Saturday, July 4, 2015

17- துறை நீலாவணை யிலிருந்து ஒரு துளசி

17-   துறைநீலாவணையிலிருந்து ஒரு துளசி...




“எங்கினிப் போவேன்  என்ற நிலை வந்தே
ஏங்கி அழும் போதும்- தாய்
தங்கியிருக்கும் அந்த நிழலே தரிப்பிடமாய்ச் சேரும்.
-பாவலர் பஸீல் காரியப்பர்.




     பாவலர் பஸீல்காரியப்பர்.  1993.ல்ää ~தனி ஒரு பழம்|ää  ~மகிழ்ச்சியாய் இரு| ஆகிய தத்துவக் கவிகளைப் படைத்தார்.;. 1994.ல்ää ~மறைவின் உறக்கத்தில்| ~ஒன்றே..|ää  ~துளசி| ஆகிய கவிதைளைப் பிரசவித்தார். இவை தமிழ்பேசும் மக்களின் ஒற்றுமையைப் போதிப்பதாகும். 1995.ல்ää ~ஈர்ப்பு| கவிதையை வடித்தார். 1996.ல்ää ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.  இதே ஆண்டில்ää ~காலம்|ää  ~நிலையான நிழல்| என்பவற்றினை யாத்தார். இக்காலகட்டங்களில்ää சராசரியாக வருடத்துக்கு ஒரு கவிதை மட்டும் எழுதினார். ஆனால்ää இலக்கிய விழாக்களிலும்ää அது சம்பந்தமான வாசிப்புகளிலும்ää ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

பாவலரின்ää “தனி ஒரு பழம்” கவிதை விதவை வாழ்வின் துயர் நிலையையும்ää வயோதிபத்தின் விரக்தியையும்ää பற்றியது. “…தனி ஒரு பழம் நான் இத்தக்காளிச் செடியில்- உண்ணாப்பழமா..நான் - ஒருவருக்கும் வேண்டாமோ. - வண்ணாத்தி தேன் உண்ட - வழியில் கனிந்தவள் நான்…” என்று தன்னிலை விபரம் தரும் கவிதை அது. “மலர்ச்சியாய் இரு!” கவிதை ஒரு தன்னம்பிக்கைச் சிறைப்பிடிப்பாகும். “…மலர்ச்சியாய் இரு - எனக்கு மகிழ்ச்சியைத் தா - விழிச்சுடர் தெறி - என்னுள் வெளிச்சமாய் வா - நம்பிக்கை வந்தால் - நெஞ்சம் சந்தோஷம் கொள்ளும் - சந்தோஷம் வந்தால் -  புதுச் சிந்தனை துள்ளும்..” என்று உபதேசிக்கும் புத்துணர்ச்சிமிக்க துள்ளுநரம்புத் தமிழ்க்கவிதையது.

   1994ல்ää அப்போதிருந்த  தமிழ்முஸ்லிம் இன முறுகலைக் கண்டு பாவலர்ää மிகவும்ää மனம் வெதும்பிப் போய்ää காணப்பட்டார். இக்காலத்தில் அவர் அதிகமாக எதுவும் எழுதவில்லை. தான் எல்லாவற்றையும் எழுதி முடித்து விட்டதாகவும்ää இன இந்த இன முறுகல்த் தீ என்று அணையுமோ என்ற ஒரு வகையானää விரக்தியான மனநிலையில் காணப்பட்டார். இதுபற்றிப் பாவலர் யாத்ரா பேட்டியின் போதுää “இனக்கலவரம் எல்லாவற்றையும் உடைத்துத் தள்ளி விட்டது.  மனிதனின் இயல்பு வாழ்;வை அவனது ஆத்மாவை சின்னாபின்னப்படுத்தி விட்டது. மனித இறைச்சியை மட்டும்தான் இன்னம் இவர்கள் விற்கவில்லை. “ என்ற மனம் கசந்து போய்ச் சொல்லியிருந்தார்.

