Saturday, July 4, 2015

02- தென் கிழக்கின் உமர்கையாம்

02 தென்கிழக்கின் உமர்கையாம்..



~சம்மாந்துறை அரிசைச் சாத்தி வைத்த பல்லொளிர
உம்மாவெனக் கூவும் உயிர் பிறப்பதெக்காலம்..?|
-பாவலர் பஸீல் காரியப்பர்.


   பாவலர் பஸீல்காரியப்பர்.! 1940.05.09 ல் சம்மாந்துறையில் பிறந்தார்.  பதுளை கார்மல் கொன்வென்ட்டில் ஆரம்பமான இவரது வித்தியாரம்ää சம்மாந்துறை அரசினர் ஆண்கள் பாடசாலைää மற்றும் கல்முனை பாத்திமா கல்லூரிகளில் தொடர்ந்தது.. 1951.ல் புலமைப் பரிசில்  பரீட்சையில் திறமையாகச் சித்தியடைந்தார். 1954. ல் தனது பதிநான்காவது வயதில்ää தான் எழுதிய தமிழ் வாழ்த்துக் கவிதையைத் துணிவுடன் மேடைமீதேறி அவர் முழங்கிய அவரது அசாத்தியத் துணிவை வியந்தää  தமிழறிஞர் திரு. கே.ஆர். அழகையா பீ.ஏ. அவர்களால்ää ~ஓ..! கவிஞரே..!| என வாழ்த்துரைக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார். தவிரவும்ää இந்த இளவயதில் பஸீல்காரியப்பர்  எழுதிய கவிதைகளின் சாரத்தை உணர்ந்த திரு. அழகையா ஆசிரியர் இவருக்கு இட்ட பட்டப் பெயர் ~உமர்கையாம்|. தொடர்ந்துää சகநண்பர்களாலும்ää அவரது இலக்கிய நட்புள்ளங்களாலும்ää உமர்கையாம் என்றே விழிக்கப்பட்டார்.

 1955.ல்ää  ஜே.எஸ்.ஸி. செலக்டிவ். பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மைச் சித்தியடைந்தார். சித்தியடைந்த பெறுபேற்றுப் பிரதியை அவரது ஆசிரியர் பார்வையிட்டுப் பாராட்டுத் தெரிவித்துää  தற்செயலாக அதன் பின்புறம் பார்த்த போதுää அதிலும் தன் இளமைக் கவிதையை வீரியத்தமிழில் வரித்திருந்தார் பின்வருமாறு:-


 வருகிறேன்.. வருகிறாய்..
வந்ததும் நாம்  வழமை போல்
அஞ்சித் தவிக்கிறோம்.. நான்
இரவிது மறைவிது என்கிறேன்.. நீää
  இல்லை பிறர் கண்டால்.. என்கிறாய்! - வானில்
 இருள் கிழித்து மின்னல் அடித்ததே.
  ஓ..! இந்த இறைவன் என்ன புகைப்படக் காரனோ..?

இதனையும் வாசித்த ஆசிரியர்ää ~பரீட்சைப் பேப்பர்களிலும் கவிதைதான் எழுதியிருப்பாய் நீ.. எப்படித்தான் சித்தியடைந்தாயோ..?| என்று வியந்தார். (இக்கவிதை பின்னர்ää பாவலரால்ää நன்கு செதுக்கப்பட்டுää ~படப்பிடிப்பு| என்ற தலைப்பில் பிரசுரம் பெற்றது.) 

        பாவலரின் பாடசாலைப் பருவத்தை மிக நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும்ää அருட்சகோதரர். கலாநிதி. எஸ்.ஏ.ஐ. மத்தியு எஸ்எஸ்ஜே .அவர்கள் கூறுகிறார்:-

