Saturday, July 4, 2015

05- மனிதருக்காய் தேய்தல் மகிழ்ச்சியே ..

05-   மனிதருக்காய் தேய்தல் மகிழ்ச்சியே...



என் சிறு ஆற்றலினால்ää இங்கு இனியவை பண்ணிடுமுன்
என்னை அழைக்காதே நான் உயிரைத் தரமாட்டேன்..
-பாவலர் பஸீல் காரியப்பர்.



    பாவலர் பஸீல்காரியப்பர். 1963ல்.  நீலாவணன் இலக்கியப் பேரவையினால்ää வழங்கப்பட்டு வந்த கவிதைத்துறைக்கான பரிசை தனது ~பாதுகை| என்ற கவிதைக்குப் பெற்றார். 1964ல்ää பேருவளை மாளிகாஹேன பாடசாலையில் கற்பித்துக் கொண்டிருந்தார். டுவைவடந வுhiமெ (கூட்டுறவு) விவேகியில் பிரசுரமானது. இக்காலகட்டத்தில் ~இல்லா இடம் நோக்கி|ää   ~எனக்குஒருதேவை.|  ~அரியபிறப்பு|  ஆகிய அரிய கவிதைகளைப் படைத்தார்.

மருதூர்க் கொத்தன். வீ.எம். இஸ்மாயில்.

~~..பஸீல்காரியப்பர் அன்றும் இன்றும் எந்த யாப்புக்கும் சேவகம் செய்யாமல்ää சுயமான பாணியில்ää எழுதுகிறார். அவர் கவிதையில் நவமான யாப்புக்களை உருவாக்குகிறார். நறுக்குத் தெறித்தது போன்ற சிக்கனமான சொற் சேர்க்கைக்குள் அழகையும்ää இனிமையையும்ää உயிர்ப்பையும்ää சிறைப்பிடிப்பது இவரது தத்துவம்.  ஆரம்பத்தில்ää ஆன்மீக உணர்வோடு எழுதிக் கொண்டிருந்த இ;ந்த மனிதாபிமானப் படைப்பாளி  இன்று வர்க்க உணர்வுடன் எழுதிக் கொண்டிருக்கிறார்..||

பாவலரின்ää ~இல்லா இடம் நோக்கி..| எனும் கவிதையானதுää ஓரிடத்தில் காற்று அல்லதுää தண்ணீர் குறைந்தால்ää அந்த இடத்திற்கு எங்கிருந்தும்ää வேகமாய் விரையும் காற்று அல்லது தண்ணீர் போலää இல்லாத மனிதரிடத்தே விரைதல் வேண்டும் என்று ஆதங்கப்படும்  பாவலரின் மனநிலையைப் பேசுவதாகும்.

தொட்டில் தேங்கிய நீரினைப் போக்கியே
துப்புரவாக்கிடச் செல்கிறேன் செய்கிறேன்
மட்டம் குறையினும் பாத்திரம் கொண்டு நான்
வெட்டி எடுத்த வெறுமையைக் காண்கிலேன்

இல்லா இடத்திற்கு ஏகிடும் நீரென
நல்மனம் கொண்டவர் நம்மில் பெருகவே..!

-பாவலர் பஸீல் காரியப்பர்;.
(இல்லா இடம் நோக்கி..: -1963)


~கலாபூஷணம்.|  கவிஞர். ஏ. இக்பால். 

   ~~......அவருடன்ää அன்பும்ää அமைதியும்ää இன்புறும் வகையில்ää அமைந்து நின்றன.. சிந்தனை எங்களை இறுக்கி வைத்தது. இலக்கியம் சார்ந்தவைää தேடுதல் செய்வதில்ää இருவரும் ஒருமித்துää ஒருவழி நின்றோம். பாவலருக்கும்ää என் பாவினங்களுக்கும்ää காவியே நிற்கும் கற்பனைகளுக்கும்ää மேவிடும்ää இலக்கிய மேன்மைகளுக்கும் வரலாறுண்டு. என் வரலாற்றிலேயது திறனாய் அமையும்..||

பாவலரின்ää ~எனக்கு ஒரு தேவை| கவிதைää அன்பு முகிலினால்ää நெஞ்சம் கனத்துப் போன மனிதனுக்குää அதனை எங்காவது உளமாரப் பெய்து விடல் வேண்டும் என்ற இதய வேட்கையைக் கூறிää அன்பு மழையை  ஒரு பெண்ணுயிர் மீது பொழிந்து விடுவதில் உருவான உணர்வுகளைப் பாடுவதாகும்..  

