Sunday, July 5, 2015

20-விதிக்குப் பொருந்துவது வேதனைக்கு மருந்து


20-   விதிக்குப் பொருந்துவது 
வேதனைக்கு மருந்து....


“எத்தனை காலம் நாம் இங்கிருந்தோம் என்ற
மெத்தக் கணக்கெதற்கு.. நெஞ்சிலே முத்திரை இட்டவர்க்கு…!
-பாவலர். பஸீல் காரியப்பர்.



பாவலர் பஸீல்காரியப்பர்.! யாரும் எதிர்பாராதவிதமாக 2006.02.17ம் திகதி தன் கவிதா வாழ்வைத் துறந்துää மறுமையை நோக்கிப் பயணமாகியே  விட்டார்.

    அந்த மாபெரியää  மக்கள்கவிஞனின்ää இழப்பு முழு இலங்கையிலும்ää பற்பல மட்டங்களில்ää  ஒருகணம் அதிர வைத்தது. இலங்கை வானொலி தனது தலைப்புச் செய்தியில் பாவலரின் மறைவு பற்றி அறிவித்தது. எல்லா ஊடகங்களுமே பாவலரின் மறைவுக்கு மிக முக்கியத்துவம் அளித்திருந்தன. சாய்ந்தமருது அபாபீல்கள் கவிதா வட்டம் வெளியிட்டிருந்தää “ஏழு நிறங்களும் மறைந்தன.!.” என்ற தலைப்பிலான பாவலருக்கான அஞ்சலிப் பிரசுரத்திலிருந்து சில வரிகள்..


பாவலரே..!  எங்கள் இலக்கியத் தந்தையே..ää
கறுப்பு நீரையும்… வெள்ளை நெருப்பையும் நம்பினோம்..
உங்கள் மரணத்தைத் தவிர..
எங்கள் கவிதைப் பூவை
காலங்கொத்திப் பறவை கவர்;நது சென்ற செய்தி கேட்டு
கல்முனையின் காதுகள் அறுந்து விழுந்தன.
சாய்ந்தமருது வேரறுந்து சாய்ந்தää மரமானது.
சம்மாந்துறை உம்மாவெனக் கதறியது. மொத்தத்தில்..ää
இலங்கையே இதயத்தைப் பொத்தியது.
...........................................................
............................................................ 
சந்தூக்கைத் தூக்க  ஆயிரம் கைச்சந்துகள்.
தமிழைத் தூக்கிச் சென்று தாட்டுவிட்டோம்.
மூன்று பிடி மண்ணெறிந்து முத்தமிழை மூடினோம்.
கண்ணறைக்குள் காத்து வைத்திருந்த ஒரு கவிதையை
மண்ணறைக்குள் வைத்து அடக்கம் செய்து குருடரானோம்
கால் பக்கமும்ää தலைப்பக்கமும் இரண்டு எழுதுகோல்களை ஊன்றிவிட்டுää மீண்டோம்.
அந்த மீசான்கள்ää இனி  உங்களிடம் பாடம் கேட்கத் தயாராகும்..
பாவலரேää செம்மஞ்சள் வானக் கூரையின் கீழ்
நீலக்கடலின் வெண்ணிற மணல் விரிப்பில்
உங்களோடு உரையாடியிருந்த தென்றலும்ää கடலலைகளும்ää நாமும்
காத்துக்கிடக்கிறோம்.. கண்ணீர் பெருக...இன்னும்  கவிதை எழுதிப்பழக…!  


    பதினெட்டாம் திகதி காலை 7.40 மணிக்கு பாவலரின் உடல்ää கிடத்தப்பட்டிருந்த கட்டிலருகே நின்று கொண்டிருந்தேன். ஒரு வாரத்துக்கு முதல்ää தன் அருமை பேர்த்தி பாத்திமா வஸீமாவுடன்ää  என்னிடம் நேரிடையாக வந்துää “கண்டிக்குப் போய் வருகிறேன். வந்தவுடன் மலர் வேலைகளை அச்சகத்திற்குக் கொடுக்கலாம்.” என்று சொன்ன வசனம் ஞாபகத்தில் கேட்டது.  சாதாரணமாக படுத்திருப்பது போல்ää மரணித்திருந்தார் என்னருமைப் பாவலர்..  கண்டியிலிருந்துää  வண்டியில் வந்திருந்தது சந்தனக் கட்டை அல்ல  சிந்தனைக் கட்டை!. மூடியிருந்த வெள்ளைக் கபன் துணியில் தன் கடைசிக் கவிதையை எழுதிக் கொண்டிருந்தது ஒரு கொசு. உண்மையை மனம் ஏற்க மறுத்தது. மீண்டும் மீண்டும் அவரது முகச் சிரிப்பைப் பார்த்தேன். அந்த அழகான ஒரு சோடிக் கண்கள் மெதுவாக மூடிக் கிடந்தன. நிரந்தரமாக..
0

