பரிசு  பெறாத பாவலனாய் ஆகி  விட்டாய்.

தூக்கி எறிந்து விடவே

 தொடுகின்றேன்.. தொடும் பொழுதோர்

ஆக்கினை என் உள்ளத்துள்..

 ஆ..! அதனைச் செய்வேனா..?||

 

-பாவலர் பஸீல் காரியப்பர்.

(ஆக்கினை. 1967)

 

 

எழுத்தாளர். ஆசுகவி. அன்புடீன்.அவர்கள்:

 

~~.........பாவலர் பஸீல்காரியப்பர்!  மாவடிப்பள்ளியி;ல் கவிஞர் மனைவியோடு வாழ்ந்த காலத்தில் அவரது பா அடிகளைக் கேட்டு நாம் பரவசம் அடைந்திருக்கிறோம்.. ~ஆற்றிலே ஒரு பூ|ää ~தக்காளிப்பழம்.|ää ~பூனையின் பிரிவு|ää ~பூமரத்தின் இழப்பு|ää ~அச்சும்மா| இப்படி  எத்தனை கவிதைகளை அவர் எங்களுக்குச் சொல்லியுள்ளார். ~உயிர்| கவிதையின் உரசுதலை மறக்கவொண்ணா...  ~அம்புகள் பாய்ச்சி உளமெல்லாம்  புண்களை| ஏற்படுத்திய  ~அழகான ஒரு சோடிக்கண்களை| மறத்தல் கனவிலும் நிகழுமா..   ~கயிற்றோசை கேள் மகளேää தொட்டில் கயிற்றோசை கேள் மகளே.. அல்லாஹ் ஒருவனென்றும் அவன் தூதர் முஹம்மதென்றும்| சொல்லியே பாட்டிசைத்த உன் சோபன தாலாட்டுக்கள்  இன்னமும் நெஞ்சுக்குள்ளே  இருந்து என்னமோ செய்கிறதே......|| .(பிறை எப்.எம். கவியரங்கில் ஆசுகவி அன்புடீனின் இரங்கல் கவிதை)

 

பாவலரின் இரங்கல் மனதின் சுடுநெருப்புச் சொற்களில் பிறந்தது ~ஓ..! ஒரு பெண்ணாள்..| என்ற இக்கவிதை. . ~சிட்டுக்குருவியே..| கவிதையானது. வறுமையில்ää சிறுபிள்ளைகளுடன் வாழும் ஒரு தாய்ää தன் கனவண் வேலை செய்யும் ~செட்டி வட்டைக்கு| சிட்டுக்குருவியைத் தூது விடுவதாகும். ~படப்பிடிப்பு| என்ற குறுங்கவிதையில்ää காதலர் இருவர் இருளில் சந்திக்க வரும் போதுää மின்னல் வெளிச்சமடித்து அவர்களின் கள்ளொளுக்கத்தைக் காட்டிக் கொடுப்பதைக் கன்னற்றமிழில்ää கவிதை யாக்கியிருக்கிறார்.

 

 

தன் மாணவனின் வறுமை நிலை அறியாது அவனுக்கு பிரம்படி கொடுத்து விட்டுää பின் அதற்காக வருந்தியழுத பாவலர்ää தன் இரங்கல் மனதையும்ää பச்சதாபத்தையும் வடித்துத் தந்த கவிதைää ~சுடுநீர்விழிமணிகள்..|    ~~நியாஸ்.. நீ என்னை மன்னிக்க வேண்டும்..!||  என்று தொடங்கும் அக்கவிதைää ~~.. வாப்பாக்கு கண் தெரியா..- உம்மாக்கிட்ட காசில்ல..- கூப்பனை வித்துப் போட்டு..- கொப்பி வாங்கித் தாரன் என்றா..||  என்று கிராமியம் கலந்;த தமிழில் சொல்லிப் பின்ää ~.சொல்லி அழும் போதில்- அச் சுடுநீர் விழிமணிகள்- முள்ளாக என் நெஞ்சுக்குள் முனை எடுத்துப் பாய்ந்ததடா..|| என்று அழும் போதுää அக்கவிதையின் உயிர்த்துடிப்பில் மனதில் தமிழும் அல்லவா அழுகிறது..?

 

~வருத்துவது| என்ற கவிதைää வறுமைப் பட்ட பெண்ணொருத்தியை வயல்வெளிக்குள் கண்ட பாவலர்ää அவளது      கன்னத்தில்ää ~வெள்ளிக் காசுகளைப் போல்ää தேமல்..| கண்டுää அதற்கு ஒரு மருந்து சொல்லப் போகää அப்பெண். வெடுக்கெனத் தலையைத் திருப்பிää ~உறுத்துவது எங்களது வயிறே..ஃ முகத்தேமல் உறுத்தவில்லைக் காக்கா!|  என்று சொன்னாளாம். அந்த விரக்திப் பதிலிலிருந்து பிறந்த  இந்தää தேமல்த்தமிழ்க்கவிதை.   நம்மையும்  உறுத்துவதும்ää வருத்துவதும் ஆகும்.

 

இப்படி எத்தனையெத்தனையோ முகங்களும் பார்வைகளும்ää உணர்வுகளும் பாவலருக்குள்.. பொங்கிக் கொண்டிருந்தன. அந்த காலக் கண்ணாடி அணிந்த பாவலன்.ää கண்ட ஒரு மாரிக் காலத்தைக் காணுங்கள்..    ~~மாரி முடிந்துää வளவிற்குள் வந்த வெயில்ää - வடிவாய் இருக்கிறது. - காய்ந்து கிடந்த மாதுளை துளிர்த்து- சிவந்து சிரிக்கிறது- கோழிக்குஞ்சுகள் வாசலில் அழகாய் - கொத்தித் திரிகின்றன. - நெல்லுப் பாய்கள் வெயில் பட்டுத் - தங்கம் அணிகின்றன..||

 

ஓடும் பஸ்ஸ_க்குள்ளேää இருக்கையின்றி  ஒரு குழந்தையோடு  கால்கடுக்க நின்றிருந்த ஒரு பெண்ணுக்கு எழுந்துää இருக்கை கொடாத ஒருத்தன்ää பக்கத்திலிருந்தவனைப் பார்த்துää ~~உங்கள் இனப் பெண்தானே. நீங்கள் ~சீற்| கொடுங்கள்.|| என்று கூறியதைக்ää கேட்ட பாவலர்ää இந்த ஈனத்தனமானää  இனப் பாகுபாட்டுக் கெதிராகப் பகிரங்கமாகச் சீறியெழுந்த நெருப்புத் தமிழ்ச் சொற்கள் இவை:-

 

ஓடிடும் பஸ்ஸ_க்குள்ளே

ஓ..! ஒரு பெண்ணாள் நின்றாள்.

வாடிய முகமும் தோளில்

வளர்த்திய சேயுமாய்ச் சற்று

ஆடிய போதிலெல்லாம்

அடுத்தவர்க்கு அணைப்பேயாகி

ஓடிடும் பஸ்ஸ_க்குள்ளே

ஓ..! ஒரு பெண்ணாள் நின்றாள்.

 

ஆசனத்தில் இருந்த அன்பர்

அடுத்திருந்தவரைப் பார்த்துப்

பேசினார் ~உங்கள் இனப்

பெண்தானே எழுந்து சற்று

இடம் தன்னைக் கொடுங்கள்| என்றே

இரங்கினார்.!   பஸ்ஸ{க்குள்ளே

அடைபட்ட பெண்ணில் அவர்

அனுதாபம் பெருகி நின்றார்.!!

 

தாய்.! ஒரு சேயினோடு

தவிப்பதில் பேதம் காணும்

நாயுனை என்ன என்பேன்

நாமெலாம் மனிதரல்லோ..?

 

-பாவலர் பஸீல் காரியப்பர்.

(ஓ.! ஒரு பெண்ணாள்.- 1973)

00

 

 

@-09-   அழகான ஒரு சோடிக் கண்கள்...

அழகான ஒரு சோடிக் கண்கள்.- அவை

அம்புகள் பாய்ச்சி என் உளமெல்லாம் புண்கள்.

- பாவலர். பஸீல் காரியப்பர்.

 

 

 

 பாவலர் பஸீல்காரியப்பர்.  எழுதியää ~அழகான ஒரு சோடிக் கண்கள்| கவிதை பற்றி அறியாதார் இருக்க முடியாது. அது மெல்லிசைப் பாடலாக ஒலிபரப்பாகும் போதுää அதனை முணுமுணுக்காத ஒரு இதயமும் இல்லை. ஈழத்தின் இசைமாமேதை திரு. எம்.ஏ. றொக்சாமி அவர்களின்ää இசையமைப்பில்ää மெல்லிசை வித்தகர்ää திரு. எஸ்.கே. பரராஜசிங்கம் அவர்களின்ää மதுரமான குரலில்ää ஒலித்தது இந்த அற்புதமான பாடல். இக்கவிதையின் பின்னணிக் கதையே ஒரு நாவல் எழுதுமளவுக்கு விரிவானது. அதன் கதைச் சுருக்கத்தை மட்டும் இங்கு குறிப்பிடுவது தகும்.

 

இக்கவிதையின் முழுமூலத் தலைப்பு ~ஒரு சோடிக் கண்கள்| என்பதாகும். இது 1956ம் ஆண்டுää அவரதுää மாணவப் பருவத்தில்ää முதன்முதலாக அவர் படித்த பாடசாலைக் கரும்பலகையில் அவரால் எழுதப்பட்டது. அவருக்கு உயர்தர வகுப்புக்குப் பாடம் எடுத்தää ஆசிரியையின் சுழலும் கண்களுக்காகவே எழுதினார். இதற்காக மாணவப் பருவத்தில்ää சக மாணவர்களினதும்ää  மற்றும்ää சில ஆசிரியர்களினதும்ää  குறும்புத்தனமானஇரசனைக்குள்ளானார்.

 

இதன் பிறகுää 1966ல்ää பாவலர் ரயில் பிரயாணமொன்றின் போதுää தன்னுடன்ää மட்டக்களப்பு  தொடக்கம்ää கொழும்பு வரைää பேசிக் கொண்டு வந்த கறுப்புக்கண்ணாடி அணிந்த ஒரு பெண்ää இறங்க எத்தனிக்கும் போது. தடுமாறியதையும்ää அப்பெண் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிய போதுää கண்களிரண்டும்ää இல்லாதிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சமயம்ää அவருக்கு இந்த ~ஒரு சோடிக்கண்கள்| கவிதை ஞாபகத்தில் வரää ரயிலில் அமர்ந்தபடியேää பத்துவருடங்களுக்கு முன் எழுதப்பட்டதை நினைவு கூர்ந்துää மறுபடியும்ää அவ்விடத்திலேயே அதனை எழுதி முடித்துää அதற்கு ~கண்ணூறு| என்று புதுத் தலைப்பிட்டுää தினகரன் பத்திரிகைக்கு  விடிந்ததும் அனுப்பி விட்டார். பின் அதனை மறந்தும் போனார். இக்கவிதை 19.08.1966 ல் தினகரனில் பிரசுரமானது கூடப் பாவலருக்குத் தெரியாது.

 

பல காலங்கள் கடந்த பின் பாவலர் ஒருநாள் தன் கிராமத்து வயல்வெளிகளில்  உலவிவிட்டுää பக்கத்திலுள்ள தேநீர் கடையொன்றுக்குச் சென்று தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போதுää இக்கவிதை ஒரு விளம்பர நிகழ்ச்சிக்கான மெல்லிசைப் பாடலாகää ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. பாடலின் முடிவில்ää அறிவிப்;பாளர்ää பாடலைப் பாடியவர். எஸ்.கே. பரராஜசிங்கம். இயற்றியவர் யாரெனத் தெரியவில்லை. என்று அறிவிப்புச் செய்தார். இதனைக் கேட்ட பாவலர்ää புன்முறுவலுடன் வாளாவிருந்து விட்டார். தன்னிடம்ää தினகரன் பத்திரிகை நறுக்கு முதலான ஆதாரங்கள் இருந்தும்ää அதனை இலங்கை வானொலிக்கு அறிவிக்கவுமில்லை. அப்பாடல்ää இயற்றியவர் பெயர் தெரியாமலேயேää மேலும்ää சுமார் பத்து வருடங்கள் அடிக்கடி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

 

பின்னர் இதன் படைப்பாளி யாரெனத் தெரிய வந்த சம்பவத்தை சிரேஸ்ட அறிவிப்பாளர்ää பீ.எச். அப்துல்ஹமீது அவர்களின் சொற்களில் காண்போம்.      

 

~~பஸீல் காரியப்பர் அவர்கள் பாவலர் பட்டம் பெற்ற காலகட்டம். ஒரு நாள் இவர் வானொலி நிலையம் வந்திருந்தார். அவ்வேளையிலேயே இவரைப் பேட்டி காண ஏற்பாடாகியிருந்தது. நிரலில் இருந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பதிலாகää பாவலரின் பேட்டி நேரடி ஒலிபரப்பாக இடம் பெற்றது.  நானேää  அவரைப் பேட்டி காண வேண்டும் என்றும் வேண்டப்பட்டேன். சுவாரஸ்யமான ஒரு பேட்டி அது. அதில் கடைசியாக ஒரு கேள்வி.  இவ்வளவு ஆற்றலுள்ள தாங்கள் ஏன் எங்கள் நிலையத்திற்கு மெல்லிசைப் பாடல் ஒன்றாவது எழுதவில்லை.? நான் கேட்டேன். புன் சிரிப்புப் பூக்க  பாவலர் சொன்னார்.   ~எழுதியிருக்கிறேனே.. பல ஆண்டுகளாக ஒலிபரப்பாகிறதே.. எஸ்.கே. பரராஜசிங்கம் பாடிய அழகான ஒரு சோடிக் கண்கள்..!|  அவர் சொல்லக் கேட்டதும்ää என்னையறியாமலேயே இருக்கையை விட்டும் எழுந்து விட்டேன். இன்ப அதிர்ச்சி எனக்கு.

பாடல் பதிவாகி ஒலிபரப்பு நடந்தது 1966ல். பேட்டி நடந்தது 1978ல். பன்னிரண்டு ஆண்டுகள் பாடலாசிரியர் யாரென்று அறியப்படாமலேää இலங்கையிலும்ää இந்தியாவிலும் இப்பாடல் பிரபலமானது. எழுதிய பாவலரே இதை அறியத் தந்திருக்கலாமே..ஏன் செய்யவில்லை..? என்று கேட்ட போதுää  ~நேயர்கள் இரசிக்கிறார்கள். நிலையம் ஒலிபரப்புகிறது. சந்தோஷம்.. கவிஞன் காணாமல் போய்ää கவிதை தனியாக ரசிக்கப்படுவதை அனுபவித்தவாறு அடங்கிப் போய்ää இருப்பது ஒரு சுவையான அனுபவம். என்றுää  தனக்குக் கிடைக்க வேண்டியää நியாயமான புகழைக் கூடää இலட்சியம் செய்யாத இந்த மனிதரை என்னவென்பது..? பேட்டி முடிந்ததும்ää பாவலரை நேரே இசைத்தட்டுக்கள் வைப்பகத்திற்கு அழைத்துச் சென்றேன். ~அழகான ஒரு சோடிக் கண்கள்.| இசைத் தட்டை எடுத்து டுலசiஉள என்ற இடத்தில்ää பாடல் இயற்றியவர் பாவலர் பஸீல்காரியப்பர் என்ற அவரது நாமத்தை நானே எழுதும் நல் விதி பெற்றேன்...||

 

புவியியல் கற்றிடும் வேளை- அவை

புகையுள்ளே மின்னிச் சிரித்திடுங் காலை

தவித்துத் துடிப்பதென் வேலை

தங்குவதெங்கே மனமொரு பாலை.

 

    இச்சம்பவத்தின் பின்னர்ää அழகான ஒரு சோடிக் கண்கள் மேலும் பிரபல்யமாகி இலங்கையின் பட்டிதொட்டி எங்கும் பிரபல்யம் பெற்றது.  இப்பாடலையிட்டுää மூத்த அறிவிவிப்பாளர்ää திருமதி. கமலினி செல்வராசன்ää பின்வருமாறு ஞாபகம் கொள்கிறார்..

 

~~எனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும்.  என் இள மனதைக் கவர்ந்த மெல்லிசைப் பாடல்களில்ää ஒன்று அழகான ஒரு சோடிக் கண்கள்.

தத்துவப் பாடம் நடக்கும்- அவை

தத்தித் திமிக்கி இமைகள் மடிக்கும்.

வித்தையில் பித்துப் பிடிக்கும்.. நம்ää

வீட்டார் அறிந்தால் கன்னந் தடிக்கும்.

 

என்ற அடிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போதிருந்தே அந்தப் பாடலின் மெட்டும் வரிகளும்ää அவ்வப்போது என் மனதில் ஒலிக்கும். எனக்குத் திருமணமான பின் ஒருநாள்ää எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு மெல்லிய மனிதரை சில்லையூரார் எனக்கு அறிமுகம் செய்தார். ~இவர் பாவலர் பஸீல் காரியப்பர்!| என்று. ~~ஓ!. அழகான ஒரு சோடிக் கண்கள்..?|| என்றேன். அன்றைய அறிமுகத்தின் பின் அவர் எனக்கு அண்ணா ஆனார். ஒரு பாசமான அண்ணணாக எப்போதும் கதைப்பார்.  சில்லiயூராரும்ää பஸீல்காரியப்பரும் கதைக்கத் தொடங்கினால்ää இரவு முழுவதும்ää கவிதையும்ää இலக்கியமும்தான்.. கேட்கக்கேட்க அலுக்காதவை. பாவலர் பட்டமளிப்புக்குää சம்மாந்துறைக்கு சில்லையூராருடன் வந்திருந்தேன்.  புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை போன்ற மாமேதைகளுடன் என்னையும் பேசச் சொன்னார்கள்.  பாவலர் என் கணவர் மீது கொண்ட பாசத்தை அவர்ää தன் கவிதைத் தொகுதியைச் சில்லையூராருக்கு சமர்ப்பணம் செய்ததிலிருந்து உணர்கிறேன்.. பஸீல்ää அண்ணா.. இந்த மரிக்கும் உலகுக்கு உயிரையும்ää உணர்ச்சியையும் தாருங்கள்.!||

 

உண்மைதான்.. பாவலர் மரித்த பின்னர் கூட இப்பாடல் உலகை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. இந்த அருமையான பாடல்ää எத்தனையோ இதயங்களை அக்காலத்தில் இணைத்திருக்கின்றது. இப்பாடலில்ää மெய்மறந்தää பிரபல எழுத்தாளரும்ää பிரதேசச் செயலாளருமானää  ஏ.எல்.எம். பளீல்ää (நற்பிட்டிமுனை பளீல்.) சொல்வதுää

 

    ~~..............1966ம்ää ஆண்டுக்குப் பின்னரான காலங்களில்ää க.பொ.த. சாதா. தரத்தைப் படித்துக் கொண்டு சென்ற சகலருமேää பாவலர் பஸீல் காரியப்பர் என்ற நாமத்தை உச்சரிக்காமல் விட்டிருக்க முடியாது. எனக்கும் அப்படித்தான் தெரிய வந்தது. முதன் முதலாக பஸீல்காரியப்பர் அவர்களின்ää பெயர் எனக்குத் தெரிய வந்தது அவரது இந்தப் பாடல் ஒன்றின் மூலமே. இப்பாடலின் கருத்துச் செறிவை இரசித்த முதலாவது கணத்தில்ää இது ஒரு தென்னிந்தியப் பாடலோ என்று எண்ண முடிந்;தது. இப்பாடல்ää ஒலிபரப்படும் போதெல்லாம்ää அனைத்து வேலைகளையும் நிறுத்தி விட்டுää காதுகூர்ந்து கேட்டு இரசிக்கும் நிலைக்கு ஆளோனேன். ஒவ்வொரு வரியையும்ää அணுவணுவாக இரசிக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனை யாராவது தட்டச்சு செய்தால்ää அவரும் இப்பாடலை இசையுடன் முணுமுணுத்திருப்பார். இதனைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுடைய மனமும்ää அப்படியே ஒரு கணம் முணுமுணுக்கும். இப்படிப்பட்ட பாடலை தன் இலக்கிய இரசனையோடுää அக்குவேறுää ஆணிவேறாகப் பிரித்துப் படித்து இரசிக்கும் நிலை..........||

 

ஆட்சியியல் மறு பாடம்.-நான்

அங்கிருப்பேன் மனம் எங்கோ ஓடும்.

