Saturday, July 4, 2015

19- தூரம் தொலை போகிறேன்

19-.   தூரம் தொலை போகிறேன்...



“இல்லா இடத்திற்கு ஏகிடும் காற்றென
நல் மனம் கொண்டவர் நம்மில் பெருகவே..
  பாவலர். பஸீல் காரியப்பர்.



பாவலர் பஸீல்காரியப்பர். 2002.ல்ää சாய்ந்தமருது ~அபாபீல்கள் கவிதா வட்டத்தின்| பிரதம ஆலோசகராகப் பொறுப்பெடுத்தார்.  தனதுää ஏனைய படைப்புக்களை இவ்வட்டத்தினூடாக நூலுருப்படுத்தும்ää ஆரம்ப முயற்சிகளுக்கு அனுசரணையாக விருந்தார். இ;வ்வேலைத் திட்டங்களின் போதுää பாவலருக்குää அவ்வட்டத்தினரால்ää “தென்கிழக்கின் தேசகவி” என்ற விருதுப் பதாதை வழங்கப்பட்டது. இதுää கல்முனைக்குடி முதலாம் பிரிவு கடற்றொழிலாளர் சங்கத்தின் திறந்தவெளிப் பொதுக் கூட்டத்தில்ää அவர்களின்ää அனுசரணையுடன்ää ‘கடற்கரையில் உரையாடலின்பம்’ நிகழ்வில்ää வழங்கப்பட்டது. விருப்பின்றி இப்பதாதையைப் பெற்றுக் கொண்ட பாவலர்ää “உங்களுக்காக இதனை ஏற்றுக் கொண்டாலும்ää இதனை வெளிப்படையாக ஊடகங்களில் பாவிக்க வேண்டாம்.” எனக் கட்டளையிட்டார்.

எனினும்ää பாவலருக்குää  ஒருää மணிவிழா ஒன்றைப் பெருவிழாவாகச் செய்யவும்ää இதற்காகää ஒரு பாரிய மலர் தயாரிப்பு வேலைகளிலும்ää ஈடுபட அச்சமயம் முடிவெடுக்கப்பட்டது. இதற்கெனää பற்பல குழுக்கள் அமைக்கப்பட்டன. குழுக்களின் தலைவராக சமாதானக் கல்வி அதிகாரி கவிஞர். எஸ்.எம்.எம். றாபீக் அவர்கள் பாவலரால் நியமிக்கப்பட்டார். எல்லாக் குழுக்களினதும்ää இணைப்பாளராக என்னைப் பாவலரே நியமித்த போதும்ää  அவரதுää வழமையானää  ‘திடீர் முடிவு” காரணமாக அடுத்த வாரமே இக்குழுக்களின் வேலைகள் யாவும் உடனடியாக இடை நிறுத்தப்பட்டன.

        எனினும்ää சில காலங்களின் பின்னர்ää படித்தமட்டத்து அபிமானிகள் சிலரால்ää இறுதியாகää ஒருவழியாக அவரது சம்மதத்துடன்ää ஒரு பாரிய மணிவிழா செய்ய உத்தேசிக்கப்பட்டுää உடனடிச் செயலில் இறங்கியது. மலரும்ää நிகழ்ச்சி நிரல்களும்ää தயாராகின. ஆரம்பத்தில் இருந்தேää பாவலர் இவ்வேலைகளைக் கவனத்துடன் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.  பாவலர் என்ற தலைப்புடன்ää கல்முனை ருத்ரா அவர்கள் வரைந்தää வெகு அருமையான பாவலரின் முக ஓவியத்துடன்ää இம்மலர் மலரவிருந்தது. இம்மலர் வெளியீட்டுக் குழுவில்ää பன்னூலாசிரியர் ஹாஜி.உஸ்மான் ஸாஹிப்ää ஜனாப். எம்.ஏ. கலீலுர்ரஹ்மான் டீளுஉ ஜனாப். ஏ.எல். அப்துல் மஜீத் டீடீயு. ஆகியோர் இருந்தனர். இதனைத் தயாரித்த குழுவினர்ää தமது உரையில்ää