பாவலரின்ää “மறைவின் உறக்கத்தில்” கவிதைää அவரதுääää ‘மறைந்தறைதல்” என்ற செயற்பாட்டின் வார்த்தை வடிவமாகும். “இரத்தினமே..!” எனத் தன்னைத் தானே பாவலர் விழித்து அழைத்துப் பாடுகிறார்.  “நீ எத்தனை நீண்ட ஆண்டுகளாக-  மண்ண்pன் மடியுள் - மறைவாய் வாழ்ந்திருந்தாய்?  - பாதாள அக்கினியுள்  -பக்குவங்கள் பெற்றாயோ..? -  ஓ..! அந்த மறைவின் உறக்கத்தில் - ஞானத் தவத்தால் ஒளிக்கதிர்கள் - உன்னுள் விளைந்தனவா..?  - உள்ளொளியைப் பெற்றே  - உலகைத்தரிசிக்கும்  - வெல்லும் ஒரு வாழ்வை  - விரும்பித் தவம் இருந்தாயா..? - இம்மனிதர்  - ஆழத்தில் இருளில் உன்னை - அடையாளம் கண்டார்கள்.!”

“ஒன்றே” என்னும் கவிதைää ஒட்டியிருக்கும் உறவுகள் அனைத்தும் பிரிவுகளாகிப் பிரியும்.. அதன் முடிவுää முடிவில்லாத மன ஒடிவு..  ஆனால்ää இறைஞானம் ஒன்றே பிரியாமல் ஒன்றோடு ஒன்றாக முடிவு வரை ஒன்றியிருக்கும் என்று உரைக்கிறது. “பிரியாத உறவும் அலையாத மனமும்  - அடைந்து சதா - ஆனந்த மயமாகி - உருகிக் கரைந்து ஒன்றோடு ஒன்றாகி - ஒன்றே என்று இருப்பதற்கு - உன்னையல்லால் ஒன்று இருக்கிறதா..?”   எளிமையின் வனப்பை வண்ணத் தமிழில் சொல்லுவது “ஈர்ப்பு” கவிதை. காலங்கள் விரைந்தோடுவதை துள்ளு தமிழ்வார்த்தை ஜாலங்களால் வர்ணிப்பது “காலம்” கவிதை.

ஒவ்வொரு மனிதரிடத்தும்ää அந்தரங்கத்தில் இருக்கும் இளமைக்காதலைச்  சொல்வது “நிலையான நிழல்” கவிதை. மாங்கொட்டை விளையாடும் காலத்தில் சந்தித்த ஒரு சிறுமியின் மீது காதலுற்ற சிறுவனின்ää பசுமை மனதினைப் படம் பிடிக்கிறார் பாவலர். அச்சிறுமிää  “…ஒற்றைக் காலால் நொண்டிக் குதித்த - அசைவுகள் நெஞ்சில் - பதிவுகள் ஆயின - அழகியல் ஓதின..”

உலகின் எந்த ஒரு ஆத்மாவுக்கும் துயரம் நேருமென்றால் எனக்கு சந்தோசமே வேண்டாம் என மறுக்கும் கவிதை “சந்தோஷம்”   எனினும்ää 1997ல்ää ~சந்தோஷம்| என்ற மானுடரின் பொதுமை உணர்வைக் கூறுவதாகவிருந்த  இக்கவிதையை எழுதும் போதுää பாவலர் சந்தோசமாக இல்;லை என்பது அவருக்கு நெருங்கியவர்களுக்குத் தெரியும். இக்காலத்தில்ää கொலம்பியா பல்கலைக்கழக மானுடவியல் ஆய்வாளர்ää திரு. ஸீ.எல். ரொபர்ட்ஸன்ää திரு. ஆர். ஜோன்சன்  மற்றும்ää பாகிஸ்தான்ää இஸ்லாமாபாத் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி தீன்முஹம்மது ஆகியோரைச் சந்தித்;த பின்னர் பாவலர் சற்றே தெளிவடைந்த மனதினராய்க் காணப்பட்டார்.

