Saturday, July 4, 2015

16-- மொட்டையடித்த ஒரு வேப்ப மரம்


@-16-.   மொட்டையடித்த ஒரு வேப்ப மரம்..



“அநுபவம் முதிர்ந்து அசைவுகள் அற்று
மௌனியாய் நிற்கும் மரம் இது…!
-பாவலர்.பஸீல் காரியப்பர்.




  பாவலர் பஸீல்காரியப்பர்.! என்னும்ää அந்த மனிதநேயப் பாவலர்ää தன்விசாரனைச் சஞ்சாரத்தில் ஈடுபட்டிருப்பது பற்றி அவரது ஆத்மீக் சகாவானää அக்கரைப்பற்று மக்கத்தார்.ஏ. மஜீது. அவர்கள் கூறுவது இது:-

“…….. பஸீல் என்றால் கவிதை. கவிதை என்றால் பஸீல். இது வெறும் முகஸ்துதி அல்ல. மிக நீ;ண்ட காலஙகளுக்குப் பிறகுää இலங்கைää ஆரோக்கியமான உணர்வுகள் இழையேயாடும்ää கவிஞர்களைத் தரும் வரிசையில்ää  பஸீல்காரியப்பரைப் பதிவு செய்து கொண்டது. அந்த உண்மையைச் சொல்வது எப்படி முகஸ்துதியாகும்.?

எனது சிறுவயது முதல்ää எனது இணைபிரியா நண்பனாக வாழ்ந்த இக்கவிஞனின் கவிதை ஊற்றுக்களில்ää நான் நனைந்த நாட்களை இப்போது மீட்டிப் பார்க்கிறேன். என்னையும் ஒரு கலைஞனாக மக்கள் மத்தியில்ää இனம் காட்டுவதற்கு அவர் எடுத்த களங்கமற்ற முயற்சிகளை எண்ணிப் பார்க்கிறேன். இன்றும் கூட நினைத்தாலே உடல் புல்லரிக்கின்றது.  சடத்துவ நிலைக்கு அப்பால்ää ஆத்ம தரிசனம் காணும்ää காணும் வல்லபம் எல்லாருக்கும் இலகுவில் கைவரக் கூடியதொன்றல்ல.  ஆனால்ää பஸீல்காரியப்பருக்கு இந்நிலை சிறுவயது முதலே பரீட்சயமானதொன்றாகி விட்டது. ஆத்மீகத் துறையில்ää அதி உன்னத அறிவில்ää தனது கற்கைத் துறையை  முடித்து; கொண்டவர் கூட  இவரை வியந்து போறற்றி உரை செய்துள்ளமை இவரது ஆத்மீக தரிசனத்திற்குத் தக்க சான்றாகும்.”

ஆத்மீகத்தையும்ää கவிதையையும் தன்னிரு கண்களாகப் போற்றி வந்த பாவலர்ää தன்ää அபிமானிகளினதும்ää இலக்கிய நண்பர்களினதும்ää அயராத வேண்டுகோள்களின் பேரில்ää  அவ்வப்போது  சில கவிதைகளை எழுத ஆரம்பித்தார். கல்முனைää பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவரும்ää சாமாதான நீதவானமாகியää அல்ஹாஜ். என்.யூ.எல். மீராஸாஹிபு அவர்களின் கூற்று ஒன்றினைப் பார்ப்போம்.

“………1987ம் ஆண்டுää இந்திய மதுரை மாநகரில்ää நடைபெற்ற அகில உலக இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டில்ää எனது நண்பர்  அக்கால தபால் தகவல் பிரதியமைச்சர் ஏ.எல்.ஏ. மஜீட் (மூதூர்)ää ‘சொல்லின் செல்வர்’ செ. இராசதுரை  ஆகியோரோடு நானும் கலந்து கொண்டேன். அச்சந்தர்ப்பத்தில்ää தமிழகத்தசை; சேர்ந்த ஒருவர் என்னோடு நட்புதலானார்.  நான் இலங்கையர் என்றும்ää எனதூர் கல்முனை என்றும்ää அறிந்த உடனே அவர் என்னிடம் கேட்ட முதற்கேள்விää ‘உங்களுக்கு கவிஞர் பஸீல்காரியப்பரைத் தெரியமா..?’ என்பதுதான்.  அவர் பாவலரின் பரம ரசிகர். கடல்கடந்த தேசங்களிலும் கல்முனையின் புகழைப் பரப்பும் அதிசய மனிதர் பாவலர்…….”

