Saturday, July 4, 2015

06- பிள்ளை முகம் நீ தருவாய்



@-06-   பி;ள்ளை முகம் நீ தருவாய் .



கண்ணாடியில் முகத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும்.
காட்சிää  மனதில் ஒரு நிறைவைத் தர வேண்டும்.
-பாவலர் பஸீல் காரியப்பர்.


    பாவலர் பஸீல்காரியப்பர்.! அவர்கள்ää   ஒரு மலடியின் ஏக்க உணர்வை நாட்டார்பாடல் பாணியில் பாடுவது ~தாய்மையின் தாகம்| பாடலாகும். இப்பாடலில்ää கிழக்கின் பல ஊர்களின்ää சிறப்பியல்புகளும்ää ஒப்பீடுகளும்;ää உவமைகளும்  செப்பமுறச் செதுக்கப்பட்டுள்ளன.  ~கரைவாகுவட்டை -நெற் கதிர்போல -என்மடியை நிறைவூட்டும் -பி;ள்ளை முகம்- நீ தருவாய் ஆண்டவனே..!| எனத் தொடங்கும்ää ஏக்க வரிகள்ää ஒவ்வோர் ஊருக்கும் செல்கிறது..

அறுகம்பைத் தேன்ää காத்தாங்குடிப் பிடவைää பள்ளவெளிப் பால்ää கல்லோயாக் கரும்புää மட்டுநகர் வாவி மீன்கள்ää மருதமுனைச் சாரன்ää அக்கரைப்பற்றுக் கவிää சவளக்கடை அரிசிஆலைப் புகைää வாழைச்சேனை வைக்N;கால்ää சம்மாந்துறை அரிசி போன்ற சிறப்பியல்களும்ää இரும்புப் பால்ää கூறைப்பிடவைää அரைமூடிää அரைஞாண்ää காதுகுத்துää குரவைää தமிழ்புகட்டல்ää கண்ணூறுநாவூறுää பெட்டியிழைத்தல்ää குஞ்சுபிடி மாங்காய் சதங்கைää வெள்ளிஞாண்ää கற்கன்பாய்ää புற்பன்தட்டுää வார் அணிதல்ää  வாதுக்குரவையிடல்ää போன்ற கிராமியப் பண்பாட்டுக் கூறுச் சொற்களும் மிக இயல்பாகப் பொருந்தி வரும்வண்ணம் அமைத்து அதன் உடாகää  தாய்மைக்காக ஏங்கும்  ஒரு பெண்ணின் மனதைää ~சவளக்கடை அரிசி ஆலைப்- புகைப்போக்கி- கவலை மிகுந்த மனக்- கருகலினைக் கக்குவதோ..?| எனப் பாவலர் அமைத்துள்ள முடிவு வரிகள் தாம் எத்துணை உணர்வுடையன..!

தாய்மையின் சிறப்பைப் பாடுவதுää ~அன்னை| கவிpதையாகும். இது எக்காலத்திற்கும் உரிய கவிதையாகும்.. அன்பைத் தேடுவோரின் கடைசியும்ää முதலுமான இருப்பிடம்ää அன்னையின் காலடி நிழலே.. என்பதை அழகுற இசைப் பாடலாக இதில் பாவலர் பாடியிருக்கிறார்.

1974 களில் ஆண்ட சுதந்திரக்கட்சி ஆட்சிக் காலத்தில்ää நெல் விளைச்சல்களை அந்தந்த மாவட்டத்தினுள்ளே களஞ்சியப்படுத்தும் திட்டத்தின் கீழ்ää சாலைகளில்ää அரசினால்ää வீதித்தடைகள் போடப்பட்டு. விளைச்சல்கள் வெளிச்சென்று தனியாருக்கு விற்கப்படுதல் தடுக்கப்பட்டது. ஊழல் எங்குதான் இல்லை..?  கூலிக்கு நெல் குற்றிப் பிழைக்கும் ஒரு கைம்பெண்ää அரை மூடை நெல்லை தடை கடந்து கொண்டு செல்வதை தடுக்கின்ற வீதித்தடைக் காவலருக்குää  கையூட்டுக் கொடுத்து இலகுவாகää லொறி நிறைந்த மூட்டைகளுடன்ää தடைதாண்டும்; பெரிய மனிதர்கள்(?) பற்றி நையாண்டித் தனமாகச் சீறும் கவிதை ~தன்பலப்பு|

~..வியர்வை மணி அணிந்தவனின்ää - விழி பனித்தால்ää - இங்கு வெகுண்டெழுந்தே சமர்க்களத்தில்ää - பொருதி வெல்லும்ää - உயர் மனிதன் உடல் தனிலேää - பெருக்கெடுக்கும்ää சிறு இரத்தமணியாக..| யாக  தான்ää ஆதல் வேண்டும்ää என  அவாக் கொள்ளும் பாவலர்ää வாள்வீச்சுத் தமிழில் வீசியää வரிகள்தான்ää  ~இரத்தமணி| என்ற கவிதை. 

