Saturday, July 4, 2015

13- குற்றவாளியாக உன் சந்நிதானத்தில் ...

13 குற்றவாளியாக உன் சந்நிதானத்தில்..



தரித்து நிலைத்து தவித்து அழுகின்றேன்
தாகம் தீர்க்கும் அருள் நீர் விழைகின்றேன்..
-பாவலர் பஸீல் காரியப்பர்.


        பாவலர் பஸீல்காரியப்பர்.  1980.ல்ää ~உரையாடலின்பம்.|ää  ~அன்பின் மடிக்குள்| ஆகிய கவிதைகள் எழுத்துருப்படுத்தினார். அம்பாறை மாவட்ட ஹிஜ்ரி விழா மலரில்ää பாவலரின் நெடுங்கவிதையான ~ஹஜ்| பிரசுரமானது. மேலும்ää சென்னை காமராஜர் பல்கலைக் கழகத்திற்குää பேராசியர் எம்.எம். உவைஸ் அவர்கள் உபவேந்தராக நியமிக்கப்பட்டதை முன்னிட்டுää இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் சார்பில்ää அன்னாரை நேரடிப் பேட்டி கண்டார்.

இந்த ஆண்டில்ää கல்முனைபுகவம் அமைப்பினால்ää வெளியிடப்பட்ட ~தூது| என்ற கவிதையிதழுக்கு ஆலோசகராகவும்ää அதன் வெளியீட்டு விழாவுக்குத் தலைமையேற்று நடத்தியும்ää அதன் ஆசிரியரான என்னையும்ää கவிஞர் எஸ்.எம்.எம். றாபீக்ää கவிஞர். கல்முனை ஆதம்ää ஆகியோரையும் ஊக்கத்துடன் வழிநடத்தியும் வந்தார்.  ~தூது| கவிதையிதழில்ää ~தாய்மை மலர..!| என்ற கவிதையைப் பிரசுரிக்க பெருமனதுடன் இடமளித்தார். தொடர்ந்த தூது இதழ்களில்ää எனது ~தீரமான|கவிதை(?)களைப் படித்துää இரசித்துத் திருத்திவிடுவார். இச்சந்தர்ப்பத்தில்தான்ää எனக்கு ~தீரன்| என்ற புனை பெயரைச் சூட்டினார். ~பாவலர்தாஸன்| என்ற பெயரிலும்ää நான் பல்வேறு இதழ்களில்ää சில கவிதைகள் எழுதி வந்தேன். ஆயினும் அப்புனைபெயரை அவர் அவ்வளவாக இரசித்ததாகச் சொல்ல முடியாது.  (திண்மையோடு நில் எங்கள் தீரமுள்ள வாலிபனே..! என்ற பாவலரின் கவிதையடிகள் என்னைக் குறித்தே எழுதப்பட்டதாகும். இவ்வரிகளை பாவலரே தன் கைப்பட எனக்கெழுதித் தந்திருக்கிறார்.)  

    1981ல்ää பாவலர்ää கொழும்பு ரண்முத்து ஹோட்டலில்ää இடம்பெற்ற ~இன்றைய இலங்கை முஸ்லிம்கள்.| என்னும்ää அறிவுசார் கருத்தரங்கில்ää கலாநிதி. சுக்ரிää நீதியரசர். எம்.எம். ஜெமீல்ää ஆகியோருடன் கலந்து கொண்டார். மேலும்ää நூலக அறிவியல் விற்பன்னர். அல்ஹாஜ். எஸ்.எம். கமால்தீன் அவர்களையும் சந்தித்துரையாடியிருந்தார்.

    மேலும்ää இக்காலப்பகுதியி;ல்தான்ää  பாவலரின் வானொலிப் பிரவேசம் மீண்டும் ஆரம்பித்தது. மூத்த தயாரிப்பாளரும்ää பாவலரின் உயிர் நண்பருமானää ஜனாப். எம்.எம்.எம். இர்பான் அவர்களின் வற்புறுத்தலின் பேரில்ää  இதற்கு இசைந்தார்.  இலங்கை வானொலி தேசிய சேவைää முஸ்லிம் சேவை ஆகியவற்றில்ää அறிவுக் களஞ்சியம்ää இலக்கிய மஞ்சரிää மெல்லிசைப் பாடல்கள்ää முத்தாரம்ää முஸ்லிம் நாடகங்கள் போன்றவற்றில் தனது பங்களிப்புகனையும்ää ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டிருந்தார். தானே சுயமாக கவிதைச்சரம் என்ற நிகழ்ச்சியையும் நடத்தினார். முக்கியமாக நண்பர் இர்பானுடன்ää சேர்ந்து ~கவிதை பிறந்தது| என்ற  இலக்கிய ஜனரஞ்சகமான ஒரு நிகழ்ச்சியை தொகுத்தளி;த்தார். இதற்காக ஊர்ஊராக அலைந்தார்.

