Saturday, July 4, 2015

11- கயிற்றோசை கேள் மகளே ..

11-  . கயிற்றோசை கேள் மகளே...




துன்பம் அகல்கிறது: தொடர் பயணம் இனிக்கிறது
அன்புக் களிப்போடே அதன்ää ஆத்மா சிரிக்கிறது..
-பாவலர் பஸீல் காரியப்பர்.


பாவலர் பஸீல்காரியப்பர். 1977.ல்ää ~தங்கம்மா|ää ~ஆற்றில் ஒரு பூ!|ää ~அவள்.| ஆகிய கவிதைகளைப் படைத்தார். இதேயாண்டுää பாவலர்ää அகில இலங்கை முஸ்லிம் லீக் தலைவர்ää டொக்டர் எம்.ஸீ.எம். கலீல் அவர்களையும்ää இலங்கைச் சோனகர் சங்கத்தின்ää தலைவரானää ஸேர். ராஸீக்பரீத் அவர்களையும் சந்தித்திருந்தார்.

    இக்காலத்தில்ää பாவலர் ஏராளமான இசைப் பாடல்களும்ää இசைச்சித்திரங்களும் எழுதி வந்தார். யாராவது வந்து ஏதும் ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு பாடல் கேட்டால்ää அக்கணமே எழுதிக் கொடுத்து விட்டு மறந்து விடும் வழக்கமும் அவரிடமிருந்தது. அதனால்ää அவ்வாறான பாடல்களைப் பெற்றுச் சென்றவர்கள் அதைத் தம் பாடலெனச் சாதித்து தம் காரியங்களை நிறைவேற்றிக் கொண்டனர்.  பாவலருக்கு இப்பாடல்களால்ää பேருமில்லை.. வருவாயும் இல்லை. அவர்கள் அவற்றைப் பாவித்துப் புகழடைந்த போதுää அதில் தலையிடவும் இல்லை. இதுபற்றி நண்பர்கள் ஆவேசப்பட்ட போதுää ஒரு மெல்லிய புன்னகையுடன் கதையை வேறு திசைக்குத் திருப்பி விடுவார்.  அவரைப் பொறுத்தவரைக்கும்ää அவ்வாறு செய்வதுää பொருள் மிகுந்தவன் தர்மம் செய்வது போல பாட்டு வள்ளல் தன் பங்குக்குச் சிலவற்றைப் பிச்சையிட்டிருக்கிறேன். தர்மத்திற்கும் உரிமை கோரலாகுமா.. என்ற கருத்தில்ää குறிப்பிடுவதுண்டு. அதற்காய் மகிழ்ந்து அப்பாவியாய்ச் சிரிப்பதுமுண்டு.

    கல்முனை மன்பஉல் ஹிதாயா அரபிக் கலாசாலைத் தலைவரும்ää கல்முனை இக்பால் கழகத்தின் செயலாளருமானää அல்.ஹாஜ். எஸ்.எல். மீராஸாஹிப். அவர்கள்ää பாவலரின் மேற்கண்ட குணாதிசயம் சம்பந்தமாகää கூறியிருப்பதை இங்கு பார்ப்போம்.
    ~~........... சரியாகநேரம் பி.ப:4.30. மணிக்கு பாவலரின் வீட்டுக் கதவைத் தட்டினேன்.  ஒருவர் வந்தார்.  பஸில்காரியப்பர் இருக்கிறாரா..? என்று கேட்டேன். ~ஆம். இருக்கிறார். உள்ளே வாருங்கள்| என அழைத்துப் போய் ஒரு கதிரையில் உட்காரச் சொன்னார். தானும் எதிரிலிருந்த கதிரையில் உட்கார்ந்தபடியேää புன் சிரிப்புடன்ää அன்பாகää என்னை உற்றுப் பார்த்துää ~நான்தான் பஸில்காரியப்பர்.. என்ன விசயமாக என்னைப் பார்க்க வந்தீர்கள்..?| என்று கேட்டார்.  நான் வந்த விடயத்தைத் தெளிவு படுத்தினேன். ~இலங்கை வானொலி முத்தாரம் நிகழ்ச்சியில் பாடுவதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. எனக்கு உடனடியாக ஒரு பாட்டு வேண்டும்..| என்று.
    ஒருகணம் யோசித்து விட்டுää  சற்றும் எதிர்பாராதவாறு உடனே ஒரு பாடலை அவரது சொந்த இசையில்ää சொந்த வசனத்தில்ää இனிமை சொட்டும் குரலில் பாடிக்காட்டிää ~இப்பாடல் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா..?| என்று கேட்டார்.  ~நூறுவீதம் பிடித்திருக்கிறது.| என்று சொல்லி பாடலைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றேன். முன்பின் அறிமுகமில்லாத என்னிடம் அவரது பெறுமதிமிக்க பாடலை ஒப்படைத்த அந்த விந்தையான மனிதரை எண்ணி வியந்தபடியே வீடு வந்து சேர்ந்தேன்.
    குறி;ப்பிட்ட முத்தாரம் நிகழ்ச்சிpயில்ää இசையமைப்பாளர் ஸவாஹிர் அவர்களின்ää மதுரமான இசையில்ää மேற்படிää இப்பாடலைப் பாடி பெரும் புகழையும்ää பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டேன்..||

    இந்தப் பாடல்தான்ää பிற்காலத்தில்ää இசைத்திலகம். எம்.எச். முகமட்ஸாலிஹ் அவர்களினால்ää மதுரமாக இசையமைக்கப்பட்டுää திருமதி. சுஜாதா அத்தநாயக்க அவர்களினால்ää பாடப்பட்டுää இஸ்லாமியக் கீதங்களில் காலத்தால் அழியாத பாடல்கள் வரிசையில்ää சிறப்பான ஒன்று என்ற இடத்தைப் பிடித்தது. அந்த தமிழ்உண்ணிக் கவிஞனின்ää தாலாட்டு;வரிகள் இதோ.:-


கயிற்றோசை கேள் மகளே..
தொட்டில்
கயிற்றோசை கேள் மகளே..

