Saturday, July 4, 2015

04- அரும்பு மீசை தத்துவ ஞானி



04-   அரும்புமீசைத் தத்துவஞானி..


தாய்ää ஒரு சேயினோடுää தவிப்பதில் பேதம் காணும்
நாயுனை என்ன என்பேன்...நாமெல்லாம் மனிதரன்றோ..?
-பாவலர் பஸீல் காரியப்பர்-
  

பாவலர் பஸீல்காரியப்பர். 1961ல்ää பயி;ற்சிக் கல்லூரியிலிருக்கும் காலத்தில்ää அவரதுää  சம்மாந்துறை இல்லத்தில்ää இடம்பெற்ற ஒரு இலக்கிய நிகழ்வில்ää நாவலாசிரியர் சுபைர் இளங்கீரன்ää பிரபல எழுத்தாளர்ää எஸ். பொன்னுத்துரைää ஆகியோரும்ää இன்னும் பல இலக்கியவாதிகளும்ää கலந்து கொண்டு சிறப்பித்தனர். இக்காலகட்டத்தில்ää பாவலரின்ää சம்மாந்துறை. மாவடிப் பள்ளி இல்லங்கள் இலக்கியவாதிகளின்ää மனம் கவர்ந்த பட்டறையாக விளங்கின. இவ்வேளையில்ää பாவலருடன்ää மிக நெருக்கமான தோழராகவிருந்தää பன்னூலாசிரியர் மருதூர்.ஏ. மஜீது அவர்கள்ää தன் அநுபவங்களில் ஒன்றைப் பின்வருமாறு சொல்லியிருக்கிறார்.:-

~~.............. 1961ம் ஆண்டுää நானும் பஸீல் காரியப்பரும்ää சம்மாந்துறை வித்தியாலயத்தில் ஒன்றாகப் படிப்பிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.  அதனால்ää உறவு மேலும் இறுக்கமானது. அதனால்ää மாலை வேளைகளில்ää அவரது வீட்டு முற்றத்தில்ää கதிரைகளைப் போட்டு இருந்து கதைத்துக் கொண்டிருப்போம்.  அவரது வீட்டின் சூழல் இயற்கையானது. அழகானது. வீட்டின் எதிரே கண்ணுக்கெட்டாத தூரம் வரை பச்சைப் பசேல் என்ற வயல்வெளி.அதன் அருகே சலசலவென்றோடும்ää ஆறு. ஆற்றின் ஒரு மருங்கில்ää மருதமரம். மறு அருங்கில்ää தென்னந்தோப்பு. ஆற்றுக்கும்ää வீட்டுக்கும் இடையே பிரதான பாதை. பிரதான பாதை அழகைக் கூட்டியே தவிர குறைக்கவில்லை.  பாவலரின் வீட்டு முற்றத்தில்ää  மாலை ஐந்து மணியளவில்ää பெரியதொரு கூட்டம் கூடிவிடும்.  அக்கூட்டத்தில்ää மாறன்.யூ. செயின்ää நாவலர். ஈழமேகம் பக்கீர்தம்பிää  அப்துல்லாää மிருதங்க வித்துவான் வேல்முருகுää விமர்சகர். வீ. ஆனந்தன்ääää கலைத்தொண்டன் அமானுல்லா போன்றோர்களும் இருப்பார்கள். 

இடையிடையே நான்ää பாரதியின்ää ~காணிநிலம் வேண்டும்| பாடலை ஞாபகமூட்டுவேன். பாவலரும் அதனைப் பாடுவார். பாரதி கற்பனையில் பார்த்த காணி நிலமும்ää  தென்னை மரங்களும்ää  கத்தும் குயிலோசையும் இந்த இடம்தான் என்று எண்ணிக் கொள்வேன்..