1988.ல்ää அவர்ää எழுதிய முக்கியமான ஒரு கவிதை ‘சரி சிரி’ என்பதாகும். 1989.ல்ää ~பிரியம்| ~மன்னிக்கவேண்டும்| எனும் பாக்களை இயற்றினார். இந்த ஆண்டு பாலரின் வாழ்வில் முக்கியமானதாகும். தென்கிழக்கின் தேசபிதாவானää மறைந்தääமுதுதலைவர்ää கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பர் அவர்கள்ää மரணிப்பதற்கு ஏழு தினங்களுக்கு முன்பதாகää அன்னாரது நேரடிப் பேட்டியை தானாகவேää தேடிப் போய்ää ஒலிப்பதிவு செய்தார்.

1990.ல்ää ~கிளைகளை எப்படி வடிவம் அமைப்பது| என்ற தத்துவ விசாரனைக் கவிதையை எழுதி முடித்தார். 1991.ல்ää கல்முனைக்குடி ~அல்.பஹ்ரியா| கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வந்தார். ஊரில் ஓய்வாக இருந்த போதிலும்ää அவ்வளவாக எழுதுவதில்லை. மாலைவேளைகளில்ää தனது நண்பர்களானää மீனவத் தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது இன்பதுன்பங்களில் கலந்து பகிர்ந்து பொழுதைக் கழித்தார். கல்முனைக்குடி சேனநாயக்க சமுத்திர நன்னீர் மீன்பிடித் தொழிலாளர் சங்கத்தின்ää போசகராக தெரிவு செய்யப்பட்டுää அவர்களுக்கான ஆலோசனைகளையும்ää சட்ட ரீதியிலான அணுகுமுறைக் குறிப்புகளையும் எடுத்தியம்பிää நெறிப்படுத்தி வந்தார்.

அதேசமயம்ää இக்காலப் பகுதியில்ää அவருக்குள் உள்ளோடியää ஆத்மீக இலயிப்பு காரணமாக அடிக்கடி சிந்தனை வயப்படுபவராகவும்ää தான்ää திடீரெனச் சொல்லும் சில வசனங்களை அல்லது கருத்துகளை மட்டும் குறித்து வைத்துக் கொள்பவராகவும் இருந்தார்.  பின்னர் அவற்றினைத் தொகுத்துää ~வாழ்க்கைக் கப்பலில்..| ~நம்புகொடி| ஆகிய பாக்களினை  உருவாக்கம் செய்தார். இக்காலப்பகுதியில்ää தனது தலைமயிர் அனைத்தையும் மழித்து மொட்டைத் தலையராகக் காட்சியளித்தார் பாவலர்.  தன் ஆடையின் வடிவமைப்பையும் மாற்றிக் கொண்டார். இந்த புதிய ஆடை வடிவமைப்பு பாவலருக்கு ஒரு மையித்தின்ää கபன் (உயிரற்ற உடலைச்சுற்றும் வெண்ணிறத்) துணியை உற்று நோக்கிய போது பிறந்ததாகும் என்று பிற்காலத்தில் கூறினார்.  

ஒரு தந்தை தன் மகனை நிரந்தரமாகப் பிரியப் போகும் நிலையில்ää மகனுக்குச் சொன்ன தத்துவ வரிகள்தாம்ää “கிளைகளை எப்படி வடிவம் அமைப்பது..?” என்ற கவிதை. மொட்டையடித்த அந்த வேப்பமரக் கவிஞனின்ää அநுபவ வைரம் பாய்ந்த வரிகள்:-

