Saturday, July 4, 2015

12- சொட்டுகின்ற நீருக்கென் சோபனங்கள் ..

@-12-   சொட்டுகின்ற நீருக்கென் சோபனங்கள்.



எரிந்த தடங்கள் எங்கும் தெரிகின்றன - மனித
இரக்கம் எரிந்த சாம்பல் எங்குமில்லை..
-பாவலர் பஸீல் காரியப்பர்.


   பாவலர் பஸீல்காரியப்பர்.!  1978.ல்ää தனது புகழ்பெற்ற ~தங்கம்மா| என்ற நீள்கவிதைக்குää கொழும்பு பல்கலைக் கழகத்தின் தமிழ்ச்சங்கம் அளித்த முதற் பரிசினையும்ää தங்கப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.;. இதனையொட்டிää சம்மாந்துறை மக்களால்ää  பாவலருக்கு மாபெரும் ஒரு பாராட்டு விழா ஏற்பாடானது. அவ்விழாவில். பொதுமக்களால்ää மிக விருப்புடன் அளிக்கப்பட்ட ~பாவலர்| பட்டத்தைää பெருமதிப்பிற்குரியää புலவர்மணி. ஏ. பெரியதம்பிப்பிள்ளை ஐயா அவர்கள் மகிழ்வுடன் வழங்கி பாவலரை ஆசீர்வதித்துரையாற்றினார். இம்மாபெரும்ää விழாவில்ää ~தான்தோன்றிக் கவிராயர்| சில்லையூர் செல்வராசன்ää அவரது துணைவியார் கமலினி செல்வராசன்ää ராவுத்தர் நெய்னாமுஹம்மது மற்றும்ää பலர் உரை நிகழ்த்தினர்.  இம்மகிழ்ச்சிப் பெருவிழாவில்ää விருப்புடன் கலந்து கொண்டää அமைச்சர் எம்.ஏ. அப்துல்மஜீது பீ.ஏ. அவர்கள் பாவலருக்குச் சம்மாந்துறைப் பொதுமக்கள் சார்பாகää தங்கப்பதக்கம்  சூட்டி கௌரவித்தார். ~தங்கம்மா| என்ற நீள் கவிதையும்ää  ஒரு சிறு பிரசுரமாக வெளியிடப்பட்டது.  இது பின்னர்ää இலங்கை அரசாங்கத்தின்ää க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கான ஒரு பாடமாகக் கொள்ளப்பட்டுää  தமிழ்ப்பாடநூலில்  இடம்பெற்றது.

    தங்கப்பதக்கம் பெற்ற ~தங்கம்மா| என்ற இக்கவிதையில்ää ஒரு சிறுமியின் வறுமை நிலையைப் பாவலர் தங்கத் தமிழில்ää தவிப்புடன் சொல்லியிருக்கும் வரிகள்:-


..குச்சியினால் செய்த இரு
கைகளும்ää சூம்பற் கால்களும்
 பச்சையமே இல்லாது
 பழுப்பேறிப்போன
 இலை மேனியும்ää
 போர்வாள் இரண்டு
பொருத வரும் காட்சி சொல்லும்
காறை எலும்புகளும்
 கதை பயிலும் இரு விழிகளும்
பரட்டைத் தலையும் அதில்
பழஞ்சீலைப் பூ முடிச்சும்
வரண்ட குறுஞ்சிரிப்பும்
வயிறு சிறு முட்டியுமாய்....


என்று அச்சிறுமியைக் காட்சிப்படுத்துகிறார்.  தங்கம்மா ஒரு நீள் கவிதை மட்டுமல்ல.. அது ஒரு காவியம்.. அது பல சிறுகதைகளை உள்ளடக்கிய  ஒரு பாட்டுநாவல்..

மேலும் இக்காலப்பகுதியில்ää ~ஜீவிதக் கோலம்.| ~கன்னிவெயில்| ~அறம் அதுவே| ஆகிய கவிதைகளைச் செதுக்கினார். 1979.ல்ää ~துயர் கலந்த தேன்.| பாடலுருவானது. இந்த ~துயர் கலந்த தேன்.| பாடலுருவானதே ஒரு பெரிய கதையாகும். அதனை  பிரபல காதிநீதவானாகியää அதிபர் திலகம். எஸ். ஆதம்பாவா அவர்கள்ää அழகுபட உரைக்கின்றார் இப்படி:-

