Saturday, July 4, 2015

18- பொழுதறி கருவியின் பொடிநடை ஒலி


18-  பொழுதறி கருவியின் பொடிநடைஒலி….



“குற்றவாளியாக உன் சந்நிதானத்தில் குனிந்து நிற்கிறேன்.
பற்றி எரிந்து பசளையாகட்டும் பழைய சருகுகளே..
-பாவலர்; பஸீPல் காரியப்பர்.



பாவலர் பஸீல்காரியப்பர்.  2000வது ஆண்டில்ää ‘யாத்ரா’ கவிதையேட்டுக்காக ஒரு பேட்;டியளிக்க இசைந்தார். இப்பேட்டியைää பாவலரின் விருப்பத்துக்குரிய அபிமானியும்ää பிரபல தொலைக்காட்சி அறிவிப்பாளரும்ää யாத்ரா ஆசிரியருமானää அல்ஹாஜ். அஷ்ரப்சிஹாப்தீன் அவர்கள் நேர்கண்டார். அதிலிருந்து சில கேள்வி பதில்கள் பின்வருமாறு அமைந்திருந்தன.

யாத்ரா:       பாவலரேää உங்களுக்கென்று ஒரு இலக்கியக் கொள்கை     இருக்கின்றதா..?

பாவலர்:        ஒரு நாளும் அப்படியொன்றும் இருந்ததில்லை. நான் உள் மனிதன். நான் எழுதுபவனவற்றில் மிகச் சிறந்ததாக எது இருக்க வேண்டு மென்றால்ää அது என் உள் மனிதனை வடித்து எடுத்ததாக இருக்க வேண்டும்.  எனது உள் மனிதனைப் பற்றித்தான் நான் சதாவும் சிந்தித்தவனாக இருக்கின்றேன். இதை வைத்துத்தான் நான் தீர்மானங்களை எடு;க்கின்றேன்.

யாத்ரா:          உங்கள் கவிதைகளை மிக நீண்ட காலமாக எதிலும்            காணக்கிடைக்கவில்லையே..?

பாவலர்::  அது என் பொடுபோக்குத்தனமா பலவீனமா என்று தெரியவில்லை.  எழுதி முடிந்தவுடன்ää எனது கடமை முடிந்து விட்டதாக உணர்கிறேன்.

யாத்ரா:-        உங்கள் முதற் கவிதை..?

பாவலர்:- சிறு வயதில் ஒரு முறை கடும் காய்ச்சலால் பிடிககப்பட்டிருந்தேன். இரண்டு தினங்கள் உணர்வின்றிக் கிடந்துள்ளேன். திடீரென இரவில் கண் விழித்த நான்ää சுவரில் எறும்புகள்  ஊர்ந்து செல்லும் நிரையைப் பார்த்தேன். அவை எதிரும்புதிருமாக ஒன்றையொன்று சந்தித்துச் செல்வதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். இதைக் கண்ட எனது தாயார் அதிர்ச்சியடைந்து’ உனக்கென்ன ஆயிற்று..?’ என்று பதறிப்போய்க் கேட்டார். ‘உம்மா..! நான் எறும்புகளைப் பார்க்க்pறேன். அவை ஒவ்வொன்றும் சந்தித்துச் ஸலாம் சொல்லிச் செல்கின்றன’ என்று பதில் சொன்னேன். தயார் ஆனந்தம் அடைந்தார். அதுதான்ää அந்த எண்ணம்தான் அந்தச் சிந்தனைதான் எனது முதலாவது கவிதை என்று எண்ணகின்றேன்.

யாத்ரா:-        கவிதை காலத்தின் கண்ணாடி என்பார்களே….அடுத்த தலைமுறை உங்களைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டாமா..?

பாவலர்:-  காலத்தக்குரிய கவிதை. எல்லாக் காலங்களுக்குமான கவிதை. என இரண்டு வகைகள் கவிதையில் உள்ளன.  பாரதியின் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்பது காலத்துக்குரிய கவிதை.  குயில்பாட்டுää எல்லாக் காலத்துக்குமுரிய கவிதை.  அவ்வக் காலத்துக்குரிய கவிதைகளை அவ்வப்போது பிரசுரத்திற்கு அனுப்பி வருகிறேன். எல்லாக் காலத்துக்குமுரிய கவிதைகள் என்னிடம் பத்திரமாக உள்ளன. அவை எப்போது வந்தாலும் சரிதானே..?

யாத்ரா:-       ஏன் இதுவரை ஒரு கவிதைத் தொகுதியையேனும் வெளியிடவில்லை..?

பாவலர்:-  நீண்ட காலமாக எல்லோரும் கேட்கும் கேள்வி இது.  அப்போதெல்லாம் இதில் எனக்கு நாட்டமிருக்கவில்லi. இப்போது வந்துள்ளது. இந்த வருடம் எனது கவிதைத் தொகுதி வெளிவரும். அதைத் தொடர்ந்து  உருவகக் கதைகளை நூலாக்குவேன்.


