Saturday, July 4, 2015

01- சீற்றமுள்ளவனாக வாழ விரும்புகிறேன்


01 சீற்றமுள்ளவனாக வாழ விரும்புகின்றேன்.


~வானம் என் கூரை.. அதன் கீழ்
வாழும் மாந்தரெல்லாம்ää  என் இரத்தக் கலப்புகள்.|
-பாவலர் பஸீல் காரியப்பர்-


   பாவலர் பஸீல்காரியப்பர்.  இதுää கடந்த 2006.02.16 ல் தனதுää ~அழகான ஒருசோடிக் கண்களை|  நிந்தரமாக மூடிக்கொண்டää அந்த மகத்தான மக்கள் கவிஞனின் கவிதா வரிகள் மட்டும் அல்ல. அவனது வாழ்க்கைப் பதிவும்  கூட

  ~~....... நான் எப்படி வர வேண்டும் என்று எனக்குள்ளே ஒரு படத்தை வரைந்துகொண்டுää அந்த மனிதனை ஆக்குவதிலே நான் ஈடுபட்டிருக்கிறேன். மனித உணர்வை மலர்வித்தல்ää மனித உறவைச் செப்பனிடல்ää மனித உறவுக்கு நம்பிக்கையூட்டுதல்ää நலிந்த மனிதனுக்கு இரங்குதல்ää அதற்காகப் போராடுதல் ஒரு போர்க்குணங் கொண்டவனாகää சீற்றமுள்ளவனாக வாழ விரும்புகின்றேன்.....|| 

உலகத்திற்குää இவ்வாறு தன்னை அறிவித்துக் கொண்ட பாவலர்ää குறிப்பாகää நம் நாட்டில்ää  தமிழ்ää முஸ்லிம் இன நல்லுறவை நடைமுறை வாழ்வில்; இறுக்கமாகப் பேணியும்ää பேசியும்ää தன் படைப்புகளில் அவ்வுறவையே அடித்தள நாதமாகவும்ääää கொண்டது மட்டுமன்றிää  தனது வாழ்வியல் சுவையாகவும்ää கொண்டு வாழ்ந்தவர். அதனால்தான்ää ~அண்ணர் சில்லையூர் செல்வராசன் அவர்களுக்கு.!| தனது ஒரேயொரு கவிதை நூலானää  ~ஆத்மாவின் அலைகளை|  சமர்ப்பணம் செய்திருக்கிறார். 

பாவலரது மானுடநேய அணுகுமுறைமை பற்றிய சில குறிப்புகளைää அவருடனானää சில அபிமானிகளது அநுபவங்கள் வாயிலாகவும்ää அவரது படைப்புகளுக்கூடாகவும்ää ஆண்டுக்கணக்கு வாரியாகää இங்கு பதிவு செய்ய உத்தேசமுண்டு.

~இலக்கண அறிவோää தகவல் அறிவோ நிறைந்த மனிதனாக நான் இல்லை.  என் மனதில் அந்தந்த வேளையில்ää எழுந்த சிந்தனைகளை நான் எழுத்தில் வடிக்கிறேன்.. எனக்கு சுயமாக ஏற்பட்ட சொல்லொழுக்கில். அதைச் செதுக்குகின்றேன். கவிதை என்பது பெருகிய உணர்வின் இறுகிய இசையோட்டமான சிந்தனைச் சிறைப்பிடிப்பு. என்பது என் கருத்து|

இவ்வாறு தன்; கவிதைகளின் அத்திவார இரகசியத்தை வெளிப்படுத்திய ஒரு வெகுளித்தனமான பாவலர்ää;ää இனப் பிரச்சினையைக் காசாக்கவும்ää அதன் மூலம்  பிரமுகர்த்தனமாகப் பிரபலம் பெறவும் முயல்கிறவர்களுக்கு முகத்திலடித்தாற் போன்று உடனடியாகப் பதிலடி கொடுக்கும் மூர்க்கம் மிகுந்தவர்.