ஆட்சி செய்யுமுனைச் சாடும்- நான்

ஆழிச் சுழியில் மிதந்திடும் ஓடம்.

 

    கலாநிதி. எம்.ஏ. நுஃமான்ää அவர்கள்ää இப்பாடல் பற்றிக் கூறுகையில்ää ~~...அதன் கற்பனையும்ää உணர்வும் வாலிபத்திற்கே உரியன. ~நான் ஆழிச் சுழியில் மிதந்திடும் ஓடம்| அழகான படிமம்.......|| என்கிறார்.

 

    கல்முனைக்குடி கடற்றொழிலாளர் சங்கத் தலைவர்ää ஏ.எல்.எம். முஸ்தபா தண்டயல் அவர்கள் இப்பாடல் பற்றிக் குறிப்பிடுவது: ~~.......... பாவலரு சேருää  ந்தப் பாட்ட அவர்ர சொந்தக் கொரலில கடக்கரயில இரிந்து ஒரத்த சத்தமாப் பாடுவாரு பாருங்க.. அந்த ராகத்தää அந்த வடிவää அந்தக் கருத்த நெனச்சி நெனச்சி கேட்டுட்டேயிருப்பம்.. ங்கா வாப்பா..! ச்சாää மனிசன் என்னமாக் கட்டி என்னமாப் பாடினாhரு..||

 

1966ம் ஆண்டைய அதுவும்ää ஒருää இலங்கை மெல்லிசைப் பாடலைப் பற்றி 2001ம் ஆண்டுää முப்பத்தைந்து வருடங்களின் பின்னர் யார் ஞாபகம் வைத்திருக்கப் போகிறார்கள்..? ஆனால்ää 2001.04.03.ல்ää தினமுரசு. வாரஇதழில் ~சிந்தியா பதில்கள்|. பகுதியில்ää வெளிவந்த ஒரு கேள்வி பதில் இது.-   ~~சிந்தியா காயப்பட்டதுண்டா..?||  -சுறையா ஸஹீட். மாவனல்லை. பதில்- ~~அழகான ஒரு சோடிக் கண்கள்.. அவை அம்புகள் தாக்கி என் உடலெல்லாம் புண்கள்- பஸீல் காரியப்பரின் பாடல்..  எஸ்.கே. பராவின் குரலில்.. அந்த மாதிரியான நம்நாட்டுப் பாடல்கள் இப்போது வருவதில்லையே என்பது மனதிலுள்ள காயம்.||

தவிரவும்ää 2008 மே மாத ஞானம் இதழில்ää விசுவமடு இந்திரசித்தன் எழுதியுள்ள ஒரு குறிப்பில்ää பின்வருமாறு உள்ளது. ~~.......திரு. அன்புமணி அவர்கள் பாண்டிருப்புக்கு அப்பாலும் சற்று நகர்ந்து இருக்கலாம். இடையிடையே வானொலியில்ää வந்து போகும்ää  ~அழகான ஒருசோடிக் கண்கள்..|| என்ற பாடலின் கவிஞர் பஸீல்காரியப்பரையும் மறந்து போனார் போல் தெரிகிறது.....||

   

    கடற்தொழிலாளி முதல்ää கலாநிதிகள் வரை சென்றடைந்த இந்தப் பாடல் எழுதிய பாவலரேää நீங்கள் எங்கே..? இரசிகர்களின் கண்ணாறுதான் உங்கள் அழகான ஒரு சோடிக் கண்களை நிரந்தரமாக மூடி விடச் செய்ததாääää?

 

தாய்மொழிப் பாடம் நடக்கும்- நறை

தாங்கிய கண்களோ மின்னலடிக்கும்

ஏய்..! என்றென்னைப் பிடிக்கும்- மனம்

எப்படிக் கண்ணே பாடம் படிக்கும்..?(1966)

 

(சஞ்சாரம் தொடரும்...)

00

 

 

 

10-   என் கண்ணினை உன் கண்ணினால் கவ்வு..

 

 

பலாத்காரம் பண்ணும் செயல் எனக்குப் பழக்கமில்லை.

தசைகளினை உண்ணும் அவாவில் எனக்கு விருப்பமில்லை..

-பாவலர் பஸீல் காரியப்பர்.

 

 

   பாவலர் பஸீல்காரியப்பர்.  1976.ல்ää தானே எழுதிää இசையமைத்துப் பாடும்ää ~பாட்டுப்படையல்| நிகழ்ச்சியைää  கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் அரங்கேற்றம் செய்;தார். ~எண்ணம் இருக்கை தரும்|ää  ~நட்டுமை போகவில்லை| ~இன்சுரங்கள்.|ää ~கனிந்த நிலை|ää  ஆகிய கவிதைகளும் இக்காலத்தில் பாவலரால் உருவாக்கப்பட்டன.

 

    பாகிஸ்தான் இஸ்லாமாபாத் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகமத்தின்ää ஒப்பீட்;டு மதத்துறையின்ää இணைநிலைப் பேராசிரியரும்ää இலங்கையைச் சேர்ந்தவருமானää கலாநிதி.எம்.எம். தீன் முகம்மது எம்.ஏ. பீ.எச்.டி. (அல் அஸ்ஹரி) அவர்கள் பாவலரின் மிக நெருங்கிய ஆத்மீக சகா. அன்னார்ää அரபுää தமிழ்க்கவிதைகளில்ää ஆழமான புலமையும்ää அதன் மீதான வெகுவான ஆய்வுகளும் மேற்கொள்ளும் அறிஞர். அவர் நமது பாவலரைப் பற்றிக் கூறுவது:-

 

~~...........1974ம் ஆண்டின்ää ஆரம்பப் பகுதியில்ää நம் பாவலர் பஸில்காரியப்பருடன முதன் முதலில் அறிமுகமானேன். அப்போது எனக்கு வயது 17.  அம்முதல் சந்திப்பிலேயே எம் இருவரதும் நட்பு இறுகியது.  வாரத்திற்கு ஒரு முறையாவது அக்கரைப்பற்றில்ää அல்லது மாவடிப்பள்ளியில் சந்தித்து நீண்ட நேரத்திற்கு காலையிலிருந்து மாலை வரை பஸீலின் கவிதைகளைக் கேட்பதிலும்ää அதை விமர்சிப்பதிலும்ää எங்கள் நேரம் கழிந்த கொண்டிருக்கும். இச்சந்தர்ப்பங்களில்ää எங்களோடு எப்போதும் இருந்த வந்தவர் பாவலரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் மக்கத்தார் மஜீது.

 

இவ்வேளைகளில்ää ஆரம்ப கால அரபு மொழியிலுள்ள இஸ்லாமிய இலக்கியங்களுள்ää  சிலவற்றினைத் தமிழ்க்கவிதைகளாக வடிக்க முடியுமென்றால்ää  அழகாக இருக்குமென்று நான் கூறியபோதுää  தனது உள்ளத்தின் அடியில் உறங்கிக் கிடந்த ஒரு சுகானுபவத்தைத் தட்டி எழுப்பியது போன்று பஸீலுக்குத் தெரிந்தது.  கட்டாயம் செய்வோம். செய்துதான் ஆகவேண்டும் என்ற திடசங்கற்பம் பிறந்தது.  இனிமேல் நமது வார சந்திப்புகளை இதற்காகவே செலவிடுவது என்று ஒத்துக் கொண்டோம்.

 

    அண்ணல் நபியவர்களின் முன்ää கஃப் பின் ஸ_ஹைத். என்ற மாபெரும்ää கவிஞர் ஸஹாபியினால்ää பாடப்பட்டää ~பானத் சுஆத்| என்ற பிரபல்யமிக்க காவியத்தை தமிழில் வடிப்போம் என்றும் தீர்மானித்தோம். அரபியில் உள்ள ஒரு கவிதையை தமிழில்ää மொழிபெயர்த்து  அதன் உரை நூல்களில்ää பொதிந்துள்ள கருத்துரைகளை  நான் எடுத்துக் கூறி அது வகிக்கின்ற கருத்தினை பூரணமாகக் கிரகிக்க வேண்டும் என்ற  நோக்கில்ää முதல்நாள்ää அதுபற்றிக் கதைத்துää அக்கவிதையின் உள்ளடக்கத்தினையும்ää உண்மையையும்ää நுண்மையாகப் புரிந்த பின்ää அதன் உயரிய இனிய நடையில்ää  அழகிய உயிருள்ள கவிதையாக வடிப்பார் பஸீல் காரியப்பர்.  56 அடிகளைக் கொண்ட கவிதையில்ää  வாரத்திற்கு ஒன்றிரண்டு அடி  என்ற விகிதாசாரத்தில் நாங்கள் செய்து  ஏறத்தாழ 10 அடிகளை  முடித்திருந்த நேரத்தில்ää  நான் உயர்கல்விக்காகää எகிப்து சென்றுவிட்டதால்ää  பானத்சுஆத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இது மிகவும்ää துரதிர்ஸ்டமாகும்.

 

    அகக் கண்ணைத் திறந்து விடும் உடற்கண். கற்பனை சக்தியைக் கொழுத்தி விடும். அதனைத் தூண்டி இயக்கி விடும். நிறைந்த உணர்ச்சி.. உயிரோட்டம்..ää காலத்தையும்ää நேரத்தையும் கடந்து எல்லையற்ற உலகின் முன். எம்மை எழுந்து நிற்;கச் செய்யும். எல்லைப்படுத்தப்பட்ட மொழி. இவையேää காலத்தால் அழியாத உயர்ந்தகனிந்தää மகத்தான கவிதைகள். இவைதான் பாவலர் பஸீல் காரியப்பர்.||

 

    மதுரக்குரலில்ää அதிமதுரத் தமிழில்ää அந்தக்கவிதைசொல்லியின்ää  ~நட்டுமை போகவில்லை| என்ற கவிதைää ஒரு வயற்காரனின் மனைவியைப் பெண்டாள முயல்கிற ஒரு காமுகப் போடியாரின்ää செயல்களை அப்பெண்ää தன் கணவனிடம் ஓலத்துடன்ää முறையீடு செய்யும் பாங்கில் அமைந்துள்ளது. வயல்களில் பாய்;ச்சிய நீர்ää வேறுகள்ள வழியாக ஓடி வடிந்து விடுவதைää கிராமத்தில்ää ~நட்டுமை போயிருக்கிறது| என்பர்.

     

    இந்த நட்டுமை என்ற சொல்லை அதி அற்புதமாகக் கையாண்டு பாவலர் இதனைப் படைத்திருக்கிறார். இயல்பாக வந்து விழும் கிராமியத்தமிழ் மணக்கும் அக்கவிதையிலிருந்துää:-

 

 

 

புள்ளட வாப்பா.! நமக்கிந்தப்

போடியார்க்கிட்ட வெள்ளாமை வேணா

வெள்ளன சுபஹ{ல வந்தான்

உங்கள விசாரிச்சான்..இல்ல எண்டன்

வள்ளெண்டு நம்மட நாயும் குலச்சிச்சி

வாசல்ல நிண்டவன் உஞ்சில்ல குந்திட்டான்

வெள்ளாமைக்கி ஒரு ஆள் வைக்கப் போறானாம்

விருப்பமாம் உங்கள்ள இஞ்சப் பாருங்க

 

கொள்ளயாக் கதச்சாங்கா அந்த ஆள்..

கோபம் எண்டால் பத்திக்கு வந்திச்சு

பிள்ளையொண்டுக்கும் சுகமில்லையாம்- அவன்ர

பெண்டாட்டியும் அவட உம்மாட ஊட்ட போறாவாம்

வெள்ளிக்கிழமை அதுதான் நாளைக்கி மத்தியானம்

வீட்ட வரட்டாம் ஒரு வேலை இரிக்காம்

கள்ளச் சிரிப்பும் அவன்ர கால்ல ஒரு சப்பாத்தும்

வெள்ளாமைக்காரன் பொண்டாட்டி எண்டா என்ன

வேசி எண்டா இந் நாய் நெனச்சான்..?

 

-பாவலர் பஸீல் காரியப்பர்.

(நட்டுமை போகவில்லை.-1978)

 

 

    ~இன்சுரங்கள்| கவிதைää ஓர் ஆண்ää ஒரு பெண்ணிடம்ää தேடுவதைப் பலாத்காரமாய்ää பெற விரும்பாதுää அன்பினால்ää அடைவதைப் பாடுவது. ~கனிந்த நிலை| கவிதையில்ää தன் வளவில் காய்த்தää பலாப்பழத்தைத் தருவதாகச் சொல்லி ஏமாற்றிய பெண் அதன் காரணத்தைக் கூறுவதாக அமைந்துள்ளது. இக்கவிதையில்ää அப்பெண்ணின் கண்களுக்கு உவமை கூற வந்த பாவலரின்ää வரிகள்ää-  ~..நெல்மணிகள் இரண்டுää- அளவாக நீண்டுஅகன்றுää- நெற்றிப்புருவம் என்னும் கரியகுடை நிழலில்ää-  மெல்ல உமிகள் பிரிக்க.- நேர்நோக்கி..ச் சொன்ன பாங்கையும்ää சீதனம் என்னும் கொள்ளை விலை சொல்லி இப்பழத்துக்கு விலை கூறின்ää அநியாயமாய்ப் புழுத்துவிடும் என்று சுள்ளென்று குத்தும் பலாப்பழ முள்ளொன்றாய்; எனää உவமித்த பாவலரின் ~மறையழகு|தான் என்னே..!

 

     பாவலரின் வீட்டு வாசலில் அடிக்கடி காணப்படும் மலர் வகைகளில்  சிவப்பு ரோஜாவும் ஒன்று. தினமும் விடியலில் இதன் முகம் பார்க்கும் பாவலர்ää இப்பூவின் குறுகிய கால வாழ்வை எண்ணிப் பச்சதாபமுறுகிறார். அந்த அழகின் பின்னணியில்ää ~குறுகிய வாழ்வு நீடித்த புகழ்| என்ற கருத்தியலை ஆழக் கருத்தில்ää சொன்ன கவிதைää  ~எண்ணம் இருக்கை தரும்| என்பது. அத்துடன் மனித வாழ்வினையும் இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்து பாவலரின் மனத்தோப்பில்.  10க்க வைத்த ரோசாப்ப10த் தமிழ்க்கவிதையின் வாசனை வரிகள் இவை.:-

 

 

வண்ணச் சிறு பூவே..! எங்கள்

வாசல் கதவின் அருகில் மலர்ந்துள்ள

வண்ணச் சிறு பூவே..!

 

சின்ன இதழ்கனைச் சீராய் அடுக்கி

சிவப்பு நிறம் படைத்தாய்..! மணச்

செண்டும் தடவிக் கொண்டாய்!  உன்னைக்

கண்டு மயங்குகிறோம்

எங்கள் வண்ணச் சிறு பூவே..!

 

இன்னும் சில நாள் இருப்பாய்! இலாவிடில்ää

இன்றே மடிந்திடலாம் எந்தன்

எண்ணம் இருக்கை தரும் நீ அதில்

என்றும் நிலைத்திருப்பாய்

எங்கள் வண்ணச் சிறு பூவே..!

 

-பாவலர் பஸீல் காரியப்பர்.

(எண்ணம் இருக்கை தரும்.- 1978)

 

00

 

 

11-  . கயிற்றோசை கேள் மகளே...

 

 

துன்பம் அகல்கிறது: தொடர் பயணம் இனிக்கிறது

அன்புக் களிப்போடே அதன்ää ஆத்மா சிரிக்கிறது..

-பாவலர் பஸீல் காரியப்பர்.

 

 

பாவலர் பஸீல்காரியப்பர். 1977.ல்ää ~தங்கம்மா|ää ~ஆற்றில் ஒரு பூ!|ää ~அவள்.| ஆகிய கவிதைகளைப் படைத்தார். இதேயாண்டுää பாவலர்ää அகில இலங்கை முஸ்லிம் லீக் தலைவர்ää டொக்டர் எம்.ஸீ.எம். கலீல் அவர்களையும்ää இலங்கைச் சோனகர் சங்கத்தின்ää தலைவரானää ஸேர். ராஸீக்பரீத் அவர்களையும் சந்தித்திருந்தார்.

 

    இக்காலத்தில்ää பாவலர் ஏராளமான இசைப் பாடல்களும்ää இசைச்சித்திரங்களும் எழுதி வந்தார். யாராவது வந்து ஏதும் ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு பாடல் கேட்டால்ää அக்கணமே எழுதிக் கொடுத்து விட்டு மறந்து விடும் வழக்கமும் அவரிடமிருந்தது. அதனால்ää அவ்வாறான பாடல்களைப் பெற்றுச் சென்றவர்கள் அதைத் தம் பாடலெனச் சாதித்து தம் காரியங்களை நிறைவேற்றிக் கொண்டனர்.  பாவலருக்கு இப்பாடல்களால்ää பேருமில்லை.. வருவாயும் இல்லை. அவர்கள் அவற்றைப் பாவித்துப் புகழடைந்த போதுää அதில் தலையிடவும் இல்லை. இதுபற்றி நண்பர்கள் ஆவேசப்பட்ட போதுää ஒரு மெல்லிய புன்னகையுடன் கதையை வேறு திசைக்குத் திருப்பி விடுவார்.  அவரைப் பொறுத்தவரைக்கும்ää அவ்வாறு செய்வதுää பொருள் மிகுந்தவன் தர்மம் செய்வது போல பாட்டு வள்ளல் தன் பங்குக்குச் சிலவற்றைப் பிச்சையிட்டிருக்கிறேன். தர்மத்திற்கும் உரிமை கோரலாகுமா.. என்ற கருத்தில்ää குறிப்பிடுவதுண்டு. அதற்காய் மகிழ்ந்து அப்பாவியாய்ச் சிரிப்பதுமுண்டு.

 

    கல்முனை மன்பஉல் ஹிதாயா அரபிக் கலாசாலைத் தலைவரும்ää கல்முனை இக்பால் கழகத்தின் செயலாளருமானää அல்.ஹாஜ். எஸ்.எல். மீராஸாஹிப். அவர்கள்ää பாவலரின் மேற்கண்ட குணாதிசயம் சம்பந்தமாகää கூறியிருப்பதை இங்கு பார்ப்போம்.

    ~~........... சரியாகநேரம் பி.ப:4.30. மணிக்கு பாவலரின் வீட்டுக் கதவைத் தட்டினேன்.  ஒருவர் வந்தார்.  பஸில்காரியப்பர் இருக்கிறாரா..? என்று கேட்டேன். ~ஆம். இருக்கிறார். உள்ளே வாருங்கள்| என அழைத்துப் போய் ஒரு கதிரையில் உட்காரச் சொன்னார். தானும் எதிரிலிருந்த கதிரையில் உட்கார்ந்தபடியேää புன் சிரிப்புடன்ää அன்பாகää என்னை உற்றுப் பார்த்துää ~நான்தான் பஸில்காரியப்பர்.. என்ன விசயமாக என்னைப் பார்க்க வந்தீர்கள்..?| என்று கேட்டார்.  நான் வந்த விடயத்தைத் தெளிவு படுத்தினேன். ~இலங்கை வானொலி முத்தாரம் நிகழ்ச்சியில் பாடுவதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. எனக்கு உடனடியாக ஒரு பாட்டு வேண்டும்..| என்று.