    2000ம் ஆண்டில்ää மிலேனிய யுகம் பிறந்த போதுää பாவலர் இதனைத் தனது வெளிப்பாட்டுக் காலம் என வர்ணித்தார். தனது எத்தனையோ அபிமானிகளால்ää எவ்வளவோ காலமாக இரந்து கேட்டும்ää எவருக்கும் தனது படைப்புக்களை நூலுருவாக்கக் கொடுக்காத பாவலர்ää தனது படைப்புக்கள் அனைத்தும் ஆவணமாக்கப்படல் வேண்டும்ää அவை நூலுருப்படுத்தப்படல் வேண்டும் என்பதை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டார். இக்காலத்தில்ää என்னுடைய ‘வல்லமை தாராயோ..?” சிறுகதைத் தொகுதி வெளியீடுகளில்ää ஆலோசகப் பங்களிப்பாளராகவும் இருந்தார்.. என் சிறுகதைகளின் உடனடி இரசிக விமர்சகர் அவர். எனது நூலைக் கண்டதும்ää பாவலருக்கு உள்ளுர ஒரு மலர்ச்சி ஏற்பட்டது. தன் கவிதைகளும் நூலுருப் பெற்றால் தனது அபிமானிகளுக்காவது ஒரு மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ஏற்படுமேää அதற்காகவேனும் நூலை வெளியிட தீர்மானித்தார். ஆயினும்ää அதை யாரும் நம்பவுமில்லை.

கல்முனைப் பிரதேச சபையின்ää உதவித் தவிசாளராகவும்;ää மாநகர சபை உறுப்பினராகவும்ää இருந்த தற்போதைய கிழக்கு மாகானசபை உறுப்பினரானää  கே.எம். அப்துர் ரஸ்ஸாக்.(ஜவாத்) அவர்கள் பாவலரின் மிக நெருங்கிய நேஸகர். பாவலரின்ää கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட வேண்டுமென்ற தீவிரப் போக்குடையவர். பாவலரின் நூலைத் தன் சொந்தச் செலவில்ää பாவலர் விரும்பியபடியெல்லாம் செய்யப் பெரு விருப்புக் கொண்டு பாவலரை அணுகினார். அதனை அவரே கூறுகிறார்.

“………பாவலரின் கவிமுத்துக்களைக் கோர்வையாக்கிää வெளியிட வேண்டுமெனää நானும்ää என் மைத்துனர் வபா பாறுக் அவர்களும்ää இந்த மனிதரின் கால்களில் விழுந்த கெஞ்சியிருக்கிறோம்.  அதனை வெறுத்து வெட்கித்தார். அதிலிருந்து எங்களைப் போன்றோருக்கு இவரின் மீது ஒருவகை வெறுப்பு. இன்றுவரையும் கூட.. இயற்கையுடன் சங்கமிக்கத் துடிக்கும் இவருக்குச் செயற்கை உலகம் பிடிக்கவில்லை. என நினைக்கிறேன்.  எனவேதான்ää தன் மனமுக்குள்ளேயே அழுது கொண்டு உலவும்ää இவரின் படைப்பின் வெளிப்பாடுகள் இவருடனேயே ஒவ்வாமை கொள்கின்றன.

பாவலருக்கு பாமர மக்களுடன் கதை பரிமாறல் மிகவும் உவப்பானது. அதுவும் கடற்கரை மண்ணில் என்றால்ää  கொள்ளை இன்பம். (கடற்கரையில் உரையாடலின்பம்) பாவலரின் சிந்தனைää கவிநடைää குரல்வளம்  பெருமை கொண்டது.  பட்டங்களையும்ää பதவிகளையும்ää தனக்காக்க விரும்பாத அதிசயப் பிறவி. பாவலரோடு நட்புறவாகவிருப்பதே ஒரு பாக்கியம்..”

திடீரெனää 2001.ல்ää பாவலரின்ää பிரசித்தி பெற்றää கவிதைகளில் அறுபத்தைந்து கவிதைகளை உள்ளடக்கிய ~ஆத்மாவின் அலைகள்.|  கவிதைத் தொகுதி தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டது. பாவலரின் இரண்டாவது மகள் கதீஜதுல் காமிலா காரியப்பரின்  பெரு வற்புறுத்தலுக்கும்ää பாவலரின் மிக நெருங்கிய இலக்கிய சகாவும்ää உறவினருமானää  தெ.கி.ப.க. தமிழ்த்துறைத் தலைவர்ää ரமீஸ் அப்துல்லாஹ் அவர்களின் விடாப்பிடியான உடனடி முயற்சியாலும்ää இது சாத்தியமாயிற்று. இதுபற்றி அந்நூலில்ää பாவலர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “…இதன் உருவாக்க வேலைகளில் எனக்கு எந்தவிதப் பங்களிப்பும் இல்லை.  எல்லாப் பளுக்களையும்ää தென்கிழக்குப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தினரே ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கும்ää இவ்வாக்கத்தி;ற்கு உதவிய அவைருக்கும் என் அகம் பூத்த நன்றி!”

