Saturday, July 4, 2015

15- காணாமற் போன ஒரு தங்கக் காசு

15-   காணாமற்போன ஒரு தங்கக் காசு....



“எதிராக வந்தாலும் உண்மை சொல்லு - எந்த
எதிராளி மீதினிலும் கருணை கொள்ளு..
         -பாவலர் பஸீல் காரியப்பர்.



       பாவலர் பஸீல்காரியப்பர். 1983 ல். திடீரெனää எழுத்துப் பணிகளை இடை நிறுத்துவதாக அறிவித்தார். அதிலிருந்துää நீண்ட காலமாக எதையும் எழுதாதிருந்தார். தனிமைச் சிந்தனையும்ää நெருங்கியவர்களுடனும் கூட ஒட்டுறவாமையாகவும் இருந்தார். இனக்கலவரங்களும்ää போர்ப் பிரகடனங்களும் நாடெங்கும் கேட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது. “ஆத்மீகத்துடன் உலகை வெல்லுதல்” என்ற கருதுகோளை குறிப்பு வாழ்முறைமையாகக் கொண்டார். அதனால்ää ஒரு வெகுஜன  சமூகவியக்கம் பற்றியும்ää அதன் விரைவு நடவடிக்கை பற்றியும் சில கருத்துரைகள் பாவலரால்ää பற்பல நிகழ்;வுகளில் சொல்லப்பட்டன.  

இதன் பின்னர்ää தனது மறைந்துறைதலை விட்டுää தீவிரமான சமூக நடவடிக்கையில் இறங்கினார். உள்ளுர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார். குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற சமூக இயக்கத்தின்ää ஸ்தாபக உருவாக்குநர்களில் ஒருவராக இருந்தார்.  (அப்போது அது அரசியல் கட்சி அல்ல) தொடர்ந்துää தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த சில முடிவுகள் எட்டப்படுவதற்கும் பின்புல ஆலோசகராகவிருந்தார்.. ஒரு விஷயத்தை எடுத்தால்ää அதனை விடாப்பிடியாக நின்று காரியம் சாதிக்கும்ää தீவிர குணம் கொண்ட பாவலர்ää உள்ளுர் அரசியலில்ää மிகத் தீவிரமாகச் செயற்பட்டார்.  இதன் காரணமாகää துப்பாக்கிச் சூட்டுக்கும் ஆளாகிப் படு காயமடைந்தார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இஸ்லாமியக் கோட்பாட்டின்படி வரையறைக்குட்பட்ட ஒரு இயக்கமாகவே அவர் பார்த்தார். இது பற்றி பாவலர் குறிப்பிடுகையில்ää ‘வணக்கத்திற்கு மட்டுமா இஸ்லாம்..? வாழ்க்கைச் சுவையில் மனித உறவில்ää கனக்கப் பிணக்கம் மலிந்த அமைப்பைத் தகர்த்து அதனைப் புனர் நிர்மானிக்கும்..” என்று அவ்வியக்கத்தை வர்ணித்தார். அவ்வியக்கம்ää ஒரு அரசியல் கட்சியாக உருமாற வேண்டிய தேவை பற்பல மட்டங்களில்ää எழுந்த போதுää அதனை மிகவும் வரவேற்று வற்புறுத்தினார். உத்தேச கட்சியைப்பற்றிää பாவலர்ää “காலத்தின் தேவை ஒரு கட்சி. கண்முன்னே தெரிவது ஸ்ரீலங்கா முஸ்;லிம் காங்கிரஸ்” என்று சொன்ன வாக்குää மக்கள் மத்தியிலும்ää கட்சியின் எல்லா மட்டத்திலும்ää வேத வாக்குப் போல் ஒலித்து நின்றது.   