    ஒருகணம் யோசித்து விட்டுää  சற்றும் எதிர்பாராதவாறு உடனே ஒரு பாடலை அவரது சொந்த இசையில்ää சொந்த வசனத்தில்ää இனிமை சொட்டும் குரலில் பாடிக்காட்டிää ~இப்பாடல் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா..?| என்று கேட்டார்.  ~நூறுவீதம் பிடித்திருக்கிறது.| என்று சொல்லி பாடலைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றேன். முன்பின் அறிமுகமில்லாத என்னிடம் அவரது பெறுமதிமிக்க பாடலை ஒப்படைத்த அந்த விந்தையான மனிதரை எண்ணி வியந்தபடியே வீடு வந்து சேர்ந்தேன்.

    குறி;ப்பிட்ட முத்தாரம் நிகழ்ச்சிpயில்ää இசையமைப்பாளர் ஸவாஹிர் அவர்களின்ää மதுரமான இசையில்ää மேற்படிää இப்பாடலைப் பாடி பெரும் புகழையும்ää பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டேன்..||

 

    இந்தப் பாடல்தான்ää பிற்காலத்தில்ää இசைத்திலகம். எம்.எச். முகமட்ஸாலிஹ் அவர்களினால்ää மதுரமாக இசையமைக்கப்பட்டுää திருமதி. சுஜாதா அத்தநாயக்க அவர்களினால்ää பாடப்பட்டுää இஸ்லாமியக் கீதங்களில் காலத்தால் அழியாத பாடல்கள் வரிசையில்ää சிறப்பான ஒன்று என்ற இடத்தைப் பிடித்தது. அந்த தமிழ்உண்ணிக் கவிஞனின்ää தாலாட்டு;வரிகள் இதோ.:-

 

 

கயிற்றோசை கேள் மகளே..

தொட்டில்

கயிற்றோசை கேள் மகளே..

 

அல்லாஹ் ஒருவன் என்றும்

அவன் தூதர் முஹம்மது என்றும்

சொல்லும் கலிமா தன்னைப்- பசும் மனத்தில்

கொள்க எனப்  பாட்டிசைக்கும்

கயிற்றோசை கேள் மகளே..

தொட்டில்

கயிற்றோசை கேள் மகளே..!

 

-பாவலர் பஸீல் காரியப்பர்.

(கயிற்றோசை கேள் மகளே..1977)

 

 

    இச்சந்தர்ப்பத்தில் பாவலர் தன் படைப்புகனைப் பொறுத்தவரைக்கும் அவற்றில்ää ஆத்மீக எண்ணங்களை ஊடுருவி ஒலிக்கச் செய்வதிலும்ää பழைய படைப்புகளைக் கூட இப்படி  மீள் செதுக்குவதிலும் ஈடுபட்டார்.  இந்த செதுக்கல் வேலையையே ஒரு கவிதையாகவும் செதுக்கினார். அக்கவிதை ~தாரிக் அந்த உளியை எடு.!| என்பதாகும்.  ~கடைச்சல் வேலை செய்பவர் நாங்கள்| என்று தொடங்கிää   ~தாரிக் அந்த உளியை எடு!| என்று முடியும் அந்தக் கவிதை இதுவரை ஒரு ஊடகத்திலும் பிரசுரிக்கப்பட்டதாகவில்லை. அது அவர் கைவசமும் இல்லை.

 

    பாவலரின்ää ~அவள்| கவிதைää தமிழ் மொழியையும்ää தன் ஆத்மாவையும் ஒரு பெண்ணுக்கு உவமித்து இயற்றப்பட்டதாகும். ~..காதலுக்கு அவள் வந்து பிறந்தாள்.. ஒரு - காவியத்தின் நாயகியாய் அவள் இங்கு சிறந்தாள் - ஏது இனி அவளுக்குச் சாவு..? இதயத்துள் - உணர்வாக  உயிர் வாழும் போது..| என முடியும் கவிதையது.

 

    பாவலரின் ~ஆற்றில் ஒரு பூ!|  என்ற கவிதை அழகியலையும்ää தத்துவத்தையும் ஒருங்கே கலந்துருவானது. கால ஆற்றின் ஒட்டத்தில்ää மானுட வாழ்க்கை இழுபட்டுச் செல்லும் பாங்கினை  ஆற்றில் செல்லும் ஒரு பூவுக்குப் படிமமாக்கி அதில்ää ஆழமான தத்துவத்தை உட்புகுத்தி  இலகுவாகச் சொல்கிறது. பாவலரின் தமிழாற்றில் மிதக்கும் அக் கவிதைப் பூவின் சிலவரியிதழ்கள்..:-

 

 

ஆற்றில் ஒரு பூ அநாதையாய்ப் போகிறது

காற்றில் இதழால் தன்

காவியத்தை வரைந்தபடி

ஆற்றில் ஒரு பூ அநாதையாய்ப் போகிறது

 

செங்குருதி ஆற்றில் அச்சிறுமலர் போகிறது

எங்கு வரை போகின்றேன் என்று அறியாது போகிறது.

 

தாய் மரத்தைப் பிரிந்த அது

தன் கிளையைப் பிரிந்த அது

ஓயாத நீரோட்டம் ஒன்றோடு கலந்த அது

ஓடும் நீரோடேதான் ஓடிக் களித்து விட

வாடா முகத்துடனே அது வடிவாகச் செல்கிறது.

 

செடிகொடிகள் வயல் வெளிகள்

சிறுமீன்கள் குருவியிசை

நெடுவானில் ஓவியங்கள்

நிறிறமாய் இயற்கை எழில்

தண்ணீர் மனம் மயங்கித்

தன்கோலம் இழக்கிறது

அந்நீரே வெள்ளி என

அழகுநிலா சொல்கிறது.

 

மின்னிமின்னிப் ப10ச்சிகளின் மினுக்கம் இராக்குருவி

தன்னுடைய கீதங்கள் தனிமை மன உள்ளோட்டம்

பிரிவின் துயரங்கள் நிறைந்த நெடும் பயணம்

உறவின் அர்த்தங்கள் உணரப்படும் போது

 

ஆற்றில் அதே பூ

அறிவு தெளிகிறது

 

துன்பம் அகல்கிறது..தொடர் பயணம் இனிக்கிறது..

அன்புக் களிப்போடே அதன் ஆத்மா சிரிக்கிறது..

ஆற்றில் ஒரு பூ ஆனந்தமாய் போகிறது.. 

 

-பாவலர் பஸீல் காரியப்பர்.

(ஆற்றில் ஒரு பூ...  1977)

 

00

 

-12-   சொட்டுகின்ற நீருக்கென் சோபனங்கள்.

 

 

 

எரிந்த தடங்கள் எங்கும் தெரிகின்றன - மனித

இரக்கம் எரிந்த சாம்பல் எங்குமில்லை..

-பாவலர் பஸீல் காரியப்பர்.

 

 

   பாவலர் பஸீல்காரியப்பர்.!  1978.ல்ää தனது புகழ்பெற்ற ~தங்கம்மா| என்ற நீள்கவிதைக்குää கொழும்பு பல்கலைக் கழகத்தின் தமிழ்ச்சங்கம் அளித்த முதற் பரிசினையும்ää தங்கப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.;. இதனையொட்டிää சம்மாந்துறை மக்களால்ää  பாவலருக்கு மாபெரும் ஒரு பாராட்டு விழா ஏற்பாடானது. அவ்விழாவில். பொதுமக்களால்ää மிக விருப்புடன் அளிக்கப்பட்ட ~பாவலர்| பட்டத்தைää பெருமதிப்பிற்குரியää புலவர்மணி. ஏ. பெரியதம்பிப்பிள்ளை ஐயா அவர்கள் மகிழ்வுடன் வழங்கி பாவலரை ஆசீர்வதித்துரையாற்றினார். இம்மாபெரும்ää விழாவில்ää ~தான்தோன்றிக் கவிராயர்| சில்லையூர் செல்வராசன்ää அவரது துணைவியார் கமலினி செல்வராசன்ää ராவுத்தர் நெய்னாமுஹம்மது மற்றும்ää பலர் உரை நிகழ்த்தினர்.  இம்மகிழ்ச்சிப் பெருவிழாவில்ää விருப்புடன் கலந்து கொண்டää அமைச்சர் எம்.ஏ. அப்துல்மஜீது பீ.ஏ. அவர்கள் பாவலருக்குச் சம்மாந்துறைப் பொதுமக்கள் சார்பாகää தங்கப்பதக்கம்  சூட்டி கௌரவித்தார். ~தங்கம்மா| என்ற நீள் கவிதையும்ää  ஒரு சிறு பிரசுரமாக வெளியிடப்பட்டது.  இது பின்னர்ää இலங்கை அரசாங்கத்தின்ää க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கான ஒரு பாடமாகக் கொள்ளப்பட்டுää  தமிழ்ப்பாடநூலில்  இடம்பெற்றது.

 

    தங்கப்பதக்கம் பெற்ற ~தங்கம்மா| என்ற இக்கவிதையில்ää ஒரு சிறுமியின் வறுமை நிலையைப் பாவலர் தங்கத் தமிழில்ää தவிப்புடன் சொல்லியிருக்கும் வரிகள்:-

 

 

..குச்சியினால் செய்த இரு

கைகளும்ää சூம்பற் கால்களும்

 பச்சையமே இல்லாது

 பழுப்பேறிப்போன

 இலை மேனியும்ää

 போர்வாள் இரண்டு

பொருத வரும் காட்சி சொல்லும்

காறை எலும்புகளும்

 கதை பயிலும் இரு விழிகளும்

பரட்டைத் தலையும் அதில்

பழஞ்சீலைப் பூ முடிச்சும்

வரண்ட குறுஞ்சிரிப்பும்

வயிறு சிறு முட்டியுமாய்....

 

 

என்று அச்சிறுமியைக் காட்சிப்படுத்துகிறார்.  தங்கம்மா ஒரு நீள் கவிதை மட்டுமல்ல.. அது ஒரு காவியம்.. அது பல சிறுகதைகளை உள்ளடக்கிய  ஒரு பாட்டுநாவல்..

 

மேலும் இக்காலப்பகுதியில்ää ~ஜீவிதக் கோலம்.| ~கன்னிவெயில்| ~அறம் அதுவே| ஆகிய கவிதைகளைச் செதுக்கினார். 1979.ல்ää ~துயர் கலந்த தேன்.| பாடலுருவானது. இந்த ~துயர் கலந்த தேன்.| பாடலுருவானதே ஒரு பெரிய கதையாகும். அதனை  பிரபல காதிநீதவானாகியää அதிபர் திலகம். எஸ். ஆதம்பாவா அவர்கள்ää அழகுபட உரைக்கின்றார் இப்படி:-

 

~~.........1978ம் ஆண்டில்ää ஒருநாள்ää பாவலர் பஸீல் காரியப்பர் சம்மாந்துறையிலிருந்துää பைசிக்கிளில் கல்முனை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கல்முனைக்குடிää பள்ளிவாசலுக்கு முன்பாகää ஒரு சனத்திரள் காணப்பட்டது. சனங்கள்ää வயற்காட்டுப்பக்கமிருந்தää சதுப்பு நிலத்தையே நோக்கிக் கொண்டிருந்தனர்.  வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. சனத்திரளை ஊடறுத்து வந்த பாவலர்  ஒருவரிடம்ää ~என்ன விசயம்..?| எனக் கேட்டார்.  அவரோää ஒன்றும் பேசாமல். அந்தச் சதுப்பு நிலத்தில்ää புதைந்தபடி மார்பளவு மட்டும் தெரிந்து கொண்டிருந்த ஒரு பெண் உருவத்தைச் சுட்டிக் காட்டினார்.  பொதுமக்களின் எண்ணம் என்னவென்றால்ää அப்பெண் சதுப்பு நிலத்தில் முற்றாகப் புதைந்து விடுவாள் என்பதுதான். செய்வதறியாது எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கää பாவலர்  விரைந்து சைக்கிளைச் சாத்திவிட்டுää அந்த சதுப்பு நிலத்தை நோக்கிச் சென்றார்.  பலரும் தடுத்தனர்.  தடைகளைத் தாண்டி விரைந்த பாவலர்  மெல்ல மெல்ல சதுப்பு நிலத்தில் கால்வைத்து புதைந்து கொண்டிருந்த அப்பெண்ணை நோக்கி மெதுவாகவும்ää தைரியமாகவும் முன்னேறிச் சென்றாh.

 

பெண்ணை நெருங்கி மிகவும்ää தந்திரமான முறையில்ää அப்பெண்ணை வாரியணைத்துத் தூக்கினார். தூக்கியெடுத்துää தன் கைகளில் அவளைத் தாங்கிய வண்ணம்ää அங்குலம்அங்குலமாக முன்னேறி வந்த அந்த தீரமிக்க காட்சியை செய்வகையறியாது ஏனையோர் பார்த்துக் கொண்டிருந்தனர்.  மெதுவாக வீதியின் கரைக்கு வந்த சேர்ந்தார்.  அப்பெண் உயிர் பிழைத்தாள். கூடிநின்ற சனங்கள் பாவலரின் தீரத்தை மெச்சிப் புகழ்ந்து உச்சி குளிர்ந்த போதுää பின்னாலிருந்துää “லுழர யசந ய பசநயவ அயn” என்ற அக்குறிச்சி விதானையாரின் குரல் கேட்டது.  இதைக்கேட்டதும்ää பாவலர் தனக்கேயுரியää புன்னகையுடன்ää “ டீரவ  றுந யசந in அரன.  ழெவ வாந டயனலஎன்றார். அதாவதுää சேற்றில் இருப்பது நாமேயன்றி அப்பெண் அல்ல. என்று அங்கு கூடி வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களைக் குறிப்பிட்டுச் சொன்ன இந்த வசனம் அவரது தற்றுணிவையும்ää தைரியத்தையும்ää சமுதாயச்சேற்றின் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பையும் எடுத்துக் காட்டப் போதுமானது....||

 

    இக்காலப்பகுதியில்ää பாவலர்ää பிரபல சன்மார்க்கப் பிரசங்கியும்ää இஸ்லாமியத் தொண்டரும்ää ஓய்வு பெற்ற அதிபருமான பாணந்துறை ஹேனமுல்ல சாஹ_ல்ஹமீது ஹாஜியார் அவர்களைச் அன்னாரது இல்லத்தில் சந்தித்தார். அப்பெரியாரின் மீது கொண்டிருந்த பிரியம் காரணமாகää பாவலர்ää  அவர்களதுää செயற்கரிய மானுடசேவையைப் பாராட்டிää தமது மதுரமிக்க இன்குரலால்ää தனது சில பாடல்களைப் பாடிக்காட்டி இன்புறச் செய்தார். ~மனிதரை ரசிப்பவர் மனிதரால் இரசிக்கப்படுவார்.| மற்றும்ää ~ஓட்டைப்பல் நாயை ஒரு போதும் வேட்டைக்காய் கொள்ளாதே..! (கொல்லாதே!)| போன்ற கருத்துருக்களையும் விரிவாக்கச் சுவைகளையும் கடற்கரையில் உரையாடலின்பம் நிகழ்ச்சியில்ää பாவலர் அழகுற விபரிப்பார்..  

 

    இடமாற்றம் பெற்றுச் செல்லும் போதுää அறைத் தோழனாகவிருந்த ஒரு சின்னப் பூனைக்குட்டியைப் பிரியும் வேளை பாவலரின் மனம் பட்ட பாட்டை விபரிப்பதாகவுள்ள ~ஜீவிதக்கோலம்| கவிதை. மேம்போக்காக தன்னையும்ää பூனைக்குட்டியையும் கூறினாலும்ää உள்ளார்ந்த அர்த்தத்தில்ää உலக வாழ்வைப் பிரிந்து செல்லப் போகும்ääää ஒரு சராசரி மனிதனின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகும்.   ~தொலைதூரம் போகிறேன் - என் சின்னப் பூனைக் குட்டியே.. - உறவை நமக்குள் பின்னிய கலைஞனின் - பரிவே உனக்குச் சாஸ்வதமானது - சின்னப்ப10னைக் குட்டியே..உனது - ஜீவிதக் கோலம் நான் அறிந்ததுவா..? - உன்னைப் பிரிதல் துயரம்.! அதை உன் - உள்ளம் அறியும் நியதி இதுவாம். - இடமாற்றம் எனக்கு முடிவாகி விட்டது - இனி நான் போதல் தனி வழியாகும். - ஏன் நீ இப்படிப் பார்க்கிறாய்..? - அன்பின் நினைவுகள் நித்தியம்.. வருகிறேன்.!..||

 

 

பன்னூலாசிரியர் மானாமக்கீன்.

~~.......... நம் நாட்டைப் பொறுத்த வரையில்ää எனக்கு ஒரு பாவலரையே தெரியும். நெருக்கமான அந்தப் பாவலர் மிகவும் அடக்கமானவர். அமைதியின் பிறப்பிடம். எவ்விதமான விருதுகளையும் வேண்டி நிற்காதவர். வேண்டாமென்றும் திருப்பி வழங்கியவர்..||  

 

திருமதி. எஸ். றுஹைமா ஜமால்தீன். (டீயு. டீ.நுன. ஐளுயு நுபெடiளா)

~~........ நான் அவரைப் பற்றி வைத்திருந்த மனப்படம் வித்தியாசமானது. ஆங்கிலேயப் பாணியில் உடையணிந்த ஒரு பிரமுகராக இருப்பார் என்பதே அது. ஆனால்ää பளிச்சென வெள்ளைச்  சாரமும்ää நெஷனலும்ää வெள்ளைத் தொப்பியும் அணிந்து மிக எளிமையாகக் காணப்பட்டார். அந்த எளிமையில்ää ஒரு புனிதமான ஆளுமை தெரிந்தது...||  

 

     ~அறம் அதுவே..| கவிதைää ஒரு வண்ணத்துப் பூச்சியை விரலால் தட்டிவிட அது துடிப்பதைப் பார்த்து இரங்கினாலும்ää உபாதைப்படுத்த வரும் பன்றியினைக் கொல்வதில் பரிதாபம் காட்டாதே என்பதை வலியுறுத்துவதாகும்.

 

    பிரிவாற்றாமை என்பது பாவலருக்குள் எப்போதும் உள்ளத்தில் ஊறியிருந்த உணர்ச்சியாகும். தன்னுடன் தொடர்பாயிருக்கும்ää பற்தூரிகைää செருப்புää பூனைக்குட்டிää மனிதர்கள்ää ரோசாப்ப10ää தீக்குச்சிää மரம் ஆகிய எதையும் பாவலர் பிரிய விரும்புவதில்லை. தன் அன்பின் மடிக்குள் எப்போதும் அவை குடியிருக்க வேண்டுமென தவமியற்றும்ää தனித்தன்மை மனதினர் அவர்.  தன் இடைத்தங்கல் வீட்டிலிருந்து பிரியும் போதுää அம்முற்றத்தில் நின்ற மரத்துடன் உரையாடும் பாவலரின்ää பூங்காத்ää தமிழிலிருந்துää மனங்கவர் தமிழ்மணம் கவர் வரிகள் இவை:-

 

பூத்துக்குலுங்கும் மரமே..

உன்னை விட்டுப்

போகிறேன் போம்போதில்

நேத்திரம் கனத்துப் பனிக்கிறது

நெஞ்;சில் ஒரு நினைவுச் சுடராய்ப் பதிந்து விட்டாய்

 

பூத்த நீ இனி கன்னி கட்டிக் காய்ப்பாய்

பொன் நிறத்தில் பழம் தருவாய்

நீண்டு தொடரும் என்னுடைய பிரயானத்தில்

மீண்டும் உன்னைக் காணவர முடியாது போய் விடலாம்.

ஆனாலும் உன் நினைவு நெஞ்சமெல்லாம்

துயர் கலந்த தேனாய்ப் பாயும்.

--   பாவலர் பஸீல் காரியப்பர்.

(துயர் கலந்த தேன்.:- 1979)

00

 

13 குற்றவாளியாக உன் சந்நிதானத்தில்..

