Saturday, July 4, 2015

08- நெல்லுப் பாய்கள் தங்கம் அணிகின்றன


@-08-   நெல்லுப் பாய்கள் தங்கம் அணிகின்றன..



இருள் அற மின்னல் அடித்ததே.. இந்த
இறைவன் என்ன புகைப்படக்காரனோ..?
- பாவலர் பஸீல் காரியப்பர்.



பாவலர் பஸீல்காரியப்பர்.  அவர்களின்ää பாடல்களும்ää கவிதைகளும்  அவரதுää மன விசாரங்களை நன்கு எடுத்துக் காட்டும்;  வகையில் அமைந்துள்ளன. தான் வாழும் சமூகச் சூழலில் நிகழ்கின்ற தனது மனமொப்பாதனவற்றைக் கண்டு சீறிப் பாட்டுரைத்த பாவலர்ää தன் மனமொப்பியவற்றுக்கும் பாப்புனைந்தேயிருக்கிறார். அவரது கூர்மை மிகுந்த பார்வையிலிருந்து ஒரு சின்னப் பொருளும் தப்புவதில்லை என்பதற்கு அவரின் ~ஆக்கினை| கவிதை சிறந்த எடுத்துக் காட்டாகும்.

தினமும் பல் துலக்கும் தனது பற்தூரிகைää இன்று தேய்ந்து போய் விட்டது. அதை எறிந்து விட்டுப் புதிதாய் வாங்க வேண்டும். அதை எடுத்து எறிவதற்குத் தொடுகிறார். அப்போது பிறக்கிறது இக்கவிதை.


~~......மேலை முறுக்கி விட்டு மெதுவாய் எழுந்திருக்கும்
வேளை உனை நினைப்பேன் வெட்டென்று எழுந்து கரம்ää
பற்றிப் பசை சேர்த்து பட்டென்று இதழ் பிரித்துச்
சுற்றிக் குடைந்ததனால் தும்பகன்று போன உன்னைத்
தூக்கி எறிந்து விடவே
 தொடுகின்றேன்.. தொடும் பொழுதோர்
ஆக்கினை என் உள்ளத்துள்.. ஆ..! அதனைச் செய்வேனா..?

தொல்லை என நினையாது
 தொழில் புரிந்து
 நித்த நித்தம் என் பல்லைத்
 துலக்கிப் பளிச்சென்று வைத்த உன்னைத்
 தூக்கி எறிந்து விடவே
 தொடுகின்றேன்.. தொடும் பொழுதோர்
ஆக்கினை என் உள்ளத்துள்.. ஆ..! அதனைச் செய்வேனா..?

வேக்காடு  தந்தேன்  நான் விளக்கம்தான்  நீ தருவாய்
நோக்காடு  என்று என்ன்pல்  நொந்தாயா..?  இன்றோ நீ
பாடுபட்டுத் தேய்ந்த  ஒரு  பாட்டாளியாகி  விட்டாய்
பாட்டுக்குப்  பரிசு  பெறாத பாவலனாய் ஆகி  விட்டாய்.
தூக்கி எறிந்து விடவே
 தொடுகின்றேன்.. தொடும் பொழுதோர்
ஆக்கினை என் உள்ளத்துள்..
 ஆ..! அதனைச் செய்வேனா..?||

-பாவலர் பஸீல் காரியப்பர்.
(ஆக்கினை. 1967)


எழுத்தாளர். ஆசுகவி. அன்புடீன்.அவர்கள்:

~~.........பாவலர் பஸீல்காரியப்பர்!  மாவடிப்பள்ளியி;ல் கவிஞர் மனைவியோடு வாழ்ந்த காலத்தில் அவரது பா அடிகளைக் கேட்டு நாம் பரவசம் அடைந்திருக்கிறோம்.. ~ஆற்றிலே ஒரு பூ|ää ~தக்காளிப்பழம்.|ää ~பூனையின் பிரிவு|ää ~பூமரத்தின் இழப்பு|ää ~அச்சும்மா| இப்படி  எத்தனை கவிதைகளை அவர் எங்களுக்குச் சொல்லியுள்ளார். ~உயிர்| கவிதையின் உரசுதலை மறக்கவொண்ணா...  ~அம்புகள் பாய்ச்சி உளமெல்லாம்  புண்களை| ஏற்படுத்திய  ~அழகான ஒரு சோடிக்கண்களை| மறத்தல் கனவிலும் நிகழுமா..   ~கயிற்றோசை கேள் மகளேää தொட்டில் கயிற்றோசை கேள் மகளே.. அல்லாஹ் ஒருவனென்றும் அவன் தூதர் முஹம்மதென்றும்| சொல்லியே பாட்டிசைத்த உன் சோபன தாலாட்டுக்கள்  இன்னமும் நெஞ்சுக்குள்ளே  இருந்து என்னமோ செய்கிறதே......|| .(பிறை எப்.எம். கவியரங்கில் ஆசுகவி அன்புடீனின் இரங்கல் கவிதை)

பாவலரின் இரங்கல் மனதின் சுடுநெருப்புச் சொற்களில் பிறந்தது ~ஓ..! ஒரு பெண்ணாள்..| என்ற இக்கவிதை. . ~சிட்டுக்குருவியே..| கவிதையானது. வறுமையில்ää சிறுபிள்ளைகளுடன் வாழும் ஒரு தாய்ää தன் கனவண் வேலை செய்யும் ~செட்டி வட்டைக்கு| சிட்டுக்குருவியைத் தூது விடுவதாகும். ~படப்பிடிப்பு| என்ற குறுங்கவிதையில்ää காதலர் இருவர் இருளில் சந்திக்க வரும் போதுää மின்னல் வெளிச்சமடித்து அவர்களின் கள்ளொளுக்கத்தைக் காட்டிக் கொடுப்பதைக் கன்னற்றமிழில்ää கவிதை யாக்கியிருக்கிறார்.