     ~மனிதருக்காய்த் தேய்தல் மகிழ்ச்சியே..| என்ற பாவலரின் சிந்தாந்தத்தின் கருவை வைத்துää அவர் படைத்த ~அரிய பிறப்பு| எனும் கவிதைää உருத்தெரியாது தேய்ந்து போகும்ää ஒரு எளிய செருப்பின்ää சுயபாடலாக எழுதப்பட்டுள்ளது:-

.........................................
என் எஜமான் என்னை
இழுத்தரைத்துத் தேய்க்கின்றார்
என்றாலும் நான் எள்ளளவும்
ஹிம்சை எனக் கொண்டதில்லை


புனிதர்கள் வழியில் தூய
பணிகளைச் செய்யம் இந்த
மனிதருக்காய் தேய்தல்
மகிழ்ச்சி நான் பெற்ற வரம்.

என்றே தொழும்பள்ளி
ஏறுவாயில் தனிலே
அன்று செருப்பொன்று
அடியேன்தனைப் பார்த்து
மெல்ல நகைத்ததடா
மின்னியதோர் ஒளிக்கீற்று.

உள்ளே இருக்கும் அந்த
ஒரு மனிதருக்காகவேனும் அந்தப்
பள்ளி மகிழ்ந்திருக்கும்
பணிசெய்யக் காத்திருக்கும்
செருப்பு அரிய ஒரு பிறப்பு..

-பாவலர் பஸில் காரியப்பர்
(அரிய பிறப்பு. 1963)

     1965.ல்ää ~தூரத்து நாதம்| பாடல் அவரால்ää யாக்கப்பட்டது.  1966.ல்ää ~கண்ணூறு| எனும் தலைப்பிலான தலைப்பிலான ஒரு கவிதையை எழுதினார். இக்கவிதை தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது.  இதுவே பிற்காலத்தில்ää ~அழகான ஒருசோடிக் கண்கள்|  என்ற  ஜனரஞ்சகப் பாடலானது. (இதுபற்றிய விரிவான தகவல்களை இத்தொடரில் பின்னர் கூறப்படும்.)

இறைநாதத்தை வேட்கையுற்றுää அதனைக் கேட்க எத்தனிக்கும் ஒரு ஆத்மீகச் சாதகனுக்குää இவவுலகத்தின்ää சத்தங்கள் ஊடுருவி அலைக்களித்துச் செய்யும் துன்பங்களையும்ää ~~..அமுத இசையுள் நான் ஆழ்ந்துவிட ஒண்ணாதோ..?||  என்ற ஏக்கத்தையும்  ~தூரத்து நாதம்| என்ற கவிதையில் அழகுறச் சொன்ன அந்த வண்ணத் தமிழ்ப் பாவலனின்.ää வனப்புவரிகள் இவை:-
.........................................
தூரத்து இசைத் துளி என்
செவியில் கலக்கையில்.. ஏன்
யாரிவரோ கூடி அதை
அலைக்கழியச் செய்கின்றார்
செவியினையே நீட்டுகின்றேன்
சே;சசே.. எங்கே அது
இவர் கூச்சல் ஓயாதோ
இனிமையிலே ஒன்றி விட..?

கூவும் குயில் இசைத்தேன் குழைத்துத் தருகையில் ஏன்
பாவக்குரல் எழுப்பிப் பாதகத்தைச் செய்கின்றார்..

சித்தம் ஒரு முகமாய்ச்
சேர்ந்து லயிக்கையில் ஏன்
கத்திக் கருச்சிதைக்கக்
காதருகே வந்தனரோ..?

அண்ட சராசரத்தை ஆளும் ஒலி என்றாலும்
அண்மை இரைச்சலினால் அதில் ஒண்றாதிருப்பதுவோ..?

பக்கத்து நச்சரிப்பின்
பழிசிறிதே என்றாலும்
சொக்கும் இசையலையின்
தொடர்பை அறுக்கிறதே..

அமுத இசையுள் நான் ஆழ்ந்துவிட ஒண்ணாதோ..?

-பாவலர் பஸில் காரியப்பர்.
(தூரத்து நாதம்.- 1965)
(சஞ்சாரம் தொடரும்)

No comments:

Post a Comment