~~.........1978ம் ஆண்டில்ää ஒருநாள்ää பாவலர் பஸீல் காரியப்பர் சம்மாந்துறையிலிருந்துää பைசிக்கிளில் கல்முனை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கல்முனைக்குடிää பள்ளிவாசலுக்கு முன்பாகää ஒரு சனத்திரள் காணப்பட்டது. சனங்கள்ää வயற்காட்டுப்பக்கமிருந்தää சதுப்பு நிலத்தையே நோக்கிக் கொண்டிருந்தனர்.  வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. சனத்திரளை ஊடறுத்து வந்த பாவலர்  ஒருவரிடம்ää ~என்ன விசயம்..?| எனக் கேட்டார்.  அவரோää ஒன்றும் பேசாமல். அந்தச் சதுப்பு நிலத்தில்ää புதைந்தபடி மார்பளவு மட்டும் தெரிந்து கொண்டிருந்த ஒரு பெண் உருவத்தைச் சுட்டிக் காட்டினார்.  பொதுமக்களின் எண்ணம் என்னவென்றால்ää அப்பெண் சதுப்பு நிலத்தில் முற்றாகப் புதைந்து விடுவாள் என்பதுதான். செய்வதறியாது எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கää பாவலர்  விரைந்து சைக்கிளைச் சாத்திவிட்டுää அந்த சதுப்பு நிலத்தை நோக்கிச் சென்றார்.  பலரும் தடுத்தனர்.  தடைகளைத் தாண்டி விரைந்த பாவலர்  மெல்ல மெல்ல சதுப்பு நிலத்தில் கால்வைத்து புதைந்து கொண்டிருந்த அப்பெண்ணை நோக்கி மெதுவாகவும்ää தைரியமாகவும் முன்னேறிச் சென்றாh.

பெண்ணை நெருங்கி மிகவும்ää தந்திரமான முறையில்ää அப்பெண்ணை வாரியணைத்துத் தூக்கினார். தூக்கியெடுத்துää தன் கைகளில் அவளைத் தாங்கிய வண்ணம்ää அங்குலம்அங்குலமாக முன்னேறி வந்த அந்த தீரமிக்க காட்சியை செய்வகையறியாது ஏனையோர் பார்த்துக் கொண்டிருந்தனர்.  மெதுவாக வீதியின் கரைக்கு வந்த சேர்ந்தார்.  அப்பெண் உயிர் பிழைத்தாள். கூடிநின்ற சனங்கள் பாவலரின் தீரத்தை மெச்சிப் புகழ்ந்து உச்சி குளிர்ந்த போதுää பின்னாலிருந்துää “லுழர யசந ய பசநயவ அயn” என்ற அக்குறிச்சி விதானையாரின் குரல் கேட்டது.  இதைக்கேட்டதும்ää பாவலர் தனக்கேயுரியää புன்னகையுடன்ää “ டீரவ  றுந யசந in அரன.  ழெவ வாந டயனல” என்றார். அதாவதுää சேற்றில் இருப்பது நாமேயன்றி அப்பெண் அல்ல. என்று அங்கு கூடி வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களைக் குறிப்பிட்டுச் சொன்ன இந்த வசனம் அவரது தற்றுணிவையும்ää தைரியத்தையும்ää சமுதாயச்சேற்றின் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பையும் எடுத்துக் காட்டப் போதுமானது....||

    இக்காலப்பகுதியில்ää பாவலர்ää பிரபல சன்மார்க்கப் பிரசங்கியும்ää இஸ்லாமியத் தொண்டரும்ää ஓய்வு பெற்ற அதிபருமான பாணந்துறை ஹேனமுல்ல சாஹ_ல்ஹமீது ஹாஜியார் அவர்களைச் அன்னாரது இல்லத்தில் சந்தித்தார். அப்பெரியாரின் மீது கொண்டிருந்த பிரியம் காரணமாகää பாவலர்ää  அவர்களதுää செயற்கரிய மானுடசேவையைப் பாராட்டிää தமது மதுரமிக்க இன்குரலால்ää தனது சில பாடல்களைப் பாடிக்காட்டி இன்புறச் செய்தார். ~மனிதரை ரசிப்பவர் மனிதரால் இரசிக்கப்படுவார்.| மற்றும்ää ~ஓட்டைப்பல் நாயை ஒரு போதும் வேட்டைக்காய் கொள்ளாதே..! (கொல்லாதே!)| போன்ற கருத்துருக்களையும் விரிவாக்கச் சுவைகளையும் கடற்கரையில் உரையாடலின்பம் நிகழ்ச்சியில்ää பாவலர் அழகுற விபரிப்பார்..  