“………..அரசாங்கத்தாலும்ää தனிப்பட்ட மேட்டுக்குடிகளினாலும்ää அளிக்கப்படவிருந்த பட்டம்ää பதவிகளை வெறுத்துää பிரமுகர்கள் வரிசையை விட்டும்ää கீழிறங்கி மக்களோடு இரண்டறக் கலந்துää எம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும்ää இந்த மக்கள் கவிஞனுக்காகää நாமெடுக்கும் முயற்சி சரியானதும்ää மிகமிகப் பொருத்தமானதென்றும் எமக்குப் படுகின்றது. இந்த எண்ணக் கருக்கள் உருவாவதற்குக் காரணங்கள் பலவுள. பாவலரின் ‘ஆத்மாவின் அலைகள்’ என்ற கவிதைத் தொகுப்பை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மிக விமர்சையாக வெளியிட்டதும் ஒன்று. அந்நூலுக்கு ஓர் அறிமுக விழா அவர் வாழும் இம்மண்ணில் நடத்தப்படவேண்டும் என்பதும்ää இம்மக்களின் அவா. இந்த வேளையில் பாவலருக்கு வயது அறுபதைத் தாண்டிக் கொண்டிருக்கிறது.  அதாவது வாழ்வின் மதியத்தையும் தாண்டிää அந்திப் பொழுதை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றார் அவர். எனவே ‘மணிவிழா வேண்டும்’ என்ற கோஷமும் ஒலிக்கத் தொடங்கி விட்டது.  இப்படியான ஒரு சூழலில்தான்ää இலக்கிய ஆர்வலர்களும்ää இப்பகுதி மகாஜனங்களும்ää ஒருங்கு கூடி இந்த முடிவினை எடுத்தார்கள்.

வலியத்தேடி வந்தனவற்றில்ää தன் மனமொப்பாதனவற்றையெல்லாம்ää வேண்டாம் என வெறுத்துää நிற்கின்ற இவர்ää தனிநபர்-சிலர் என்றில்லாமல்ää ஒரு கணிசமான மக்களின்ää கனிவு நிறைந்த வேண்டுகோளுக்கு இசைய வேண்டியதாயிற்று…..”


தடல்புடலாகவும்ää உற்சாகமாகவும்ää ஆரம்பிக்கப்பட்ட விழா வேலைகள்ää ஒருநாள்ää பாவலரின்ää தடாலடியான ஒரு முடிவினால்ää ஸ்தம்பிதமடைந்தன.  எத்தனையோ செலவினங்களின் மத்தியில் துவங்கப்பட்ட விழாவை சட்டென இடைநிறுத்துமாறு உத்தரவிட்ட பாவலர்ää அதுபற்றிய கவலையின்றிக் கடற்கரையில் உரையாடலின்பத்தில் திளைத்துக் கொண்டிருந்தார். 

இதன் பின்னணிக் காரணங்கள் அநேகம் இருந்த போதிலும்ää பாவலர் வாழும் காலத்தில் அவருக்கு ஒரு பாரிய விழாச் செய்ய வேண்டும் என்று முன் வந்த மக்களின் அன்பை எண்ணி பாவலர் மனம் கசிந்துருகினார். ஆயினும்ää விழாவையும்ää மலர் வெளியீட்டையும் அவர் இறுதிவரை அனுமதிக்கவில்லை. இதனால்ää நண்பர்களின் மிகப் பெரும் வற்புறுத்தலுக்கு ஆளானார்.  எமது அபாபீல்கள் கவிதா வட்டத்தின் சார்பில் இதற்கு அளித்த ஒருதொகை நிதியும்ää வீணாகிப் போயிற்று.  இதனால்ää மனம் கசந்து போய்ää நானும் கூடப் பாவலரை அவரது முகத்தினெதிரேää கடிந்து பேசிவிட்டேன். தவிரவும்ää  பாவலரின் துணைவியார்ää புத்திரிகள்ää  கூட இவ்விழாவுக்கு அவரது ஒத்துழைப்பைப் பெற மிகவும் வற்புறுத்தினர். இந்த சம்பவங்களால். சிறிதுää மனஅமைதி பாதிக்கப்பட்ட பாவலர்ää மறுபடியும்ää ‘மறைந்துறைதலுக்குத்” திரும்பினார்.