அல்லாஹ் ஒருவன் என்றும்
அவன் தூதர் முஹம்மது என்றும்
சொல்லும் கலிமா தன்னைப்- பசும் மனத்தில்
கொள்க எனப்  பாட்டிசைக்கும்
கயிற்றோசை கேள் மகளே..
தொட்டில்
கயிற்றோசை கேள் மகளே..!

-பாவலர் பஸீல் காரியப்பர்.
(கயிற்றோசை கேள் மகளே..1977)


    இச்சந்தர்ப்பத்தில் பாவலர் தன் படைப்புகனைப் பொறுத்தவரைக்கும் அவற்றில்ää ஆத்மீக எண்ணங்களை ஊடுருவி ஒலிக்கச் செய்வதிலும்ää பழைய படைப்புகளைக் கூட இப்படி  மீள் செதுக்குவதிலும் ஈடுபட்டார்.  இந்த செதுக்கல் வேலையையே ஒரு கவிதையாகவும் செதுக்கினார். அக்கவிதை ~தாரிக் அந்த உளியை எடு.!| என்பதாகும்.  ~கடைச்சல் வேலை செய்பவர் நாங்கள்| என்று தொடங்கிää   ~தாரிக் அந்த உளியை எடு!| என்று முடியும் அந்தக் கவிதை இதுவரை ஒரு ஊடகத்திலும் பிரசுரிக்கப்பட்டதாகவில்லை. அது அவர் கைவசமும் இல்லை.

    பாவலரின்ää ~அவள்| கவிதைää தமிழ் மொழியையும்ää தன் ஆத்மாவையும் ஒரு பெண்ணுக்கு உவமித்து இயற்றப்பட்டதாகும். ~..காதலுக்கு அவள் வந்து பிறந்தாள்.. ஒரு - காவியத்தின் நாயகியாய் அவள் இங்கு சிறந்தாள் - ஏது இனி அவளுக்குச் சாவு..? இதயத்துள் - உணர்வாக  உயிர் வாழும் போது..| என முடியும் கவிதையது.

    பாவலரின் ~ஆற்றில் ஒரு பூ!|  என்ற கவிதை அழகியலையும்ää தத்துவத்தையும் ஒருங்கே கலந்துருவானது. கால ஆற்றின் ஒட்டத்தில்ää மானுட வாழ்க்கை இழுபட்டுச் செல்லும் பாங்கினை  ஆற்றில் செல்லும் ஒரு பூவுக்குப் படிமமாக்கி அதில்ää ஆழமான தத்துவத்தை உட்புகுத்தி  இலகுவாகச் சொல்கிறது. பாவலரின் தமிழாற்றில் மிதக்கும் அக் கவிதைப் பூவின் சிலவரியிதழ்கள்..:-


ஆற்றில் ஒரு பூ அநாதையாய்ப் போகிறது
காற்றில் இதழால் தன்
காவியத்தை வரைந்தபடி
ஆற்றில் ஒரு பூ அநாதையாய்ப் போகிறது

செங்குருதி ஆற்றில் அச்சிறுமலர் போகிறது
எங்கு வரை போகின்றேன் என்று அறியாது போகிறது.

தாய் மரத்தைப் பிரிந்த அது
தன் கிளையைப் பிரிந்த அது
ஓயாத நீரோட்டம் ஒன்றோடு கலந்த அது
ஓடும் நீரோடேதான் ஓடிக் களித்து விட
வாடா முகத்துடனே அது வடிவாகச் செல்கிறது.

செடிகொடிகள் வயல் வெளிகள்
சிறுமீன்கள் குருவியிசை
நெடுவானில் ஓவியங்கள்
நிறிறமாய் இயற்கை எழில்
தண்ணீர் மனம் மயங்கித்
தன்கோலம் இழக்கிறது
அந்நீரே வெள்ளி என
அழகுநிலா சொல்கிறது.

மின்னிமின்னிப் ப10ச்சிகளின் மினுக்கம் இராக்குருவி
தன்னுடைய கீதங்கள் தனிமை மன உள்ளோட்டம்
பிரிவின் துயரங்கள் நிறைந்த நெடும் பயணம்
உறவின் அர்த்தங்கள் உணரப்படும் போது

ஆற்றில் அதே பூ
அறிவு தெளிகிறது

துன்பம் அகல்கிறது..தொடர் பயணம் இனிக்கிறது..
அன்புக் களிப்போடே அதன் ஆத்மா சிரிக்கிறது..
ஆற்றில் ஒரு பூ ஆனந்தமாய் போகிறது.. 

-பாவலர் பஸீல் காரியப்பர்.
(ஆற்றில் ஒரு பூ...  1977)


(சஞ்சாரம் தொடரும்)




No comments:

Post a Comment