அவரது கவிதைகள் ஆழமானவை. அற்புதமான தத்துவங்கள் நிறைந்தவை.  நல்ல பண்பாளன் அவர். அதனால்தான்ää நட்பைப் பேணும் தன்மை அவரிடம் ஆளுமையாகி ஆட்சி செய்தது. இரண்டொரு வார்த்தைகளில் கூறுவதாயின்ää  பாவலர் பஸீல்காரியப்பர் ஒரு ஆளுமைமிக்க கவிஞர். அன்புக்கும்ää நட்புக்கம் இலக்கணமானவர்.  நல்லதொரு குடும்பஸ்தர். ஆங்கிலக் கவிஞர்களானää ஷெல்லிää மில்ட்டன்ää  போன்றவர்களின் ரசிகர். எல்லாவற்றுக்கும் மேலாகää அவர் நல்லதொரு மனிதர்..........||

1962.ல்ää மன்னார் பெரியமடு வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையிற் சேர்ந்தார். இது அவரது இளம் வாலிபக் காலம் ஆகும். இங்கு வைத்து ஏராளமான தத்துவார்த்தக் கவிதைகளை எழுதியிருக்கிறார். அவைகளில்ää ~உயிர்|ää ~ஊனக்கலை|ää  ~உயிரைத் தரமாட்டேன்.|  போன்ற கவிதைகள் அவரது தனிமைச் சிந்தனைகளையும்ää வாழ்வின் அகமியங்களையம் பேசுபவையாகும். வாலிப வயதில்ää சாதாரணமாக எழுதக் கூடிய இன்பியல் கவிதைகளை விடுத்துää அவர்ää இயற்கையாகவேää தன் மனதின் உள்ளார்ந்த தேடல்களைப் பாடல்களாகவும்ää கவிதைகளாகவும் உருப்பெறச் செய்தமையினால்தான்ää பாவலரின் கவிதைகள் படித்தää பாமர ஆகிய இரு மட்டங்களிலும்ää ஒரேயளவான செல்வாக்கைப் பெறக் காரணமாகவிருந்தது. 

இவ்வாண்டில்ää இலங்கை சமசமாஜக் கட்சி அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த பாதை அமைக்கும் சிரமதான வேலையின் போது. அப்போதைய நிதியமைச்சர் கலாநிதி என்.எம். பெரேரா அவர்களுடன் கலந்து கொண்டார். இதுபற்றிப் பாவலர்ää  ~~...நாத்திகரான என்.எம். பெரேராவுடன் ஆத்திகரான காரியப்பரைக்; கண்டால்ää சனங்கள் என்னன்பரோ.?||  என நகைச்சுவைபடக் கூறுவதுண்டு.

1963.ல்ää மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில்ää பிரபல எழுத்தாளர். திரு. எஸ்.பொ. அவர்களின் தலைமையில்ää ~முத்தமிழ்| விழா நடைபெற்றது. இதில்ää ~விவேகி| ஆசிரியர் திரு. செம்பியன் செல்வன்ääஅவர்களும்ää திரு. கனகசெந்திநாதன் அவர்களும்ää திரு. வ.அ. இராசரத்தினம் அவர்களும்ää ~மரகதம்.| ரஹ{மான் அவர்களும் பாவலருடன் கலந்து கொண்டனர்.     

1964.ல்ää யாழ். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினால்ää நடத்தப்பட்ட ~தங்;கத்தாத்தா கவிதைப்போட்டி| யில்ää பாவலரின்ää ~உயிர்| கவிதைக்கு மூன்றாமிட விருதும்ää பொற்கிழியும் பரிசளிக்கப்பட்டன. இக்கவிதை போட்டிக்கான விதிமுறைகளை மீறியிருந்த போதிலும்ää இதனைப் பரிசுக்குரியதாக தெரிவு செய்தனர். வேடிக்கை என்னவென்றால்ää  இக்கவிதை தினகரனுக்கு அவரால்ää அனுப்பப்பட்ட போதிலும் பிரசுரிக்கப்படவில்லை. பாவலருக்கே மிகவும் திருப்தியாக அமைந்த இக்கவிதை சுய விலாசமிட்ட முத்திரை உறை அனுப்பியும் அவருக்கு அது திருப்பியனுப்பப்படவுமில்லை. இது அவருக்கு மிகவும் மனச் சங்கடத்தை ஏற்படுத்தியதாக பிற்காலங்களில் அவர் கூறியதுண்டு.