    இறுதியாகää (ஆறு மாத காலம் நான் அவருடன் ஊடலாகவிருந்த போதிலும்ää) 2002ல்ää என்னை அழைத்த பாவலர்ää தனது வீட்டில் வைத்துää நிகழவிருந்த மணிவிழா பற்றி மிக நீண்ட நேரமாகக் கதைத்தார். தன்னுடைய திடீர் முடிவினால்ää எத்தனையோ அபிமானிகளும்ää மலர்ää மணிவிழாக் குழுவினர் அனைவரும்ää பாதிக்கப்பட்டிருப்பார்கள்தாம். ஆயினும்ää இதை இடைநிறுத்தும்ää தனது முடிவில் எவ்விதமான மாற்றமும் இல்லையென்பதையும்ää சில புறக் காரணங்களையும் விபரித்தார். அவர் பேசினால்ää யாரால் மறுத்துரைக்க முடியும்..?

ஒருவாறாகää ‘;பாவலர்’ என்ற அம்மலரின்ää மீள்திருத்தப் பணிகனை என்னிடம் ஒப்படைத்தார். ‘ஆத்மாவின் அலைகள்’  புத்தகத்தின் அட்டைப்படத்தை மாற்றுவது பற்றியும்ää அது அதிகமாக ஜனரஞ்சகமாக்கப்படாமை பற்றியும் பேசினார்.  பாவலர் ஒரு மக்கள் கவிஞனானதால்ää அவரது ஒரேயொரு நூலும்ää மக்கள்மயப்படுத்தப்படல் வேண்டும். ஆயினும்ää இது ஒரு படித்த அறிவுசார் மட்டத்துடன் மட்டும்ää நின்றுவிட்டதையும் எடுத்துக்கூறினார். கிராமத்தின் வீடுகளில்ää புழுதியில் ஓடித்திரியும்ää பிள்ளைகளும் என் பாடல்களைப் பாடுதல் வேண்டும். என்றும் அழகுற விபரித்தார். இது விடயமாகää சில தனிப்பட்டää அபிப்பிராயங்களைச் சொன்னார். இதன் பின்னர் அடிக்கடி பாவலரின் வீட்டிலும்ää கடற்கரையிலும்ää எனது அலுவலகத்திலும்ää ‘பாவலர்’ என்ற மணிவிழாமலரின்ää மீளாக்கப் பணியில் ஈடுபட முடிவெடுத்தோம்.

    ஆயின்ää 2004.ல்ää ஏற்பட்டää ~சுனாமி| ஆழிச்சீற்றத்தின் போதுää பாவலரின் வீட்டின் அரைப்பகுதி கடல்நீரில் மூழ்கியது. தெய்வாதீனமாக எவ்வித ஆபத்துமின்றி தனது மனைவி பி;ள்ளைகளுடன்ää தப்பிய பாவலர் தனது இலக்கியச் சேகரிப்புகள்ää அரிய புகைப்படங்கள்ää பெறுமதியான நூல்கள்ää கையெழுத்துப் பிரதிகள்ää அனைத்தையும்ää இழந்தார். 

    என்னிடம் பாவலர் ஒப்படைத்த சில கைப்பிரதிகளும்  மலர் திருத்தப் பிரதிகளும் தவிரää சுனாமி உப்புநீரிலிருந்து பெரு முயற்சியின் பேரில் மீட்ட ஒருசில நூல்களுமே இப்போது அவருக்கு எஞ்சியிருந்தன. இதனால்ää நான் கலக்கமுற்ற போதும்ää இது குறித்துää பாவலருக்கு எதுவித வருத்தமும்ää  இருக்கவில்லை. “ர்யிpலநௌள in நுஅpவiநௌள”  வெறுமையில் மகிழ்ந்திருத்தல். என்பதே ஒரு அலாதியான சுகம் அது ஒரு ஆத்மீகப் பயிற்சி.!”  என்று கூறிää என்றும்ää மாறாத அதே வெகுளித்தனமான புன்னகையுடன்ää ‘இருப்பதைச் செப்பம் செய்வோம். இனி ஒரு புது வழி புகுவோம். அதற்குத் திண்மையொடு நில் எங்கள் தீரமுள்ள வாலிபனே..!” என்று என்னை தைரியப்படுத்தினார்.

    ஆயினும்ää தனது இலக்கிய உடமைகளைச் சுனாமியில் இழந்து விட்டதனால்ää  மணிவிழா மலர்  வெளிவருவது தடைப்படும் அல்லது தாமதமாகும் என்பதில் உள்ளுர மகிழ்ச்சி கொண்டவராக இருந்ததாகத் தோன்றியது.
   
