Wednesday, September 28, 2016

சமவெளி- செய்தி

அஸ்லம் எஸ்.மௌலானா
கிழக்கிலங்கையின் பிரபல இலக்கியவாதியாகத் திகழ்ந்து மறைந்த பாவலர் பஸீல் காரியப்பர் நினைவேந்தல் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச கலாசார அதிகார சபையின் அனுசரணையில் 'கல்முனை பாவலர் பண்ணை' அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் எச்.ஏ.அஸீஸ் முன்னிலை அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இதில் பிரபல அரசியல், இலக்கிய விமர்சகர்களான சிராஜ் மஷ்ஹூர், தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தியதுடன் கவிஞர் ஏ.பீர்முஹம்மத் தலைமையில் நட்சத்திர கவியரங்கு ஒன்றும் இடம்பெற்றது. இக்கவியரங்கில் கவிஞர்களான எஸ்.றபீக், பாலமுனை பாறூக், தீரன் ஆர்.எம்.நௌசாத், விஜிலி மூஸா, மருதநிலா நியாஸ், செ.துஷ்யந்தன், ஜூல்பிகா ஷெரீப் ஆகியோர் பாவலர் சிறப்பு கவிதைகளை பாடினர். இவர்களுக்கு வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் எச்.ஏ.அஸீஸ் எழுதிய “ஐந்து கண்டங்களின் மண்” எனும் நூலின் பிரதிகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பாவலர் ரசிகர்கள், உறவினர்கள் மற்றும் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.









No comments:

Post a Comment