 

 

 

தரித்து நிலைத்து தவித்து அழுகின்றேன்

தாகம் தீர்க்கும் அருள் நீர் விழைகின்றேன்..

-பாவலர் பஸீல் காரியப்பர்.

 

 

        பாவலர் பஸீல்காரியப்பர்.  1980.ல்ää ~உரையாடலின்பம்.|ää  ~அன்பின் மடிக்குள்| ஆகிய கவிதைகள் எழுத்துருப்படுத்தினார். அம்பாறை மாவட்ட ஹிஜ்ரி விழா மலரில்ää பாவலரின் நெடுங்கவிதையான ~ஹஜ்| பிரசுரமானது. மேலும்ää சென்னை காமராஜர் பல்கலைக் கழகத்திற்குää பேராசியர் எம்.எம். உவைஸ் அவர்கள் உபவேந்தராக நியமிக்கப்பட்டதை முன்னிட்டுää இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் சார்பில்ää அன்னாரை நேரடிப் பேட்டி கண்டார்.

 

இந்த ஆண்டில்ää கல்முனைபுகவம் அமைப்பினால்ää வெளியிடப்பட்ட ~தூது| என்ற கவிதையிதழுக்கு ஆலோசகராகவும்ää அதன் வெளியீட்டு விழாவுக்குத் தலைமையேற்று நடத்தியும்ää அதன் ஆசிரியரான என்னையும்ää கவிஞர் எஸ்.எம்.எம். றாபீக்ää கவிஞர். கல்முனை ஆதம்ää ஆகியோரையும் ஊக்கத்துடன் வழிநடத்தியும் வந்தார்.  ~தூது| கவிதையிதழில்ää ~தாய்மை மலர..!| என்ற கவிதையைப் பிரசுரிக்க பெருமனதுடன் இடமளித்தார். தொடர்ந்த தூது இதழ்களில்ää எனது ~தீரமான|கவிதை(?)களைப் படித்துää இரசித்துத் திருத்திவிடுவார். இச்சந்தர்ப்பத்தில்தான்ää எனக்கு ~தீரன்| என்ற புனை பெயரைச் சூட்டினார். ~பாவலர்தாஸன்| என்ற பெயரிலும்ää நான் பல்வேறு இதழ்களில்ää சில கவிதைகள் எழுதி வந்தேன். ஆயினும் அப்புனைபெயரை அவர் அவ்வளவாக இரசித்ததாகச் சொல்ல முடியாது.  (திண்மையோடு நில் எங்கள் தீரமுள்ள வாலிபனே..! என்ற பாவலரின் கவிதையடிகள் என்னைக் குறித்தே எழுதப்பட்டதாகும். இவ்வரிகளை பாவலரே தன் கைப்பட எனக்கெழுதித் தந்திருக்கிறார்.)  

 

    1981ல்ää பாவலர்ää கொழும்பு ரண்முத்து ஹோட்டலில்ää இடம்பெற்ற ~இன்றைய இலங்கை முஸ்லிம்கள்.| என்னும்ää அறிவுசார் கருத்தரங்கில்ää கலாநிதி. சுக்ரிää நீதியரசர். எம்.எம். ஜெமீல்ää ஆகியோருடன் கலந்து கொண்டார். மேலும்ää நூலக அறிவியல் விற்பன்னர். அல்ஹாஜ். எஸ்.எம். கமால்தீன் அவர்களையும் சந்தித்துரையாடியிருந்தார்.

 

    மேலும்ää இக்காலப்பகுதியி;ல்தான்ää  பாவலரின் வானொலிப் பிரவேசம் மீண்டும் ஆரம்பித்தது. மூத்த தயாரிப்பாளரும்ää பாவலரின் உயிர் நண்பருமானää ஜனாப். எம்.எம்.எம். இர்பான் அவர்களின் வற்புறுத்தலின் பேரில்ää  இதற்கு இசைந்தார்.  இலங்கை வானொலி தேசிய சேவைää முஸ்லிம் சேவை ஆகியவற்றில்ää அறிவுக் களஞ்சியம்ää இலக்கிய மஞ்சரிää மெல்லிசைப் பாடல்கள்ää முத்தாரம்ää முஸ்லிம் நாடகங்கள் போன்றவற்றில் தனது பங்களிப்புகனையும்ää ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டிருந்தார். தானே சுயமாக கவிதைச்சரம் என்ற நிகழ்ச்சியையும் நடத்தினார். முக்கியமாக நண்பர் இர்பானுடன்ää சேர்ந்து ~கவிதை பிறந்தது| என்ற  இலக்கிய ஜனரஞ்சகமான ஒரு நிகழ்ச்சியை தொகுத்தளி;த்தார். இதற்காக ஊர்ஊராக அலைந்தார்.

 

இர்பான் அவர்களைப் பற்றிப் பாவலர் எப்போதும்ää  மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக நினைவு கூருவதுண்டு.   ~~இர்பான் என்னுடைய மூன்றாவது கண். இர்பான் எனக்குக் கிடைத்த சாதாரண தோழரல்ல.. அவர் என்ää தோளுக்கும் மேலர். இர்பானின் மனைவியார் எனக்கு இன்னொரு தங்கை. பொறுமையின் பொக்கிசம் அம்மாது|| என்று கண்கள் கலங்கக் கூறுவதுண்டு.

 

    1983.ல்ää சம்மாந்துறை ~அமிர்அலி ஞாபகார்த்த பொதுநூலக| நிர்மானித்தல் வேலைகளில் பாவலர் முழுமூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நூலகத் திறப்பு விழாவின்போதுää நூலகத்தினால்ää வெளியிடப்பட்டää விழாமலரினைää அதிஉத்தம ஜனாதிபதி. திரு. ஆர். பிரேமதாச அவர்களுக்கு வழங்கி வைத்துää விழாவையும் ஆரம்பித்து வைத்தார்.  

 

இச்சந்தர்ப்பத்தில்ää சொற்பளவில்ää சிறுகதைகள் கூட எழுதினார். அவற்றில்ää ஆங்கில மொழிச் சிறுகதைகளை தமிழுக்கு மொழி மாற்றம் செய்தார்ää அவற்றைப் பிரசுரத்திற்கு அனுப்பாது வைத்திருந்தார். அவர் சுயமாக எழுதியää  சிறுகதைகளில்ää சுih அநயடள என்ற ஆங்கிலச் சிறுகதைää அவரோடு நேரடியாகச்  சமபந்தப்பட்ட ஒரு தெருவோரப் பிச்சைக்கார வயோதிப மாதுவையும்ää அவளது உணர்வோட்டங்களையும் கூறுவதாகும். இதனைப் பின்னர் ~ஆடம்பரச் சாப்பாடு| என்ற தலைப்பில்ää தமிழ்படுத்தினார். மேலும்ää வுhந குடயவகழசஅ. (நடைபாதை)ää  யுசழரனெ வாந ஊசைஉடந (பூச்சியத்தைச் சுற்றி..) ஆகிய சிறுகதைகளும் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பிரதி பண்ணப்பட்டும் பிரசுரத்திற்கு அனுப்பப்படவில்லை. அவை பின்னர் அநியாயத்திற்கு சுனாமிப் பேரலைகளில் தொலைந்ததுதான் மிச்சம்.

 

இக்காலங்களில்ää தனது படைப்புக்களை பிரசுரத்திற்கு அனுப்புவதைக் குறைத்துக் கொண்டார்.  நண்பர்கள் யாரகிலும்ää வற்புறுத்திப் பெற்று அனுப்பினால்ää அதை ஒரு புன்னகையோடு பொறுத்துக் கொண்டார். ஆனால்ää பிரதேசத்தில்ää நடக்கும் அத்தனை இலக்கியää நூல் வெளியீட்டு விழாக்களிலும் தவறாது கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கி வந்தார். ~மறைந்துறைதல்| என்ற தன் எண்ணக் கருவை இக்காலப்பகுதியில் தன்னுடைய நெருங்கிய அபிமானிகளுக்கு உபதேசித்தும் நடைமுறைப்படுத்தியும் வந்தார்.

 

 

ஹற்றன் நஷனல் வங்கியின் சிரேஸ்ட முகாமையாளர்ää ஏ.எல். எம். நஸீர்.

 

~~............... பாவலரின் கவிதைளை நாமாகவே வாசிப்பதை விடää அதனை அவர் வாசிக்க எமது செவி வழியாக உள் வாங்குகின்ற போதுää ஏற்படுகின்ற புத்துணர்ச்சிää அலாதியான ஓர் அழகியல். அனுபவமாகும்.   அவர் குரலிலுள்; மந்திரக்கவர்ச்சியும்ää  அனுபவித்து உச்சரிக்கும்  ஸ்தாயியும்  அந்த எழுத்தோவியங்களுக்கு  உயிரை மின்சாரம் போல் பாய்ச்சி விடுகின்றன..||

 

கவிஞர். பொன் சிவானந்தன்.

 

     ~~........ குளிர்மை இலக்கிய நெஞ்சம்..!  தளிர்விட்ட கவிதைப்பூங்கா..! விழிப்பான வெற்றிதய வேந்து..!  எளிமைக்குள்  நான்  கண்ட புனிதம்..! நண்பன் பஸீல் காரியப்பர்.!!.||

 

 

         தொழுகையில் நிற்கும் ஒரு மனிதனின்ää மனநிலையையும்ää அவன் தன் இறைவனிடம் யாசிக்கும் பேறுகளையும் சொல்வது அன்பின் மடிக்குள்கவிதையாகும். இதில்ää பாவலர்ää தொழுகையின்ää ‘நிற்றல்: குனிதல்’. ‘மண்டியிடல்’ää ‘தரையில் நெற்றி பதித்துச் சரணடைதல்ஆகிய நிலைகளை வெகு அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். பாவலரின் ஆத்மீகத் துடிப்பில் உருவான அக்கவிதையின் சில ஞானத் தமிழ் பிரவாகிப்புகள் இவை:-

 

நீளமான துயர்களின் மூட்டையை

நினது சந்நிதானத்தில வைக்கின்றேன்

ஏலா எனக்கு அவைகளின் பழுவை

இன்னம் சுமக்கவே ஒண்ணா

 

தரித்து நிலைத்து தவித்து அழுகின்றேன்.

தாகம் தீர்க்கும் அருள்நீh விழைகின்றேன்.

பெருகும் அன்பில் திளைத்துச் சதாவும்

பேரின்பத்தில் நிலைக்கத் துடிக்கின்றேன்..

 

உன்னை அறிவேன்..உவப்போடு என்னை ஏற்பாய்

மன்னிப்பு அன்பின் மடிக்குள் இருக்கிறது

நெற்றியை நிலத்தில் பதிக்கின்றேன்.-இந்த

நிலையினில் என்னை ஏற்றுக் கொள்.

 

-பாவலர் பஸீல் காரியப்பர்.

(அன்பின் மடிக்குள்.- (1981)

 

    உரையாடல்கள் இன்பமாகும் உறவை வேண்டும் கவிதை உரையாடல் இன்பம்கவிதையாகும்.  மானுடரின் உறவாடல்களில்ää தன் மனத்தின்ää மற்றவரின் தனித்தனி மனங்களது பின்னல்;களைத் தரிசிப்பதில் ஏற்படும் இன்பநிலையை தத்துவத் தமிழில் வித்துவமாய்ச் சொன்ன வரிகள் இவை:-

 

“..உரையாடல் இன்பமுறும்

உறவைத் தா.! எங்கள் உரையாடல்ää

தொடர் அன்பில்ää பொறியாக அருள் மின்னும்

 செறிவான உணர்வோட்டம் செயலாக உருமாற்றம்

உரையாடல் இன்பமுறும் உறவைத் தா..

 

உலகத்தின் கூறுகளை ஒவ்வொன்றாய்த் தனித்தனியே

விளங்க முயல்கின்ற பெரு விருப்புடனே மனம் கலந்து

தன் மனதின் மற்றவரின் தனித்தனி மனங்களது

பின்னல்களைத் தரிசித்து பிரித்து முடிந்து இணைக்கும்

வன்மை பெறும் தன்மை நிறை வழியின் பரடி;சைகளில்

உண்மை ஜயம் பெறவே உரத்த சிந்தனையாய் அமையும்

உரையாடல் இன்பமுறும் உறவைத் தா..

 

-பாவலர் பஸீல் காரியப்பர்.

(உரையாடலின்பம்.- 1980)

 

00

 

 

-14-   ஆக்கிலா தந்த மலர்...

கூறவந்தவை கூற மறந்தேன்

கூட்டுறவாகும் ஆசை நிறைந்தேன்

  பாவலர். பஸீ;ல் காரியப்பர்.

 

   

  பாவலர் பஸீல்காரியப்பர்.  1982.ல்ää தனது வாழ்வில் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மகானைச்  சந்தித்தார். அவர்ää சங்கைக்குரியää ஷேகுனா காயல்பட்டனம் அப்துல்காதிர் ஸ_பி ஹஸரத் அவர்கள் ஆவர். 21.08.1982 ல் பாவலரின் இல்லத்திற்கே விஜயம் செய்த மகான் அவர்களின்ää தரிசிப்பின் பின் பாவலரது நடைமுறைவாழ்க்கைப் போக்கும் சற்றே மாறுதலுக்குள்ளானது. ஆத்மீக ரீதியிலான. சிந்தனாவாதக் கருத்துருக்களால்ää பாவலர் மேலும்ää ஆக்கிரமிக்கப்பட்டார். அவரே சொல்வது போலää ‘இச்சந்திப்பு எனக்குள்ää மானுடம் தேடுதல் பற்றிய சிந்தனையைக் கருக் கொள்ளச் செய்தது.”  என்ற போதிலும்ää கவிதைகளையும்ää இசைப்பாடல்களையும்ää ஓரளவு எழுதியே வந்தார். புகழ்பெற்ற ~ஆக்கிலா தந்த மலர்| இசைச் சித்திரப் பாடலாக்கம் உருவான காலம் இதுவாகும்.

 

    பாவலரின்ää “ஆக்கிலா தந்த மலர்ஒரு உரையாடற் சித்திரக் கவிதையாகும். இதில்ää பாவலர்ää வாழ்வுக்குத் தேவைää தன் மார்க்கத்தின்மீது பற்றுக் கொண்டää குல ஒழுக்கமுள்;ள ஒரு கன்னிப்பெண்ணாகும். அவளைத் திருமணத்திற்குத் தெரிதல் பெற்றோரின் கடமையாகும் என்பதை தாய் ஸ்தானத்திலிருந்து வலியுறுத்துவது. அழகியல் உவமைகளோடுää இசையோட்டமாகச் சித்தரிக்கும் இந் நீள்பாவைää பாவலர்ää ~அந்தியில் சந்திப்போம்| இலக்கிய நிகழ்வுகளில் வாசித்துக் காட்டுவதைக் கேட்பதே ஒரு தனி அநுபவமாகும். இசைத் தமிழைக் கலந்து அசைச் சொற்களில் தரும் அந்த அழகியல்ச் சித்திரம் இதோ:-

 

தாய்:- வண்ண மகனே வா.. இங்கு

    புதுவாசம் பரவுதடா..

    என்ன மலர் கையில் உனக்கிது

    எப்படி வந்ததடா..

    கண்ணின் மணியே நீ மறைவாய்ப்

    புன்னகை செய்வதும் ஏன்..

    உண்மையைச் சொல் மகனே..

    இதை உன்னிடம் தந்ததுவும் யார்..?

 

மகன்:-மாமிக்கு என் பரிசு இதனை

    மறுக்காமல் கொண்டு சென்று

    காணிக்கையாய்க் கொடுங்க என்று சொல்லிக்

    கடிதினில் ஓடி விட்டாள்.

    என்னதான் செய்வேன் உம்மா..

    உங்களில் இரக்கமாய்த் தந்த

    சிறு வண்ண மலர் இதனை

    வருகின்ற வழியில் எறிவதுவா..?

 

தாய்:-    சேச்சே.. நீ என்ன சொன்னாய்..

    இது நல்ல செடியினில் பூத்த மலர்

    ஆக்கிலா தந்த மலர்

    மனசுக்கு ஆறுதல் வந்த மலர்!

    நல்ல பரிமாற்றம் இது

    அந்த நாயனின் சம்மதமே

    இல்லறம் வென்றவர்கள் பணக்காரர்

    இல்லாமல் போனாலும்

    காசு அதிகமில்லை.ää- காக்கா

    பெரும் மாளிகை கட்டவில்லை

    நேசம் மிகுந்தவர்கள் அவர்களில்

    நேர்மை இருக்கிறது..

 

    தோட்டம் துரவுமில்லைää- மற்றவரின்

    தோசம் கதைப்பதில்லை

    தேட்டம் ஹலாலான சோறுகறி

    தின்று வளர்ந்ததுகள்.

    காணி நிலங்களில்லை.. ஈமானுள்ள

    கல்பு இருக்கிறது….

 

மகன்:- சுற்றி வளைக்க வேண்டாம்.- அந்தரங்கச்

    சுத்தியே சொத்து சுகம்

    சத்தியமாய் ஏற்பேன் உங்களுக்கும்

    சம்மதம் என்று சொன்னால்

 

தாய்:-    கல்பு குளிருதடா.. மகனே என்

    கருப்பை சிலிர்க்குதடா..

    அல்லாஹ் கிருபையினால் உங்களுக்குள்

    ஆனந்தம் பொங்குமடா..!

    -------------------------------------------

    -------------------------------------------

     -பாவலர் பஸீல் காரியப்பர்;

    (ஆக்கிலா தந்த மலர்.1982)

 

1983.ல்ää தத்துவார்த்தச் சிந்தையை முன்னிருத்த்pää ~நிழல்.| என்ற ஆய்வுப் பாவை  எழுதி முடித்தார். தொடர்ந்துää  ~நிலைத்த நிழல்| கவிதையை உருவாக்கினார்.  1985.ல்ää கல்முனை ஹனிபா வீதியில் ஸேர். ராஸீக்பரீத் நலன்புரிச் சங்கத்தினால்ää உருவாக்கப்பட்டää பொதுநூலகம் ஒன்றை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.  பின்னர்ää ~உறவு| என்ற தன்னிலைசார்கவிதையை வெளிப்படுத்தினார்.

 

இறையியல் தொடர்பான ஆத்மீக சஞ்சாரத்தில் பாவலர் தீவிரமாக மினக்கிட்டிருந்த இக்காலத்தில்ää இறைதூதர் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றித் தன் வேட்கையை வெளிப்படுத்திய வரிகள் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

 

“…உங்களது

  சின்னி விரல் நகத்தையேனும்

 சிறிது தொட விரும்புகின்றேன்

 என்னருமை நாயகமே..!..

 

கடலலைகள் போல ஞானத்தமிழ்க்கவிதை வரிகள் பொங்கிப் பிரவாகித்த இச்சந்தர்ப்பத்தில்ää நம் பாவலர்ää கடற்கரையில்ää ஒரு தென்னை மரத்தின் நிழலின் கீழிருக்கிறார். அப்போதுää அம்மரத்தின் நிழல் நகர்ந்து செல்கிறது. தானும் நகர்ந்து அதன் நிழலில் அமர்கிறார். சற்று நேரத்தில் மீண்டும் நிழல் இடம்பெயர்கிறது.  மீண்டும் பாவலர் நிழலுக்கு நகர்கிறார். இதிலிருந்து பிறந்ததுதான் நிழல்கவிதை. 1983ல் எழுதிய இந்த நிழல்கவிதை  தென்னை மர நிழலை இறை அழைப்பாகவும்”ää தன்னைத் தன் ஆத்மாவின் நிழலாகவும் உருவகப்படுத்தி எழுதப்பட்டது. அநத ஞானத்தமிழ் வரிகளைப் பாருங்கள்.:-

 

கொடுவெயிலின் தனிமையில்

கடற்கரைத் தென்னையின்

நிழலினில் அமர்கிறேன்.

நினைவினுள் அழிகிறேன்.

 

சுடுவதேன் முதுகினில்

நிழல் இதோ இடம்பெயர்ந்துள்ளது

ஆம்.. அதன் வழி நகர்கிறேன்

சிறுபொழுதமர்கிறேன்.