இந்த ஆண்டில்ää ‘டுவைவடந வுhiபெ’ என்ற ஆங்கிலக் கவிதையை அற்புதமான தனது தமிழ்நடையில் கூட்டுறவு என்ற தலைப்பில் கவிதைப்படுத்தினார். இவ்வாறுää ‘வுhந ஊழற’ (பசு.ää)  ‘ஐ யனெ ஆல ளஉசநற’ (நானும் எனது சின்னத் திருகாணியும்ää)  ‘யுளா வுசயல’ (பிடி சாம்பர்)  ஆகியவற்றையும் தமிழ்பெயர்த்தார். (அவர் மொழிமாற்றிய ஆங்கிலச் சிறுகதைகள் பலவும் சுனாமிப் பேரலைகளில் தொலைந்து போய் விட்டன.)

வைத்திய கலாநிதி திரு. எம். முருகேசபிள்ளை அவர்கள்.

~~......அவர் என்னோடு பகிர்ந்து கொண்ட கவிதைகளில்ää ~உயிர்| இன்னுமெனக்குள் நிழலாடுகின்றது. மிகச் சாதாரணமாகää எந்தச் சிந்தனையுமில்லாது நாம்ää பற்ற வைத்த பின் வீசி விடுகிற ஒரு தீக்குச்சியை அவர் தத்துவக் கவிதையாக்கியது அவரது கவித்துவத்தை அற்புதமாக வெளிக்காட்டி நிற்கிறது. ஒரு சாதாரண மிகச் சிறிய அனுபவத்தை  நுட்பமான வாழ்க்;;கைக் கலையாக அவர் பாத்திருக்கின்றார்...........||

அறுபத்தி நான்கு வயதில் தோன்றக் கூடிய சிந்தனை பாவலருக்கு இருபத்திநான்கு வயதில் தோன்றியதை எண்ணி வியக்காமலிருக்க முடியுமா என்ன..? டொக்டர் முருகேசபிள்ளையை மிகவும் பாதித்த இந்த உயிர் கவிதையைப் பற்றிää அபிப்பிராயம் சொல்ல வந்த கலாநிதி எம்.ஏ. நுஃமான்ää அவர்கள். பாவலரை ~இவர் ஒரு அரும்பு மீசைத் தத்துவஞானி.!| என சிலாகித்துக் கூறியிருக்கிறார்.

பல்வேறு பத்திரிகைகளிலும்ää மறு பிரசுரம் கண்டது அக்கவிதை. நவமான யாப்புகளை இசையோட்டத்துடன் உருவாக்கி  நவீன பாக்களை நெய்த அந்த நெசவுப் படைப்பாளியின் பரிசுக் கவிதை:...


எங்கு ஒழித்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ..

குச்சி அதன் பெட்டியுடன்
கூடி உரசியதால்
விச்செனவே சுடரொன்று
வீறிட்டெழுந்து இங்கு
நின்று.. சுழன்று.
சில நொடியுள் மறைந்தது காண்.!
சென்றதுவும் எத்திசையோ..
சேர்ந்ததுவும் எங்கேயோ..?

எங்கு ஒழித்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ..

வீணை நரம்புகளில்
விரல்கள் விளையாடத்
தேனாம் இசையுண்டோம்.
சேர்ந்ததுவும் எங்கேயோ..?

எங்கு ஒழித்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ..

சுழன்ற சுடராமோ..
சுவைத்த இசையாமோ..
தளர்ந்த உடல் உயிரைத்
தவிர்த்த நிலை இதுவோ..

எங்கு ஒழித்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ..?

-பாவலர் பஸீல் காரியப்பர்.
(உயிர் 1962)

(சஞ்சாரம் தொடரும்;..)


---------------------------------------------------------------

No comments:

Post a Comment