   பாவலரின்ää இறுதிக் கிரியைகள் முறைப்படி நடந்தன.  கண்டி வைத்தியசாலையில் காலமான போதும்ää  கல்முனைக்குடியில் நல்லடக்கம் நிகழ்ந்தது. பாவலரின்ää (ஜனாஸா) உடல் கொண்டு வரப்பட்டதிலிருந்துää நல்லடக்கம் செய்யப்படும் வரை திரண்ட அவரதுää உறவினர்கள்ää நண்பர்கள்ää அபிமானிகள்ää இரஸிகர்கள்ää அரசியல் பிரமுகர்கள்ää பாமரத்திலிருந்து பல்கலைக்கழகம் வரையுமுள்ள பல தரப்பட்ட மனிதர்களைப் பார்த்த போதுää பாவலர் எப்பேர்ப்பட்ட மனஆளுமையும்ää ஈர்ப்பும் உள்ள மனிதர் என்பது புரிந்தது.  அந்த மானுடநேசகன் தன் மரணம் பற்றி முப்பத்திநான்கு வருடங்களுக்கு முன்னரே பாடி வைத்த தீர்க்கதரிசனத் தமிழ்ப் பாவரிகள்:-




காட்டுங்கள் என் சிரிப்பை.

பறந்துவிட எந்தன் உயிர்
பழுதான இயந்திரத்தைக்
கழுவுங்கள் கபன் இடுங்கள்.
காட்டுங்கள் என் சிரிப்;பை.

தொட்டிலிடை வைத்திடுங்கள்;;;;  தோழமையாய் ஆட்டிடுங்கள்
வெட்டி வைத்த மணவறையுள்  வைத்திடுங்கள்.

‘மீசான்’ கட்டைகளை நாட்டுங்கள்
‘கபுர்’ மண்ணைக் கூட்டிடுங்கள்.
மண்மகளைக் கட்டிக் கலந்து கனிந்து அயர்ந்து உறங்குகையில்

விட்டு விலகாத விதி பெறுவோம்.
வியர்த்தும் போவோம்ää காதல்ää
ஒட்டுறவால் சங்கமித்து நான் அவளாகிப் போவேன்.

பட்டந் தருவார்கள் எனக்கு மண் என்று.
ஒரு கட்டாந்தரையைக் காட்டி.
அப்போது அம்மண்ணை
வெட்டி எடுத்து விருந்திடுங்கள் பயிர்களுக்கு.

கண்ணடி மண் நெற்தாயின்
காலடியைச் சேர்ந்திடுமா..
சின்னி விரல் மண்ணினை ஓர்
சிறு குரக்கன் ஏற்றிடுமா..

என் உடம்பின் எல்லா இழையங்களும்ää மனிதர்
உண்ணும் பயிர் செழிக்க உதவிடுங்கள்!
நன்றி சொல்வேன்.

எந்த மனிதனுக்கு அந்த
உணவு என்று கேட்டால்ää
நொந்து நலிவோரின்  நோவினைகள் மாய்க்க எழும்
அந்த மனிதனுக்கே அணுவேனும் உதவி செய்ய

எந்தன் உடல் மண்ணை
எருவாக ஆக்கிடுங்கள்.(1974)

- பாவலர். பஸீல் காரியப்பர்.
 (சஞ்சாரம் முற்றும்.)




----------------------------------------------------------------------------------------------------------
         மறைந்த அந்த மக்கள் கவிஞனின் மணிவிழா மலர்  இன்னம் வெளிவரவில்லை. இத்தொடரினைப் படித்து வந்தோரும்ää இதில்ää பெயர் குறிப்பிடப்பட்டிருக்;கும் பிரமுகர்களும்ää மனமுவந்து முன்வந்து இதனைச் செய்தல் வேண்டும். இதற்காக புதிதான ஒருகுழு நியமிக்கப்படல் வேண்டும்.  பாவலரின் மகன்  தாரிக் காரியப்பரின் தலைமையில் இது நிகழ்தல் பொருத்தமானது. இது சம்பந்தமான ஆலோசனைகள்ää கருத்துக்கள் கூற விரும்புவோர்ää பாவலர் பண்ணை.  185ஃ2 பழைய சந்தை வீதி சாய்ந்தமருது.01. (Pயயஎயடயச Pயnயெi. 185ஃ2 ழுடுனு ஆயுசுமுநுவு சுழுயுனு ளுயுஐNவுர்யுஆயுசுருவுர்ரு.01.) என்ற விலாசத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள். நன்றி! -தொகுப்பாசிரியர்.
-------------------------------------------------------



No comments:

Post a Comment