பாவலருக்குப் பல முகங்கள் இருக்கின்றன. அவரது மானுட மன ஆளுமை வியக்கத்தக்;க அளவுக்கு சக்திமிக்கது. அவருடன் நெருங்கிப் பழகிய பல்வேறுபட்ட மனிதர்களுக்கு இது நன்கு புரியும். பஸீல் காரியப்பர் அவர்களின் இயங்கு தளங்கள்; பல் வகையின. அவர்  ஒரு திறமையான ஆசிரியர்ää மானுடமன ஆய்வாளர்ää மொழி பெயர்ப்பாளர்ää சிறுகதைää உருவகக்கதை எழுத்தாளர்ää வானொலிக் கலைஞர்ää புகைப்படக்கலை நிபுனர்ää அரசியல் ஈடுபாட்டுச் செயலர்ää ஆங்கில மொழிப் போதனாசிரியர்ää  மதுரமான குரல்வளமிக்க பாடகர்ää பாவலர்ää ஆத்மீக வழியில் ஸ_பித்துவ முனைப்புடையவர்ää தற்காப்புச் சண்டைப் பயிற்றுநர்ää ஒரு  ஓவியர்ää விளையாட்டு வீரர்;ää ஒரு சேவைச் சாரணர்ää நகைச்சுவை வைத்தியர்ää திடீர் கோபக்காரர்ää ஒரு வெகுளித்தனமான இரசிகர்ää காதலன்பு மீக்குற்ற கணவர்ää தன் பிள்ளைகளுக்கு ஒரு தோழமையான அன்பர்.. பற்பல நலன்புரிச் சங்கங்களின் ஆலோசகர்ää  என்றெல்லாம் பல் குணாதிசயங்களின் கலவையானவர். இவை பிறரது அவதானிப்புக்கள்.

எனினும்ää தன் ~உள்ளே| தனது மனிதனைத் தேடிய பாவலர்ää அம்மனி(தனது) குணாதிசயங்களாகää தனக்குள்ää அமைதல் வேண்டுமென பிரியப்பட்ட ~உள் மனிதனின்| வெளிப்படைத் தன்மையை பின்வருமாறு செதுக்கினார்.


~பெரும் துயர் பிறர்க்குச் செய்யும்ää பேய்களை எதிர்க்கும் ஒரு போராளியாக.. வருந்துவோர்க்கு இரங்கும்  அரும் குணம் படைத்த சிறு வள்ளலாக.. மனிதன் மற்றும் படைப்புக்களை விளங்கிக் கொண்டு உறவாய் அவர்களுக்கு உடன் கிடைக்கும் ஊழியனுமாக..சிறு நோவுதல்தானும்ää என்னால் யார்க்குமிராத..சீர்மையான உறவு கலந்த இன்பங்கள் துய்த்து அதில் உச்சம் கண்ட நிறைவால்ää என்னுள் வாழும் மனிதன் சமநிலையில் மனம் பழுத்துää அறிவு தெளிந்த ஞானத்தால்..அன்பு கனிந்த அனுபவத்தால்..விரைவாய் வீரம் செறிந்து என்னுள் பாய்ந்துவரும் கவிதை வீச்சை வரிகளாகவும்ää இசை வடிவங்களாகவும் சிறைப்பிடித்துத் தரும் ஒரு மனிதனாக....வெளிப்பாட்டின் ஊடகம் தான் ஒருவன் என்ற உண்மையின் உள்ளார்த்தம் உணர்ந்தவனாக..மற்ற மனிதர் என்னை நோவிக்க முடியாத அளவிலாகிலும் தேவைகள் அற்றவனாக..நிறைவான மனமும்ää பரிசுத்த உடலும் பெற்ற ஒரு பாலகனாய் சிறு காலமாயினும் வாழவும்ää ஓ..! இனிய நினைவுகளால் ஒரு சிறிய பிரியா விடை பெறவும் மிக எளிமையாகப் பெறவும் பிரியப்படுகின்றேன்||

 சிறுபள்ளிப் பருவத்திலேயேää ~கவிஞன்| என்றும்ää வளரிளம்ää மாணவப்பருவத்தில்ää ~உமர்கையாம்.| எனவும்ää வாலிப வயதில் ~அரும்பு மீசை தத்துவஞானி| எனவும்ää பிறரால்ää வர்ணிக்கப்பட்டää பாவலர்ää நூற்றுக் கணக்கான இசைப்பாடல்கள்ää கவிதைகள்ää ஆங்கில இலக்கியங்களை தமிழ்ப்படுத்தல்ää இசைச் சித்திரங்கள்ää சிறுகதைகள்ää உருவகக் கதைகள்ää நாடகங்கள்.. புனைந்துள்ளார். அதேபோல்ää கடந்த சுனாமி ஆழிப்பேரலைகளில் அவற்றை இழந்துமுள்ளார்.