  ~~.......... பஸில் காரியப்பர் 1952ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு மழை நாளில்ää பாத்திமாக் கல்லூரிக்குள் வலது கால் வைத்தார். வாப்பா கூட்டி வந்தார். அருட்சகோதரர் எம். இமானுவல் அந்த இளம் வயதில்ää அவருக்கு அதிபராகக் காட்சியளித்தார். ஆனால்ää அந்தக் காலத்தில்ää உண்மை அதிபர்.எஸ்.எம். பெஞ்சமின் ஆகும். ஆனால்ää பஸீல்காரியப்பரின் இளமனதைத் தொட்டுவிட்டää பிரதிஅதிபர் எம். இமானுவல் அடிகளைää அதிபர் என்றே அழைக்கிறார்.  அவரது முதல் சந்திப்பை பிற்காலத்தில்ää பாவலர் இவ்வாறு கூறினார்ää எங்கள் அதிபர் அருட்சகோதரர் இமனுவல் அவர்கள்  அரும்பிய ஒரு குறுஞ் சிரிப்புடன்ää கருணையும்ää நகைச்சுவையும் கலந்து என்னைப் பார்த்தார். அந்தப் பார்வை இன்னும் என்னுள்ää புதுமையாக நிலைத்திருக்கிறது. இனிய நினைவுகள்..என்றும் இளையன..||

    பஸீல்காரியப்பரின் வகுப்பாசிரியர்ää  அருட்சகோதரர் ரொபேர்ட் அவர்ர்களுக்குää திருகோணமலைக்கு ஒர் இடம் மாற்றம் வந்தது. அதன் நிமித்தம்ää கிளனி ஹோலில்ää கல்லூரி மட்டத்தில்ää  ஒரு பிரியாவிடைக் கூட்டம் நடைபெற்றது.  அதில்ää மாணவர்கள் சார்பாகää பஸில் காரியப்பரைப் பேசச் nhன்னார்கள். அந்தப் பேச்சு கவிதை வடிவில் அமைந்திருந்தது.  கூட்டம் முடிந்த பின்ää அவரது ஆசிரியர்களில் ஒருவரானää  கே.ஆர். அருளையா அவர்கள்ää ஓடிவந்தார். பஸீல் காரியப்பரின் பிரதியை வாங்கிப் படித்தார். ~ஓ.. கவிஞரே..!|  என்று அவரது தோளில் தட்டி வாழ்ததுக் கூறினார். ~எழுக புலவன்..!| என்று பாரதிää பாரதிதாசனை வாழ்த்தியது போன்று அருளையா என்ற பேரறிஞர் வாக்குப் பலித்தது..||

~~..பாவலர் பஸீல் காரியப்பர் அவர்களின் கவிதைகளை ஏன் ஆய்தல் வேண்டும்.. அவருக்குத் தமிழ் மேல் ஏன் பற்றுதல் ஏற்பட்டது.. அதற்கு அவர் என்ன தியாகங்கள் செய்தார்.. அவரது வீட்டுச் சூழல்கள்ää அவர்தம் ஆசிரியப் பெருந்தகைகளின் தாக்கம்.. இளமையில் அவரைக் கவர்ந்த நூலாசிரியர்கள்.. பரந்துபட்ட எழுத்துலகம்.. ஆகிய இன்னோரன்ன அம்சங்கள் அவரையும் பாதித்து. அவரது எழுத்துகளையும் பாதித்திருக்கும். பஸீல்காரியப்பர் எதை எழுதினார்.. அதை ஏன் எழுதினார்.. அதை எவ்வாறு எழுதினார். என்பவையெல்லாம்  உளப்பகுப்பாய்வில் அடங்கும்..........||

    தமிழ்ப்பணியைப் பொறுத்த மட்டில்ää பாவலருக்குää இப்படியான ஒரு உறுதியானää அத்திவாரம்ää கிடைத்தது போல்ää அரசியலிலும்ää கிடைத்தது. தனது பள்ளிப் பருவத்தில்ää 1956.ல்ää மட்டக்களப்பில் நிகழ்ந்தää தமிழரசுக் கட்சியின்ää மாபெரும் சத்தியாக்கிரக நிகழ்வில்ää பங்கேற்கத்ää தனது பதினாறாவது வயதில்ää சம்மாந்துறையிலிருந்துää துவிச்சக்கர வண்டியில் தன்னந் தனியனாகப் பயணம் செய்தார். அப்பயணத்தின் போதுää எதிர்ப்பாளரின் கல் வீச்சுக்கிலக்காகிக் காயமடைந்தார்.