தன் மாணவனின் வறுமை நிலை அறியாது அவனுக்கு பிரம்படி கொடுத்து விட்டுää பின் அதற்காக வருந்தியழுத பாவலர்ää தன் இரங்கல் மனதையும்ää பச்சதாபத்தையும் வடித்துத் தந்த கவிதைää ~சுடுநீர்விழிமணிகள்..|    ~~நியாஸ்.. நீ என்னை மன்னிக்க வேண்டும்..!||  என்று தொடங்கும் அக்கவிதைää ~~.. வாப்பாக்கு கண் தெரியா..- உம்மாக்கிட்ட காசில்ல..- கூப்பனை வித்துப் போட்டு..- கொப்பி வாங்கித் தாரன் என்றா..||  என்று கிராமியம் கலந்;த தமிழில் சொல்லிப் பின்ää ~.சொல்லி அழும் போதில்- அச் சுடுநீர் விழிமணிகள்- முள்ளாக என் நெஞ்சுக்குள் முனை எடுத்துப் பாய்ந்ததடா..|| என்று அழும் போதுää அக்கவிதையின் உயிர்த்துடிப்பில் மனதில் தமிழும் அல்லவா அழுகிறது..?

~வருத்துவது| என்ற கவிதைää வறுமைப் பட்ட பெண்ணொருத்தியை வயல்வெளிக்குள் கண்ட பாவலர்ää அவளது      கன்னத்தில்ää ~வெள்ளிக் காசுகளைப் போல்ää தேமல்..| கண்டுää அதற்கு ஒரு மருந்து சொல்லப் போகää அப்பெண். வெடுக்கெனத் தலையைத் திருப்பிää ~உறுத்துவது எங்களது வயிறே..ஃ முகத்தேமல் உறுத்தவில்லைக் காக்கா!|  என்று சொன்னாளாம். அந்த விரக்திப் பதிலிலிருந்து பிறந்த  இந்தää தேமல்த்தமிழ்க்கவிதை.   நம்மையும்  உறுத்துவதும்ää வருத்துவதும் ஆகும்.

இப்படி எத்தனையெத்தனையோ முகங்களும் பார்வைகளும்ää உணர்வுகளும் பாவலருக்குள்.. பொங்கிக் கொண்டிருந்தன. அந்த காலக் கண்ணாடி அணிந்த பாவலன்.ää கண்ட ஒரு மாரிக் காலத்தைக் காணுங்கள்..    ~~மாரி முடிந்துää வளவிற்குள் வந்த வெயில்ää - வடிவாய் இருக்கிறது. - காய்ந்து கிடந்த மாதுளை துளிர்த்து- சிவந்து சிரிக்கிறது- கோழிக்குஞ்சுகள் வாசலில் அழகாய் - கொத்தித் திரிகின்றன. - நெல்லுப் பாய்கள் வெயில் பட்டுத் - தங்கம் அணிகின்றன..||

ஓடும் பஸ்ஸ_க்குள்ளேää இருக்கையின்றி  ஒரு குழந்தையோடு  கால்கடுக்க நின்றிருந்த ஒரு பெண்ணுக்கு எழுந்துää இருக்கை கொடாத ஒருத்தன்ää பக்கத்திலிருந்தவனைப் பார்த்துää ~~உங்கள் இனப் பெண்தானே. நீங்கள் ~சீற்| கொடுங்கள்.|| என்று கூறியதைக்ää கேட்ட பாவலர்ää இந்த ஈனத்தனமானää  இனப் பாகுபாட்டுக் கெதிராகப் பகிரங்கமாகச் சீறியெழுந்த நெருப்புத் தமிழ்ச் சொற்கள் இவை:-

ஓடிடும் பஸ்ஸ_க்குள்ளே
ஓ..! ஒரு பெண்ணாள் நின்றாள்.
வாடிய முகமும் தோளில்
வளர்த்திய சேயுமாய்ச் சற்று
ஆடிய போதிலெல்லாம்
அடுத்தவர்க்கு அணைப்பேயாகி
ஓடிடும் பஸ்ஸ_க்குள்ளே
ஓ..! ஒரு பெண்ணாள் நின்றாள்.

ஆசனத்தில் இருந்த அன்பர்
அடுத்திருந்தவரைப் பார்த்துப்
பேசினார் ~உங்கள் இனப்
பெண்தானே எழுந்து சற்று
இடம் தன்னைக் கொடுங்கள்| என்றே
இரங்கினார்.!   பஸ்ஸ{க்குள்ளே
அடைபட்ட பெண்ணில் அவர்
அனுதாபம் பெருகி நின்றார்.!!

தாய்.! ஒரு சேயினோடு
தவிப்பதில் பேதம் காணும்
நாயுனை என்ன என்பேன்
நாமெலாம் மனிதரல்லோ..?

-பாவலர் பஸீல் காரியப்பர்.
(ஓ.! ஒரு பெண்ணாள்.- 1973)

(சஞ்சாரம் தொடரும்..)

No comments:

Post a Comment