    தன்னுடைய இலக்கியப் பணிக்கான பற்பல பதிவுகளையும்ää சான்றாதாரங்களையும்ää  இழந்த பாவலர்ää வெகுநாளைக்குப் பின் 2005 டிசம்பர் 6ம் திகதிää  ஒரு இலக்கிய நிகழ்வில் பங்கு கொண்டார். அதுää ‘பாவலரும்ää தங்கம்மாவும்” என்றää தலைப்பில் ஒரு மாணவர் சந்திப்பாக அமைந்தது. இந்நிகழ்வில்ää உதவிக்கல்விப் பணிப்பாளர். வ. சுப்பிரமணியம்ää பீ.ஏ.ää ஆசிரிய ஆலோசகர் சத்தார் எம். பிர்தௌஸ்ää எம்.ஏ.ää ஆசிரிய ஆலோசகரும்ää பரீட்சைகள் திருத்தற் குழுத் தலைவியுமானää  ஜனாபா. ஹமீமா முஹைடீன்ää பீ.ஏ. ஆகியோரும் உரையாற்றினர். இந்நிகழ்வுää சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரிஅதிபர் கே.எல்.ஏ. தஸ_ல் பீ.கொம். தலைமையில் இடம்பெற்றது. மாணவர் சந்திப்பாக இது ஆரம்பித்தாலும்ää இலக்கியவாதிகளும்ää பொதுமக்களும்ää பெருமளவில் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சியை சம்மாந்துறை “பாவலர் பஸீல்காரியப்பர் ரசிகர் வட்டம்” சார்பாகää அதன்ää தலைவர்ää ஐ.எல். ஜலீல் ஜீ அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

 எவ்வாறாயினும்ää 2005 இறுதியில்ää முழு ஈடுபாட்டுடன்ää அவரது ‘பாவலர்’ மலர் மீள் திருத்தப் பணிகள் செய்யப்பட்டுää ஒருவாறாகää தெரிவு நிலைக்கு  வந்தது. ஏறக்குறைய பூரணமான மலராக்கத்தை கணிணியில் பதிவு செய்து கொண்டோம். அவரது இறுதிக்காலம் வரைää அவரது ஒத்தாசையுடன்ää இந்த வேலைகளைச் செய்து வந்தேன். இம்மலருக்குää  “பாவலர் பாமலர் என்று நான் தலைப்பு வைத்த போதுää பாவலர் சிரித்துää “ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது! என்ற தலைப்பை சிபார்சு செய்தார். இதற்கான அட்டைப்படத்தையும் கணிணியில் உருவாக்கி ஒப்படைத்தார். உண்மையில் இவ்வேலைகளின் போதுää இனி இவ்வேலைத்திட்டங்களை எக்காரணம் கொண்டும் இடை நிறுத்த மாட்டேன் என்று பாவலர் உறுதி மொழி அளித்திருந்தார். எனவேää அவரும்ää நாமும்ää மிக மகிழ்வுடன் இருந்தோம். இதன்போதுää பாவலருக்குää பல்ஈறுகளில்ää ‘பேத்தைக்கட்டு’ (முரசழற்சி) ஏற்பட்டுää  வாயும்ää கன்னமும்ää  சற்று வீங்கியிருந்தன. நெஞ்சடைப்பு நோயும் சற்று இருந்ததாகச் சொன்னார். இது விடயமாகக் கண்டிக்குச் சென்று மருத்துவம் செய்யவிருப்பதாகவும் கூறினார்.

மணிவிழாமலர் மெதுமெதுவாகத் தன் இறுதி வடிவை அடைந்து கொண்டிருந்தது. காலத்தோடு உரையாடும் அந்த தீர்;க்கக்கவிஞனின்ää தீர்க்கதரிசன வரிகளைப் பாருங்கள்..

“…காற்றென நீரெனக் காண மனிதரைக்
காத்துக் கிடக்கும் காலமே.. நாளை நீ
நேற்றுக் கண்ட மனிதரும் சாகுவர்
நெஞ்சக் கனலை உமிழ்வாய்….”

-பாவலர் பஸீல் காரியப்பர்.
(இல்லா இடம் நோக்கி:- .1963.)
(சஞ்சாரம் தொடரும்)



No comments:

Post a Comment