Saturday, July 4, 2015

07- கண்ணின் மணியைப் பிடுங்கி ஏறி

07-   கண்ணின்மணியைப் பிடுங்கி எறி..



தக்கதில்லை பலர் துக்க நிலை- சிலர்
சக்கை எனில் இதோர் பக்கநிலை
-பாவலர் பஸீல் காரியப்பர்.



    பாவலர் பஸீல்காரியப்பர். 1966ல்ää தனது தாயகத்திற்கு மீண்டு வந்து  சம்மாந்துறை மகாவித்தியாலத்தில் ஆசிரியப்பணியேற்றார். மீண்டும்ää 1967.ல்ää கொம்பனித்தெரு ஸாஹிறாக்கல்லூரியில் ஆங்கிலமொழிமூலப் போதனாசிரியராகப் பதவியேற்றுக் கொண்ட பாவலர்ää இச்சமயத்தில்ää ~ஆக்கினை|ää ~படப்பிடிப்பு|  ஆகிய கவிதைகளை உருவாக்கினார். இக்காலகட்டத்தில்தான்ää அவருக்கு இலங்கை வானொலியின் பிரபல்யமிக்க முன்னோடியானää எம்.எம். இர்பான் அவர்களின் நட்பு கிடைத்தது. தொடர்ந்துää 1968ல்ää பாவலரின் வானொலிப் பிரவேசம் நிகழ்ந்தது 1969.ல்ää ~நிர்மலா| என்ற இலங்கைத் திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்தின் பின்னணியில் பாவலரின் ~கருத்துருக்கள்| பல இருந்;தன. அவற்றைக் ~கடற்கரையில் உரையாடலின்பம்| நிகழ்வில்  நகைச்சுவையுடன் விபரிப்பதுண்டு.

1970.ல்ää ~நம் காதல்.|ää ~பிரியதர்ஷினி|ää ~சட்டை|ää ~சேவல் ஒன்று கூவுகிறது| போன்ற பல பாடல்களை எழுதினார்.. ~நம் காதல் இனியது.. புனிதமானது.. ஃ அது அந்தரங்கமானது..| என்று இளமைக் காதலை தூய்மையுடன்ää விபரிக்கிறது ~நம்காதல்| கவிதை. தன் மனம் கவர்ந்தவள் மீதான விரகதாபத்தை வெளிப்படுத்தும் பாணியிலான ~பிரியதர்ஷினி| என்ற கவிதை மறைமுகமாகää இறைகாட்சியை அவாவும்ää ஒரு ஆத்மீக மனதின் வெளிப்பாடாகும். தூரத்துக் காட்சியாக இறைவனையும் அதனை அண்மிக்க விரையும் பக்தனின் பேரின்ப வேட்கையையும் மறைகருவாக வைத்து இக்கவிதையை பாவலர் அற்புதமாக உருவாக்கியிருக்கிறார். ~~..... பண்ணும் போது மட்டும் இனிப்பது - சிற்றின்பமென்றால் - எண்ணும் போதெல்லாம் - இனிப்பது பேரின்பமா..?..|| என உள் விசாரணையில் இறங்கியிருக்கிறார் பாவலர்.  ~சேவல் ஒன்று கூவுகிறது..!| என்ற கவிதைää ஆண்மையின் அவசரம்ää கம்பீரம்ää வீரம்ää  வேட்கைää முதலான சிற்றின்பியல் உணர்வுகளைக் கூறுவது. பாவலரின் வாலிப முறுக்கில் வடித்த வாத்ஸாயல்யன வரிகள் அவை.

