Saturday, July 4, 2015

என்னுரை--- பாவலர் பஸீல் காரியப்பர்

ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது 




வெளிவராத பாவலரின் மணிவிழா மலர்     பாவலரின் இளமை தோற்றம்  

---------------------------------



பாவலர் பஸில் காரியப்பரின் படைப்புலகில் சஞ்சரித்தல்
என்னும் இத் தொடரானது பாவலரின் படைப்புகளையும்
 அவரது வாழ்வியலையும் ஒருங்கே சித்தரித்து
என்னால் எழுதப்பட்டது.

இது  பாவலரின் மீது மிகப் பற்றுதல் கொண்ட
 நண்பர் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின் உதவி ஒத்தாசையின் மீது
இலங்கையின் விடிவெள்ளி பத்திரிகையில்
ஒரு தொடர் விவரணமாக
கடந்த 23.04 2009 தொடக்கம் 25.06.2009 வரை
முதல் பத்து  தொடர்கள் வெளியானது..

 முதல் பத்து தொடர்கள் பிரசுரமானதுமே பாவலரின் மீதோ அல்லது எழுதிய என் மீதோ காழ்ப்புணர்வு மீக்குற்ற நமது இலக்கிய பிரமுகர் ஒருத்தர் பத்திரிக்கை காரியாலயத்திற்கு நடையாய் நடந்து
கோளுக்கு மேல் கோள் சொல்லியும்
கோலுக்கு மேல் கோல் போட்டு பேசியும்
விடாப்பிடியாக இத்தொடரை நிறுத்தி விட்டார்.

இதல்லாம் இலக்கியத்தில் சகஜமப்பா
என்று நாமும் அதை விட்டு விட்டோம்.

ஆயினும்
பாவலரின் புகழையோ அவரது படைப்பாற்றலையோ
மழுங்கடிக்க முடியவில்லை. இன்றும் பாவலர் வரலாற்றில் வாழ்கிறார்.
மழுங்கடிக்க முயன்றவர் மங்கிப் போனார்.

ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது
என்ற இத்தொடரை இத்தளத்தில் முழுமையாக
வாசிக்கலாம்.
பாவலர் பஸில் காரியப்பரின் படைப்புலகில் சஞ்சரிக்கலாம்
வெகு சுதந்திரமாக...

00

தீரன் .. ஆர்.எம். நௌஸாத் 
௦௦

பாவலர் - இளமைத் தோற்றம் 





No comments:

Post a Comment