1957.ல்ää மூதறிஞர்ää தந்தை செல்வநாயகம் ஐயாää அவர்களின் தலைமையில்ää  பாத்திமாக் கல்லூரியில்ää நடைபெற்றää மேதினப் பேச்சுப் போட்டியில்ää பாவலர் பேசிய கருத்துகளில்ää அவரது வயதுக்கு மிகவும் அதிகமான காhரமும்ää சாரமும்ää இருப்பதைக் கவனித்த தந்தை செல்வநாயகம் ஐயாää அவர்கள் வியப்புடன் அவரைத் தட்டிக் கொடுத்தார். இக் கூட்டத்தில்ää தந்தை செல்வநாயகத்துடன்ää ~சொல்லின் செல்வர்| திரு. செ. இராசதுரை அவர்களும் கலந்து கொண்டிருந்தார். அவர் பாவலரை கட்;டியணைத்து தன் வியப்பையும்ää மகிழ்வையும் தெரிவித்துக் கொண்டார். இவர்களுடன்ää தலைவர் திரு. அ.அமிர்தலிங்கம்ää மட்டுநகா லோரன்ஸ்ää கவிஞர் காசி ஆனந்தன்ää மற்றும்ää மாஸ்டர் சிவலிங்கம்ää ஆகியோரும் இச் சிற்றெறும்புப் பாவலனை அடையாளம் கண்டு பாராட்டி உரையாற்றினர்.

பாவலருக்குக்குள் தமிழறிவும்ääää அரசியலறிவும்ää உறுதிமிக்க அத்திவாரங்களிலிருந்து ஆரம்பமாயிற்று. ஒரு சாhதாரண மரத்தின் கிளைகளை  எவ்வாறு வடிவம் அமைப்பது என்பது பற்றிய அவரது பிற்காலத் தத்துவார்த்தச் சிந்தனைகளை அவர் தன்  படைப்புக்கள் உடாக வியக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தியதற்குää மேற்குறிப்பிட்ட அறிஞர் பெருமக்களே காரணமாதலால்ää அவர்களினையே அப்பெருமை சாரும்..

பிற்காலங்களில்ää தனது பள்ளிப்பருவத்தை நினைவுகூர்ந்துää ~கடற்கரையில் உரையாடலின்பம்| நிகழ்வுகளில் பாவலர் குறிப்பிடுகையில்ää ~~12 வயது முதல்ää 18 வயதுவரையான பருவ காலத்தில்ää பாத்திமாக் கல்லூரி என்ற தாய்ää என்னைச் சீராக வளர்த்தாள்.. உருவாக்கினாள்.. என்ற நினைவும்ää நன்றியுணர்வும்ää என்னுள் நிலைத்திருக்கிறது. பாத்திமாக் கல்லூரி என்ற நாற்று மேடையில் முளைவிட்ட பயிர்தான் இன்றைய எனது கவிதை வளம்..||

பாவலர் பஸீல்காரியப்பர் ஒரு தனித்துவமான கவிஞராக அன்றிலிருந்து இதுவரையும்ää பேசப்படுவது அவரது படைப்புகளால் மட்டுமன்றி அவரது வெளிப்படைத் தன்மையானää பழகுமுறைமையினாலும்தான். தமிழறிஞர் அமரர்ää அருளையா ஐயாவின்ää ~தமிழ்க்கவிதை வாள்| என அறிவிக்கப்பட்டää அந்தää தென்கிழக்கு உமர்கையாமின்  இன்னும் சிலää இளமைக்கவிதா வீச்சுக்கள் இவை.:-

....என்னை உணர்ந்திடும் ஓர்
உயிர் வேண்டும்.. அவ்வுயிரே
பெண்ணாய் இருந்து விட்டால்
பெரும்பாரம் நீங்கி விடும்
குறைநிறைகள் எல்லாமே
கூடி என்னைக் காப்பவளின்ää
அறையுள்ளே வாழ்ந்து விடும்
அவள் அறிந்து பேணிடுவாள்

என்னை என் உணர்வுகளை
என் இதய வேட்கைகளைக்
கண்ணாடி போல் அவளில்
கண்டு மகிழ்ந்திருப்பேன்.

இன்பக் கிறுகிறுப்பில்
என் மடியில் சாய்ந்திடுவாள்..
அண்ணார்ந்து விண்ணோக்கி
அயர்ந்து பெரு மூச்சிடுவாள்.
பெண்ணாள் தன் நெஞ்சில் ஒரு
~றைஹாலை|ச் செய்திடுவாள்.
என்ன இனி காவியத்தை
எடுத்து வைத்துப் பாட்டிசைப்பேன்.

-பாவலர் பஸீல் காரியப்பர்.
(எனக்கு ஒரு தேவை. 1963)
(சஞ்சாரம் தொடரும்..)

No comments:

Post a Comment