 குர்ஆன்ää ஹதீஸ் அடிப்படையில் செயற்படுவோம் என்று மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி செயற்பட வேண்டியää ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ää சொற்பக் காலத்திலேயேää  தனதுää பாதையை விட்டும் தடுமாறிää “பாராளுமன்ற  அரசியல் மட்டும்’ செய்யத் தீர்மானித்த போதுää  அப்போதைய பலமிக்க தலைமைத்துவத்தை எதிர்த்துää அதனை விட்டும்ää வெறுத்து வெளியேறிய முதல் மனிதர் ஆனார். (இச்சம்பவத்தில்ää பாவலருக்குää உயர் தலைமையால்ää இவ்வாறு கூறப்பட்டதுää

 “Pயஎயடயச...!  றுந hயஎந வழ னழ  ழடெல pயசடயைஅநவெசல pழடவைiஉள.. . மட்டுமன்றி  இது மத வேலையல்ல..அரசியற் கட்சி..என்பதை மன வேதனையுடன் கூறிக் கொள்கிறேன்..!  

இதற்குப் பாவலர் அளித்த பதில்ää “ளுழு.. லழர றழரடன hயஎந வழ னழ லழரச டிரளiநௌள.  தவிரவும்ää பாராளுமன்ற வியாபாரிகளிடத்தில் ஆத்மீகத்திற்கு ஒரு வேலையும் இல்லை. என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன்.

இப்பதிலுடன் பாவலரது அரசியல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்து விட்டன. அதன் பின்னர் கட்சி பெரிய விருட்சமாக உருப்பெற்ற பின்ää  பாவலரின் ஆரம்ப காலப் பங்களிப்புகளுக்;காக பட்டமும்ää பதவிகளும்ää தர முன் வந்த போதெல்லாம் அவற்றை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆரம்ப காலங்களில்ää பாவலர் கட்சிக்கு வழங்கியிருந்தää தியாகத்தனமான பணிகளை மிகவும் மதித்தää கட்சித் தனிப்பெருந் தலைவர் அஸ்ரஃப் அவர்கள்ää தான் இராஜினாமாச் செய்த  பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்திற்குää நியமிக்க  நம்பிக்கைக்குரிய ஒரே நபரான பாவலரை நாடி விரைந்து வந்தார்.

வீட்டில் காணாமையால். பாவலரை நகரசுத்தித் தொழிலாளர் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில்ää தேடிப் பிடித்து சம்மதத்தைக் கேட்டார். “பஸீல் காரியப்பர். பா.உ. பதவியேற்பு|| நாளைய தலைப்புச் செய்தி இதுதான்..||  என்று தலைவர் கூறியதும்ää  பாவலர் ஒரு கணமும் தயக்கமின்றி ~~நான் பா.உ. பஸீல்காரியப்பர் அல்ல.. பாவு பஸீல் காரியப்பர்..||  பட்டம் என் பெயருக்கு முன்னால் இருக்கிறது. பெயரின் பி;ன்னால் தேவையில்லை.” என்று கூறி விட்டார். ஆனாலும்ää தலைவர் விடாப்பிடியாகää “நீங்கள் மறுத்தால்ää உங்கள்ää சகோதரரும்ää எனதுää   மைத்துனருமானää தொப்பி முகையதீன் அவர்களை நியமிப்பேன்.” என்று சொன்ன போதுää பாவலர்ää குறும்புடன்ää “இவ்வேளையில்ää முஸ்லிம்களுக்குத் தேவை  ‘தொப்பி’தான்!.”  என்று இடித்துரைத்துää அதனை முழுமனதுடன்ää அங்கீகரித்தார்.