1971.ல்ää மீண்டும் சம்மாந்துறை தாயகத்திற்கு இடமாற்றம் கேட்டுப் பெற்று வந்தார். அவருக்குத் திருமணம் செய்விக்கப் பெரியோர்கள் இனிதே நிச்சயித்திருந்தனர். பெண்ணை திருமணத்தின் முன் ஒரு தடவையாவது நேரில் பார்த்துவிட வேண்டுமென்ற ஆவலுடன்ää தன் பால்ய நண்பர் கவிஞர். மருதூர் மஜீதுடன்ää சைக்கிளில் சென்றுää பெண்வீட்டருகில் வைத்து ஒரு விநாடிக்கும் குறைந்த நேரத்த்pல்ää பெண்ணைக் கண்டதையும்ää ~~நெற்றிப் பிறை மட்டும் கண்டேன்.. கூர் முக்காட்டினுள் மற்றப்படிää வேறு எதனைத்தான் காண்பேன்..?|| என்று நகை ததும்பக் கூறியதையும் அடிக்கடி நினைவிலிருந்துää சொல்லிச் சிரிக்கிற அந்த வெகுளிப் பாவலர்ää 1972ல்ää  கல்முனைக்குடியில்ää உயர்குடும்பத்தைச்; சேர்ந்தää கதீஜாநச்சியார் (ஆசிரியை) அவர்களைக் கைத்தலம் பற்றினார். இப்புதுமணக் காலத்தில்ää ~பழைய புதுமை|ää ~அழகிய மனம்|ää ~எதுவாகிலும் வரட்டும்.|  ஆகிய கவிதைகளை எழுதியிருந்தார்.

கலாபூஷணம். எம்.எச்.எம். ஷம்ஸ். பீ.ஏ.
~~..பஸீல்..!  கருத்து திறந்து விட்ட கதவு. பகட்டின்றிப் பழகுவதில்ää பச்சிளம் குழந்தை. பண்பிலே உச்சம். கவித்துவப் போதை எப்போதும் கண்களில்..  கவிதை அவனது ஆத்மாவின் உணவு. அதனால்ää பட்டமும் பதவியும் அவனது மதியை மயக்கி விடவில்லை. செல்வமும்ää அதிகாரமும்ää அவனுக்குச் செல்லாக் காசு..|| 

கவிஞர். பாலமுனை பாறுக்.
    ~~உள்மனதை உணர்வுகளைää உணர்வுகளின் அலைகளினைச் சொல்லிää கவிதை தரும் சுந்தரக் கவி வல்லோன்ää சித்திரமாய்ää நூதனமாய்ää மிகச் சிறப்பாய்ää உணர்வுகளைää ஒத்திசைப்போடெழுதி வரும்ää ஒரு புதிய பா வல்லோன்.. காட்சிப்படுத்தலினைக் கடைப்பிடித்துää படப்பிடிப்பாய்ää பாப்புனைந்து தரவல்லää பக்குவப் பா வாணண்ää வாழ்ந்த அநுபவங்கள்ää வரைந்த குறிப்புகளைத்ää தேர்ந்து கவியாக்கும்ää கை தேர்ந்த படைப்பாளி..||


பாவலரின்ää ~பழைய புதுமை!| என்ற கவிதையில் முதலிரவுச்சுவையைää ~நண்டுநடைத்| தமிழில்ää அழகுற அமைத்துள்ளார்.. ~~புதுமனை - முதலிர - வெனுசுவை - மிகுதினம் - புதுமையாய் - அவள்எனில் - படரவே - வருகிறாள் - புதுவித - அலையென - துளமெனும் - பரவையிற் - கொதிகொள - அவளுரு - பருகின - இருவிழி..|| என்றுää தொடர்ந்து வர்ணித்துச் செல்கிறது. ~அழகிய மனம்| கவிதை துயரப்பட்ட மக்களின் வர்க்க உணர்வைக் கூறுவது. ~..படித்திருக்கும் - வெற்றி படைத்திருக்கும் - மக்கள் - வடித்திருக்கும் - வழி இனித்திறக்கும்..|| என நம்பிக்கை அறையும் கவிதை அது. மானுட மனது சவால்களை எதிர்கொண்டு வாழ்தல் பற்றிச் சொல்லும் பாடல்தான்ää ~எதுவாகிலும் வரட்டும்..| என்ற இசைப் பாடல் ஆகும்.  (இப்பாடலை பாவலர் தானே இசையமைத்து  பற்பலநிகழ்வுகளில் உச்சஸ்தாயியில் பாடி அங்கிருப்போரின் மனதைத் திடப்படுத்தி நம்பிக்கை தருவது வழக்கம்.) 

