Saturday, July 4, 2015

14- ஆக்கிலா தந்த மலர்


@-14-   ஆக்கிலா தந்த மலர்...


“கூறவந்தவை கூற மறந்தேன்
கூட்டுறவாகும் ஆசை நிறைந்தேன்…
  பாவலர். பஸீ;ல் காரியப்பர்.

   
  பாவலர் பஸீல்காரியப்பர்.  1982.ல்ää தனது வாழ்வில் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மகானைச்  சந்தித்தார். அவர்ää சங்கைக்குரியää ஷேகுனா காயல்பட்டனம் அப்துல்காதிர் ஸ_பி ஹஸரத் அவர்கள் ஆவர். 21.08.1982 ல் பாவலரின் இல்லத்திற்கே விஜயம் செய்த மகான் அவர்களின்ää தரிசிப்பின் பின் பாவலரது நடைமுறைவாழ்க்கைப் போக்கும் சற்றே மாறுதலுக்குள்ளானது. ஆத்மீக ரீதியிலான. சிந்தனாவாதக் கருத்துருக்களால்ää பாவலர் மேலும்ää ஆக்கிரமிக்கப்பட்டார். அவரே சொல்வது போலää ‘இச்சந்திப்பு எனக்குள்ää மானுடம் தேடுதல் பற்றிய சிந்தனையைக் கருக் கொள்ளச் செய்தது.”  என்ற போதிலும்ää கவிதைகளையும்ää இசைப்பாடல்களையும்ää ஓரளவு எழுதியே வந்தார். புகழ்பெற்ற ~ஆக்கிலா தந்த மலர்| இசைச் சித்திரப் பாடலாக்கம் உருவான காலம் இதுவாகும்.

    பாவலரின்ää “ஆக்கிலா தந்த மலர்” ஒரு உரையாடற் சித்திரக் கவிதையாகும். இதில்ää பாவலர்ää வாழ்வுக்குத் தேவைää தன் மார்க்கத்தின்மீது பற்றுக் கொண்டää குல ஒழுக்கமுள்;ள ஒரு கன்னிப்பெண்ணாகும். அவளைத் திருமணத்திற்குத் தெரிதல் பெற்றோரின் கடமையாகும் என்பதை தாய் ஸ்தானத்திலிருந்து வலியுறுத்துவது. அழகியல் உவமைகளோடுää இசையோட்டமாகச் சித்தரிக்கும் இந் நீள்பாவைää பாவலர்ää ~அந்தியில் சந்திப்போம்| இலக்கிய நிகழ்வுகளில் வாசித்துக் காட்டுவதைக் கேட்பதே ஒரு தனி அநுபவமாகும். இசைத் தமிழைக் கலந்து அசைச் சொற்களில் தரும் அந்த அழகியல்ச் சித்திரம் இதோ:-

தாய்:- வண்ண மகனே வா.. இங்கு
    புதுவாசம் பரவுதடா..
    என்ன மலர் கையில் உனக்கிது
    எப்படி வந்ததடா..


    கண்ணின் மணியே நீ மறைவாய்ப்
    புன்னகை செய்வதும் ஏன்..
    உண்மையைச் சொல் மகனே..
    இதை உன்னிடம் தந்ததுவும் யார்..?

மகன்:-மாமிக்கு என் பரிசு இதனை
    மறுக்காமல் கொண்டு சென்று
    காணிக்கையாய்க் கொடுங்க என்று சொல்லிக்
    கடிதினில் ஓடி விட்டாள்.

    என்னதான் செய்வேன் உம்மா..
    உங்களில் இரக்கமாய்த் தந்த
    சிறு வண்ண மலர் இதனை
    வருகின்ற வழியில் எறிவதுவா..?

தாய்:-    சேச்சே.. நீ என்ன சொன்னாய்..
    இது நல்ல செடியினில் பூத்த மலர்
    ஆக்கிலா தந்த மலர்
    மனசுக்கு ஆறுதல் வந்த மலர்!

    நல்ல பரிமாற்றம் இது
    அந்த நாயனின் சம்மதமே
    இல்லறம் வென்றவர்கள் பணக்காரர்
    இல்லாமல் போனாலும்

    காசு அதிகமில்லை.ää- காக்கா
    பெரும் மாளிகை கட்டவில்லை
    நேசம் மிகுந்தவர்கள் அவர்களில்
    நேர்மை இருக்கிறது..