பாவலருக்குää அவரது ~தங்கம்மா| என்ற கவிதை கொழும்பு வளாகத் தமிழ்சங்கத்தின்ää  தங்கப்பதக்கம் கிடைத்தது. அதையொட்டி சம்மாந்துறை மண்ணில் பொதுமக்களால் எடுக்கப்பட்ட விழாவில்ää புலவர்மணி. உயர்திரு. ஏ. பெரியதம்பிப்பிள்ளை ஐயாää அவர்களால்ää ~கவிஞன் தோன்றிவிட்டான்..ஓ!.. பஸீல்; காரியப்பர் கண்டீர்..!| என்று வாழ்த்துரைக்கப்பட்டுää ~பாவலர்| என்ற பட்டமும்ää அளித்து கௌரவிக்கப்பட்டார். 
    பிற்காலங்களில்ää அவரது  பல கவிதைகள் தொகுக்கப்பட்டு ~ஆத்மாவின் அலைகள்| என்ற நூலாகää தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டது. இறுதியாகää சாய்ந்தமருது அபாபீல்கள் கவிதா வட்டத்தினால்ää ~தென்கிழக்கின் தேசகவி| என பட்டமளிக்கப்பட்டார்.
   பல்குணாதிசயங்களின்ää கலவையாக பாவலர்ää இருந்த போதிலும்ää தனது வாழும் முறைமையில் மிகவும் கொள்கைப் பிடிவாதமுடையவர்.  அவருடன் மிக நெருக்கமாகப் பழகிய  அக்காலத்தைய மேல்மட்டத்து பெரிய அரசியற் புள்ளிகள்ää பாவலரை பணமும்ää பதவியும் கொடுத்து தம்முடையவராக்க முயன்ற போதுää  “ஆல டிடழழன அiஒநன றiவா புழடன” (எனது இரத்தம் தங்கத்தில் கலந்தது) என்றுää அவர்களது ஆங்கிலேயப் பாணியிலேயேää  கர்ச்சனை செய்தவர்.
   அதே சமயம் இப்பெரிய பிரமுகர்களால்ää எண்ணியும் பார்க்க முடியாதää ஒரு பதவியில்ää அதாவதுää  ~நகர சுத்தித் தொழிலாளர்| சங்கத்தின் செயலாளராக இருந்துää அவர்களது வாழ்வியல் முன்னேற்றத்தையிட்டு ஆராய்ந்தள்ளதானது அவரது மானுட அணுகுமுறையை தெளிவாக்குகிறது. ர்யிpலநௌள in நுஅpவலநௌள  (வெறுமையில் மகிழ்ந்திருத்தல்) என்பதை பிறருக்குää உபதேசித்து அதன்படியே தானும்ää வாழ்ந்த ஒரு பிடிவாதமானää சீற்றமுள்ள  கவிஞனின்ää வாழ்வு முழுவதுமேää கலையழகும்ää கவிதாமணமும் உடையவை. 
   ~~ஒரு சிற்றெறும்புக்குக் கூட  ஒரு நிழல் இருக்குமாப் போன்று ஒரு மனிதனின் வாழ்வின் தேடல்களின்ää எச்சங்களே அவனது பதிவாகும்|| என்றுரைத்த பாலவரது படைப்புலகில் சஞ்சரித்தல்ää நம்மீது ஒரு இலக்கியக்கடமையாகிறது.  அந்தச் சஞ்சாரம்ää அவரது நிஜத்தையும் நிழலையும் நமக்குக் காண்பிக்கப் போதுமானதாகும்.. அந்த இராட்சதச் சிற்றெறும்பின் ராட்டினத்தமிழில் தெறித்த சாகா வரிகள் இவை:

ஆஹா..ää கவிதை பண்ணும் இனிய
ஆற்றல்தனை அளித்தாய்
சாகாக் கலை படையாது- நான்
சாக விரும்புவனோ.?.

என் சிறு ஆற்றலினால் இங்கு
இனியவை பண்ணிடுமுன்ää
என்னை அழைக்காதே.. நான்
உயிரைத் தரமாட்டேன்..

உலகப் படைப்புகளில் நான்
உயர்கல்வி கற்க வேண்டும்
கலையைப் படைத்தவனை நான்
கண்டு தெளிய வேண்டும்.

என்னை அணுகாதே..- நான்
உயிரைத் தரமாட்டேன்.

பாவலர் பஸீல் காரியப்பர்.
(உயிரைத் தரமாட்டேன். 1962)


 (சஞ்சாரம் தொடரும்..)

No comments:

Post a Comment