இந்த ஆண்டில்ää அப்போதைய மாண்புமிகு கல்வியமைச்சராகவிருந்தää கலாநிதி. பதியுதீன் மஹ்மூத் அவர்களினால்ää அகில இலங்கை முஸ்லிம்கள் சார்பாகää மான்புமிகு பிரதமர்ää திருமதிää ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களுக்குää கொழும்பு ஸாஹிறா முற்ற வெளியில்ää அளிக்கப்பட்ட மாபெரும்ää பாராட்டுக் கூட்டத்தில்ää வரவேற்புக் கீதம் பாடும் முகமாகää கல்முனை மஹ்மூத்  மகளிர் கல்லூரியின்ää இசைக்குழுவுக்கு பாவலர் தலைமையேற்றுää நெறிப்படுத்தி கொழும்புக்கு அழைத்துச் சென்றார்.

1973.ல்ää மாவடிப்பள்ளி அரசினர் பாடசாலையில் கடமையேற்றார். இது அவரது இலக்கியப் பணியின் அறுவடைக் காலமாகும். ஏராளமான வானொலி நிகழ்ச்சிகள்ää நாடகங்கள்ää சிறுகதைகள்ää கவிதைகளை எழுதிக் குவித்தார். எல்லா இலக்கியவாதிகளினதும்ää கூடாரமாக அவரதுää மாவடிப்பள்ளி பாடசாலை வாசஸ்தலம் புனிதம் பெற்றது. ~ஓ.. ஒரு பெண்ணாள்.|ää ~சிட்டுக்குருவியே..| ~சுடுநீர் விழிமணிகள்|ää ~வருத்துவது|ää ~தாய்மையின் தாகம்| ~அன்னை| ஆகிய படைப்புக்கள் இங்குதான உருவாயின. 1974.ல்ää பாத்திமா ரொஷானா காரியப்பர் என்ற அழகிய மூத்த பெண் குழந்தையும்ää ~தன்பலப்பு|ää  ~காட்டுங்கள் என் சிரிப்பை|ää  ~இரணக்கோல்|ää  ~இரத்தமணிகள்| போன்ற தத்துவக்கவிதைகளும்ää மேலும்ää மீலாத் தினக் கவியரங்குக் கவிதைகளும் பிறந்தன. மேலும்ää ~கலைச்செல்வி|ää ~தேனருவி.|ää ~வீரகேசரி.| ஆகியவற்றில் உருவகக் கதைகளை ஏராளமாக எழுதியும் வந்தார்.

இக்காலத்தில். கல்முனை ஸாஹிறாக்கல்லூரியில்ää மருதுர்ர்க்கனிää இளங்கீரன்ää டொமினிக் ஜீவாää கைலாசபதி போன்ற முற்போக்காளர்களினால்ää நடத்தப்பட்ட சாஹித்திய விழாவில்ää எஸ்.பொ.ää நாவலர் ஈழமேகம்ää புலவர்மணி ஷரிபுதீன் ஐயாää சமாதானம் மருதூர்வாணர் ஆகியோருடன்ää  அழைப்பேதுமின்றி அதிரடியாகப் புகுந்த பாவலர்ää ~கல்முனைப் பிரதேச எழுத்தாளர்களைப் புறம் தள்ளிக் கல்முனையில் இலக்;கிய விழாவா..?| என்று அஞ்சாநெஞ்சினராக ~இலக்கியநியாயம்| கேட்டபோதுää ஏற்பாட்டாளர்கள் அக்கோரிக்கையை மறுக்கவியலாது போயிற்று. அனைவருக்கும் மேடையில் பேச இடம் தரவேண்டியதாயிற்று. 