நிழல்.. இதோ..

இன்னும் சற்றிடம் பெயர்ந்துள்ளது.

நான் நகர்கிறேன்.

நிழலோடு தொடர்வதென் நிலைமை..

ஓ..! வருகிறேன்.!

 

-பாவலர் பஸீல் காரியப்பர்.

(நிழல்.- 1983)

00

15-   காணாமற்போன ஒரு தங்கக் காசு....

 

 

 

எதிராக வந்தாலும் உண்மை சொல்லு - எந்த

எதிராளி மீதினிலும் கருணை கொள்ளு..

         -பாவலர் பஸீல் காரியப்பர்.

 

 

 

       பாவலர் பஸீல்காரியப்பர். 1983 ல். திடீரெனää எழுத்துப் பணிகளை இடை நிறுத்துவதாக அறிவித்தார். அதிலிருந்துää நீண்ட காலமாக எதையும் எழுதாதிருந்தார். தனிமைச் சிந்தனையும்ää நெருங்கியவர்களுடனும் கூட ஒட்டுறவாமையாகவும் இருந்தார். இனக்கலவரங்களும்ää போர்ப் பிரகடனங்களும் நாடெங்கும் கேட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஆத்மீகத்துடன் உலகை வெல்லுதல்என்ற கருதுகோளை குறிப்பு வாழ்முறைமையாகக் கொண்டார். அதனால்ää ஒரு வெகுஜன  சமூகவியக்கம் பற்றியும்ää அதன் விரைவு நடவடிக்கை பற்றியும் சில கருத்துரைகள் பாவலரால்ää பற்பல நிகழ்;வுகளில் சொல்லப்பட்டன.  

 

இதன் பின்னர்ää தனது மறைந்துறைதலை விட்டுää தீவிரமான சமூக நடவடிக்கையில் இறங்கினார். உள்ளுர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார். குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற சமூக இயக்கத்தின்ää ஸ்தாபக உருவாக்குநர்களில் ஒருவராக இருந்தார்.  (அப்போது அது அரசியல் கட்சி அல்ல) தொடர்ந்துää தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த சில முடிவுகள் எட்டப்படுவதற்கும் பின்புல ஆலோசகராகவிருந்தார்.. ஒரு விஷயத்தை எடுத்தால்ää அதனை விடாப்பிடியாக நின்று காரியம் சாதிக்கும்ää தீவிர குணம் கொண்ட பாவலர்ää உள்ளுர் அரசியலில்ää மிகத் தீவிரமாகச் செயற்பட்டார்.  இதன் காரணமாகää துப்பாக்கிச் சூட்டுக்கும் ஆளாகிப் படு காயமடைந்தார்

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இஸ்லாமியக் கோட்பாட்டின்படி வரையறைக்குட்பட்ட ஒரு இயக்கமாகவே அவர் பார்த்தார். இது பற்றி பாவலர் குறிப்பிடுகையில்ää ‘வணக்கத்திற்கு மட்டுமா இஸ்லாம்..? வாழ்க்கைச் சுவையில் மனித உறவில்ää கனக்கப் பிணக்கம் மலிந்த அமைப்பைத் தகர்த்து அதனைப் புனர் நிர்மானிக்கும்..என்று அவ்வியக்கத்தை வர்ணித்தார். அவ்வியக்கம்ää ஒரு அரசியல் கட்சியாக உருமாற வேண்டிய தேவை பற்பல மட்டங்களில்ää எழுந்த போதுää அதனை மிகவும் வரவேற்று வற்புறுத்தினார். உத்தேச கட்சியைப்பற்றிää பாவலர்ää “காலத்தின் தேவை ஒரு கட்சி. கண்முன்னே தெரிவது ஸ்ரீலங்கா முஸ்;லிம் காங்கிரஸ்என்று சொன்ன வாக்குää மக்கள் மத்தியிலும்ää கட்சியின் எல்லா மட்டத்திலும்ää வேத வாக்குப் போல் ஒலித்து நின்றது.   

 

 குர்ஆன்ää ஹதீஸ் அடிப்படையில் செயற்படுவோம் என்று மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி செயற்பட வேண்டியää ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ää சொற்பக் காலத்திலேயேää  தனதுää பாதையை விட்டும் தடுமாறிää “பாராளுமன்ற  அரசியல் மட்டும்செய்யத் தீர்மானித்த போதுää  அப்போதைய பலமிக்க தலைமைத்துவத்தை எதிர்த்துää அதனை விட்டும்ää வெறுத்து வெளியேறிய முதல் மனிதர் ஆனார். (இச்சம்பவத்தில்ää பாவலருக்குää உயர் தலைமையால்ää இவ்வாறு கூறப்பட்டதுää

 

 “Pயஎயடயச...!  றுந hயஎந வழ னழ  ழடெல pயசடயைஅநவெசல pழடவைiஉள.. . மட்டுமன்றி  இது மத வேலையல்ல..அரசியற் கட்சி..என்பதை மன வேதனையுடன் கூறிக் கொள்கிறேன்..!  

 

இதற்குப் பாவலர் அளித்த பதில்ää “ளுழு.. லழர றழரடன hயஎந வழ னழ லழரச டிரளiநௌள.  தவிரவும்ää பாராளுமன்ற வியாபாரிகளிடத்தில் ஆத்மீகத்திற்கு ஒரு வேலையும் இல்லை. என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன்.

 

இப்பதிலுடன் பாவலரது அரசியல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்து விட்டன. அதன் பின்னர் கட்சி பெரிய விருட்சமாக உருப்பெற்ற பின்ää  பாவலரின் ஆரம்ப காலப் பங்களிப்புகளுக்;காக பட்டமும்ää பதவிகளும்ää தர முன் வந்த போதெல்லாம் அவற்றை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆரம்ப காலங்களில்ää பாவலர் கட்சிக்கு வழங்கியிருந்தää தியாகத்தனமான பணிகளை மிகவும் மதித்தää கட்சித் தனிப்பெருந் தலைவர் அஸ்ரஃப் அவர்கள்ää தான் இராஜினாமாச் செய்த  பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்திற்குää நியமிக்க  நம்பிக்கைக்குரிய ஒரே நபரான பாவலரை நாடி விரைந்து வந்தார்.

 

வீட்டில் காணாமையால். பாவலரை நகரசுத்தித் தொழிலாளர் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில்ää தேடிப் பிடித்து சம்மதத்தைக் கேட்டார். பஸீல் காரியப்பர். பா.உ. பதவியேற்பு|| நாளைய தலைப்புச் செய்தி இதுதான்..||  என்று தலைவர் கூறியதும்ää  பாவலர் ஒரு கணமும் தயக்கமின்றி ~~நான் பா.உ. பஸீல்காரியப்பர் அல்ல.. பாவு பஸீல் காரியப்பர்..||  பட்டம் என் பெயருக்கு முன்னால் இருக்கிறது. பெயரின் பி;ன்னால் தேவையில்லை.என்று கூறி விட்டார். ஆனாலும்ää தலைவர் விடாப்பிடியாகää “நீங்கள் மறுத்தால்ää உங்கள்ää சகோதரரும்ää எனதுää   மைத்துனருமானää தொப்பி முகையதீன் அவர்களை நியமிப்பேன்.என்று சொன்ன போதுää பாவலர்ää குறும்புடன்ää “இவ்வேளையில்ää முஸ்லிம்களுக்குத் தேவை  தொப்பிதான்!.”  என்று இடித்துரைத்துää அதனை முழுமனதுடன்ää அங்கீகரித்தார்.

 

    (இத்தனைக்கும்ää பாவலரின் பெரிய தந்தையின் மகன்தான் தலைவர் அஸ்ரஃப். இருவரும் காரியப்பர் குடும்பத்தினர்.. தாய் வழியிலும் மைத்துனர் முறை. இன்னும்ää தலைவரினதும்ää அவரது பாரியார் அன்னைääபேரியல் அவர்களினதும்ää ஆரம்ப காலச் சிநேகிதருமாவார்.) அதன் பின்னரான காலங்களில்ää தலைவர் அஸ்ரஃப் அவர்களாலும்ää   கட்சியின் பிறää அபிமானிகளாலும்ää குறிப்பாகää  அன்னை பேரியல் அஸ்ரஃப்ää தளபதிääசேஹ{இஸ்ஸதீன்ää தொப்பி முகைதீன் எம்பிää போன்றோராலும்;ää பாவலர் பெற்றிருக்கக் கூடிய பதவிகளும்ää புகழும் ஏராளாமாக இருந்த போதிலும்ää கைவசம்ää மூன்று பெண்பிள்ளைகள் திருமணமாகாதிருந்த நிலையிலும்ää  எதையுமே ஏற்றுக் கொள்ளாதுää தனதுää துவிச்சக்கர வண்டியில்ää சாஸ்வதமாகத் திரிந்து கொண்டிருந்தார்..

 

    ஒருமுறைää துவிச்சக்கர வண்டியில் பாவலர் தன்நண்பருடன்ää செல்லும் போதுää  அச்சமயம்ää வீதியால்ää விரைந்து கொண்டிருந்தää ஆடம்பர பிக்அப்.வாகனத்தையும்ää அதனுள்ளிருந்த உள்ளுர் அரசியல் பிரமுகரையும்ää பாவருக்குச் சுட்டிக் காட்டிää “பாவலர் ஸேர்ää நீங்கள் போக வேண்டிய பிக்அப். அல்லவா இது?” என்று கூறியதும்ää பாவலர்ää “பிக்அப்பின் சொகுசை விடää ‘சந்தக்கின் சொகுசுதான் பிரதானமானதுஎன சட்டென விடையிறுத்தார். (சந்தக்: பாடை)

 

    பாவலரது அரசியல் வாழ்வு மிக ஆழமானதும்ää ஆபத்துமிக்கதுமாகும். அவர்  தனது அரசியல் பாதையில்ää துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகிப் படு காயமடைந்திருக்கிறார். கத்திக்குத்திலிருந்து மயிரிழையில் தப்பியிருக்கிறார். கல்லெறிபட்டிருக்கிறார். பயமுறுத்தப்பட்டிருக்கிறார்.  இத்தொடரில்ää அவரது படைப்பிலக்கியப் பணிகளைப் பற்றி மட்டுமே ஆராய்வதால்ää அரசியல் விடயங்கiளை பிரதானமாகக் கொள்ளவில்லை. பாவலரின் அரசியல் சித்தாந்தம் தனியாக ஆராயப்படல் வேண்டும்.  

 

அதன் பின்னரான காலங்களில்ää  சிறியளவில்ää கவிதைகள் எழுதினார். 1986.ல்ää  அவரது ~இற்ற ஓலை| என்ற கவிதை அபூர்வமாகப் பிரசுரமானது. 1987.ல்ää ~தொடும் கலை| கவிதையுருப்பெற்றது. இக்கவிதையை பாவலர்ää காத்தான்குடியில் என்னுடைய அலுவலக உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து எழுதிää எனக்குää அன்பளிப்புச் செய்தார். 

 

தொடும்கலைகவிதையானதுää  ஆர்மோனியப் பெட்டியையும்ää பெண்ணையும்ää இறைவனையும்ää தொடும்கலை தெரிந்து தொடும் போதெல்லாம் அருள் இசை பெறலாம் என்று  ஆர்வமாக உபதேசிப்பதாகும். இது இசையியலின் வடம்பிடிப்பு. மனவியலின் ஒரு படப்பிடிப்பு. ஆத்மீகத்தின் சிறைப்பிடிப்பு. தன் மனதையும்ää அதனிடம்ää கேட்கப்படும் கேள்விகளைப் பொறுத்;தே வெளிப்படும் பதில்களும் இருக்கும் என்ற அவரது கருத்தியலையும்ää கருவாக வைத்துப் பின்னப்பட்டது. மனதைத் தொடும் கலை தெரிந்து மனோவசியத் தமிழில் தோய்த்தெடுத்த அந்த ஆர்;மோனிய வரிகள் இவை:-

 

இந்த ஹார்மோனியப் பெட்டிக்குள்.

எத்தனை ராகங்கள் எத்தனை சங்கதிகள்.

வந்தவை எத்தனை வராதவை எத்தனை..

 

நண்டின் நடையாய்க் கொண்டு செல்லும்

அந்த விரல்களின் ஆற்றின் மேன்மையால்

தொடும் கலை தெரிந்;து தொடும் போதெல்லாம்

அருள் இசை பொழியும் ஓர் அமுத சுரபியே

அவள்.

 

அரசியல் வேலைகளிலிருந்து விலகியிருந்தாலும்ää தன் படைப்புப் பணிகளுக்கும் முற்று முழுதாகத் திரும்பவில்லை பாவலர்.  இக்காலப் பகுதியில் தன் நண்பர்களைத் தேடிச் சென்று சந்தித்து உரையாடிவந்தார்.. இதனால்ää பாவலரின் பாக்கள் இன்றிää இலக்கிய ஊடகங்கள் சோபையிழந்தன.  அவரதுää இலக்கிய அபிமானிகளால் இத் தலைமறைவைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரைத் தூண்டி வற்புறுத்திச் சில கவிதைகளை எழுதுவித்தனர். பாவலரின் மிகநெருங்கிய இலக்கிய நேசகரும்ää தென்கிழக்குப் பல்பலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவருமானää  ரமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் பாவலரின் இந்த மறைந்துறைதல்பற்றிச் சொல்ல வந்த போதுää “நேசன்.சஞ்சிகையில்ää “காணாமல் போன ஒரு தங்கக் காசு! என்று மிகப் பொருத்தமாக உவமை சொல்லியிருந்தார். மேலும்ää கூறுகையில்ää

 

“……கற்பனைக்குள் கனவு காணாது தான் வாழும் சமூகத்தின்ää வாழ்க்கை முறையை நுணுக்கமாகப் பார்த்த பாவலர் இன்று தனக்குள்ளே ஒரு நல்ல மனிதனாக வாழ்வதிலும் அக ஆராய்ச்சியில் ஈடுபடுவதுமாக விருக்கிறார்….”  என்கிறார்.

 

இற்றஓலைகவிதை நாதியற்ற வறுமையுடையää அபலைப் பெண்ணின் கடைசித் தெரிவாகவுள்ள விபசாரத் தொழிலுக்கான ஆரம்ப ஆபத்தான நிர்ப்பந்தத்துக்குச் சம்மதிப்பதைப் பற்றிய மறைபொருள்க் கவிதையாகும்.

 

சூரியனின் ஒளிக்கதிர்கள்

இற்றுப் போன ஓலைக் கூரையின் வழியாக

பாரியதாகவும்ää பருமனில் பல அளவுகளாகவும்

முட்டைகள் செய்கின்றன.

 

ஏக்கத்தோடு அவள் மல்லாந்து படுக்கின்றாள்

எதிர்பாராமல் அப்போது அங்கே

தலையில் சிவப்புத் தொப்பியும்

தடாரிப்பும் சிவலை மேனியும் வாலில் பல

வண்ண இறகுகளும் வாலிபமும் கொண்ட

சேவல் ஒன்று கூரையில் சென்று கொண்டிருக்கிறது

இற்ற ஓலைகள் காற்றில் மிதந்து

அவள் முகத்தில் விழுகின்றன..

 

-பாவலர். பஸீல் காரியப்பர்.

(இற்ற ஓலை. 1986)

00

 

 

 

 

-16-.   மொட்டையடித்த ஒரு வேப்ப மரம்..

 

 

 

அநுபவம் முதிர்ந்து அசைவுகள் அற்று

மௌனியாய் நிற்கும் மரம் இது…!

-பாவலர்.பஸீல் காரியப்பர்.

 

 

 

 

  பாவலர் பஸீல்காரியப்பர்.! என்னும்ää அந்த மனிதநேயப் பாவலர்ää தன்விசாரனைச் சஞ்சாரத்தில் ஈடுபட்டிருப்பது பற்றி அவரது ஆத்மீக் சகாவானää அக்கரைப்பற்று மக்கத்தார்.ஏ. மஜீது. அவர்கள் கூறுவது இது:-

 

“…….. பஸீல் என்றால் கவிதை. கவிதை என்றால் பஸீல். இது வெறும் முகஸ்துதி அல்ல. மிக நீ;ண்ட காலஙகளுக்குப் பிறகுää இலங்கைää ஆரோக்கியமான உணர்வுகள் இழையேயாடும்ää கவிஞர்களைத் தரும் வரிசையில்ää  பஸீல்காரியப்பரைப் பதிவு செய்து கொண்டது. அந்த உண்மையைச் சொல்வது எப்படி முகஸ்துதியாகும்.?

 

எனது சிறுவயது முதல்ää எனது இணைபிரியா நண்பனாக வாழ்ந்த இக்கவிஞனின் கவிதை ஊற்றுக்களில்ää நான் நனைந்த நாட்களை இப்போது மீட்டிப் பார்க்கிறேன். என்னையும் ஒரு கலைஞனாக மக்கள் மத்தியில்ää இனம் காட்டுவதற்கு அவர் எடுத்த களங்கமற்ற முயற்சிகளை எண்ணிப் பார்க்கிறேன். இன்றும் கூட நினைத்தாலே உடல் புல்லரிக்கின்றது.  சடத்துவ நிலைக்கு அப்பால்ää ஆத்ம தரிசனம் காணும்ää காணும் வல்லபம் எல்லாருக்கும் இலகுவில் கைவரக் கூடியதொன்றல்ல.  ஆனால்ää பஸீல்காரியப்பருக்கு இந்நிலை சிறுவயது முதலே பரீட்சயமானதொன்றாகி விட்டது. ஆத்மீகத் துறையில்ää அதி உன்னத அறிவில்ää தனது கற்கைத் துறையை  முடித்து; கொண்டவர் கூட  இவரை வியந்து போறற்றி உரை செய்துள்ளமை இவரது ஆத்மீக தரிசனத்திற்குத் தக்க சான்றாகும்.

 

ஆத்மீகத்தையும்ää கவிதையையும் தன்னிரு கண்களாகப் போற்றி வந்த பாவலர்ää தன்ää அபிமானிகளினதும்ää இலக்கிய நண்பர்களினதும்ää அயராத வேண்டுகோள்களின் பேரில்ää  அவ்வப்போது  சில கவிதைகளை எழுத ஆரம்பித்தார். கல்முனைää பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவரும்ää சாமாதான நீதவானமாகியää அல்ஹாஜ். என்.யூ.எல். மீராஸாஹிபு அவர்களின் கூற்று ஒன்றினைப் பார்ப்போம்.

 

“………1987ம் ஆண்டுää இந்திய மதுரை மாநகரில்ää நடைபெற்ற அகில உலக இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டில்ää எனது நண்பர்  அக்கால தபால் தகவல் பிரதியமைச்சர் ஏ.எல்.ஏ. மஜீட் (மூதூர்)ää ‘சொல்லின் செல்வர்செ. இராசதுரை  ஆகியோரோடு நானும் கலந்து கொண்டேன். அச்சந்தர்ப்பத்தில்ää தமிழகத்தசை; சேர்ந்த ஒருவர் என்னோடு நட்புதலானார்.  நான் இலங்கையர் என்றும்ää எனதூர் கல்முனை என்றும்ää அறிந்த உடனே அவர் என்னிடம் கேட்ட முதற்கேள்விää ‘உங்களுக்கு கவிஞர் பஸீல்காரியப்பரைத் தெரியமா..?’ என்பதுதான்.  அவர் பாவலரின் பரம ரசிகர். கடல்கடந்த தேசங்களிலும் கல்முனையின் புகழைப் பரப்பும் அதிசய மனிதர் பாவலர்…….”