பாலரின் ஓரேயொரு தொகுதியான “ஆத்;மாவின் அலைகள்” பற்றிப்  பேசவந்தää யாழ். பல்கலைக்கழக தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர் திரு. கா. சிவத்தம்பி ஐயாääஅவர்கள் கூறுவது:-

“…உணர்முறைப் பதிவு நமது கவிதைகளுக்குள் தெரியவரும்ää முறைமையினை நோக்கும் போதுää கிழக்கிலங்கைக் கவிஞர்களின்ää ஆக்கங்கள் மிக முக்கியமானவையாகின்றன.  ஈழத்துத் தமிழ்க் கவிதையின்ää  பன்முகப்பட்ட செழுமைக்கு அவை உதாரணங்கள்  அந்தப் பாரம்பரியப் பரப்பில்ää பஸீல் காரியப்பர் நிச்சயமான இடத்தைப் பெறுகின்றார். கிழக்கிலங்கை வாழ்வுணர்வுகளைச் சித்தரிப்பதன் மூலம்ää ஈழத்துக் கவிதையுலகில்ää ஓர் இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்.. 1960கள் முதல்ää ஈழத்துத் தமிழ்;க்கவிதையில்ää ஏற்பட்ட வளர்ச்சிகள் மாற்றங்கள்ää ஆகியனவற்றுக்கும் இத்தொகுதி மதிப்புமிக்க சான்றாவணமாகின்றது..”

தேடிவந்த வாய்ப்புக்கள்ää புகழ் அனைத்ததையும் தன் உள்மனிதனைப் புடம் போடும்  எத்தனத்தால்ää புறம் ஒதுக்கிய பாவலர்ää தன் படைப்புக்களைச் சேகரித்து வைத்தல்ää ஆவணமாக்கல் முயற்சிகளில் வெகு அலட்சியமாகவே இருந்தார். இது பற்றி நான் பாவலருக்கு இடித்துரைக்கும் சந்தர்ப்பங்களில்ää “அதையெல்லாம் செய்தற்கு என் மகள் பாத்திமாவும்ää என்னருமை தீரனும் இருக்கிறீர்களே..” என்று கூறி எமது வாயை அடைத்து விடுவார்.

2001.07.28 ல்ää கல்முனை கிறிஸ்தவ இல்ல மண்டபத்தில்ää வைத்திய கலாநிதி முருகேசபிள்ளை அவர்களின்ää தலைமையில்ää  நிகழ்ந்தää கவிஞர். நீலாவணனின்ää “ஒத்திகை” கவிதை நூலின் அறிமுக விழாவில்ää பாவலர்ää குறிப்பிட்ட நூலின் முதற்பிரதியைää  கவிஞரின் மனைவியிடமிருந்து பெற்றுக் கொண்டார். ஒரு தமிழ்க் கவிஞனின் நூலை ஒரு முஸ்லிம் கவிஞர் பெற்றுக் கொண்ட ‘மன இராசி’யான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில்ää கவிஞர். சண்முகம் சிவலிங்கம்ää ஏ.எல்.எம். பளீல்ää (காலம்சென்ற பிரதேச செயலாளர்)ää மருதூர்க் கொத்தன்ää மருதூர்மஜீதுää கவிஞர். மு.சடாட்சரன்ää  கலாநிதி. அருட்சகோதரர் மத்தியூää ஆகியோர் உரையாற்றினர். கவிஞர் நீலாவணனின்ää அருமை மைந்தரும்ää சக்தி எப்.எம். பணிப்பாளருமானää எஸ். எழில்வேந்தன் அவர்கள் ஏற்புரை செய்தார்.

இதுபற்றி வைத்திய கலாநிதி முருகேசபிள்ளையவர்கள் கூறுகிறார்.. “... பஸில் காரியப்பர் ஒரு புரவலர் அல்லர். முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த ஓர் எழுத்தாளர். இவர் தமிழ்க்கவிஞன் ஒருவனது நூலை முதற்பிரதியாகப் பெற்றுக் கொண்டதும்ää அந்த நிகழ்வில்ää முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டதும்ää  உரையாற்றியதும்ää ஒரு மறக்க முடியாத சம்பவமே.. அரசியல் வங்குரோத்துத் தனங்களால்ää ஆட்டம் கண்டு போன நமது உறவுக்கு இப்படியான இன்னும் பல நிகழ்ச்சிகள் நமக்குள்ளே  நடக்க வேண்டும். அதன் மூலம் நமது உறவு இன்னுமின்னும் பின்னிப் பிணைய வேண்டும்……
  
ஆத்ம விசாரனையில் இறங்கித் தனது உள்மனிதனைத் தேடும் முயற்சியிலேயே பெரிதும் இக்காலங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  அந்த ஆத்மகவியின்ää பக்தித் தமிழ்ப் பாவரிகள்:-

நெற்றியை நிலத்தில் பதிக்கின்றேன்
இந்நிலையில் என்னை ஏற்றுக் கொள்
சுற்றியலையும் மனதை நெறிப்படுத்தும்
ஒரு சுக்கானைத் தேடி வந்தேன்.(1981)

-பாவலர் பஸீல் காரியப்பர்.
(அன்பின் மடிக்குள்..)
(சஞ்சாரம் தொடரும்)


No comments:

Post a Comment