    தோட்டம் துரவுமில்லைää- மற்றவரின்
    தோசம் கதைப்பதில்லை
    தேட்டம் ஹலாலான சோறுகறி
    தின்று வளர்ந்ததுகள்.

    காணி நிலங்களில்லை.. ஈமானுள்ள
    கல்பு இருக்கிறது….

மகன்:- சுற்றி வளைக்க வேண்டாம்.- அந்தரங்கச்
    சுத்தியே சொத்து சுகம்
    சத்தியமாய் ஏற்பேன் உங்களுக்கும்
    சம்மதம் என்று சொன்னால்…

தாய்:-    கல்பு குளிருதடா.. மகனே என்
    கருப்பை சிலிர்க்குதடா..
    அல்லாஹ் கிருபையினால் உங்களுக்குள்
    ஆனந்தம் பொங்குமடா..!
    -------------------------------------------
    -------------------------------------------
   
    -பாவலர் பஸீல் காரியப்பர்;
    (ஆக்கிலா தந்த மலர்.1982)

1983.ல்ää தத்துவார்த்தச் சிந்தையை முன்னிருத்த்pää ~நிழல்.| என்ற ஆய்வுப் பாவை  எழுதி முடித்தார். தொடர்ந்துää  ~நிலைத்த நிழல்| கவிதையை உருவாக்கினார்.  1985.ல்ää கல்முனை ஹனிபா வீதியில் ஸேர். ராஸீக்பரீத் நலன்புரிச் சங்கத்தினால்ää உருவாக்கப்பட்டää பொதுநூலகம் ஒன்றை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.  பின்னர்ää ~உறவு| என்ற தன்னிலைசார்கவிதையை வெளிப்படுத்தினார்.

இறையியல் தொடர்பான ஆத்மீக சஞ்சாரத்தில் பாவலர் தீவிரமாக மினக்கிட்டிருந்த இக்காலத்தில்ää இறைதூதர் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றித் தன் வேட்கையை வெளிப்படுத்திய வரிகள் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

“…உங்களது
  சின்னி விரல் நகத்தையேனும்
 சிறிது தொட விரும்புகின்றேன்
 என்னருமை நாயகமே..!..”

கடலலைகள் போல ஞானத்தமிழ்க்கவிதை வரிகள் பொங்கிப் பிரவாகித்த இச்சந்தர்ப்பத்தில்ää நம் பாவலர்ää கடற்கரையில்ää ஒரு தென்னை மரத்தின் நிழலின் கீழிருக்கிறார். அப்போதுää அம்மரத்தின் நிழல் நகர்ந்து செல்கிறது. தானும் நகர்ந்து அதன் நிழலில் அமர்கிறார். சற்று நேரத்தில் மீண்டும் நிழல் இடம்பெயர்கிறது.  மீண்டும் பாவலர் நிழலுக்கு நகர்கிறார். இதிலிருந்து பிறந்ததுதான் “நிழல்” கவிதை. 1983ல் எழுதிய இந்த “நிழல்” கவிதை  தென்னை மர நிழலை “இறை அழைப்பாகவும்”ää தன்னைத் தன் ஆத்மாவின் நிழலாகவும் உருவகப்படுத்தி எழுதப்பட்டது. அநத ஞானத்தமிழ் வரிகளைப் பாருங்கள்.:-

கொடுவெயிலின் தனிமையில்
கடற்கரைத் தென்னையின்
நிழலினில் அமர்கிறேன்.
நினைவினுள் அழிகிறேன்.

சுடுவதேன் முதுகினில்
நிழல் இதோ இடம்பெயர்ந்துள்ளது
ஆம்.. அதன் வழி நகர்கிறேன்
சிறுபொழுதமர்கிறேன்.
நிழல்.. இதோ..
இன்னும் சற்றிடம் பெயர்ந்துள்ளது.
நான் நகர்கிறேன்.
நிழலோடு தொடர்வதென் நிலைமை..
ஓ..! வருகிறேன்.!”

-பாவலர் பஸீல் காரியப்பர்.
(நிழல்.- 1983)
(சஞ்சாரம் தொடரும்..)




No comments:

Post a Comment