Saturday, July 4, 2015

10- என் கண்ணினை உன் கண்ணினால் கவ்வு



10-   என் கண்ணினை உன் கண்ணினால் கவ்வு..


பலாத்காரம் பண்ணும் செயல் எனக்குப் பழக்கமில்லை.
தசைகளினை உண்ணும் அவாவில் எனக்கு விருப்பமில்லை..
-பாவலர் பஸீல் காரியப்பர்.


   பாவலர் பஸீல்காரியப்பர்.  1976.ல்ää தானே எழுதிää இசையமைத்துப் பாடும்ää ~பாட்டுப்படையல்| நிகழ்ச்சியைää  கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் அரங்கேற்றம் செய்;தார். ~எண்ணம் இருக்கை தரும்|ää  ~நட்டுமை போகவில்லை| ~இன்சுரங்கள்.|ää ~கனிந்த நிலை|ää  ஆகிய கவிதைகளும் இக்காலத்தில் பாவலரால் உருவாக்கப்பட்டன.

    பாகிஸ்தான் இஸ்லாமாபாத் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகமத்தின்ää ஒப்பீட்;டு மதத்துறையின்ää இணைநிலைப் பேராசிரியரும்ää இலங்கையைச் சேர்ந்தவருமானää கலாநிதி.எம்.எம். தீன் முகம்மது எம்.ஏ. பீ.எச்.டி. (அல் அஸ்ஹரி) அவர்கள் பாவலரின் மிக நெருங்கிய ஆத்மீக சகா. அன்னார்ää அரபுää தமிழ்க்கவிதைகளில்ää ஆழமான புலமையும்ää அதன் மீதான வெகுவான ஆய்வுகளும் மேற்கொள்ளும் அறிஞர். அவர் நமது பாவலரைப் பற்றிக் கூறுவது:-

~~...........1974ம் ஆண்டின்ää ஆரம்பப் பகுதியில்ää நம் பாவலர் பஸில்காரியப்பருடன முதன் முதலில் அறிமுகமானேன். அப்போது எனக்கு வயது 17.  அம்முதல் சந்திப்பிலேயே எம் இருவரதும் நட்பு இறுகியது.  வாரத்திற்கு ஒரு முறையாவது அக்கரைப்பற்றில்ää அல்லது மாவடிப்பள்ளியில் சந்தித்து நீண்ட நேரத்திற்கு காலையிலிருந்து மாலை வரை பஸீலின் கவிதைகளைக் கேட்பதிலும்ää அதை விமர்சிப்பதிலும்ää எங்கள் நேரம் கழிந்த கொண்டிருக்கும். இச்சந்தர்ப்பங்களில்ää எங்களோடு எப்போதும் இருந்த வந்தவர் பாவலரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் மக்கத்தார் மஜீது.

இவ்வேளைகளில்ää ஆரம்ப கால அரபு மொழியிலுள்ள இஸ்லாமிய இலக்கியங்களுள்ää  சிலவற்றினைத் தமிழ்க்கவிதைகளாக வடிக்க முடியுமென்றால்ää  அழகாக இருக்குமென்று நான் கூறியபோதுää  தனது உள்ளத்தின் அடியில் உறங்கிக் கிடந்த ஒரு சுகானுபவத்தைத் தட்டி எழுப்பியது போன்று பஸீலுக்குத் தெரிந்தது.  கட்டாயம் செய்வோம். செய்துதான் ஆகவேண்டும் என்ற திடசங்கற்பம் பிறந்தது.  இனிமேல் நமது வார சந்திப்புகளை இதற்காகவே செலவிடுவது என்று ஒத்துக் கொண்டோம்.