இதன் பின்னர்ää 1998.ல்ää ‘ஹலால்’ (ஆகுமானது) என்னும்ää இஸ்லாமியக் கருத்துருவை வைத்துää அருமையான  ஒரு கவிதையாக்கினார். ஒரு மனிதன்ää தன் வாழ்வில் சாப்பிடும் ஒரு நெல் மணியைக் கூட ஆகுமான (ஹலால்)  வழியில் தேடிக் கொள்ள வேண்டிய சிரத்தையை மிக எளிமைத் தமிழில்ää வெகுளிப் பாவலர்ää; சொன்ன வரிகள் இவை:-:

“இந்தப் போகம் முடிந்து விட்டது
இனி நாம் புறப்படப் போகிறோம்
இந்த அந்தர விடுதியில் பல விதமான
ஆதரவுகள் செய்திருக்கிறீர்கள்
நன்றி காக்கா.. பரன் கம்புகளும்
வண்டியில்ஏறிக் கொண்டன.ää நீங்கள்
விலா வயல்காரர்ää  முளை எறியும் போது
பொது வரம்பைத் தாண்டி சில மணிகள்
எந்தன் வயலிலும் சிந்தியிருக்கலாம்
அவை பல மணிகளைத் தந்துமிருக்கலாம்
ஆதலால் காக்கா.. அவைகளை நீங்கள்
ஹலால் சொல்ல வேண்டும்
வண்டி புறப்படப் போகிறது
சென்று வருகின்றேன்… அஸ்ஸலாமு அலைக்கும்.! (1998)

-பாவலர் பஸீல் காரியப்பர்.
(ஹலால்.1998)

இக்காலப் பகுதிகளில்ää ‘ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சுவையும் வௌ;வேறானவை.’ என்றும்ää ‘விதிக்குப் பொருந்துவது வேதனைக்கு மருந்து” என்றும்ää பாவலர்ää தனது கருத்துருக்களை தனக்குää மிக நெருங்கியää  தமிழ் முஸ்லிம்ää நேசர்களுக்கு மட்டும்ää கூறி வந்தார்.  என்னதான் கடத்தல் சம்பவங்களும்ää இனக்கலவரங்களும்ää நடந்த போதிலும்ää தனது தமிழ் நண்பர்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்றே சந்தித்துறவாடி வந்தார். தனது ஓய்வூதியப் பணம் அவ்வளவையும்ää தமிழ் வயோதிபத் தாயொருவருக்கு திடீர் அன்பளிப்புச் செய்து விட்டு வெறும் கையோடு வீடு வந்த சம்பவங்களும் உண்டு.

துறைநீலாவணைக்கு முஸ்லிம்கள் யாரும் போகாத அந்தச் சு10ழ்நிலையில்ää தன்னந்தனியனாகää அங்கு சென்று தனது இலக்கியää ஆசிரிய நண்பர்களைச் சந்தித்து மீண்டார். சும்மா அல்ல.. ஒரு துளசிச் செடியும் கொண்டு வந்தார். இச்சமயம் அவர் சிறிது மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். இச்சம்பவம் “துளசி.!” என்ற அற்புதமான இனவொற்றுமைக் கவிதைக்கு வெளிப்பாடாயிற்று.

தூய வெண்ணிறச் சாரமும்ää நஷனல் மேற்சட்டையும்ää குறிப்பாகää முஸ்லிம் தொப்பியும்ää அணிந்து கொண்டுää இனக்கலவர காலத்தில்ää தன் தமிழ்ச் சகோதரியான குணசுந்தரியைச் சந்திக்கத் துறைநீலாவணைக்குச் சென்றுää பாவலர் கொண்டு வந்த அற்புதமான தமிழ் மணக்கும் மண்ணின்ää கவிதைச் செடியில் பூத்த துறைதேர்ந்த தமிழ்ப் பூ இதுதான்.

துறைநீலாவணையிலிருந்து  ஒரு
துளசிச்செடி கொண்டு வந்தேன்.
வேர் நொந்து போகாமல் நீர் வார்த்து
ஓரமாய்க் கெல்லி ஈர மண்ணோடு
உசுப்பாமல் கொண்டு வந்து
எங்கள் இல்லம் இருக்கும்
கல்முனைக்குடி மண்ணைக் கெல்லி
அதன் உள் வைத்தேன்.
அம் மண்கள் கலந்தன… மனிதரைப் பழித்தன.
துளசியின் இலைகள் என்னைப் பார்த்து
மெல்லச் சிரிக்கின்றன.

-பாவலர் பஸீல் காரியப்பர்.
(துளசி.- 1994)



(சஞ்சாரம் தொடரும்)

No comments:

Post a Comment