வயற்காட்டில்ää நடை பயிலும்ää ஒருகிராமியப் பெண்ணின் நடையழகை வயோதிப மனதுடன்ää தன் மருமகளாக எண்ணி இரசிக்கும் மனப்பாங்கைää ~~முக்காட்டுத் தொங்கலோடு - முன் உசப்பில் கை இருத்தி - சொக்குகளில் மேயும் - சுடர் விழியைப் பாதி செய்து - வக்கா வரம்பில் - வடிவெடுத்து நடப்பது போல் - சேலை சிக்கி நடை பயிலும் சிறுக்கி - என் மூத்த மகன் - உன்னை விரும்புவதாய் - ஒரு வார்த்தை சொன்னால் நான் - இன்றே உன் வீடு வந்து - இணக்கத்தைக் கேட்டிடுவேன்..|| என்றுää வித்தியாசமாக விபரித்த கவிதை ~சிறுக்கி|.

காதணிக்குப் பதிலாகää காது ஓட்டைகளில்ää ஒரு குச்சியைää நுழைத்து வைத்துக் கொணடிருக்கும் ஒரு சிறுமியின் வறுமை நிலையைக் கூறுகிற ~நிச்சயம்| கவிதையில்ää ~நிச்சயம் ஒருநாள் காதணி வரும்- அப்போதும் உன் காதுகளைக் காண ஆசைப்படுகிறேன்..| என்று பாவலர் இரங்கியிருப்பதும். அக்கவிதை சொல்லப்பட்டிருக்கும்  கட்டிறுக்கமான பாணியும் எந்தக் கல்மனதையும் இரங்க வைக்கக்  கூடியது.

வெற்றிலைக் கொடி ஒன்றைத் தேடிப் பெற்று அதைப் பாக்கு மரத்தடியில் பதித்துப் படர விட்ட பாவலர்ää பின்னர்ää அவ்வெற்றிலைக் கொடி தந்த வீட்டுக்குப் போன சமயம்ää அன்பளித்த பெண்ணாள்ää அக்கொடியை நலம் விசாரித்ததும்ää இவர்ää ~கொடி வாடவில்லை| என்றதும்ää அப்பெண்ää ~மண்ணுக்கும் கொடிக்கும் உறவு. இனி இனிக்கும்..- என்று சொல்லிச் சிவந்தபடி- என்னை விட்டு ஓடுகிறாள் ஏன்..?| என்று குறும்புடன் நம்மைக்கேட்டு வசீகரிக்கும் கவிதைதான்   ~உறவு!|

முது தம்பதிகளின் தாம்பத்தியம்ää பற்றிய  ~சரிசிரி| எனும் கவிதையில்ää  முது தம்பதிகளின் உடலுறவு சில ~நிலைமை|களால்ää முடிவுறுத்தப்படும் போதுää ஆரம்பிக்கும்ää  அந்த விரும்பம்பத்தகாத பிரிவைக் களிவிரக்கத்துடன் பாடியிருக்கிறார் பாவலர். ~~உன்னுடைய அணைப்பிற்குள்- நான் உறைந்திருக்கும் போதும்- என் கண்கள் கசிந்து சுரப்பதற்குக்- காரணம் கேட்காதே-  என் உயிரில் உரம் பாய்ச்சும் - உன்னை ஒரு பாதியாய்க் கொண்ட- நிறைவு பிழிந்த அமுதத் துளிகள் அவை- வார்த்தைகளுக்குள் அடங்க மாட்டாது- வா! சரி! சிரி!||