    அண்ணல் நபியவர்களின் முன்ää கஃப் பின் ஸ_ஹைத். என்ற மாபெரும்ää கவிஞர் ஸஹாபியினால்ää பாடப்பட்டää ~பானத் சுஆத்| என்ற பிரபல்யமிக்க காவியத்தை தமிழில் வடிப்போம் என்றும் தீர்மானித்தோம். அரபியில் உள்ள ஒரு கவிதையை தமிழில்ää மொழிபெயர்த்து  அதன் உரை நூல்களில்ää பொதிந்துள்ள கருத்துரைகளை  நான் எடுத்துக் கூறி அது வகிக்கின்ற கருத்தினை பூரணமாகக் கிரகிக்க வேண்டும் என்ற  நோக்கில்ää முதல்நாள்ää அதுபற்றிக் கதைத்துää அக்கவிதையின் உள்ளடக்கத்தினையும்ää உண்மையையும்ää நுண்மையாகப் புரிந்த பின்ää அதன் உயரிய இனிய நடையில்ää  அழகிய உயிருள்ள கவிதையாக வடிப்பார் பஸீல் காரியப்பர்.  56 அடிகளைக் கொண்ட கவிதையில்ää  வாரத்திற்கு ஒன்றிரண்டு அடி  என்ற விகிதாசாரத்தில் நாங்கள் செய்து  ஏறத்தாழ 10 அடிகளை  முடித்திருந்த நேரத்தில்ää  நான் உயர்கல்விக்காகää எகிப்து சென்றுவிட்டதால்ää  பானத்சுஆத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இது மிகவும்ää துரதிர்ஸ்டமாகும்.

    அகக் கண்ணைத் திறந்து விடும் உடற்கண். கற்பனை சக்தியைக் கொழுத்தி விடும். அதனைத் தூண்டி இயக்கி விடும். நிறைந்த உணர்ச்சி.. உயிரோட்டம்..ää காலத்தையும்ää நேரத்தையும் கடந்து எல்லையற்ற உலகின் முன். எம்மை எழுந்து நிற்;கச் செய்யும். எல்லைப்படுத்தப்பட்ட மொழி. இவையேää காலத்தால் அழியாத உயர்ந்தகனிந்தää மகத்தான கவிதைகள். இவைதான் பாவலர் பஸீல் காரியப்பர்.||

    மதுரக்குரலில்ää அதிமதுரத் தமிழில்ää அந்தக்கவிதைசொல்லியின்ää  ~நட்டுமை போகவில்லை| என்ற கவிதைää ஒரு வயற்காரனின் மனைவியைப் பெண்டாள முயல்கிற ஒரு காமுகப் போடியாரின்ää செயல்களை அப்பெண்ää தன் கணவனிடம் ஓலத்துடன்ää முறையீடு செய்யும் பாங்கில் அமைந்துள்ளது. வயல்களில் பாய்;ச்சிய நீர்ää வேறுகள்ள வழியாக ஓடி வடிந்து விடுவதைää கிராமத்தில்ää ~நட்டுமை போயிருக்கிறது| என்பர்.
     
    இந்த நட்டுமை என்ற சொல்லை அதி அற்புதமாகக் கையாண்டு பாவலர் இதனைப் படைத்திருக்கிறார். இயல்பாக வந்து விழும் கிராமியத்தமிழ் மணக்கும் அக்கவிதையிலிருந்துää:-



புள்ளட வாப்பா.! நமக்கிந்தப்
போடியார்க்கிட்ட வெள்ளாமை வேணா
வெள்ளன சுபஹ{ல வந்தான்
உங்கள விசாரிச்சான்..இல்ல எண்டன்
வள்ளெண்டு நம்மட நாயும் குலச்சிச்சி
வாசல்ல நிண்டவன் உஞ்சில்ல குந்திட்டான்
வெள்ளாமைக்கி ஒரு ஆள் வைக்கப் போறானாம்
விருப்பமாம் உங்கள்ள இஞ்சப் பாருங்க

கொள்ளயாக் கதச்சாங்கா அந்த ஆள்..
கோபம் எண்டால் பத்திக்கு வந்திச்சு
பிள்ளையொண்டுக்கும் சுகமில்லையாம்- அவன்ர
பெண்டாட்டியும் அவட உம்மாட ஊட்ட போறாவாம்
வெள்ளிக்கிழமை அதுதான் நாளைக்கி மத்தியானம்
வீட்ட வரட்டாம் ஒரு வேலை இரிக்காம்
கள்ளச் சிரிப்பும் அவன்ர கால்ல ஒரு சப்பாத்தும்
வெள்ளாமைக்காரன் பொண்டாட்டி எண்டா என்ன
வேசி எண்டா இந் நாய் நெனச்சான்..?