 

1988.ல்ää அவர்ää எழுதிய முக்கியமான ஒரு கவிதை சரி சிரிஎன்பதாகும். 1989.ல்ää ~பிரியம்| ~மன்னிக்கவேண்டும்| எனும் பாக்களை இயற்றினார். இந்த ஆண்டு பாலரின் வாழ்வில் முக்கியமானதாகும். தென்கிழக்கின் தேசபிதாவானää மறைந்தääமுதுதலைவர்ää கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பர் அவர்கள்ää மரணிப்பதற்கு ஏழு தினங்களுக்கு முன்பதாகää அன்னாரது நேரடிப் பேட்டியை தானாகவேää தேடிப் போய்ää ஒலிப்பதிவு செய்தார்.

 

1990.ல்ää ~கிளைகளை எப்படி வடிவம் அமைப்பது| என்ற தத்துவ விசாரனைக் கவிதையை எழுதி முடித்தார். 1991.ல்ää கல்முனைக்குடி ~அல்.பஹ்ரியா| கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வந்தார். ஊரில் ஓய்வாக இருந்த போதிலும்ää அவ்வளவாக எழுதுவதில்லை. மாலைவேளைகளில்ää தனது நண்பர்களானää மீனவத் தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது இன்பதுன்பங்களில் கலந்து பகிர்ந்து பொழுதைக் கழித்தார். கல்முனைக்குடி சேனநாயக்க சமுத்திர நன்னீர் மீன்பிடித் தொழிலாளர் சங்கத்தின்ää போசகராக தெரிவு செய்யப்பட்டுää அவர்களுக்கான ஆலோசனைகளையும்ää சட்ட ரீதியிலான அணுகுமுறைக் குறிப்புகளையும் எடுத்தியம்பிää நெறிப்படுத்தி வந்தார்.

 

அதேசமயம்ää இக்காலப் பகுதியில்ää அவருக்குள் உள்ளோடியää ஆத்மீக இலயிப்பு காரணமாக அடிக்கடி சிந்தனை வயப்படுபவராகவும்ää தான்ää திடீரெனச் சொல்லும் சில வசனங்களை அல்லது கருத்துகளை மட்டும் குறித்து வைத்துக் கொள்பவராகவும் இருந்தார்.  பின்னர் அவற்றினைத் தொகுத்துää ~வாழ்க்கைக் கப்பலில்..| ~நம்புகொடி| ஆகிய பாக்களினை  உருவாக்கம் செய்தார். இக்காலப்பகுதியில்ää தனது தலைமயிர் அனைத்தையும் மழித்து மொட்டைத் தலையராகக் காட்சியளித்தார் பாவலர்.  தன் ஆடையின் வடிவமைப்பையும் மாற்றிக் கொண்டார். இந்த புதிய ஆடை வடிவமைப்பு பாவலருக்கு ஒரு மையித்தின்ää கபன் (உயிரற்ற உடலைச்சுற்றும் வெண்ணிறத்) துணியை உற்று நோக்கிய போது பிறந்ததாகும் என்று பிற்காலத்தில் கூறினார்.  

 

ஒரு தந்தை தன் மகனை நிரந்தரமாகப் பிரியப் போகும் நிலையில்ää மகனுக்குச் சொன்ன தத்துவ வரிகள்தாம்ää “கிளைகளை எப்படி வடிவம் அமைப்பது..?” என்ற கவிதை. மொட்டையடித்த அந்த வேப்பமரக் கவிஞனின்ää அநுபவ வைரம் பாய்ந்த வரிகள்:-

 

மகனே.. உன்னை நான் விட்டுப் போகிறேன்..

அழுத்தமாய்க் கால்களை

 ஊன்றிக் கொள்வாய் நீ...

 பிரிவது உலகில் சாஸ்வதமானது.

 பரிவுகள் துயராய்ப்  பரவுதல் இயற்கை.

. மரத்தை நட்டவன் தண்ணீர் ஊற்றலாம்.

 எருவும் இடலாம்..காவல் செய்யலாம்..

 கிளைகளை எப்படி வடிவம் அமைப்பது..?

 இலைகள் எவ்விடத்தில் தளிர் விடும் என்பது..?

 அந்த மரம் தன் அழகை அது பெறும்

 விந்தை நான் அறியேன்

 விளக்கம் பெறலாம் நீ

 அதனால்தான் ஒரு ஆறுதலோடு

 போகிறேன் நான்….”

 

பாவலர் பஸீல் காரியப்பர்.)

(கிளைகளை எப்படி வடிவம் அமைப்பது..?:- 1990)

 

நாம் எப்படித்தான் நல்லவராக இருந்தும்ää நம்மோடு இன்றும் யாராவது ஒரு இழிகுணத்தவன் நட்பாக இருந்து கொண்டேயிருக்கின்றானே.. அந்நிலையை பாவலர் பாடுபொருளாகப் பாவித்த வித்தியாசமான பா வாழ்க்கைக் கப்பலில்என்ற கவிதையாகும்.

 

நம்புகொடிகவிதையில்ää “..மொட்டையடித்த வேப்பை மரத்தைப் - பற்றிப் படரும் பாக்கியம் பெற்றேன்..என்று ஒரு வெற்றிலைக்  கொடியின் வாயிலாகக் கவிதை சொல்லத் தொடங்கிய பாவலர்ää மானிட வாழ்வின் படிநிலைகளைச் அக்கவிதையிற் சுட்டிக் காட்டுகிறார். “..அநுபவம் முதிர்ந்து அசைவுகள் அற்று-மௌனியாய் நிற்கும் மரம் இது.! - ஒரு நாள்.!என்னும் வரிகளில்தான் எத்துணை தீர்க்கதரிசனம்..

 

1992.ல்ää    ~மனங்கள் வெளுத்தே நாம் பேசிடுவோம்.| என்ற தமிழ்ääமுஸ்லிம் இன ஒற்றுமைக் கீதம் பாடலை எழுதினார். அவர் விரும்பம் போதெல்லாம்ää பற்பல  நிகழ்வுகளில்ää தனது வளமிக்க குரலால் பாடியும்ää காண்பிப்பதுண்டு. இக் கவிதை தமிழ்முஸ்லிம் இனக் கலவர நிலைகளின் பின்னர்ää உருவாகும் நற்சூழ்நிலை பற்றியது. எப்போதும்ää இனக்கலவரத்திற்கு முழு எதிர்ப்பாளராகத் தன்னை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும் பாவலர்ää தனது தைரியத்தமிழில் தந்த துணிவுத் தமிழ்க் கவிதை இது:-

 

 

ஒருவரை மற்றவர் மதிப்பதனால்- இங்கே

உருவாகும் நல்ல சமுதாயம்

 

வருந்திக் கசிந்த கண்ணின் நீரோடை- கொடும்

வன்செயல்களால் மலிந்த பிணவாடை

கரிந்து சரிந்ததுவோ மன மேடை..- இங்குää

 கடிதில் தெலைத்திடுக போர்ப்பீடை.

 

மனங்கள் வெளுத்தே நாம் பேசிடுவோம்.-ஒருவர்

மற்றவரைத் தாழ்த்தக் கூசிடுவோம்.

சனங்கள் இனும் வருந்தல் நீதியில்லை.-பாடாச்

சங்கடங்கள் ஒன்றும் இங்கு மீதி இல்லை.

 

மூன்று இனங்;களுமே மனிதர்கள்- இங்கு

நான்கு மதங்கள் கூறும் புனிதங்கள்

ஏன் செயல்பாடாகி எழவில்லையோ..- நமக்கு

இறைவன் பகுத்தறிவைத் தரவில்லையோ..?

 

-பாவலர் பஸீல் காரியப்பர்.

(மனங்கள் வெளுத்தே நாம் பேசிடுவோம்.:- 1992)

 

00

 

17-   துறைநீலாவணையிலிருந்து ஒரு துளசி...

 

 

 

 

எங்கினிப் போவேன்  என்ற நிலை வந்தே

ஏங்கி அழும் போதும்- தாய்

தங்கியிருக்கும் அந்த நிழலே தரிப்பிடமாய்ச் சேரும்.

-பாவலர் பஸீல் காரியப்பர்.

 

 

 

 

     பாவலர் பஸீல்காரியப்பர்.  1993.ல்ää ~தனி ஒரு பழம்|ää  ~மகிழ்ச்சியாய் இரு| ஆகிய தத்துவக் கவிகளைப் படைத்தார்.;. 1994.ல்ää ~மறைவின் உறக்கத்தில்| ~ஒன்றே..|ää  ~துளசி| ஆகிய கவிதைளைப் பிரசவித்தார். இவை தமிழ்பேசும் மக்களின் ஒற்றுமையைப் போதிப்பதாகும். 1995.ல்ää ~ஈர்ப்பு| கவிதையை வடித்தார். 1996.ல்ää ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.  இதே ஆண்டில்ää ~காலம்|ää  ~நிலையான நிழல்| என்பவற்றினை யாத்தார். இக்காலகட்டங்களில்ää சராசரியாக வருடத்துக்கு ஒரு கவிதை மட்டும் எழுதினார். ஆனால்ää இலக்கிய விழாக்களிலும்ää அது சம்பந்தமான வாசிப்புகளிலும்ää ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

 

பாவலரின்ää “தனி ஒரு பழம்கவிதை விதவை வாழ்வின் துயர் நிலையையும்ää வயோதிபத்தின் விரக்தியையும்ää பற்றியது. “…தனி ஒரு பழம் நான் இத்தக்காளிச் செடியில்- உண்ணாப்பழமா..நான் - ஒருவருக்கும் வேண்டாமோ. - வண்ணாத்தி தேன் உண்ட - வழியில் கனிந்தவள் நான்…” என்று தன்னிலை விபரம் தரும் கவிதை அது. மலர்ச்சியாய் இரு!கவிதை ஒரு தன்னம்பிக்கைச் சிறைப்பிடிப்பாகும். “…மலர்ச்சியாய் இரு - எனக்கு மகிழ்ச்சியைத் தா - விழிச்சுடர் தெறி - என்னுள் வெளிச்சமாய் வா - நம்பிக்கை வந்தால் - நெஞ்சம் சந்தோஷம் கொள்ளும் - சந்தோஷம் வந்தால் -  புதுச் சிந்தனை துள்ளும்..என்று உபதேசிக்கும் புத்துணர்ச்சிமிக்க துள்ளுநரம்புத் தமிழ்க்கவிதையது.

 

   1994ல்ää அப்போதிருந்த  தமிழ்முஸ்லிம் இன முறுகலைக் கண்டு பாவலர்ää மிகவும்ää மனம் வெதும்பிப் போய்ää காணப்பட்டார். இக்காலத்தில் அவர் அதிகமாக எதுவும் எழுதவில்லை. தான் எல்லாவற்றையும் எழுதி முடித்து விட்டதாகவும்ää இன இந்த இன முறுகல்த் தீ என்று அணையுமோ என்ற ஒரு வகையானää விரக்தியான மனநிலையில் காணப்பட்டார். இதுபற்றிப் பாவலர் யாத்ரா பேட்டியின் போதுää “இனக்கலவரம் எல்லாவற்றையும் உடைத்துத் தள்ளி விட்டது.  மனிதனின் இயல்பு வாழ்;வை அவனது ஆத்மாவை சின்னாபின்னப்படுத்தி விட்டது. மனித இறைச்சியை மட்டும்தான் இன்னம் இவர்கள் விற்கவில்லை. என்ற மனம் கசந்து போய்ச் சொல்லியிருந்தார்.

 

பாவலரின்ää “மறைவின் உறக்கத்தில்கவிதைää அவரதுääää ‘மறைந்தறைதல்என்ற செயற்பாட்டின் வார்த்தை வடிவமாகும். இரத்தினமே..!எனத் தன்னைத் தானே பாவலர் விழித்து அழைத்துப் பாடுகிறார்.  நீ எத்தனை நீண்ட ஆண்டுகளாக-  மண்ண்pன் மடியுள் - மறைவாய் வாழ்ந்திருந்தாய்?  - பாதாள அக்கினியுள்  -பக்குவங்கள் பெற்றாயோ..? -  ஓ..! அந்த மறைவின் உறக்கத்தில் - ஞானத் தவத்தால் ஒளிக்கதிர்கள் - உன்னுள் விளைந்தனவா..?  - உள்ளொளியைப் பெற்றே  - உலகைத்தரிசிக்கும்  - வெல்லும் ஒரு வாழ்வை  - விரும்பித் தவம் இருந்தாயா..? - இம்மனிதர்  - ஆழத்தில் இருளில் உன்னை - அடையாளம் கண்டார்கள்.!

 

ஒன்றேஎன்னும் கவிதைää ஒட்டியிருக்கும் உறவுகள் அனைத்தும் பிரிவுகளாகிப் பிரியும்.. அதன் முடிவுää முடிவில்லாத மன ஒடிவு..  ஆனால்ää இறைஞானம் ஒன்றே பிரியாமல் ஒன்றோடு ஒன்றாக முடிவு வரை ஒன்றியிருக்கும் என்று உரைக்கிறது. பிரியாத உறவும் அலையாத மனமும்  - அடைந்து சதா - ஆனந்த மயமாகி - உருகிக் கரைந்து ஒன்றோடு ஒன்றாகி - ஒன்றே என்று இருப்பதற்கு - உன்னையல்லால் ஒன்று இருக்கிறதா..?”   எளிமையின் வனப்பை வண்ணத் தமிழில் சொல்லுவது ஈர்ப்புகவிதை. காலங்கள் விரைந்தோடுவதை துள்ளு தமிழ்வார்த்தை ஜாலங்களால் வர்ணிப்பது காலம்கவிதை.

 

ஒவ்வொரு மனிதரிடத்தும்ää அந்தரங்கத்தில் இருக்கும் இளமைக்காதலைச்  சொல்வது நிலையான நிழல்கவிதை. மாங்கொட்டை விளையாடும் காலத்தில் சந்தித்த ஒரு சிறுமியின் மீது காதலுற்ற சிறுவனின்ää பசுமை மனதினைப் படம் பிடிக்கிறார் பாவலர். அச்சிறுமிää  “…ஒற்றைக் காலால் நொண்டிக் குதித்த - அசைவுகள் நெஞ்சில் - பதிவுகள் ஆயின - அழகியல் ஓதின..

 

உலகின் எந்த ஒரு ஆத்மாவுக்கும் துயரம் நேருமென்றால் எனக்கு சந்தோசமே வேண்டாம் என மறுக்கும் கவிதை சந்தோஷம்”   எனினும்ää 1997ல்ää ~சந்தோஷம்| என்ற மானுடரின் பொதுமை உணர்வைக் கூறுவதாகவிருந்த  இக்கவிதையை எழுதும் போதுää பாவலர் சந்தோசமாக இல்;லை என்பது அவருக்கு நெருங்கியவர்களுக்குத் தெரியும். இக்காலத்தில்ää கொலம்பியா பல்கலைக்கழக மானுடவியல் ஆய்வாளர்ää திரு. ஸீ.எல். ரொபர்ட்ஸன்ää திரு. ஆர். ஜோன்சன்  மற்றும்ää பாகிஸ்தான்ää இஸ்லாமாபாத் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி தீன்முஹம்மது ஆகியோரைச் சந்தித்;த பின்னர் பாவலர் சற்றே தெளிவடைந்த மனதினராய்க் காணப்பட்டார்.

 

இதன் பின்னர்ää 1998.ல்ää ‘ஹலால்’ (ஆகுமானது) என்னும்ää இஸ்லாமியக் கருத்துருவை வைத்துää அருமையான  ஒரு கவிதையாக்கினார். ஒரு மனிதன்ää தன் வாழ்வில் சாப்பிடும் ஒரு நெல் மணியைக் கூட ஆகுமான (ஹலால்)  வழியில் தேடிக் கொள்ள வேண்டிய சிரத்தையை மிக எளிமைத் தமிழில்ää வெகுளிப் பாவலர்ää; சொன்ன வரிகள் இவை:-:

 

இந்தப் போகம் முடிந்து விட்டது

இனி நாம் புறப்படப் போகிறோம்

இந்த அந்தர விடுதியில் பல விதமான

ஆதரவுகள் செய்திருக்கிறீர்கள்

நன்றி காக்கா.. பரன் கம்புகளும்

வண்டியில்ஏறிக் கொண்டன.ää நீங்கள்

விலா வயல்காரர்ää  முளை எறியும் போது

பொது வரம்பைத் தாண்டி சில மணிகள்

எந்தன் வயலிலும் சிந்தியிருக்கலாம்

அவை பல மணிகளைத் தந்துமிருக்கலாம்

ஆதலால் காக்கா.. அவைகளை நீங்கள்

ஹலால் சொல்ல வேண்டும்

வண்டி புறப்படப் போகிறது

சென்று வருகின்றேன்அஸ்ஸலாமு அலைக்கும்.! (1998)

 

-பாவலர் பஸீல் காரியப்பர்.

(ஹலால்.1998)

 

இக்காலப் பகுதிகளில்ää ‘ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சுவையும் வௌ;வேறானவை.என்றும்ää ‘விதிக்குப் பொருந்துவது வேதனைக்கு மருந்துஎன்றும்ää பாவலர்ää தனது கருத்துருக்களை தனக்குää மிக நெருங்கியää  தமிழ் முஸ்லிம்ää நேசர்களுக்கு மட்டும்ää கூறி வந்தார்.  என்னதான் கடத்தல் சம்பவங்களும்ää இனக்கலவரங்களும்ää நடந்த போதிலும்ää தனது தமிழ் நண்பர்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்றே சந்தித்துறவாடி வந்தார். தனது ஓய்வூதியப் பணம் அவ்வளவையும்ää தமிழ் வயோதிபத் தாயொருவருக்கு திடீர் அன்பளிப்புச் செய்து விட்டு வெறும் கையோடு வீடு வந்த சம்பவங்களும் உண்டு.

 

துறைநீலாவணைக்கு முஸ்லிம்கள் யாரும் போகாத அந்தச் சு10ழ்நிலையில்ää தன்னந்தனியனாகää அங்கு சென்று தனது இலக்கியää ஆசிரிய நண்பர்களைச் சந்தித்து மீண்டார். சும்மா அல்ல.. ஒரு துளசிச் செடியும் கொண்டு வந்தார். இச்சமயம் அவர் சிறிது மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். இச்சம்பவம் துளசி.!என்ற அற்புதமான இனவொற்றுமைக் கவிதைக்கு வெளிப்பாடாயிற்று.

 

தூய வெண்ணிறச் சாரமும்ää நஷனல் மேற்சட்டையும்ää குறிப்பாகää முஸ்லிம் தொப்பியும்ää அணிந்து கொண்டுää இனக்கலவர காலத்தில்ää தன் தமிழ்ச் சகோதரியான குணசுந்தரியைச் சந்திக்கத் துறைநீலாவணைக்குச் சென்றுää பாவலர் கொண்டு வந்த அற்புதமான தமிழ் மணக்கும் மண்ணின்ää கவிதைச் செடியில் பூத்த துறைதேர்ந்த தமிழ்ப் பூ இதுதான்.

 

துறைநீலாவணையிலிருந்து  ஒரு

துளசிச்செடி கொண்டு வந்தேன்.

வேர் நொந்து போகாமல் நீர் வார்த்து

ஓரமாய்க் கெல்லி ஈர மண்ணோடு

உசுப்பாமல் கொண்டு வந்து

எங்கள் இல்லம் இருக்கும்

கல்முனைக்குடி மண்ணைக் கெல்லி

அதன் உள் வைத்தேன்.

அம் மண்கள் கலந்தனமனிதரைப் பழித்தன.

துளசியின் இலைகள் என்னைப் பார்த்து

மெல்லச் சிரிக்கின்றன.

 

-பாவலர் பஸீல் காரியப்பர்.

(துளசி.- 1994)

00

 

 

18-  பொழுதறி கருவியின் பொடிநடைஒலி….

 

 

 

குற்றவாளியாக உன் சந்நிதானத்தில் குனிந்து நிற்கிறேன்.

பற்றி எரிந்து பசளையாகட்டும் பழைய சருகுகளே..

-பாவலர்; பஸீPல் காரியப்பர்.