    (இத்தனைக்கும்ää பாவலரின் பெரிய தந்தையின் மகன்தான் தலைவர் அஸ்ரஃப். இருவரும் காரியப்பர் குடும்பத்தினர்.. தாய் வழியிலும் மைத்துனர் முறை. இன்னும்ää தலைவரினதும்ää அவரது பாரியார் அன்னைääபேரியல் அவர்களினதும்ää ஆரம்ப காலச் சிநேகிதருமாவார்.) அதன் பின்னரான காலங்களில்ää தலைவர் அஸ்ரஃப் அவர்களாலும்ää   கட்சியின் பிறää அபிமானிகளாலும்ää குறிப்பாகää  அன்னை பேரியல் அஸ்ரஃப்ää தளபதிääசேஹ{இஸ்ஸதீன்ää தொப்பி முகைதீன் எம்பிää போன்றோராலும்;ää பாவலர் பெற்றிருக்கக் கூடிய பதவிகளும்ää புகழும் ஏராளாமாக இருந்த போதிலும்ää கைவசம்ää மூன்று பெண்பிள்ளைகள் திருமணமாகாதிருந்த நிலையிலும்ää  எதையுமே ஏற்றுக் கொள்ளாதுää தனதுää துவிச்சக்கர வண்டியில்ää சாஸ்வதமாகத் திரிந்து கொண்டிருந்தார்..

    ஒருமுறைää துவிச்சக்கர வண்டியில் பாவலர் தன்நண்பருடன்ää செல்லும் போதுää  அச்சமயம்ää வீதியால்ää விரைந்து கொண்டிருந்தää ஆடம்பர ‘பிக்அப்.’ வாகனத்தையும்ää அதனுள்ளிருந்த உள்ளுர் அரசியல் பிரமுகரையும்ää பாவருக்குச் சுட்டிக் காட்டிää “பாவலர் ஸேர்ää நீங்கள் போக வேண்டிய பிக்அப். அல்லவா இது?” என்று கூறியதும்ää பாவலர்ää “பிக்அப்பின் சொகுசை விடää ‘சந்தக்’கின் சொகுசுதான் பிரதானமானது” என சட்டென விடையிறுத்தார். (சந்தக்: பாடை)

    பாவலரது அரசியல் வாழ்வு மிக ஆழமானதும்ää ஆபத்துமிக்கதுமாகும். அவர்  தனது அரசியல் பாதையில்ää துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகிப் படு காயமடைந்திருக்கிறார். கத்திக்குத்திலிருந்து மயிரிழையில் தப்பியிருக்கிறார். கல்லெறிபட்டிருக்கிறார். பயமுறுத்தப்பட்டிருக்கிறார்.  இத்தொடரில்ää அவரது படைப்பிலக்கியப் பணிகளைப் பற்றி மட்டுமே ஆராய்வதால்ää அரசியல் விடயங்கiளை பிரதானமாகக் கொள்ளவில்லை. பாவலரின் அரசியல் சித்தாந்தம் தனியாக ஆராயப்படல் வேண்டும்.  

அதன் பின்னரான காலங்களில்ää  சிறியளவில்ää கவிதைகள் எழுதினார். 1986.ல்ää  அவரது ~இற்ற ஓலை| என்ற கவிதை அபூர்வமாகப் பிரசுரமானது. 1987.ல்ää ~தொடும் கலை| கவிதையுருப்பெற்றது. இக்கவிதையை பாவலர்ää காத்தான்குடியில் என்னுடைய அலுவலக உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து எழுதிää எனக்குää அன்பளிப்புச் செய்தார். 

“தொடும்கலை” கவிதையானதுää  ஆர்மோனியப் பெட்டியையும்ää பெண்ணையும்ää இறைவனையும்ää தொடும்கலை தெரிந்து தொடும் போதெல்லாம் அருள் இசை பெறலாம் என்று  ஆர்வமாக உபதேசிப்பதாகும். இது இசையியலின் வடம்பிடிப்பு. மனவியலின் ஒரு படப்பிடிப்பு. ஆத்மீகத்தின் சிறைப்பிடிப்பு. தன் மனதையும்ää அதனிடம்ää கேட்கப்படும் கேள்விகளைப் பொறுத்;தே வெளிப்படும் பதில்களும் இருக்கும் என்ற அவரது கருத்தியலையும்ää கருவாக வைத்துப் பின்னப்பட்டது. மனதைத் தொடும் கலை தெரிந்து மனோவசியத் தமிழில் தோய்த்தெடுத்த அந்த ஆர்;மோனிய வரிகள் இவை:-

இந்த ஹார்மோனியப் பெட்டிக்குள்.
எத்தனை ராகங்கள் எத்தனை சங்கதிகள்.
வந்தவை எத்தனை வராதவை எத்தனை..