“மகனே.. உன்னை நான் விட்டுப் போகிறேன்..
அழுத்தமாய்க் கால்களை
 ஊன்றிக் கொள்வாய் நீ...
 பிரிவது உலகில் சாஸ்வதமானது.
 பரிவுகள் துயராய்ப்  பரவுதல் இயற்கை.
. மரத்தை நட்டவன் தண்ணீர் ஊற்றலாம்.
 எருவும் இடலாம்..காவல் செய்யலாம்..
 கிளைகளை எப்படி வடிவம் அமைப்பது..?
 இலைகள் எவ்விடத்தில் தளிர் விடும் என்பது..?
 அந்த மரம் தன் அழகை அது பெறும்
 விந்தை நான் அறியேன்
 விளக்கம் பெறலாம் நீ
 அதனால்தான் ஒரு ஆறுதலோடு
 போகிறேன் நான்….”

பாவலர் பஸீல் காரியப்பர்.)
(கிளைகளை எப்படி வடிவம் அமைப்பது..?:- 1990)

நாம் எப்படித்தான் நல்லவராக இருந்தும்ää நம்மோடு இன்றும் யாராவது ஒரு இழிகுணத்தவன் நட்பாக இருந்து கொண்டேயிருக்கின்றானே.. அந்நிலையை பாவலர் பாடுபொருளாகப் பாவித்த வித்தியாசமான பா “வாழ்க்கைக் கப்பலில்” என்ற கவிதையாகும்.

‘நம்புகொடி’ கவிதையில்ää “..மொட்டையடித்த வேப்பை மரத்தைப் - பற்றிப் படரும் பாக்கியம் பெற்றேன்..” என்று ஒரு வெற்றிலைக்  கொடியின் வாயிலாகக் கவிதை சொல்லத் தொடங்கிய பாவலர்ää மானிட வாழ்வின் படிநிலைகளைச் அக்கவிதையிற் சுட்டிக் காட்டுகிறார். “..அநுபவம் முதிர்ந்து அசைவுகள் அற்று-மௌனியாய் நிற்கும் மரம் இது.! - ஒரு நாள்.!” என்னும் வரிகளில்தான் எத்துணை தீர்க்கதரிசனம்..

1992.ல்ää    ~மனங்கள் வெளுத்தே நாம் பேசிடுவோம்.| என்ற தமிழ்ääமுஸ்லிம் இன ஒற்றுமைக் கீதம் பாடலை எழுதினார். அவர் விரும்பம் போதெல்லாம்ää பற்பல  நிகழ்வுகளில்ää தனது வளமிக்க குரலால் பாடியும்ää காண்பிப்பதுண்டு. இக் கவிதை தமிழ்முஸ்லிம் இனக் கலவர நிலைகளின் பின்னர்ää உருவாகும் நற்சூழ்நிலை பற்றியது. எப்போதும்ää இனக்கலவரத்திற்கு முழு எதிர்ப்பாளராகத் தன்னை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும் பாவலர்ää தனது தைரியத்தமிழில் தந்த துணிவுத் தமிழ்க் கவிதை இது:-


ஒருவரை மற்றவர் மதிப்பதனால்- இங்கே
உருவாகும் நல்ல சமுதாயம்

வருந்திக் கசிந்த கண்ணின் நீரோடை- கொடும்
வன்செயல்களால் மலிந்த பிணவாடை
கரிந்து சரிந்ததுவோ மன மேடை..- இங்குää
 கடிதில் தெலைத்திடுக போர்ப்பீடை.

மனங்கள் வெளுத்தே நாம் பேசிடுவோம்.-ஒருவர்
மற்றவரைத் தாழ்த்தக் கூசிடுவோம்.
சனங்கள் இனும் வருந்தல் நீதியில்லை.-பாடாச்
சங்கடங்கள் ஒன்றும் இங்கு மீதி இல்லை.

மூன்று இனங்;களுமே மனிதர்கள்- இங்கு
நான்கு மதங்கள் கூறும் புனிதங்கள்
ஏன் செயல்பாடாகி எழவில்லையோ..- நமக்கு
இறைவன் பகுத்தறிவைத் தரவில்லையோ..?

-பாவலர் பஸீல் காரியப்பர்.
(மனங்கள் வெளுத்தே நாம் பேசிடுவோம்.:- 1992)


(சஞ்சாரம் தொடரும்..)



No comments:

Post a Comment