 

 

 

பாவலர் பஸீல்காரியப்பர்.  2000வது ஆண்டில்ää ‘யாத்ராகவிதையேட்டுக்காக ஒரு பேட்;டியளிக்க இசைந்தார். இப்பேட்டியைää பாவலரின் விருப்பத்துக்குரிய அபிமானியும்ää பிரபல தொலைக்காட்சி அறிவிப்பாளரும்ää யாத்ரா ஆசிரியருமானää அல்ஹாஜ். அஷ்ரப்சிஹாப்தீன் அவர்கள் நேர்கண்டார். அதிலிருந்து சில கேள்வி பதில்கள் பின்வருமாறு அமைந்திருந்தன.

 

யாத்ரா:       பாவலரேää உங்களுக்கென்று ஒரு இலக்கியக் கொள்கை     இருக்கின்றதா..?

 

பாவலர்:        ஒரு நாளும் அப்படியொன்றும் இருந்ததில்லை. நான் உள் மனிதன். நான் எழுதுபவனவற்றில் மிகச் சிறந்ததாக எது இருக்க வேண்டு மென்றால்ää அது என் உள் மனிதனை வடித்து எடுத்ததாக இருக்க வேண்டும்.  எனது உள் மனிதனைப் பற்றித்தான் நான் சதாவும் சிந்தித்தவனாக இருக்கின்றேன். இதை வைத்துத்தான் நான் தீர்மானங்களை எடு;க்கின்றேன்.

 

யாத்ரா:          உங்கள் கவிதைகளை மிக நீண்ட காலமாக எதிலும்            காணக்கிடைக்கவில்லையே..?

 

பாவலர்::  அது என் பொடுபோக்குத்தனமா பலவீனமா என்று தெரியவில்லை.  எழுதி முடிந்தவுடன்ää எனது கடமை முடிந்து விட்டதாக உணர்கிறேன்.

 

யாத்ரா:-        உங்கள் முதற் கவிதை..?

 

பாவலர்:- சிறு வயதில் ஒரு முறை கடும் காய்ச்சலால் பிடிககப்பட்டிருந்தேன். இரண்டு தினங்கள் உணர்வின்றிக் கிடந்துள்ளேன். திடீரென இரவில் கண் விழித்த நான்ää சுவரில் எறும்புகள்  ஊர்ந்து செல்லும் நிரையைப் பார்த்தேன். அவை எதிரும்புதிருமாக ஒன்றையொன்று சந்தித்துச் செல்வதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். இதைக் கண்ட எனது தாயார் அதிர்ச்சியடைந்துஉனக்கென்ன ஆயிற்று..?’ என்று பதறிப்போய்க் கேட்டார். உம்மா..! நான் எறும்புகளைப் பார்க்க்pறேன். அவை ஒவ்வொன்றும் சந்தித்துச் ஸலாம் சொல்லிச் செல்கின்றனஎன்று பதில் சொன்னேன். தயார் ஆனந்தம் அடைந்தார். அதுதான்ää அந்த எண்ணம்தான் அந்தச் சிந்தனைதான் எனது முதலாவது கவிதை என்று எண்ணகின்றேன்.

 

யாத்ரா:-        கவிதை காலத்தின் கண்ணாடி என்பார்களே….அடுத்த தலைமுறை உங்களைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டாமா..?

 

பாவலர்:-  காலத்தக்குரிய கவிதை. எல்லாக் காலங்களுக்குமான கவிதை. என இரண்டு வகைகள் கவிதையில் உள்ளன.  பாரதியின் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்பது காலத்துக்குரிய கவிதை.  குயில்பாட்டுää எல்லாக் காலத்துக்குமுரிய கவிதை.  அவ்வக் காலத்துக்குரிய கவிதைகளை அவ்வப்போது பிரசுரத்திற்கு அனுப்பி வருகிறேன். எல்லாக் காலத்துக்குமுரிய கவிதைகள் என்னிடம் பத்திரமாக உள்ளன. அவை எப்போது வந்தாலும் சரிதானே..?

 

யாத்ரா:-       ஏன் இதுவரை ஒரு கவிதைத் தொகுதியையேனும் வெளியிடவில்லை..?

 

பாவலர்:-  நீண்ட காலமாக எல்லோரும் கேட்கும் கேள்வி இது.  அப்போதெல்லாம் இதில் எனக்கு நாட்டமிருக்கவில்லi. இப்போது வந்துள்ளது. இந்த வருடம் எனது கவிதைத் தொகுதி வெளிவரும். அதைத் தொடர்ந்து  உருவகக் கதைகளை நூலாக்குவேன்.

 

 

    2000ம் ஆண்டில்ää மிலேனிய யுகம் பிறந்த போதுää பாவலர் இதனைத் தனது வெளிப்பாட்டுக் காலம் என வர்ணித்தார். தனது எத்தனையோ அபிமானிகளால்ää எவ்வளவோ காலமாக இரந்து கேட்டும்ää எவருக்கும் தனது படைப்புக்களை நூலுருவாக்கக் கொடுக்காத பாவலர்ää தனது படைப்புக்கள் அனைத்தும் ஆவணமாக்கப்படல் வேண்டும்ää அவை நூலுருப்படுத்தப்படல் வேண்டும் என்பதை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டார். இக்காலத்தில்ää என்னுடைய வல்லமை தாராயோ..?” சிறுகதைத் தொகுதி வெளியீடுகளில்ää ஆலோசகப் பங்களிப்பாளராகவும் இருந்தார்.. என் சிறுகதைகளின் உடனடி இரசிக விமர்சகர் அவர். எனது நூலைக் கண்டதும்ää பாவலருக்கு உள்ளுர ஒரு மலர்ச்சி ஏற்பட்டது. தன் கவிதைகளும் நூலுருப் பெற்றால் தனது அபிமானிகளுக்காவது ஒரு மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ஏற்படுமேää அதற்காகவேனும் நூலை வெளியிட தீர்மானித்தார். ஆயினும்ää அதை யாரும் நம்பவுமில்லை.

 

கல்முனைப் பிரதேச சபையின்ää உதவித் தவிசாளராகவும்;ää மாநகர சபை உறுப்பினராகவும்ää இருந்த தற்போதைய கிழக்கு மாகானசபை உறுப்பினரானää  கே.எம். அப்துர் ரஸ்ஸாக்.(ஜவாத்) அவர்கள் பாவலரின் மிக நெருங்கிய நேஸகர். பாவலரின்ää கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட வேண்டுமென்ற தீவிரப் போக்குடையவர். பாவலரின் நூலைத் தன் சொந்தச் செலவில்ää பாவலர் விரும்பியபடியெல்லாம் செய்யப் பெரு விருப்புக் கொண்டு பாவலரை அணுகினார். அதனை அவரே கூறுகிறார்.

 

“………பாவலரின் கவிமுத்துக்களைக் கோர்வையாக்கிää வெளியிட வேண்டுமெனää நானும்ää என் மைத்துனர் வபா பாறுக் அவர்களும்ää இந்த மனிதரின் கால்களில் விழுந்த கெஞ்சியிருக்கிறோம்.  அதனை வெறுத்து வெட்கித்தார். அதிலிருந்து எங்களைப் போன்றோருக்கு இவரின் மீது ஒருவகை வெறுப்பு. இன்றுவரையும் கூட.. இயற்கையுடன் சங்கமிக்கத் துடிக்கும் இவருக்குச் செயற்கை உலகம் பிடிக்கவில்லை. என நினைக்கிறேன்.  எனவேதான்ää தன் மனமுக்குள்ளேயே அழுது கொண்டு உலவும்ää இவரின் படைப்பின் வெளிப்பாடுகள் இவருடனேயே ஒவ்வாமை கொள்கின்றன.

 

பாவலருக்கு பாமர மக்களுடன் கதை பரிமாறல் மிகவும் உவப்பானது. அதுவும் கடற்கரை மண்ணில் என்றால்ää  கொள்ளை இன்பம். (கடற்கரையில் உரையாடலின்பம்) பாவலரின் சிந்தனைää கவிநடைää குரல்வளம்  பெருமை கொண்டது.  பட்டங்களையும்ää பதவிகளையும்ää தனக்காக்க விரும்பாத அதிசயப் பிறவி. பாவலரோடு நட்புறவாகவிருப்பதே ஒரு பாக்கியம்..

 

திடீரெனää 2001.ல்ää பாவலரின்ää பிரசித்தி பெற்றää கவிதைகளில் அறுபத்தைந்து கவிதைகளை உள்ளடக்கிய ~ஆத்மாவின் அலைகள்.|  கவிதைத் தொகுதி தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டது. பாவலரின் இரண்டாவது மகள் கதீஜதுல் காமிலா காரியப்பரின்  பெரு வற்புறுத்தலுக்கும்ää பாவலரின் மிக நெருங்கிய இலக்கிய சகாவும்ää உறவினருமானää  தெ.கி.ப.க. தமிழ்த்துறைத் தலைவர்ää ரமீஸ் அப்துல்லாஹ் அவர்களின் விடாப்பிடியான உடனடி முயற்சியாலும்ää இது சாத்தியமாயிற்று. இதுபற்றி அந்நூலில்ää பாவலர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “…இதன் உருவாக்க வேலைகளில் எனக்கு எந்தவிதப் பங்களிப்பும் இல்லை.  எல்லாப் பளுக்களையும்ää தென்கிழக்குப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தினரே ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கும்ää இவ்வாக்கத்தி;ற்கு உதவிய அவைருக்கும் என் அகம் பூத்த நன்றி!

 

பாலரின் ஓரேயொரு தொகுதியான ஆத்;மாவின் அலைகள்பற்றிப்  பேசவந்தää யாழ். பல்கலைக்கழக தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர் திரு. கா. சிவத்தம்பி ஐயாääஅவர்கள் கூறுவது:-

 

“…உணர்முறைப் பதிவு நமது கவிதைகளுக்குள் தெரியவரும்ää முறைமையினை நோக்கும் போதுää கிழக்கிலங்கைக் கவிஞர்களின்ää ஆக்கங்கள் மிக முக்கியமானவையாகின்றன.  ஈழத்துத் தமிழ்க் கவிதையின்ää  பன்முகப்பட்ட செழுமைக்கு அவை உதாரணங்கள்  அந்தப் பாரம்பரியப் பரப்பில்ää பஸீல் காரியப்பர் நிச்சயமான இடத்தைப் பெறுகின்றார். கிழக்கிலங்கை வாழ்வுணர்வுகளைச் சித்தரிப்பதன் மூலம்ää ஈழத்துக் கவிதையுலகில்ää ஓர் இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்.. 1960கள் முதல்ää ஈழத்துத் தமிழ்;க்கவிதையில்ää ஏற்பட்ட வளர்ச்சிகள் மாற்றங்கள்ää ஆகியனவற்றுக்கும் இத்தொகுதி மதிப்புமிக்க சான்றாவணமாகின்றது..

 

தேடிவந்த வாய்ப்புக்கள்ää புகழ் அனைத்ததையும் தன் உள்மனிதனைப் புடம் போடும்  எத்தனத்தால்ää புறம் ஒதுக்கிய பாவலர்ää தன் படைப்புக்களைச் சேகரித்து வைத்தல்ää ஆவணமாக்கல் முயற்சிகளில் வெகு அலட்சியமாகவே இருந்தார். இது பற்றி நான் பாவலருக்கு இடித்துரைக்கும் சந்தர்ப்பங்களில்ää “அதையெல்லாம் செய்தற்கு என் மகள் பாத்திமாவும்ää என்னருமை தீரனும் இருக்கிறீர்களே..என்று கூறி எமது வாயை அடைத்து விடுவார்.

 

2001.07.28 ல்ää கல்முனை கிறிஸ்தவ இல்ல மண்டபத்தில்ää வைத்திய கலாநிதி முருகேசபிள்ளை அவர்களின்ää தலைமையில்ää  நிகழ்ந்தää கவிஞர். நீலாவணனின்ää “ஒத்திகைகவிதை நூலின் அறிமுக விழாவில்ää பாவலர்ää குறிப்பிட்ட நூலின் முதற்பிரதியைää  கவிஞரின் மனைவியிடமிருந்து பெற்றுக் கொண்டார். ஒரு தமிழ்க் கவிஞனின் நூலை ஒரு முஸ்லிம் கவிஞர் பெற்றுக் கொண்ட மன இராசியான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில்ää கவிஞர். சண்முகம் சிவலிங்கம்ää ஏ.எல்.எம். பளீல்ää (காலம்சென்ற பிரதேச செயலாளர்)ää மருதூர்க் கொத்தன்ää மருதூர்மஜீதுää கவிஞர். மு.சடாட்சரன்ää  கலாநிதி. அருட்சகோதரர் மத்தியூää ஆகியோர் உரையாற்றினர். கவிஞர் நீலாவணனின்ää அருமை மைந்தரும்ää சக்தி எப்.எம். பணிப்பாளருமானää எஸ். எழில்வேந்தன் அவர்கள் ஏற்புரை செய்தார்.

 

இதுபற்றி வைத்திய கலாநிதி முருகேசபிள்ளையவர்கள் கூறுகிறார்.. “... பஸில் காரியப்பர் ஒரு புரவலர் அல்லர். முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த ஓர் எழுத்தாளர். இவர் தமிழ்க்கவிஞன் ஒருவனது நூலை முதற்பிரதியாகப் பெற்றுக் கொண்டதும்ää அந்த நிகழ்வில்ää முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டதும்ää  உரையாற்றியதும்ää ஒரு மறக்க முடியாத சம்பவமே.. அரசியல் வங்குரோத்துத் தனங்களால்ää ஆட்டம் கண்டு போன நமது உறவுக்கு இப்படியான இன்னும் பல நிகழ்ச்சிகள் நமக்குள்ளே  நடக்க வேண்டும். அதன் மூலம் நமது உறவு இன்னுமின்னும் பின்னிப் பிணைய வேண்டும்……

  

ஆத்ம விசாரனையில் இறங்கித் தனது உள்மனிதனைத் தேடும் முயற்சியிலேயே பெரிதும் இக்காலங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  அந்த ஆத்மகவியின்ää பக்தித் தமிழ்ப் பாவரிகள்:-

 

நெற்றியை நிலத்தில் பதிக்கின்றேன்

இந்நிலையில் என்னை ஏற்றுக் கொள்

சுற்றியலையும் மனதை நெறிப்படுத்தும்

ஒரு சுக்கானைத் தேடி வந்தேன்.(1981)

 

-பாவலர் பஸீல் காரியப்பர்.

(அன்பின் மடிக்குள்..)

 

00

 

19-.   தூரம் தொலை போகிறேன்...

 

 

 

இல்லா இடத்திற்கு ஏகிடும் காற்றென

நல் மனம் கொண்டவர் நம்மில் பெருகவே..

  பாவலர். பஸீல் காரியப்பர்.

 

 

 

பாவலர் பஸீல்காரியப்பர். 2002.ல்ää சாய்ந்தமருது ~அபாபீல்கள் கவிதா வட்டத்தின்| பிரதம ஆலோசகராகப் பொறுப்பெடுத்தார்.  தனதுää ஏனைய படைப்புக்களை இவ்வட்டத்தினூடாக நூலுருப்படுத்தும்ää ஆரம்ப முயற்சிகளுக்கு அனுசரணையாக விருந்தார். இ;வ்வேலைத் திட்டங்களின் போதுää பாவலருக்குää அவ்வட்டத்தினரால்ää “தென்கிழக்கின் தேசகவிஎன்ற விருதுப் பதாதை வழங்கப்பட்டது. இதுää கல்முனைக்குடி முதலாம் பிரிவு கடற்றொழிலாளர் சங்கத்தின் திறந்தவெளிப் பொதுக் கூட்டத்தில்ää அவர்களின்ää அனுசரணையுடன்ää ‘கடற்கரையில் உரையாடலின்பம்நிகழ்வில்ää வழங்கப்பட்டது. விருப்பின்றி இப்பதாதையைப் பெற்றுக் கொண்ட பாவலர்ää “உங்களுக்காக இதனை ஏற்றுக் கொண்டாலும்ää இதனை வெளிப்படையாக ஊடகங்களில் பாவிக்க வேண்டாம்.எனக் கட்டளையிட்டார்.

 

எனினும்ää பாவலருக்குää  ஒருää மணிவிழா ஒன்றைப் பெருவிழாவாகச் செய்யவும்ää இதற்காகää ஒரு பாரிய மலர் தயாரிப்பு வேலைகளிலும்ää ஈடுபட அச்சமயம் முடிவெடுக்கப்பட்டது. இதற்கெனää பற்பல குழுக்கள் அமைக்கப்பட்டன. குழுக்களின் தலைவராக சமாதானக் கல்வி அதிகாரி கவிஞர். எஸ்.எம்.எம். றாபீக் அவர்கள் பாவலரால் நியமிக்கப்பட்டார். எல்லாக் குழுக்களினதும்ää இணைப்பாளராக என்னைப் பாவலரே நியமித்த போதும்ää  அவரதுää வழமையானää  ‘திடீர் முடிவுகாரணமாக அடுத்த வாரமே இக்குழுக்களின் வேலைகள் யாவும் உடனடியாக இடை நிறுத்தப்பட்டன.

 

        எனினும்ää சில காலங்களின் பின்னர்ää படித்தமட்டத்து அபிமானிகள் சிலரால்ää இறுதியாகää ஒருவழியாக அவரது சம்மதத்துடன்ää ஒரு பாரிய மணிவிழா செய்ய உத்தேசிக்கப்பட்டுää உடனடிச் செயலில் இறங்கியது. மலரும்ää நிகழ்ச்சி நிரல்களும்ää தயாராகின. ஆரம்பத்தில் இருந்தேää பாவலர் இவ்வேலைகளைக் கவனத்துடன் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.  பாவலர் என்ற தலைப்புடன்ää கல்முனை ருத்ரா அவர்கள் வரைந்தää வெகு அருமையான பாவலரின் முக ஓவியத்துடன்ää இம்மலர் மலரவிருந்தது. இம்மலர் வெளியீட்டுக் குழுவில்ää பன்னூலாசிரியர் ஹாஜி.உஸ்மான் ஸாஹிப்ää ஜனாப். எம்.ஏ. கலீலுர்ரஹ்மான் டீளுஉ ஜனாப். ஏ.எல். அப்துல் மஜீத் டீடீயு. ஆகியோர் இருந்தனர். இதனைத் தயாரித்த குழுவினர்ää தமது உரையில்ää

 

“………..அரசாங்கத்தாலும்ää தனிப்பட்ட மேட்டுக்குடிகளினாலும்ää அளிக்கப்படவிருந்த பட்டம்ää பதவிகளை வெறுத்துää பிரமுகர்கள் வரிசையை விட்டும்ää கீழிறங்கி மக்களோடு இரண்டறக் கலந்துää எம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும்ää இந்த மக்கள் கவிஞனுக்காகää நாமெடுக்கும் முயற்சி சரியானதும்ää மிகமிகப் பொருத்தமானதென்றும் எமக்குப் படுகின்றது. இந்த எண்ணக் கருக்கள் உருவாவதற்குக் காரணங்கள் பலவுள. பாவலரின் ஆத்மாவின் அலைகள்என்ற கவிதைத் தொகுப்பை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மிக விமர்சையாக வெளியிட்டதும் ஒன்று. அந்நூலுக்கு ஓர் அறிமுக விழா அவர் வாழும் இம்மண்ணில் நடத்தப்படவேண்டும் என்பதும்ää இம்மக்களின் அவா. இந்த வேளையில் பாவலருக்கு வயது அறுபதைத் தாண்டிக் கொண்டிருக்கிறது.  அதாவது வாழ்வின் மதியத்தையும் தாண்டிää அந்திப் பொழுதை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றார் அவர். எனவே மணிவிழா வேண்டும்என்ற கோஷமும் ஒலிக்கத் தொடங்கி விட்டது.  இப்படியான ஒரு சூழலில்தான்ää இலக்கிய ஆர்வலர்களும்ää இப்பகுதி மகாஜனங்களும்ää ஒருங்கு கூடி இந்த முடிவினை எடுத்தார்கள்.