இர்பான் அவர்களைப் பற்றிப் பாவலர் எப்போதும்ää  மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக நினைவு கூருவதுண்டு.   ~~இர்பான் என்னுடைய மூன்றாவது கண். இர்பான் எனக்குக் கிடைத்த சாதாரண தோழரல்ல.. அவர் என்ää தோளுக்கும் மேலர். இர்பானின் மனைவியார் எனக்கு இன்னொரு தங்கை. பொறுமையின் பொக்கிசம் அம்மாது|| என்று கண்கள் கலங்கக் கூறுவதுண்டு.

    1983.ல்ää சம்மாந்துறை ~அமிர்அலி ஞாபகார்த்த பொதுநூலக| நிர்மானித்தல் வேலைகளில் பாவலர் முழுமூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நூலகத் திறப்பு விழாவின்போதுää நூலகத்தினால்ää வெளியிடப்பட்டää விழாமலரினைää அதிஉத்தம ஜனாதிபதி. திரு. ஆர். பிரேமதாச அவர்களுக்கு வழங்கி வைத்துää விழாவையும் ஆரம்பித்து வைத்தார்.  

இச்சந்தர்ப்பத்தில்ää சொற்பளவில்ää சிறுகதைகள் கூட எழுதினார். அவற்றில்ää ஆங்கில மொழிச் சிறுகதைகளை தமிழுக்கு மொழி மாற்றம் செய்தார்ää அவற்றைப் பிரசுரத்திற்கு அனுப்பாது வைத்திருந்தார். அவர் சுயமாக எழுதியää  சிறுகதைகளில்ää சுiஉh அநயடள என்ற ஆங்கிலச் சிறுகதைää அவரோடு நேரடியாகச்  சமபந்தப்பட்ட ஒரு தெருவோரப் பிச்சைக்கார வயோதிப மாதுவையும்ää அவளது உணர்வோட்டங்களையும் கூறுவதாகும். இதனைப் பின்னர் ~ஆடம்பரச் சாப்பாடு| என்ற தலைப்பில்ää தமிழ்படுத்தினார். மேலும்ää வுhந குடயவகழசஅ. (நடைபாதை)ää  யுசழரனெ வாந ஊசைஉடந (பூச்சியத்தைச் சுற்றி..) ஆகிய சிறுகதைகளும் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பிரதி பண்ணப்பட்டும் பிரசுரத்திற்கு அனுப்பப்படவில்லை. அவை பின்னர் அநியாயத்திற்கு சுனாமிப் பேரலைகளில் தொலைந்ததுதான் மிச்சம்.

இக்காலங்களில்ää தனது படைப்புக்களை பிரசுரத்திற்கு அனுப்புவதைக் குறைத்துக் கொண்டார்.  நண்பர்கள் யாரகிலும்ää வற்புறுத்திப் பெற்று அனுப்பினால்ää அதை ஒரு புன்னகையோடு பொறுத்துக் கொண்டார். ஆனால்ää பிரதேசத்தில்ää நடக்கும் அத்தனை இலக்கியää நூல் வெளியீட்டு விழாக்களிலும் தவறாது கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கி வந்தார். ~மறைந்துறைதல்| என்ற தன் எண்ணக் கருவை இக்காலப்பகுதியில் தன்னுடைய நெருங்கிய அபிமானிகளுக்கு உபதேசித்தும் நடைமுறைப்படுத்தியும் வந்தார்.


ஹற்றன் நஷனல் வங்கியின் சிரேஸ்ட முகாமையாளர்ää ஏ.எல். எம். நஸீர்.