நண்டின் நடையாய்க் கொண்டு செல்லும்
அந்த விரல்களின் ஆற்றின் மேன்மையால்
தொடும் கலை தெரிந்;து தொடும் போதெல்லாம்
அருள் இசை பொழியும் ஓர் அமுத சுரபியே
அவள்.

அரசியல் வேலைகளிலிருந்து விலகியிருந்தாலும்ää தன் படைப்புப் பணிகளுக்கும் முற்று முழுதாகத் திரும்பவில்லை பாவலர்.  இக்காலப் பகுதியில் தன் நண்பர்களைத் தேடிச் சென்று சந்தித்து உரையாடிவந்தார்.. இதனால்ää பாவலரின் பாக்கள் இன்றிää இலக்கிய ஊடகங்கள் சோபையிழந்தன.  அவரதுää இலக்கிய அபிமானிகளால் இத் ‘தலைமறைவை’ப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரைத் தூண்டி வற்புறுத்திச் சில கவிதைகளை எழுதுவித்தனர். பாவலரின் மிகநெருங்கிய இலக்கிய நேசகரும்ää தென்கிழக்குப் பல்பலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவருமானää  ரமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் பாவலரின் இந்த ‘மறைந்துறைதல்’ பற்றிச் சொல்ல வந்த போதுää “நேசன்.” சஞ்சிகையில்ää “காணாமல் போன ஒரு தங்கக் காசு! என்று மிகப் பொருத்தமாக உவமை சொல்லியிருந்தார். மேலும்ää கூறுகையில்ää

“……கற்பனைக்குள் கனவு காணாது தான் வாழும் சமூகத்தின்ää வாழ்க்கை முறையை நுணுக்கமாகப் பார்த்த பாவலர் இன்று தனக்குள்ளே ஒரு நல்ல மனிதனாக வாழ்வதிலும் அக ஆராய்ச்சியில் ஈடுபடுவதுமாக விருக்கிறார்….”  என்கிறார்.

“இற்றஓலை” கவிதை நாதியற்ற வறுமையுடையää அபலைப் பெண்ணின் கடைசித் தெரிவாகவுள்ள விபசாரத் தொழிலுக்கான ஆரம்ப ஆபத்தான நிர்ப்பந்தத்துக்குச் சம்மதிப்பதைப் பற்றிய மறைபொருள்க் கவிதையாகும்.

சூரியனின் ஒளிக்கதிர்கள்
இற்றுப் போன ஓலைக் கூரையின் வழியாக
பாரியதாகவும்ää பருமனில் பல அளவுகளாகவும்
முட்டைகள் செய்கின்றன.

ஏக்கத்தோடு அவள் மல்லாந்து படுக்கின்றாள்
எதிர்பாராமல் அப்போது அங்கே
தலையில் சிவப்புத் தொப்பியும்
தடாரிப்பும் சிவலை மேனியும் வாலில் பல
வண்ண இறகுகளும் வாலிபமும் கொண்ட
சேவல் ஒன்று கூரையில் சென்று கொண்டிருக்கிறது
இற்ற ஓலைகள் காற்றில் மிதந்து
அவள் முகத்தில் விழுகின்றன..

-பாவலர். பஸீல் காரியப்பர்.
(இற்ற ஓலை. 1986)

 (சஞ்சாரம் தொடரும்.)


No comments:

Post a Comment