-பாவலர் பஸீல் காரியப்பர்.
(நட்டுமை போகவில்லை.-1978)


    ~இன்சுரங்கள்| கவிதைää ஓர் ஆண்ää ஒரு பெண்ணிடம்ää தேடுவதைப் பலாத்காரமாய்ää பெற விரும்பாதுää அன்பினால்ää அடைவதைப் பாடுவது. ~கனிந்த நிலை| கவிதையில்ää தன் வளவில் காய்த்தää பலாப்பழத்தைத் தருவதாகச் சொல்லி ஏமாற்றிய பெண் அதன் காரணத்தைக் கூறுவதாக அமைந்துள்ளது. இக்கவிதையில்ää அப்பெண்ணின் கண்களுக்கு உவமை கூற வந்த பாவலரின்ää வரிகள்ää-  ~..நெல்மணிகள் இரண்டுää- அளவாக நீண்டுஅகன்றுää- நெற்றிப்புருவம் என்னும் கரியகுடை நிழலில்ää-  மெல்ல உமிகள் பிரிக்க.- நேர்நோக்கி..ச் சொன்ன பாங்கையும்ää சீதனம் என்னும் கொள்ளை விலை சொல்லி இப்பழத்துக்கு விலை கூறின்ää அநியாயமாய்ப் புழுத்துவிடும் என்று சுள்ளென்று குத்தும் பலாப்பழ முள்ளொன்றாய்; எனää உவமித்த பாவலரின் ~மறையழகு|தான் என்னே..!

     பாவலரின் வீட்டு வாசலில் அடிக்கடி காணப்படும் மலர் வகைகளில்  சிவப்பு ரோஜாவும் ஒன்று. தினமும் விடியலில் இதன் முகம் பார்க்கும் பாவலர்ää இப்பூவின் குறுகிய கால வாழ்வை எண்ணிப் பச்சதாபமுறுகிறார். அந்த அழகின் பின்னணியில்ää ~குறுகிய வாழ்வு நீடித்த புகழ்| என்ற கருத்தியலை ஆழக் கருத்தில்ää சொன்ன கவிதைää  ~எண்ணம் இருக்கை தரும்| என்பது. அத்துடன் மனித வாழ்வினையும் இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்து பாவலரின் மனத்தோப்பில்.  ப10க்க வைத்த ரோசாப்ப10த் தமிழ்க்கவிதையின் வாசனை வரிகள் இவை.:-


வண்ணச் சிறு பூவே..! எங்கள்
வாசல் கதவின் அருகில் மலர்ந்துள்ள
வண்ணச் சிறு பூவே..!

சின்ன இதழ்கனைச் சீராய் அடுக்கி
சிவப்பு நிறம் படைத்தாய்..! மணச்
செண்டும் தடவிக் கொண்டாய்!  உன்னைக்
கண்டு மயங்குகிறோம்
எங்கள் வண்ணச் சிறு பூவே..!

இன்னும் சில நாள் இருப்பாய்! இலாவிடில்ää
இன்றே மடிந்திடலாம் எந்தன்
எண்ணம் இருக்கை தரும் நீ அதில்
என்றும் நிலைத்திருப்பாய்
எங்கள் வண்ணச் சிறு பூவே..!

-பாவலர் பஸீல் காரியப்பர்.
(எண்ணம் இருக்கை தரும்.- 1978)
(சஞ்சாரம் தொடரும்..)



No comments:

Post a Comment