~~............... பாவலரின் கவிதைளை நாமாகவே வாசிப்பதை விடää அதனை அவர் வாசிக்க எமது செவி வழியாக உள் வாங்குகின்ற போதுää ஏற்படுகின்ற புத்துணர்ச்சிää அலாதியான ஓர் அழகியல். அனுபவமாகும்.   அவர் குரலிலுள்;ள  மந்திரக்கவர்ச்சியும்ää  அனுபவித்து உச்சரிக்கும்  ஸ்தாயியும்  அந்த எழுத்தோவியங்களுக்கு  உயிரை மின்சாரம் போல் பாய்ச்சி விடுகின்றன..||

கவிஞர். பொன் சிவானந்தன்.

     ~~........ குளிர்மை இலக்கிய நெஞ்சம்..!  தளிர்விட்ட கவிதைப்பூங்கா..! விழிப்பான வெற்றிதய வேந்து..!  எளிமைக்குள்  நான்  கண்ட புனிதம்..! நண்பன் பஸீல் காரியப்பர்.!!.||


         தொழுகையில் நிற்கும் ஒரு மனிதனின்ää மனநிலையையும்ää அவன் தன் இறைவனிடம் யாசிக்கும் பேறுகளையும் சொல்வது “அன்பின் மடிக்குள்” கவிதையாகும். இதில்ää பாவலர்ää தொழுகையின்ää ‘நிற்றல்: ‘குனிதல்’. ‘மண்டியிடல்’ää ‘தரையில் நெற்றி பதித்துச் சரணடைதல்’ ஆகிய நிலைகளை வெகு அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். பாவலரின் ஆத்மீகத் துடிப்பில் உருவான அக்கவிதையின் சில ஞானத் தமிழ் பிரவாகிப்புகள் இவை:-

“நீளமான துயர்களின் மூட்டையை
நினது சந்நிதானத்தில வைக்கின்றேன்
ஏலா எனக்கு அவைகளின் பழுவை
இன்னம் சுமக்கவே ஒண்ணா

தரித்து நிலைத்து தவித்து அழுகின்றேன்.
தாகம் தீர்க்கும் அருள்நீh விழைகின்றேன்.
பெருகும் அன்பில் திளைத்துச் சதாவும்
பேரின்பத்தில் நிலைக்கத் துடிக்கின்றேன்..

உன்னை அறிவேன்..உவப்போடு என்னை ஏற்பாய்
மன்னிப்பு அன்பின் மடிக்குள் இருக்கிறது
நெற்றியை நிலத்தில் பதிக்கின்றேன்.-இந்த
நிலையினில் என்னை ஏற்றுக் கொள்.”

-பாவலர் பஸீல் காரியப்பர்.
(அன்பின் மடிக்குள்.- (1981)

    உரையாடல்கள் இன்பமாகும் உறவை வேண்டும் கவிதை “உரையாடல் இன்பம்” கவிதையாகும்.  மானுடரின் உறவாடல்களில்ää தன் மனத்தின்ää மற்றவரின் தனித்தனி மனங்களது பின்னல்;களைத் தரிசிப்பதில் ஏற்படும் இன்பநிலையை தத்துவத் தமிழில் வித்துவமாய்ச் சொன்ன வரிகள் இவை:-

“..உரையாடல் இன்பமுறும்
உறவைத் தா.! எங்கள் உரையாடல்ää
தொடர் அன்பில்ää பொறியாக அருள் மின்னும்
 செறிவான உணர்வோட்டம் செயலாக உருமாற்றம்
உரையாடல் இன்பமுறும் உறவைத் தா..

உலகத்தின் கூறுகளை ஒவ்வொன்றாய்த் தனித்தனியே
விளங்க முயல்கின்ற பெரு விருப்புடனே மனம் கலந்து
தன் மனதின் மற்றவரின் தனித்தனி மனங்களது
பின்னல்களைத் தரிசித்து பிரித்து முடிந்து இணைக்கும்
வன்மை பெறும் தன்மை நிறை வழியின் பரடி;சைகளில்
உண்மை ஜயம் பெறவே உரத்த சிந்தனையாய் அமையும்
உரையாடல் இன்பமுறும் உறவைத் தா..

-பாவலர் பஸீல் காரியப்பர்.
(உரையாடலின்பம்.- 1980)

(சஞ்சாரம் தொடரும்.)


No comments:

Post a Comment