 

வலியத்தேடி வந்தனவற்றில்ää தன் மனமொப்பாதனவற்றையெல்லாம்ää வேண்டாம் என வெறுத்துää நிற்கின்ற இவர்ää தனிநபர்-சிலர் என்றில்லாமல்ää ஒரு கணிசமான மக்களின்ää கனிவு நிறைந்த வேண்டுகோளுக்கு இசைய வேண்டியதாயிற்று…..”

 

 

தடல்புடலாகவும்ää உற்சாகமாகவும்ää ஆரம்பிக்கப்பட்ட விழா வேலைகள்ää ஒருநாள்ää பாவலரின்ää தடாலடியான ஒரு முடிவினால்ää ஸ்தம்பிதமடைந்தன.  எத்தனையோ செலவினங்களின் மத்தியில் துவங்கப்பட்ட விழாவை சட்டென இடைநிறுத்துமாறு உத்தரவிட்ட பாவலர்ää அதுபற்றிய கவலையின்றிக் கடற்கரையில் உரையாடலின்பத்தில் திளைத்துக் கொண்டிருந்தார். 

 

இதன் பின்னணிக் காரணங்கள் அநேகம் இருந்த போதிலும்ää பாவலர் வாழும் காலத்தில் அவருக்கு ஒரு பாரிய விழாச் செய்ய வேண்டும் என்று முன் வந்த மக்களின் அன்பை எண்ணி பாவலர் மனம் கசிந்துருகினார். ஆயினும்ää விழாவையும்ää மலர் வெளியீட்டையும் அவர் இறுதிவரை அனுமதிக்கவில்லை. இதனால்ää நண்பர்களின் மிகப் பெரும் வற்புறுத்தலுக்கு ஆளானார்.  எமது அபாபீல்கள் கவிதா வட்டத்தின் சார்பில் இதற்கு அளித்த ஒருதொகை நிதியும்ää வீணாகிப் போயிற்று.  இதனால்ää மனம் கசந்து போய்ää நானும் கூடப் பாவலரை அவரது முகத்தினெதிரேää கடிந்து பேசிவிட்டேன். தவிரவும்ää  பாவலரின் துணைவியார்ää புத்திரிகள்ää  கூட இவ்விழாவுக்கு அவரது ஒத்துழைப்பைப் பெற மிகவும் வற்புறுத்தினர். இந்த சம்பவங்களால். சிறிதுää மனஅமைதி பாதிக்கப்பட்ட பாவலர்ää மறுபடியும்ää ‘மறைந்துறைதலுக்குத்திரும்பினார்.

 

    இறுதியாகää (ஆறு மாத காலம் நான் அவருடன் ஊடலாகவிருந்த போதிலும்ää) 2002ல்ää என்னை அழைத்த பாவலர்ää தனது வீட்டில் வைத்துää நிகழவிருந்த மணிவிழா பற்றி மிக நீண்ட நேரமாகக் கதைத்தார். தன்னுடைய திடீர் முடிவினால்ää எத்தனையோ அபிமானிகளும்ää மலர்ää மணிவிழாக் குழுவினர் அனைவரும்ää பாதிக்கப்பட்டிருப்பார்கள்தாம். ஆயினும்ää இதை இடைநிறுத்தும்ää தனது முடிவில் எவ்விதமான மாற்றமும் இல்லையென்பதையும்ää சில புறக் காரணங்களையும் விபரித்தார். அவர் பேசினால்ää யாரால் மறுத்துரைக்க முடியும்..?

 

ஒருவாறாகää ‘;பாவலர்என்ற அம்மலரின்ää மீள்திருத்தப் பணிகனை என்னிடம் ஒப்படைத்தார். ஆத்மாவின் அலைகள்’  புத்தகத்தின் அட்டைப்படத்தை மாற்றுவது பற்றியும்ää அது அதிகமாக ஜனரஞ்சகமாக்கப்படாமை பற்றியும் பேசினார்.  பாவலர் ஒரு மக்கள் கவிஞனானதால்ää அவரது ஒரேயொரு நூலும்ää மக்கள்மயப்படுத்தப்படல் வேண்டும். ஆயினும்ää இது ஒரு படித்த அறிவுசார் மட்டத்துடன் மட்டும்ää நின்றுவிட்டதையும் எடுத்துக்கூறினார். கிராமத்தின் வீடுகளில்ää புழுதியில் ஓடித்திரியும்ää பிள்ளைகளும் என் பாடல்களைப் பாடுதல் வேண்டும். என்றும் அழகுற விபரித்தார். இது விடயமாகää சில தனிப்பட்டää அபிப்பிராயங்களைச் சொன்னார். இதன் பின்னர் அடிக்கடி பாவலரின் வீட்டிலும்ää கடற்கரையிலும்ää எனது அலுவலகத்திலும்ää ‘பாவலர்என்ற மணிவிழாமலரின்ää மீளாக்கப் பணியில் ஈடுபட முடிவெடுத்தோம்.

 

    ஆயின்ää 2004.ல்ää ஏற்பட்டää ~சுனாமி| ஆழிச்சீற்றத்தின் போதுää பாவலரின் வீட்டின் அரைப்பகுதி கடல்நீரில் மூழ்கியது. தெய்வாதீனமாக எவ்வித ஆபத்துமின்றி தனது மனைவி பி;ள்ளைகளுடன்ää தப்பிய பாவலர் தனது இலக்கியச் சேகரிப்புகள்ää அரிய புகைப்படங்கள்ää பெறுமதியான நூல்கள்ää கையெழுத்துப் பிரதிகள்ää அனைத்தையும்ää இழந்தார். 

 

    என்னிடம் பாவலர் ஒப்படைத்த சில கைப்பிரதிகளும்  மலர் திருத்தப் பிரதிகளும் தவிரää சுனாமி உப்புநீரிலிருந்து பெரு முயற்சியின் பேரில் மீட்ட ஒருசில நூல்களுமே இப்போது அவருக்கு எஞ்சியிருந்தன. இதனால்ää நான் கலக்கமுற்ற போதும்ää இது குறித்துää பாவலருக்கு எதுவித வருத்தமும்ää  இருக்கவில்லை. ர்யிpலநௌள in நுஅpiநௌள”  வெறுமையில் மகிழ்ந்திருத்தல். என்பதே ஒரு அலாதியான சுகம் அது ஒரு ஆத்மீகப் பயிற்சி.!”  என்று கூறிää என்றும்ää மாறாத அதே வெகுளித்தனமான புன்னகையுடன்ää ‘இருப்பதைச் செப்பம் செய்வோம். இனி ஒரு புது வழி புகுவோம். அதற்குத் திண்மையொடு நில் எங்கள் தீரமுள்ள வாலிபனே..!என்று என்னை தைரியப்படுத்தினார்.

 

    ஆயினும்ää தனது இலக்கிய உடமைகளைச் சுனாமியில் இழந்து விட்டதனால்ää  மணிவிழா மலர்  வெளிவருவது தடைப்படும் அல்லது தாமதமாகும் என்பதில் உள்ளுர மகிழ்ச்சி கொண்டவராக இருந்ததாகத் தோன்றியது.

   

    தன்னுடைய இலக்கியப் பணிக்கான பற்பல பதிவுகளையும்ää சான்றாதாரங்களையும்ää  இழந்த பாவலர்ää வெகுநாளைக்குப் பின் 2005 டிசம்பர் 6ம் திகதிää  ஒரு இலக்கிய நிகழ்வில் பங்கு கொண்டார். அதுää ‘பாவலரும்ää தங்கம்மாவும்என்றää தலைப்பில் ஒரு மாணவர் சந்திப்பாக அமைந்தது. இந்நிகழ்வில்ää உதவிக்கல்விப் பணிப்பாளர். வ. சுப்பிரமணியம்ää பீ.ஏ.ää ஆசிரிய ஆலோசகர் சத்தார் எம். பிர்தௌஸ்ää எம்.ஏ.ää ஆசிரிய ஆலோசகரும்ää பரீட்சைகள் திருத்தற் குழுத் தலைவியுமானää  ஜனாபா. ஹமீமா முஹைடீன்ää பீ.ஏ. ஆகியோரும் உரையாற்றினர். இந்நிகழ்வுää சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரிஅதிபர் கே.எல்.ஏ. தஸ_ல் பீ.கொம். தலைமையில் இடம்பெற்றது. மாணவர் சந்திப்பாக இது ஆரம்பித்தாலும்ää இலக்கியவாதிகளும்ää பொதுமக்களும்ää பெருமளவில் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சியை சம்மாந்துறை பாவலர் பஸீல்காரியப்பர் ரசிகர் வட்டம்சார்பாகää அதன்ää தலைவர்ää ஐ.எல். ஜலீல் ஜீ அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

 

 எவ்வாறாயினும்ää 2005 இறுதியில்ää முழு ஈடுபாட்டுடன்ää அவரது பாவலர்மலர் மீள் திருத்தப் பணிகள் செய்யப்பட்டுää ஒருவாறாகää தெரிவு நிலைக்கு  வந்தது. ஏறக்குறைய பூரணமான மலராக்கத்தை கணிணியில் பதிவு செய்து கொண்டோம். அவரது இறுதிக்காலம் வரைää அவரது ஒத்தாசையுடன்ää இந்த வேலைகளைச் செய்து வந்தேன். இம்மலருக்குää  “பாவலர் பாமலர் என்று நான் தலைப்பு வைத்த போதுää பாவலர் சிரித்துää “ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது! என்ற தலைப்பை சிபார்சு செய்தார். இதற்கான அட்டைப்படத்தையும் கணிணியில் உருவாக்கி ஒப்படைத்தார். உண்மையில் இவ்வேலைகளின் போதுää இனி இவ்வேலைத்திட்டங்களை எக்காரணம் கொண்டும் இடை நிறுத்த மாட்டேன் என்று பாவலர் உறுதி மொழி அளித்திருந்தார். எனவேää அவரும்ää நாமும்ää மிக மகிழ்வுடன் இருந்தோம். இதன்போதுää பாவலருக்குää பல்ஈறுகளில்ää ‘பேத்தைக்கட்டு’ (முரசழற்சி) ஏற்பட்டுää  வாயும்ää கன்னமும்ää  சற்று வீங்கியிருந்தன. நெஞ்சடைப்பு நோயும் சற்று இருந்ததாகச் சொன்னார். இது விடயமாகக் கண்டிக்குச் சென்று மருத்துவம் செய்யவிருப்பதாகவும் கூறினார்.

 

மணிவிழாமலர் மெதுமெதுவாகத் தன் இறுதி வடிவை அடைந்து கொண்டிருந்தது. காலத்தோடு உரையாடும் அந்த தீர்;க்கக்கவிஞனின்ää தீர்க்கதரிசன வரிகளைப் பாருங்கள்..

 

“…காற்றென நீரெனக் காண மனிதரைக்

காத்துக் கிடக்கும் காலமே.. நாளை நீ

நேற்றுக் கண்ட மனிதரும் சாகுவர்

நெஞ்சக் கனலை உமிழ்வாய்….”

 

-பாவலர் பஸீல் காரியப்பர்.

(இல்லா இடம் நோக்கி:- .1963.)

 

00

 

20-   விதிக்குப் பொருந்துவது வேதனைக்கு மருந்து....

எத்தனை காலம் நாம் இங்கிருந்தோம் என்ற

மெத்தக் கணக்கெதற்கு.. நெஞ்சிலே முத்திரை இட்டவர்க்கு…!

-பாவலர். பஸீல் காரியப்பர்.

 

பாவலர் பஸீல்காரியப்பர்.! யாரும் எதிர்பாராதவிதமாக 2006.02.17ம் திகதி தன் கவிதா வாழ்வைத் துறந்துää மறுமையை நோக்கிப் பயணமாகியே  விட்டார்.

    அந்த மாபெரியää  மக்கள்கவிஞனின்ää இழப்பு முழு இலங்கையிலும்ää பற்பல மட்டங்களில்ää  ஒருகணம் அதிர வைத்தது. இலங்கை வானொலி தனது தலைப்புச் செய்தியில் பாவலரின் மறைவு பற்றி அறிவித்தது. எல்லா ஊடகங்களுமே பாவலரின் மறைவுக்கு மிக முக்கியத்துவம் அளித்திருந்தன. சாய்ந்தமருது அபாபீல்கள் கவிதா வட்டம் வெளியிட்டிருந்தää “ஏழு நிறங்களும் மறைந்தன.!.என்ற தலைப்பிலான பாவலருக்கான அஞ்சலிப் பிரசுரத்திலிருந்து சில வரிகள்..

 

 

பாவலரே..!  எங்கள் இலக்கியத் தந்தையே..ää

கறுப்பு நீரையும்வெள்ளை நெருப்பையும் நம்பினோம்..

உங்கள் மரணத்தைத் தவிர..

எங்கள் கவிதைப் பூவை

காலங்கொத்திப் பறவை கவர்;நது சென்ற செய்தி கேட்டு

கல்முனையின் காதுகள் அறுந்து விழுந்தன.

சாய்ந்தமருது வேரறுந்து சாய்ந்தää மரமானது.

சம்மாந்துறை உம்மாவெனக் கதறியது. மொத்தத்தில்..ää

இலங்கையே இதயத்தைப் பொத்தியது.

...........................................................

............................................................ 

சந்தூக்கைத் தூக்க  ஆயிரம் கைச்சந்துகள்.

தமிழைத் தூக்கிச் சென்று தாட்டுவிட்டோம்.

மூன்று பிடி மண்ணெறிந்து முத்தமிழை மூடினோம்.

கண்ணறைக்குள் காத்து வைத்திருந்த ஒரு கவிதையை

மண்ணறைக்குள் வைத்து அடக்கம் செய்து குருடரானோம்

கால் பக்கமும்ää தலைப்பக்கமும் இரண்டு எழுதுகோல்களை ஊன்றிவிட்டுää மீண்டோம்.

அந்த மீசான்கள்ää இனி  உங்களிடம் பாடம் கேட்கத் தயாராகும்..

பாவலரேää செம்மஞ்சள் வானக் கூரையின் கீழ்

நீலக்கடலின் வெண்ணிற மணல் விரிப்பில்

உங்களோடு உரையாடியிருந்த தென்றலும்ää கடலலைகளும்ää நாமும்

காத்துக்கிடக்கிறோம்.. கண்ணீர் பெருக...இன்னும்  கவிதை எழுதிப்பழக…!  

 

    பதினெட்டாம் திகதி காலை 7.40 மணிக்கு பாவலரின் உடல்ää கிடத்தப்பட்டிருந்த கட்டிலருகே நின்று கொண்டிருந்தேன். ஒரு வாரத்துக்கு முதல்ää தன் அருமை பேர்த்தி பாத்திமா வஸீமாவுடன்ää  என்னிடம் நேரிடையாக வந்துää “கண்டிக்குப் போய் வருகிறேன். வந்தவுடன் மலர் வேலைகளை அச்சகத்திற்குக் கொடுக்கலாம்.என்று சொன்ன வசனம் ஞாபகத்தில் கேட்டது.  சாதாரணமாக படுத்திருப்பது போல்ää மரணித்திருந்தார் என்னருமைப் பாவலர்..  கண்டியிலிருந்துää  வண்டியில் வந்திருந்தது சந்தனக் கட்டை அல்ல  சிந்தனைக் கட்டை!. மூடியிருந்த வெள்ளைக் கபன் துணியில் தன் கடைசிக் கவிதையை எழுதிக் கொண்டிருந்தது ஒரு கொசு. உண்மையை மனம் ஏற்க மறுத்தது. மீண்டும் மீண்டும் அவரது முகச் சிரிப்பைப் பார்த்தேன். அந்த அழகான ஒரு சோடிக் கண்கள் மெதுவாக மூடிக் கிடந்தன. நிரந்தரமாக..

0

 

   பாவலரின்ää இறுதிக் கிரியைகள் முறைப்படி நடந்தன.  கண்டி வைத்தியசாலையில் காலமான போதும்ää  கல்முனைக்குடியில் நல்லடக்கம் நிகழ்ந்தது. பாவலரின்ää (ஜனாஸா) உடல் கொண்டு வரப்பட்டதிலிருந்துää நல்லடக்கம் செய்யப்படும் வரை திரண்ட அவரதுää உறவினர்கள்ää நண்பர்கள்ää அபிமானிகள்ää இரஸிகர்கள்ää அரசியல் பிரமுகர்கள்ää பாமரத்திலிருந்து பல்கலைக்கழகம் வரையுமுள்ள பல தரப்பட்ட மனிதர்களைப் பார்த்த போதுää பாவலர் எப்பேர்ப்பட்ட மனஆளுமையும்ää ஈர்ப்பும் உள்ள மனிதர் என்பது புரிந்தது.  அந்த மானுடநேசகன் தன் மரணம் பற்றி முப்பத்திநான்கு வருடங்களுக்கு முன்னரே பாடி வைத்த தீர்க்கதரிசனத் தமிழ்ப் பாவரிகள்:-

காட்டுங்கள் என் சிரிப்பை.

பறந்துவிட எந்தன் உயிர்

பழுதான இயந்திரத்தைக்

கழுவுங்கள் கபன் இடுங்கள்.

காட்டுங்கள் என் சிரிப்;பை.

 

தொட்டிலிடை வைத்திடுங்கள்;;;;  தோழமையாய் ஆட்டிடுங்கள்

வெட்டி வைத்த மணவறையுள்  வைத்திடுங்கள்.

 

மீசான்கட்டைகளை நாட்டுங்கள்

கபுர்மண்ணைக் கூட்டிடுங்கள்.

மண்மகளைக் கட்டிக் கலந்து கனிந்து அயர்ந்து உறங்குகையில்

 

விட்டு விலகாத விதி பெறுவோம்.

வியர்த்தும் போவோம்ää காதல்ää

ஒட்டுறவால் சங்கமித்து நான் அவளாகிப் போவேன்.

 

பட்டந் தருவார்கள் எனக்கு மண் என்று.

ஒரு கட்டாந்தரையைக் காட்டி.

அப்போது அம்மண்ணை

வெட்டி எடுத்து விருந்திடுங்கள் பயிர்களுக்கு.

 

கண்ணடி மண் நெற்தாயின்

காலடியைச் சேர்ந்திடுமா..

சின்னி விரல் மண்ணினை ஓர்

சிறு குரக்கன் ஏற்றிடுமா..

 

என் உடம்பின் எல்லா இழையங்களும்ää மனிதர்

உண்ணும் பயிர் செழிக்க உதவிடுங்கள்!

நன்றி சொல்வேன்.

 

எந்த மனிதனுக்கு அந்த

உணவு என்று கேட்டால்ää

நொந்து நலிவோரின்  நோவினைகள் மாய்க்க எழும்

அந்த மனிதனுக்கே அணுவேனும் உதவி செய்ய

 

எந்தன் உடல் மண்ணை

எருவாக ஆக்கிடுங்கள்.(1974)

 

- பாவலர். பஸீல் காரியப்பர்.

 (சஞ்சாரம் முற்றும்.)

 

இந்நூலாசிரியரின் ஏனைய நூல்கள்

 

1. தூது- (கவியேடு)- 1983

2. வல்லமை தாராயோ – (சிறுகதை தொகுதி) - 2000

3. நட்டுமை – (நாவல்) - 2009

4. வெள்ளிவிரல் – (சிறுகதை தொகுதி) -2011

 5. கொல்வதெழுதுதல் 90 – (நாவல்) - 2013

6. அபாயா என் கறுப்பு வானம் – (கவிதைகள்) - மின்நூல் - 2015.

7. ஆழித்தாயே அழித்தாயே – (சுனாமி காவியம்) - 2017

8. குறு நெல் – (குறும்பாக்கள்) - 2017

9. தீரதம் – (சிறுகதை தொகுதி) - 2017

10. வக்காத்துக்குளம் – (குறுநாவல்)2021

11. முத்திரையிடப்பட்ட மது – (கவிதைகள்) - 2021

12. ஆமீன்- (நெடுங்கதை)- 2023-