1975.ல்ää கொழும்பு பீஎம்.ஐஸீ.எச். இல்ää இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும்ää இலங்கைச் சிங்கள எழுத்தாளர் சங்கமும்ää  இணைந்து நடத்தியää  ஒருமைப்பாட்டு இலக்கிய மாநாட்டில்ää பாவலர்ää கவிதை பாடியபோதுää சிங்களக் கவிஞர்கள் சிலர்ää தமிழ்க்கவிஞர்களுக்கு தாளில் எழுதித்தான் வாசிக்க முடியமா.. என்று பரிகசித்ததைப் பொறுக்க மாட்டாத பாவலர்ää தாளை மடித்துச் சட்டைப் பைக்குள் திணித்து விட்டுää தன் இனிய கம்பீரமான இசைக்குரலால்ää நாட்டுக் கவிதைப் பாணியில்ää ~சிங்களம் தெரியாத சிரமத்தால் வாடுகிறேன்.. தங்கத் தமிழின் பாட்டுக் கிரமத்தால் பாடுகிறேன்..| என்று மதுரக் குரலில்ää பாடச் சபையே திகைத்துப் போய்ää மெய்சிலிர்த்துக் கைதட்டிய சம்பவம் நிகழ்ந்தது. இதனைää காதிநீதவான் எஸ். ஆதம்பாவா அதிபர் அவர்கள் மலரில் எழுதியிருக்கிறார். எழுத்தாளர் யோனகபுர ஹம்ஸா அவர்கள் அடிக்கடி நினைவு கூர்ந்து சொல்லி வியக்கும் சம்பவம் இது.  இதன்போதுää ரயில் பயணத்தில் வைத்துää ~சிறுக்கி| என்ற அழகியற்பாவை இயற்றிப் பாடினார்.

இக்காலப்பகுதியை பாவலர் தமது கவிதைகளுக்கான ~பொங்கு காலம்.| என வர்ணிப்பதுண்டு. தொடர்ந்தும்.ää ~இல்லாஇடம்நோக்கி|ää ~எனக்குஒருதேவை.| ~அரியபிறப்பு| ஆகிய வித்தியாசமான பொருட் செறிவு கொண்ட கவிதைகளை தனக்கு இயல்பாகவேää வரக்கூடிய சரளமான இனிய நடையில்ää எழுதினார்.

கவிதைகளின் பின்னணிக் கருவுக்கான காரணங்களை அவர் தனதுää நாற்பது வயதுக்குப் பின்னரான காலங்களில்ää அடிக்கடிää கலந்து கொள்ளும்ää ~அந்தியில் சந்திப்போம்..|ää மற்றும்ää ~கடற்கரையில் உரையாடலின்பம்| போன்ற மாலை இலக்கிய  நிகழ்வுகளில்ää வெகு அலாதியாக விபரிப்பதைக் கேட்பவர்கள் உண்மையில் பாக்கியம் பெற்றவர்களே.;. ஆத்மாவின் உணவாக கவிதையை உட்கொண்ட அந்தப் பாவலர்ää ஒருநாள் ஓரிடத்தில்ää குப்பைத்  தொட்டிக்குள் இறந்து கிடந்த பச்சிளம் சிசுவைக் காண நேர்ந்த சம்பவத்தைச் சொன்னää. அந்த உணர்;ச்சிக்  கவிஞனின் நரம்புத் தமிழ் வரிகள் இவை:-


..அந்த மலர் சந்தியில் அனாதையாய்க் கிடக்கிறது
அந்தச் சிறு மலருக்கு உறவு சொல ஆளிலையா..?
பொக்குள் கொடியில் பொசிந்த இரத்தத்தில்
கொசுக்கள் பறந்தும் குந்தியும் இருந்தன

இந்தச் சிறுமலருக்கு உறவு சொல ஆளிலையா..?
இந்த இளம் மனிதன் என்ன செய்தான்..?
அன்று மினாவில்ää அந்தக் கத்தியைத் தன்
சொந்த மகனின் கழுத்தில வைத்து
உந்தி இழுத்து அறுக்கத் துணிந்த
அந்த மனம் எங்கே..அதன் ஆத்ம நிலை என்ன..?

இன்றுஇந்த மகனைக் கந்தல் பாயினுள்
தந்திர மாகத் தனிமைப்படுத்திய
இந்த மனம் எங்கே..? இதன் ஆத்ம நிலை என்னே..!

-பாவலர் பஸீல் காரியப்பர்.
(ஹஜ்: - 1980)

(சஞ்சாரம் தொடரும்..)

No comments:

Post a Comment