    இடமாற்றம் பெற்றுச் செல்லும் போதுää அறைத் தோழனாகவிருந்த ஒரு சின்னப் பூனைக்குட்டியைப் பிரியும் வேளை பாவலரின் மனம் பட்ட பாட்டை விபரிப்பதாகவுள்ள ~ஜீவிதக்கோலம்| கவிதை. மேம்போக்காக தன்னையும்ää பூனைக்குட்டியையும் கூறினாலும்ää உள்ளார்ந்த அர்த்தத்தில்ää உலக வாழ்வைப் பிரிந்து செல்லப் போகும்ääää ஒரு சராசரி மனிதனின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகும்.   ~தொலைதூரம் போகிறேன் - என் சின்னப் பூனைக் குட்டியே.. - உறவை நமக்குள் பின்னிய கலைஞனின் - பரிவே உனக்குச் சாஸ்வதமானது - சின்னப்ப10னைக் குட்டியே..உனது - ஜீவிதக் கோலம் நான் அறிந்ததுவா..? - உன்னைப் பிரிதல் துயரம்.! அதை உன் - உள்ளம் அறியும் நியதி இதுவாம். - இடமாற்றம் எனக்கு முடிவாகி விட்டது - இனி நான் போதல் தனி வழியாகும். - ஏன் நீ இப்படிப் பார்க்கிறாய்..? - அன்பின் நினைவுகள் நித்தியம்.. வருகிறேன்.!..||


பன்னூலாசிரியர் மானாமக்கீன்.
~~.......... நம் நாட்டைப் பொறுத்த வரையில்ää எனக்கு ஒரு பாவலரையே தெரியும். நெருக்கமான அந்தப் பாவலர் மிகவும் அடக்கமானவர். அமைதியின் பிறப்பிடம். எவ்விதமான விருதுகளையும் வேண்டி நிற்காதவர். வேண்டாமென்றும் திருப்பி வழங்கியவர்..||  

திருமதி. எஸ். றுஹைமா ஜமால்தீன். (டீயு. டீ.நுன. ஐளுயு நுபெடiளா)
~~........ நான் அவரைப் பற்றி வைத்திருந்த மனப்படம் வித்தியாசமானது. ஆங்கிலேயப் பாணியில் உடையணிந்த ஒரு பிரமுகராக இருப்பார் என்பதே அது. ஆனால்ää பளிச்சென வெள்ளைச்  சாரமும்ää நெஷனலும்ää வெள்ளைத் தொப்பியும் அணிந்து மிக எளிமையாகக் காணப்பட்டார். அந்த எளிமையில்ää ஒரு புனிதமான ஆளுமை தெரிந்தது...||  

     ~அறம் அதுவே..| கவிதைää ஒரு வண்ணத்துப் பூச்சியை விரலால் தட்டிவிட அது துடிப்பதைப் பார்த்து இரங்கினாலும்ää உபாதைப்படுத்த வரும் பன்றியினைக் கொல்வதில் பரிதாபம் காட்டாதே என்பதை வலியுறுத்துவதாகும்.

    பிரிவாற்றாமை என்பது பாவலருக்குள் எப்போதும் உள்ளத்தில் ஊறியிருந்த உணர்ச்சியாகும். தன்னுடன் தொடர்பாயிருக்கும்ää பற்தூரிகைää செருப்புää பூனைக்குட்டிää மனிதர்கள்ää ரோசாப்ப10ää தீக்குச்சிää மரம் ஆகிய எதையும் பாவலர் பிரிய விரும்புவதில்லை. தன் அன்பின் மடிக்குள் எப்போதும் அவை குடியிருக்க வேண்டுமென தவமியற்றும்ää தனித்தன்மை மனதினர் அவர்.  தன் இடைத்தங்கல் வீட்டிலிருந்து பிரியும் போதுää அம்முற்றத்தில் நின்ற மரத்துடன் உரையாடும் பாவலரின்ää பூங்காத்ää தமிழிலிருந்துää மனங்கவர் தமிழ்மணம் கவர் வரிகள் இவை:-

பூத்துக்குலுங்கும் மரமே..
உன்னை விட்டுப்
போகிறேன் போம்போதில்
நேத்திரம் கனத்துப் பனிக்கிறது
நெஞ்;சில் ஒரு நினைவுச் சுடராய்ப் பதிந்து விட்டாய்

பூத்த நீ இனி கன்னி கட்டிக் காய்ப்பாய்
பொன் நிறத்தில் பழம் தருவாய்
நீண்டு தொடரும் என்னுடைய பிரயானத்தில்
மீண்டும் உன்னைக் காணவர முடியாது போய் விடலாம்.
ஆனாலும் உன் நினைவு நெஞ்சமெல்லாம்
துயர் கலந்த தேனாய்ப் பாயும்.
--   பாவலர் பஸீல் காரியப்பர்.
(துயர் கலந்த தேன்.:- 1979)
(சஞ்சாரம் தொடரும்)



No comments:

Post a Comment