~பிரியம்| கவிதை பாவலர்ää தான் உருவாக்கிக் கொண்டிருக்கும் உள்மனிதனின் குணாதிசயங்களின்ää தொகுப்புக் கவியுரையாகும். ~மன்னிக்க வேண்டும்.| என்ற கவிதையில்ää  தனது உயிரை எடுக்க வரும்ää கால தூதனிடம் தனது ஆட்சேபனையையை வன்மைத் தமிழில்ää தெரிவிக்கிறார் பாவலர். ~~.இப்போது உடனேää! புறப்பட்டு வர முடியாது-  மன்னிக்க வேண்டும்-  துப்புரவாக வேண்டும்! முழுகி உடைகள்-  துவைத்து உலர்த்தி அணிதல் வேண்டும்...|| என்று தொடங்கிää உயிரைத் தற்சமயம் இழக்க முடியாமைக்கான காரணங்களையும்ää மரணத்தின் முன்  செய்ய வேண்டிய ஆத்ம ஆயத்தங்களையும்ää ஞானத்தமிழ்நடையில் இசை கலந்து பாடியிருக்கிறார். ~~என் இனிய ஆத்மக் கலப்புகளோடு-  மனம் புணர வேண்டும் - மகிழ்ந்திருந்த சம நிலையின் பின்னர் -  அவர்கள் என் முன் நடந்து -  முறையாக வழியனுப்பும் -  அப்போதுதான் எனக்கு ஆசை வர! - அதனால் இப்போது உடனே புறப்பட்டு வர முடியாது - மன்னிக்க வேண்டும்.||

இப்படிää எளிமையைத் தன் ஆடையாகவே அணிந்து கொண்டிருந்த பாவலரின்ääää அந்த ஆடைக்குள் எப்போதும்ää ஒரு சிறுகத்தி தயார் நிலையில் மறைந்திருக்கும் என்பது அவரது நெருங்கிய அபிமானிகளுக்கு நன்கு தெரியும். தற்காப்புச் சண்டை பயிற்றுநரான பாவலர்ää கத்தி வைத்திருப்பதைää ஒரு நபிவழிமுறையாகக் கருதி கண்டிப்பாக பின்பற்றி வந்தார். ஆளடையாள அட்டையைக் காட்டச் சொல்லி வற்புறுத்தியää ஒரு பிரதேசச் செயலாளரிடம்ää  ~தொப்பி எனது ஆடை.! கத்தி எனது ஆயுதம்!!  வேறு ஆளடையாளம் எனக்கில்லை..||  எனப்  பாவலர்ää  தனதுää அடையாளத்தைக் காட்டியது பற்றிய சம்பவங்களைப் பாவலர்ää கடற்கரை உரையாடல்களில் கூறியிருக்கிறார். 

இப்படி ஒரு சமயம்ää பாவலர்ää வயல்வெளியிலுலாவுதலின் போதுää அனுபவித்த சம்பவம் இதுää  கிராமியப் பெண்கள் நெற்கதிர்களை அடிக்கும்ää ~கதிரடிக்கும் கம்பை| ஒருத்தன் தன் காலால் மிதித்திருந்ததைக் கண்ட ஒரு பெண்ää அவனது இந்த ஈனச் செயலையிட்டுக் கோபித்துää எழுந்துää ஏசினாள். இப் பெண்ணின் ~தொழில்பக்தி|யையும்ää ~தொழிற்தூய்மையை|யும்ää பார்த்துப் பாவலர்ää வியந்து போய்ää அந்தப் பெண்ணின் வித்தியாசமான துணிகரத்தைää அவளது கிராமியத் தமிழ்உளியால்ää செதுக்கி எடுத்தää   ~இரணக்கோல்|  கவி வரிகள்p இவை:


காக்கா.! அக்கம்புதன்னைக்
காலால் மிதிக்காதேää
ஏக்கம் மிகுந்த எங்கள்
இரணக்கோல்! கதிரடிக்கும்ää
கம்புதான் எங்களினைக்
காக்கும் படைää அதுவேää
நம்பிக்கை தரும் ஒரு கோல்
நாளை சில பேர்க்குச்
சூட்டுக் கோல் ஆகிடலாம்.
சுரணை வரு மட்டும் எங்கள்
பாட்டைச் சுரண்டுபவர்
பழிவாங்கப்படுவர். இந்
நீட்டுக்கோல் அவர்களது
நெஞ்சைத் திருத்திடலாம்.
காட்டாதே பல்லைச் சேää!
காக்கா உன் காலை எடு.!

-பாவலர் பஸில் காரியப்பர்.
(இரணக்கோல்.  1974)

(சஞ்சாரம் தொடரும்)

No comments:

Post a Comment